FCNR(B) வைப்புத்தொகை என்றால் என்ன? வங்கிகள் அந்நியச் செலாவணியைத் திரட்ட இவை எவ்வாறு உதவுகின்றன? -ரவீனா பனேட்டா, ரோஷ்னி யாதவ்

ஒரு நாடு தனது நாட்டின் நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்க இரண்டு வழிகள் உள்ளன. அதிக டாலர்களைச் சம்பாதிப்பது அல்லது டாலர்களைக் கடனாகப் பெறுவது. இந்த இரண்டு வழிகளுமே நாட்டிற்குள் பணத்தைக் கொண்டு வந்தாலும், இரண்டும் ஒன்று கிடையாது. இந்தியா தனது வெளியுறவுப் பொருளாதார நிலையை சீரமைக்க சமீபத்தில் எடுத்த முயற்சிகள், முக்கியமாக டாலர்களைக் கடனாகப் பெறுவதையே சார்ந்துள்ளன.


முக்கிய அம்சங்கள்:


— ஜூன் மாதம் 8-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு அந்நியச் செலாவணிப் பரிமாற்ற வசதி மூலமாக வங்கிகள் 52.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி நிதியைத் திரட்டின. இதில் பெரும்பாலான நிதி FCNR(B) டெபாசிட்டுகள் (அந்நியச் செலாவணி வெளிநாடு வாழ் இந்தியர் கணக்குகள்) மூலமாகவே வந்தது.


— இந்திய ரிசர்வ் வங்கி, தனது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அந்நியச் செலாவணி வங்கி வைப்புநிதி (Foreign Currency Non-Resident (Bank) (FCNR(B)) மாற்றுச் சாளரத்தை திட்டமிட்டதைவிட ஒரு மாதத்திற்கு முன்பே மூடியது. இந்திய ரூபாய் மதிப்பு அழுத்தத்தில் இருந்த நேரத்தில், இந்த முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பிக்கையைக் காட்டும் ஒரு அறிகுறியாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த நிதிகளுக்கு ஏன் அத்தகைய ஊக்கத்தொகைகள் தேவைப்பட்டன அல்லது அந்த வசதி திரும்பப் பெறப்பட்டவுடன் ஏன் அவை அவ்வளவு கடுமையாகக் குறைந்தன என்பதே கேள்வியாக உள்ளது.


— இதற்குக் காரணம் நம்பிக்கை இழப்பே ஆகும். 2025-26-ஆம் நிதியாண்டில் ஆசியாவிலேயே மிகவும் மோசமாகச் செயல்பட்ட நாணயமாக இந்திய ரூபாய் இருந்தது. அதேநேரத்தில், வெளிநாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பில்லியன் கணக்கான டாலர்களைத் திரும்பப் பெற்றனர். அவர்கள் ஜூலை மாதத்தில் சுமார் 2.1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து, மீண்டும் அதிக பங்குகளை வாங்குபவர்களாக மாறினர். இருப்பினும், வெளியேறிய பெருந்தொகையோடு ஒப்பிடும்போது இது ஒரு சிறிய மீட்சியே ஆகும். எனவே, முதலீட்டாளர்கள் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் மீண்டும் இந்தியாவின் சந்தைக்கு திரும்புகிறார்கள் என்று சொல்வது தவறான முடிவாகிவிடும்.


— உறுதிமொழிகள் பலனளிக்காதபோது, இந்த நடவடிக்கை ஏன் செயல்படுகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், அந்நியச் செலாவணி சந்தைகள் வெறும் பொருளாதார அடிப்படைகளை மட்டுமே சார்ந்து இயங்குவதில்லை. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளையும் சார்ந்துதான் இயங்குகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியும் என்று முதலீட்டாளர்கள் உறுதியாக நம்பத் தொடங்கிவிட்டால், நல்ல பொருளாதாரத் தரவுகள்கூட அவர்களின் எண்ணத்தை மாற்றத் தவறிவிடும். அந்தத் தவறான சுழற்சியை உடைப்பதற்கான ஒரே வழி, ரூபாய்க்கு எதிராக வர்த்தகம் செய்வதை அதிகச் செலவுமிக்கதாக மாற்றுவதுதான். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அந்நியச் செலாவணி வங்கி வைப்புநிதித் திட்டம் (FCNR(B)) சரியாக இந்தப் பணியைச் செய்கிறது.


— இந்தியச் சொத்துகள் மீதுள்ள நம்பிக்கையைவிட, அது அளிக்கும் சலுகைகளே முதலீடுகளை ஈர்க்கின்றன. மானியம் வழங்கப்பட்ட பிறகுதான் முதலீட்டு வரத்து கணிசமாக அதிகரித்தது. ஒரு பொருளின் விலை உயர்த்தப்பட்ட பிறகு உருவாகும் நம்பிக்கை, உண்மையான நம்பிக்கை கிடையாது; அது வெறும் ஒரு வியாபாரக் கொள்முதல் மட்டுமே ஆகும்.



FCNR(B), Swaps, Forex, Moon base, UPSC, UPSC Mains

உங்களுக்குத் தெரியுமா?


— வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் தங்களின் வெளிநாட்டுப் பணத்தைச் சேமித்து வைக்க இந்தத் திட்டம் உதவுகிறது. ரூபாய் மதிப்பின் மாற்றத்தால் ஏற்படும் இழப்பு (Rupee risk) இல்லை. மேலும், இதற்குக் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு மற்றும் இந்தப் பணத்தை முழுமையாகப் பெற முடியும்.


— வங்கிகள் புதிதாக 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைகளைத் திரட்டி, அந்த டாலர்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் மாற்றிக் கொள்கின்றன. இதற்கான 'பண மதிப்பு இழப்பு பாதுகாப்பு' செலவை ரிசர்வ் வங்கியே ஏற்றுக்கொள்கிறது. இந்தச் செலவு நீங்குவதால், வங்கிகளால் டாலருக்கான வட்டிவிகிதத்தை 6 முதல் 7.5 சதவீதம் வரை வழங்க முடிகிறது. மேலும், சில வங்கிகள் 9 முதல் 19 மடங்கு வரை கூடுதல் கடனுதவியையும் அளிக்கின்றன.


— ஒரு முதலீட்டாளர், வெளிநாட்டில் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அந்தப் பணத்தை இங்கே பாதுகாப்பான அதிக வட்டி தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறார். வழக்கமாக இதில் இருக்கும் நாணய மதிப்பு மாற்ற அபாயத்தை இவருக்குப் பதிலாக வேறொருவர் ஏற்றுக்கொள்வதால், இது இவருக்கு எந்த ஆபத்தும் இல்லாத, அதிக லாபம் தரும் ‘carry trade’ முதலீட்டு முறை ஆகும்.


Original Link: What are FCNR(B) deposits? How do they help banks mobilise foreign currency? 

Share: