ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் நோக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ் மற்றும் குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


— பிரதமரின் வழிகாட்டுதலின்படி, மத்திய நோடல் அதிகாரிகளால் (Central Nodal Officers (CNO)) சமர்ப்பிக்கப்பட்ட கள ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில், முக்கியமான அவதானிப்புகள் மற்றும் செயலாக்க இடைவெளிகளை நிவர்த்தி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


—  அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தமிழ்நாடு, திரிபுரா, குஜராத், அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஒப்பந்தக்காரர்கள் மீது அபராதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விதித்துள்ளன. இதில் ₹12.95 கோடி ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


— அந்த அதிகாரியின் கூற்றுப்படி, மத்திய அரசு இப்போது நிதியுதவி முறையை மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் அடுத்த கட்டத்தில்,

விரைவில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு இனி திட்ட வாரியாக நிதியை வெளியிடும் என்றும் மாநிலங்களுக்கு மொத்தமாக எந்தப் பணமும் வழங்கப்படாது என்று அந்த அதிகாரி கூறினார்.


— மே மாதம் 21-ஆம் தேதி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) நாளிதழில், ஜல் ஜீவன் திட்டத்தின் (Jal Jeevan Mission - JJM) இணையதள பக்கத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பதிவேற்றப்பட்ட தரவுகள் குறித்த தனது விசாரணையின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் எவ்வாறு செலவினங்கள் மீதான ஒரு முக்கியமான சோதனையை நீக்கி, அதனால் செலவுகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்பதைக் காட்டியது. 


— ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தை 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டம் 2024-ஆம் ஆண்டில் நிறைவடைந்தாலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தனது நிதிநிலை அறிக்கையில், அதிகரித்த நிதி ஆதரவுடன் 2028-ஆம் ஆண்டு வரை இத்திட்டம் தொடரும் என்று அறிவித்தார். இருப்பினும், இந்த முடிவு மத்திய அமைச்சரவையால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


உங்களுக்குத் தெரியுமா?


— இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் (பட்டியல் II) உள்ள விதி 17 இவ்வாறு கூறுகிறது: “நீர், அதாவது, நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகால் மற்றும் கரைகள், நீர் சேமிப்பு மற்றும் நீர் சக்தி ஆகியவை பட்டியல் I-ல் உள்ள விதி 56-ன் விதிகளுக்கு உட்பட்டது.” இதன் பொருள் என்னவென்றால், மாநிலங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கால்வாய்கள் மற்றும் கரைகள் போன்ற நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் பெற்றுள்ளன என்பதாகும்.


— இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. உலகின் மக்கள் தொகையில் 18 சதவிகிதம் இருந்தும், உலகின் நன்னீர் வளங்களில் 4 சதவிகிதம் மட்டுமே உள்ளதால், காலநிலை மாற்றத்தின் இடைவிடாத தாக்கங்களால் மேலும் தீவிரமடைந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொள்ள உள்ளது என்று நீரஜ் சிங் மன்ஹாஸ் குறிப்பிடுகிறார். 


— நிதி ஆயோக்கின் 2018-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீடு (Composite Water Management Index) அளித்த எச்சரிக்கையின்படி, 600 மில்லியன் இந்தியர்கள் கடுமையான முதல் அதீத அளவில் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும் மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள், நீருக்கான தேவை விநியோகத்தைவிட இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


— உலக வளங்கள் நிறுவனமானது, (World Resources Institute) உலகளவில் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவை 13-வது இடத்தில் வைத்துள்ளது. இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான வேகத்தில் குறைந்து வருகிறது. நாட்டின் நீர்ப்பாசன விவசாயத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், குடிநீரில் 85 சதவீதமும் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன


—2024-ஆம் ஆண்டின் வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை (Annual Groundwater Quality Report) வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவின் 70 சதவீத நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது ஆரோக்கியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.



Share:

இந்தியாவின் கார்பனை உறிஞ்சும் (carbon sink) திறன் பலவீனமடைந்து வருகிறது - காலநிலை கொள்கை இனி அதைப் புறக்கணிக்க முடியாது. -சுவஜித் பானர்ஜி

புதிய ஆய்வின்படி, காடுகள், ஈரநிலங்கள் மற்றும் கடலோரச் சூழல் அமைப்புகள் அதிக வெப்பத்தில் மிகக் குறைவாகவே CO₂-ஐ உறிஞ்சுகின்றன. இது இந்தியாவின் நிகர-பூஜ்ய இலக்குகளுக்குப் பாதகமாக அமையக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. 


நாடுகள் தங்களின் காலநிலை முன்னேற்றத்தை அளவிடும்போது, ​​காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளால் உறிஞ்சப்படும் கார்பனைக் கொண்டு பெரும்பாலும் தங்கள் கார்பன் உமிழ்வை ஈடுசெய்கின்றன. அதிக மரங்களை நடுங்கள், அதிக கார்பனைப் பிடியுங்கள், மற்றும் சுத்தமான எரிசக்தி மாற்றத்திற்கு நேரம் கொடுங்கள் என்கிற இந்த யோசனை எளிமையானதாகத் தோன்றுகிறது. ஆனால், புதிய ஆராய்ச்சி ஒரு சிக்கலைக் காட்டுகிறது. 'Nature Ecology & Evolution' இதழில் வெளியான உலகளாவிய ஆய்வு ஒன்றின்படி, தீவிர வெப்பத்தின்போது, ​​தாவரங்களின் சுவாசம் குறையும் வேகத்தைவிட அவற்றின் ஒளிச்சேர்க்கை (photosynthesis) வேகமாக குறைவதால், அவை மிகக் குறைந்த கார்பனை உறிஞ்சுகின்றன. சுருக்கமாக, வெப்ப அலைகள், வறண்ட மண் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை தாவரங்கள் சேமித்து வைக்கக்கூடிய கார்பனைக் குறைக்கின்றன. 


2023-ஆம் ஆண்டில், ஆய்வுகள் மூலம் நிலப்பரப்பும் கடல்களும் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே கார்பன்-டை-ஆக்ஸைட் (CO₂) வாயுவை  உறிஞ்சின என்று தெரிய வந்தது. இது பல ஆண்டுகாலாக கார்பன்-டை-ஆக்ஸைட் (CO₂) அளவை நிலையாக வைத்திருந்த இயற்கையான அமைப்பை பலவீனப்படுத்தியது. இது காலநிலை திட்டமிடலை மாற்றியமைத்தது, இதனால் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வேகத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு திடீரெனக் குறைந்துவிட்டது என்கின்றனர்.


இந்தியாவின் காடுகள் வெளியேற்றப்பட்ட கார்பனை உறிஞ்சுவதில் பெரிய பங்கு வகிக்கின்றன. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization (FAO)) 2025 உலகளாவிய வன வளங்கள் மதிப்பீட்டின்படி, 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் அதன் காடுகள் ஆண்டுக்கு சுமார் 150 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, கார்பன் உறிஞ்சுதலில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது மரம் நடும் திட்டங்களின் வெற்றியைக் காட்டுகிறது. இருப்பினும், செயற்கைக்கோள் படங்கள் அதிக பசுமைப் போர்வையைக் காட்டினாலும், இந்தக் காடுகள் தொடர்ந்து கார்பனை திறம்பட உறிஞ்சுவதற்கு முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெறுமனே மரங்களைச் சேர்ப்பது மட்டும் போதாது. 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய (Net Zero) இலக்கை அடைய முயற்சிக்கும் ஒரு நாட்டிற்கு, இயற்கையான கார்பன் உறிஞ்சிகளை (carbon sinks) ஒரு உறுதியான தீர்வாக நம்பியிருப்பது, உமிழ்வு குறைப்பு பற்றிய தவறான மதிப்பீடுகளுக்கு, வரையறுக்கப்பட்ட வளங்களை வீணடிப்பதற்கு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்து வாழும் சமூகங்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என்கின்றனர். 


IIT கரக்பூர் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, சூரிய ஒளியையும் கரியமில வாயுவையும் (CO₂) பயன்படுத்தி உயிர்ப்பொருளாக (biomass) மாற்றும் காடுகளின் திறன் குறைந்து வருகிறது. வெப்பம், வறட்சி, மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் காடுகள் துண்டாடப்படுதல் (fragmentation) ஆகியவற்றின் காரணமாக, ஒரு ஹெக்டேர் காடு இப்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு உறிஞ்சியதைவிடக் குறைவான கார்பனை உறிஞ்சுகிறது என்று கூறப்படுகிறது. தற்போதைய தேசிய கார்பன் கணக்கீடு, காடுகள் உறிஞ்சும் உண்மையான கார்பனை கணக்கில் கொள்ளாமல், காடுகளின் பரப்பளவை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. இது தவறான வழிமுறைகளுக்குக் காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர்.


ஈரநிலங்கள் மற்றும் கடற்கரை சார்ந்த “நீல கார்பன்” பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. அசாம் மற்றும் இந்தியாவின் மாங்குரோவ் காடுகள் மற்றும் கடல் புல்வெளிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் அவற்றின் மண் சில சமயங்களில் ஒரு ஹெக்டேருக்கு பல்லாயிரக்கணக்கான கிலோகிராம் அளவிலான கார்பனை சேமித்து வைத்திருப்பதை காட்டுகின்றன. இருப்பினும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பொதுவாக காலநிலைக் கணக்கீட்டில் புறக்கணிக்கப்படுகின்றன. சரியாகக் கண்காணிக்கப்படுவதில்லை மற்றும் போதிய நிதியுதவி பெறுவதில்லை

என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவின் பலவீனமான நிறுவன அமைப்புகள், இந்த ஆற்றலை நம்பகமான காலநிலை வரவுகளாக (climate credits) மாற்றுவதை கடினமாக்குகின்றன.


கொள்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் நிகர-பூஜ்ஜிய அபாயங்கள்


கொள்கை, பொருளாதாரம் மற்றும் மாதிரியாக்கம் (modelling) ஆகியவற்றிற்கு இதன் பொருள் சிக்கலானது மற்றும் முக்கியமானது ஆகும்.


முதலாவதாக, இந்தியாவின் காலநிலை இலக்குகள், இயற்கையான கார்பன் உறிஞ்சிகள் (sinks) எப்போதும் நன்றாகச் செயல்படும் என்று ஊகிக்க முடியாது. இந்த உறிஞ்சிகளை நிலையானதாகக் கருதும் மாதிரிகள், எவ்வளவு உமிழ்வுகளைக் குறைக்க முடியும் என்பதை மிகை மதிப்பீடு செய்து, செலவுகளைக் குறைத்து மதிப்பிடும். வெப்பம் அல்லது வறட்சி காரணமாக சில பகுதிகளில் உறிஞ்சும் திறன் 10-20 சதவீதம் குறைந்தால் இது ஒரு இயல்பான சாத்தியம் என்கின்றனர். உமிழ்வு இலக்குகள் மற்றும் கார்பன் விலை நிர்ணயம் ஆகியவை பெரிய அளவில் சரிசெய்யப்பட வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள், பலவீனமான உறிஞ்சிகளுக்கான திட்டங்கள் மற்றும் தீ, பூச்சிகள் மற்றும் வறட்சி போன்ற அபாயங்களைச் சோதிக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் சூழலியல் மாதிரிகளை உருவாக்குபவர்களுக்கு, இந்த அழுத்தச் சோதனையைச் சேர்ப்பது இப்போது அத்தியாவசியமானதாக உள்ளது. 


இரண்டாவதாக, சரியான கொள்கை கலவை என்பது "அதிகமாக நடுவது" மட்டுமல்ல. இந்தியாவுக்கு மூன்று பகுதிகள் கொண்ட (Avoid, Restore, Measure (ARM)) கட்டமைப்பு தேவைப்படுகிறது:


  • Avoid (தவிர்க்க): பாதுகாப்பு: ஆரோக்கியமான காடுகளைப் பாதுகாத்து, நிர்வகித்து, அவை சிதையாமல் முழுமையாக இருக்கச் செய்தல்.


  • Restore (மீட்டெடுக்க): சீரமைப்பு: சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை (ecosystems) மீண்டும் மீட்கவும், அவை உறுதியுடன் நிலைத்திருக்கவும் உதவும் முறைகளைப் பயன்படுத்திச் சரிசெய்தல்.


  • Measure (அளவிட): கண்காணிப்பு: எவ்வளவு கார்பன் (carbon) உண்மையில் உறிஞ்சப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவும், அறிக்கை அளிக்கவும் வலுவான அமைப்புகளை உருவாக்குதல்.


இந்தியாவும் சூழல் மண்டல சேவைகளுக்கான கொடுப்பனவுகள் (payments for ecosystem services) போன்ற கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், சீரமைப்புக்கான நிதி 'காலநிலை-உறுதிப்படுத்தப்பட்டதாக’ (climate-proof)' இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது, ஒருமுறை நடப்பட்ட மரங்களை மட்டும் கணக்கிடாமல், கார்பன் இழப்பின் (மீட்சி) (carbon loss (reversal)) உண்மையான அபாயத்தின் அடிப்படையில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


மூன்றாவதாக, இந்தியாவின் காலநிலை கொள்கைகளில் சதுப்பு நிலங்கள்  மற்றும் "நீலக்கரிமம்" ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மாங்குரோவ் காடுகள், கடற்புற்கள் (seagrasses) மற்றும் சதுப்பு நில மண் ஆகியவை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் அதிக அளவு கரியமிலத்தை சேமித்து வைக்கின்றன. ஆனால், சந்தைகளும் கொள்கைகளும் இந்த மதிப்பை அரிதாகவே அங்கீகரிக்கின்றன. கார்பன்-டை-ஆக்ஸைடை அளவிடுவதற்கான வலுவான அமைப்புகளை உருவாக்குதல், உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நீலக்கரிமத் திட்டங்களை (verified blue-carbon projects) உருவாக்குதல் ஆகியவை கடலோர மற்றும் ஆற்றோரப் பகுதிகளுக்கு ஒரு சிறந்த மற்றும் குறைந்த ஆபத்துள்ள முதலீடாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 


நான்காவதாக, இயற்கை கார்பன் தாங்கிகள் (காடுகள் மற்றும் கடல்கள் போன்றவை) அவற்றின் செயல் திறனை இழந்து வருவதால், கார்பனை அகற்ற இந்தியா மேலும் பல வழிகளை ஆராய வேண்டும். நேரடி காற்று பிடிப்பு (direct air capture) போன்ற சோதனைத் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காலநிலைத் தாக்கம் குறித்த ஆராய்ச்சி போன்ற நடைமுறைத் தொழில்நுட்பங்களை இது விரைவுபடுத்த வேண்டும், அதே சமயம் பல்லுயிர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு உதவுதல் போன்ற கூடுதல் நன்மைகளுக்காக, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளையே (வன மறுசீரமைப்பு போன்ற) பிரதானமாக நம்பியிருக்க வேண்டும். முடிவுகள் செலவு-திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வெவ்வேறு அபாயங்களின் கீழ் கார்பனை அகற்ற ஒவ்வொரு முறைக்கும் எவ்வளவு செலவாகும் என்பதை ஒப்பிட்டு, அகற்றப்பட்ட கார்பனின் அளவை மட்டும் பார்க்காமல், பரந்த சமூக நன்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


இந்தியா காடுகளையும் கடலோரங்களையும் அத்தியாவசியமான, உயிருள்ள உள்கட்டமைப்பாகக் கருதி, அவற்றுக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டும். மரங்கள் ஒருமுறை முதலீடு அல்ல, அவற்றுக்குத் தொடர்ச்சியான வாழ்விடங்கள், தீயிலிருந்து பாதுகாப்பு, போதுமான நீர் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கான ஆதரவு தேவை. எனவே, சில காலநிலை நிதிகள் வெறும் மரம் நடுதலில் இருந்து விலகி, நீண்ட காலத்திற்கு அவற்றைப் பராமரித்தல், அவற்றின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் மற்றும் அவற்றை தகவமைப்புடன் நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு மாற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மாறிவரும் உலகளாவிய சூழல்


பிரேசிலில் நடந்த காலநிலை மாநாடுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு நாடுகள் தங்கள் நிகர-பூஜ்ய (net-zero) திட்டங்களைப் புதுப்பித்தன. இந்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் உமிழ்வைக் குறைப்பது மற்றும் காலநிலை நிதி ஆகியவற்றில் கவனம் செலுத்தின. ஆனால், இயற்கையான கார்பன் உறிஞ்சும் திறன் (natural carbon sinks) நிலையாக இருக்கும் என்று இன்னும் கருதுகின்றன. உலகளாவிய காலநிலை திட்டங்கள் இயல்பாக இருக்க வேண்டுமானால், இந்த அனுமானத்தை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. பூமியின் கார்பனை உறிஞ்சும் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ஏற்படும் ஆபத்தை தங்கள் ஆய்வுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும், நிலம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகக் கணிக்கும் மாதிரிகளை (land-use models) உருவாக்க வேண்டும், எதிர்காலத்தில் இயற்கை கார்பனை குறைவாக உறிஞ்சினால், அதை ஈடுசெய்ய எவ்வளவு கூடுதல் முயற்சியோ அல்லது பணமோ செலவழிக்க வேண்டும் என்பதை உணர்திறன் சோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும் என்பன இந்தியாவின் காலநிலை வல்லுநர்களும் பொருளாதார நிபுணர்களும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளாகக் கருதப்படுகின்றன. 




முன்னோக்கிச் செல்லுங்கள்


இந்தச் செய்தியானது பேரழிவைப் பற்றியதல்ல. ஆனால், தெளிவான உண்மையைப் பற்றியது. இயற்கையானது நமக்குச் சற்றுக் கூடுதல் கால அவகாசத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால், அது வரம்பற்றதல்ல. இந்தியாவுக்கு உண்மையான பலங்கள் உள்ளன — அதிக அளவிலான நிலம், வலிமையான உள்ளூர் சமூகங்கள், மற்றும் கார்பனை உறிஞ்சும் கடலோரச் சூழல் அமைப்புகளில் (மாங்குரோவ்கள் போன்றவை) வளர்ந்துவரும் வாய்ப்புகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தியா தனது பொருளாதாரத் திட்டங்களில் இயற்கையை வலிமையானதாகவும், அதே சமயம் எளிதில் சேதமடையக்கூடியதாகவும் கருதினால், கார்பனை அகற்றுவதற்கான ஒரே ஒரு வழியை அதிகம் நம்பாமல், உமிழ்வைக் குறைக்கும் வலுவான திட்டங்களை இந்தியாவால் உருவாக்க முடியும். இல்லையெனில், எண்களின் கணக்குத் தவறாகிவிட்டது என்பதை நாம் மிகத் தாமதமாக உணரும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அதைச் சரிசெய்வதற்கு செலவு மிக அதிகமானதாக இருக்காலம் என்றும் கணிக்கப்படுகிறது. 


ஆசிரியர், National Council of Applied Economic Research (NCAER), புது டெல்லியில் Computable General Equilibrium (CGE) மாதிரி உருவாக்கம் மற்றும் கொள்கை பகுப்பாய்வுக்கான ஆராய்ச்சியாளராக உள்ளார். 


Original Article: India’s carbon sink is weakening — climate policy can no longer ignore it.

Share:

குடியரசுத் தலைவரின் கருத்துக்கு எதிராக கூட்டாட்சி அமைப்பு -ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

16வது ஜனாதிபதி குறிப்பு மக்களின் விருப்பத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்


ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும், அரசின் அடித்தள மதிப்புகளைப் பாதுகாக்க நிறுவனங்கள் உறுதியான பாதுகாப்புத் தடுப்புகளாக நிற்க வேண்டிய ஒரு தருணம் வருகிறது. ஏனெனில், அடித்தளக் கொள்கைகள் பலவீனம் அடைய அனுமதிக்கப்பட்டால், மீதமுள்ள கட்டமைப்பும் சிதைந்துவிடும். மேலும், முக்கியக் கருத்துக்களை இழக்கும் நிறுவனங்கள், ஏறக்ககுறைய எப்போதும் ஒரே முடிவைச் சந்திக்கின்றன. ஒரு மரத்தின் கிளைகள் அது விழுந்த பிறகு வாழ முடியாதது போல, ஒரு நாடும் அதன் அடித்தளம் இல்லாமல் நிலைத்திருக்க முடியாது.


இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் குறித்து 16-வது குடியரசுத் தலைவரின் குறிப்பை விசாரித்தது. இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் ஒரு முக்கியப் பகுதியான இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம்  பலவீனமடைந்து வருகிறது. மாநிலங்கள் மெதுவாக உண்மையான அதிகாரத்தை இழந்து, ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் யூனியன் பிரதேசங்களைப் போல ஆகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. கூட்டாட்சித் தத்துவம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி மட்டுமல்ல, ஒரு முக்கியமான பாதுகாப்பும் ஆகும். அதைப் பலவீனப்படுத்துவது, மத்திய அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட மற்ற நிறுவனங்கள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என்கின்றனர்.

சம பங்குதாரர்கள்


அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ், ஒன்றியமும் மாநிலங்களும் சம பங்காளிகள், இதில் இந்திய அரசாங்கம் 'சமமானவர்களில் முதன்மையானது' மட்டுமே. மாநிலங்கள் ஒன்றிய அரசாங்கத்திற்கு அடிபணிந்தவை அல்ல. மேலும், அவை இந்திய அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்ட இரண்டாம் நிலை இணைப்புகளும் அல்ல என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். உண்மையில், மாநிலப் பட்டியலில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் (நிலச் சட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு போன்றவை) அவை முழுமையான சுயாட்சியை அனுபவிக்கின்றன. இந்திய சூழலில் கூட்டாட்சியைப் பற்றிய வேறு எந்தப் புரிதலும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் கருத்தில்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திட்டத்தை சீர்குலைப்பதாகவே அமையும் என்கின்றனர்


மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் மாதக்கணக்கில் தாமதப்படுத்தி, பின்னர் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பி, சட்டமன்றம் மீண்டும் ஒப்புதல் அளித்த பின்னரும்கூட அவற்றை இறுதியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உள்ளாக்குகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு சாதகமாக அமைவது போன்ற நிலை ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது என்பதையும் தெரிவிக்கின்றனர்.


ஒன்றிய அரசால் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களைப் பின்பற்றி, அவர்களின் அரசியல் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். இந்த உண்மையை புறக்கணிக்க முடியாது என்று வாதிடுகின்றனர்.


கூட்டாட்சிக்கும் மக்களாட்சிக்கும் இடையேயான சமநிலையானது, மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் விருப்பத்திற்கு (மக்களின் ஆணை) எதிராக, மத்திய அரசின் குறிக்கோளைப் பின்பற்றக்கூடிய, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்களின் “வரையறுக்கப்படாத அதிகாரங்களைக்” கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுநர்கள் எவ்வாறு மாநிலத்தில் மக்களின் தேர்வை மீற அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.


சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியவுடன், ஆளுநர் அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதால் இது மிகவும் அவசியமானது. உச்சநீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அமர்வு தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் இதை உறுதிப்படுத்தி, ஆளுநருக்கு தெளிவான காலக்கெடு நிர்ணயித்துள்ளது.


உரைகல் என்றால் என்ன?


ஆளுநரின் அதிகாரம் நியாயத்தின் அளவுகோலில் சோதிக்கப்பட வேண்டும், அதாவது, ஒரு சட்டமியற்றும் விவகாரத்தை முழுமையாகச் சிந்தித்து முடிவெடுக்க அவருக்கு ஒரு நியாயமான கால அவகாசம் இருக்க வேண்டும். இந்த காலவரையறை நிர்ணயிக்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின்மீது ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆட்சியாளரைப் போல் செயல்பட வாய்ப்புள்ளது.


சுதந்திரம், நியாயத்தன்மை மற்றும் தன்னிச்சையற்ற தன்மை ஆகியவையே நமது அரசியலமைப்பின், குறிப்பாக குடிமக்களை ஒரு வழிதவறிய அரசாங்கத்திடமிருந்து பாதுகாக்கும் பகுதி III-ன், நரம்புகளில் ஓடும் நூலிழைகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்களையோ அல்லது இந்தியக் குடியரசுத் தலைவரையோகூட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மீது கட்டுக்கடங்காத மன்னர்களாக நியமிப்பது, அரசியலமைப்பின் முழுஅமைப்பும் சிதைவதற்கான வாய்ப்புள்ளது. 


"நீதிமன்ற மறு ஆய்வு" என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒரு பகுதியாகும். எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், நாடாளுமன்றம் உட்பட, அதன் நடவடிக்கைகள் நீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படாது என்று ஒருபோதும் கூற முடியாது என்று கூறுகின்றனர்


இந்தியாவின் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் ஆகியோர் நீதித்துறை மறுஆய்வு என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் பதவிகள் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல என்று தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்றமே நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதுதான். எனவே, அவர்களும் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பதால், சட்ட விலக்கு கோர முடியாது என்று தெளிவுபடுத்துகின்றனர். 


நீதிமன்றத்தின் ‘வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்’ கோட்பாடு அரசியலமைப்பு, கூட்டாட்சி, நியாயம், நீதி, நீதித்துறை மறுஆய்வு மற்றும் சட்டப்பிரிவு 14-ல் உறுதி செய்யப்பட்ட நியாயத்தன்மை ஆகியவற்றுக்கு முரணானது.


முக்கியமான சட்டங்களை நீண்டகாலத்திற்கு நிலுவையில் வைத்திருக்க, அதன் நோக்கத்தையே தோற்கடிக்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இவ்வளவு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஆளுநர்களுக்கு ஒரு 'மறைமுக தடை' (pocket veto) அதிகாரத்தை வழங்குவதற்கும், மாநிலங்களை ஆளுநர்களின் (மற்றும் குடியரசுத் தலைவரின்) விருப்பங்களுக்குக் கட்டுப்பட வைப்பதற்கும், ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க ஒரு உத்தரவைப் பெறுவதற்காக அவற்றை முடிவில்லாத நீதிமன்றப் போராட்டங்களுக்குத் தள்ளுகிறது. இறுதியில், இத்தகைய முறை அரசியலமைப்பு முறைக்கு எதிரானது மற்றும் ஜனநாயகமற்றது என்று தெரிவிக்கின்றனர். 


கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்துதல்


இந்தக் கருத்தில் உள்ள மற்றுமொரு சிக்கல் என்னவென்றால், அண்மைக் காலத்தில் மத்திய அரசு கூட்டாட்சி முறையைத் தாக்கும் பரவலான போக்கைப் புறக்கணிக்கிறது. உதாரணமாக, சரக்கு மற்றும் சேவை வரியை இழந்ததற்காக மாநிலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இது செயல்திறன், வருவாய் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


இரண்டாவது, ஒன்றிய அரசால் பிரத்தியேகமாக வசூலிக்கப்படும் செஸ் வரியானது மாநிலங்களுடன் அதன் வருவாயைப் பகிர்ந்துகொள்ள மறுக்க ஒரு காரணாமாகப் பயன்படுத்தப்படுகிறது.


மூன்றாவது, நிதி ஆணையம் பரிந்துரைத்த நிதிப் பகிர்வுகளை முழுமையாகச் செயல்படுத்த ஒன்றிய அரசு தொடர்ந்து கருப்பு தெரிவிப்பது போன்றன ஆகும்.

நான்காவதாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநிலங்கள் ஒரே மாதிரியான நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், செலவுகளில் 50 சதவீதம் வரை பங்களிக்க வேண்டும் என்றும் கோருவது, ஏற்கனவே சிரமத்திலுள்ள மாநில நிதிநிலையின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


ஐந்தாவது, ஆளும் கட்சியின் கொள்கைக்கு ஆதரவு திரட்ட ஒன்றிய அரசின் நிதிகளை அரசியல் கருவியாகப் பயன்படுத்துதல் சுட்டிக்காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2025-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்றுமுன், பீகாரில் உள்ள 1.21 கோடி பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டது. மேலும். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒரு சிறப்பு நிதித் தொகுப்பு வழங்கப்பட்டது போன்றவை ஆகும்.


ஆறாவது, மத்திய புலனாய்வுப் பிரிவு/அமலாக்க இயக்குநரகம்/வருமான வரித் துறையை சோதனையிடவும், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைக் கைது செய்யவும், எதிர்க்கட்சி அரசாங்கங்களை வீழ்த்தவும் தவறாகப் பயன்படுத்துகிறது.


இறுதியாக, இவை அனைத்திற்கும் மேலாக, ஆளுநரின் உத்தரவுகளின் மூலம் வரும் ஒன்றிய அரசின் கட்டுப்பாடு, கூட்டாட்சி தத்துவத்திற்கு பலமான அடியாக இருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.


கூட்டாட்சித் தத்துவமானது இவ்வாறு தீவிரமாக வலுவிழக்கும்பட்சத்தில், ஒன்றிய அரசாங்கத்திற்குத் தடையற்ற அதிகாரம் கிடைத்துவிடும் என்கின்றனர். மேலும், மாநிலங்கள் வெறும் நிர்வாகப் பிரிவுகளாக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் மக்களின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தும்போது ஜனநாயகம் நிலைக்க முடியாது சூழல் உருவாகும். குடிமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், அமைப்புகள் ஆழமாக சிந்திக்க வேண்டும், உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பது என்பது இந்தியாவையே பாதுகாப்பதாகும்.


ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, நாடாளுமன்ற உறுப்பினர் (இந்திய தேசிய காங்கிரஸ்), மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.


Original Article: Presidential opinion versus the federal structure 

Share:

இந்தியாவின் நகரங்களுக்கு இன்னும் தேவைப்படும் முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் -சந்தோஷ் நர்குந்த்

இந்த நடவடிக்கைகள், இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு இணையான அதிக வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை அடைய அத்தியாவசியமானவை.


அரசியலமைப்புச் சட்ட தினமானது  (நவம்பர் 26), 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வலுவான ஆட்சி அமைப்பையும், காலப்போக்கில் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது 100-க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை கடமைகளைச் (பிரிவு 51A) சேர்ப்பது, கல்வியை அடிப்படை உரிமையாக்குவது, கட்சித்தாவல் தடை விதிகளை உருவாக்குவது, மற்றும் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து அளித்த 73வது மற்றும் 74வது திருத்தங்கள் போன்ற ஒரு சில மாற்றங்கள் மட்டுமே முக்கியமானவையாக இருந்தன. இந்த மாற்றங்கள் ஜனநாயகத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்தின. இருப்பினும், 73-வது திருத்தம் உள்ளாட்சி அமைப்புகளை (panchayati raj) மேம்படுத்திய போதிலும், 74-வது திருத்தம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதில் முழுமையாக வெற்றிபெறவில்லை என்கின்றனர். 


இந்திய நகரங்கள் இன்னமும் நீர்ப் பற்றாக்குறை, குடிசைப்பகுதிகள், போக்குவரத்து நெரிசல், மாசுபாடு மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகளை எதிர்கொள்கின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மூன்றில் இரண்டு பங்கையும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலேயும் நகரங்கள் அளித்தாலும், அவற்றுக்கு உண்மையான சுயாட்சி இல்லாதது, பலவீனமான தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், மோசமான நிதி நிலைமை மற்றும் துண்டு துண்டான சேவைகள் ஆகியவற்றால் அவை பலவீனமாகவே இருக்கின்றன. 74-வது திருத்தம் ஒரு அடிப்படை கட்டமைப்பை அளித்தது, ஆனால் முக்கியமான முடிவுகளை மாநிலங்களின் வசம் விட்டுவிட்டது, இது அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரும்பாலான மாநிலங்கள் இன்னமும் நகர அரசாங்கங்களுக்கு போதுமான அதிகாரங்கள், செயல்பாடுகள் அல்லது நிதி ஆதாரங்களை வழங்குவதில்லை. இத்தகைய பலவீனமான நகர்ப்புற அமைப்புகளுடன் எந்த நாடும் வளமான நாடாக மாறியதில்லை. எனவே, வலுவான நகர நிர்வாகத்திற்காக இந்தியாவுக்கு அவசரமாக இரண்டாவது சுற்று அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்துகின்றனர். 


மேயர்கள் மற்றும் குறுகிய பதவிக்காலங்கள் தொடர்பான சிக்கல்


மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்குத் தெளிவான மற்றும் நிலையான ஐந்து வருட பதவிக் காலம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசியலமைப்பின் 243R(2)(b) சட்டப்பிரிவானது ஒவ்வொரு மாநிலமும் பதவிக் காலத்தை முடிவு செய்ய அனுமதிக்கிறது. எனவே, இது மாநிலத்திற்கு மாநிலம் பெரிதும் மாறுபடுகிறது. சில மாநிலங்கள் ஐந்து ஆண்டுகள் வழங்குகின்றன, டெல்லி ஒரு வருடம் மட்டுமே வழங்குகிறது. மேலும், மும்பை மற்றும் பெங்களூரு இரண்டரை ஆண்டுகள் வழங்குகின்றன. இந்த குறுகிய பதவிக் காலங்கள் மேயர்களை நீண்ட காலத் திட்டமிடல் அல்லது மாற்றங்களைச் செய்ய முடியாத வெறுமனே அடையாளத் தலைவர்களாகக் குறைக்கின்றன. உண்மையான நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய முழு ஐந்து வருட பதவிக் காலம் நகரங்களுக்குத் தேவையான உறுதித்தன்மையையும் பொறுப்புணர்வையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. 


மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு இடையில் அதிகாரங்கள் பிளவுபட்டுள்ள, பழைய காலனித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருவது முக்கியம். பெரும்பாலான மாநிலங்களில், மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் ஆணையர், தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை விட அதிகாரம் கொண்டவராக உள்ளார், இது உள்ளாட்சி அமைப்புகளைப் (local self-government) பயனற்றதாக்குகிறது. மாநகர நிர்வாகத்தில் மேயரும், நிலைக்குழுக்களுக்குப் (Standing Committees) பதிலாக மேயர் தலைமையிலான ஆட்சிக்குழுவும் (Mayor-in-Council) உச்சபட்ச முடிவெடுப்பவர்களாக மாறுமாறு அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆணையர்கள், கேரளாவைப் போலவே, மாநகராட்சி செயலாளர்கள் எனப் பெயர் மாற்றப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தலைமைச் செயலாளர்கள் அறிக்கை அளிப்பது போல, மேயருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்கின்றனர்.

மூன்றாவது சீர்திருத்தம் என்னவென்றால், 12-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுவதை மாநிலங்கள் கட்டாயமாக்க வேண்டும். இப்போதெல்லாம், உறுப்பு 243W இந்த மாற்றத்தை விருப்பத் தேர்வாக ஆக்குகிறது. எனவே, திட்டமிடல், பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிசை மேம்பாடு போன்ற முக்கிய பகுதிகளை மாநிலங்கள் இன்னும் கட்டுப்படுத்துகின்றன. 2024 CAG அறிக்கையின்படி, தணிக்கை செய்யப்பட்ட 18 மாநிலங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட 18 செயல்பாடுகளில் 22 சதவீதம் மட்டுமே உண்மையில் மாற்றப்பட்டுள்ளன. மாநிலத் துறைகள் மற்றும் துணை-அரசு அமைப்புகள் இன்னும் பெரும்பாலான திட்டமிடல் மற்றும் சேவைகளைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும் சில மாநிலங்களில் அவை நகர்ப்புறத் துறை நிதிகளில் 60 சதவீதம் வரை பெறுகின்றன. முறையான ஜனநாயகக் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க, நகர எல்லைகளுக்குள் செய்யப்படும் எந்தவொரு விஷயத்திற்கும் இந்த அனைத்து அமைப்புகளும் மேயர் தலைமையிலான குழுவுக்கு பதிலளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 

சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்துதல்


நான்காவது சீர்திருத்தம் என்னவென்றால், நகராட்சித் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறுவதையும், மாநகராட்சி மன்றங்கள் முழுமையாக ஐந்து ஆண்டு காலத்திற்குப் பணியாற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும். இந்தியா முழுவதும், இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் வார்டு மறுவரையறை சீரற்று அல்லது முழுமையடையாமல் இருப்பது, இடஒதுக்கீடு மாற்றங்கள் அல்லது மாநில அரசுகளின் தலையீடு காரணமாகத் தாமதமாகின்றன. வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு திருத்தங்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை போன்ற நிலையான இடைவெளியில் நடக்க வேண்டும் என்று அதிகாரங்கள் 243R மற்றும் 243T திருத்தப்பட வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மீது தெளிவான அதிகாரம் இருப்பதற்கும், மாநில அரசுகள் தங்களுக்கு விருப்பமான போதெல்லாம் நகராட்சி எல்லைகளை மாற்றாமல் இருப்பதற்கும் அதிகாரம் 243ZA பலப்படுத்தப்பட வேண்டும்.


தேர்தல்கள் முடிந்த 15 நாட்களுக்குள் மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியின் விதிகளுக்கு ஏற்றவாறு, நிர்வாகிகளை நியமிக்கும் அல்லது நகராட்சிகளைக் கலைக்கும் முன் மாநில அரசுகள் சட்டமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அதிகாரம் 243U கட்டாயப்படுத்த வேண்டும். இறுதியாக, அதிகாரம் 243K பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அது வெளிப்படையான மாநிலத் தேர்தல் ஆணைய நியமனங்கள், மாநில அரசுகளிடமிருந்து நிதிச் சுதந்திரம் மற்றும் ஆளுநர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு கட்டாய வருடாந்திர அறிக்கைகள் சமர்ப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஐந்தாவது திருத்தமாக, நகராட்சிகளுக்கு நிலையான மற்றும் போதுமான நிதி தேவை. இப்போது, நகர்ப்புற உள்கட்டமைப்புச் செலவுகள் அனைத்திலும் ஏறக்குறைய முக்கால் பகுதியை மாநில மற்றும் மத்திய அரசுகளே கட்டுப்படுத்துகின்றன. சில மாநிலங்கள் முத்திரைத் தீர்வை போன்ற சில வருவாய்களைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் மோட்டார் வாகன வரி, பதிவு கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற முக்கிய வரிகளில் ஒரு உத்தரவாதமான பங்கு தேவை. மாநில நிதி ஆணையங்கள் (State Finance Commissions (SFCs)) கூட சரியாகச் செயல்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு ஐந்து ஆண்டு மானியக் காலத்திற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட வேண்டும், மற்றும் 243I மற்றும் 243Y ஆகிய சட்டப்பிரிவுகளைப் புதுப்பிப்பதன் மூலம் ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் போன்ற சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள  வலியுறுத்தப்படுகின்றனர். மாநில நிதி ஆணையங்கள் அமைப்பது பொதுவாக 400 நாட்களுக்கு மேல் தாமதமாகிறது என்றும், அவற்றின் பரிந்துரைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன என்பதும் தலைமைத் தணிக்கை அதிகாரியின் (Comptroller and Auditor General(CAG)) அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. 


ஆறாவது சீர்திருத்தம் நகராட்சித் திறனை வலுப்படுத்துவதாகும். பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (Urban Local Body (ULB)) திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் போன்ற முக்கிய பணியாளர்கள் இல்லை. காலியிடங்கள் கேரளாவில் 13 சதவீதம் முதல் உத்தரகண்டில் 64 சதவீதம் வரை உள்ளன. பல நிதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கான திறன் இல்லை என்று ஒரு பாராளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. நகரங்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில், குறுகியகால நிபுணர்கள் உட்பட, பணியாளர்களை நியமிக்கும் அதிகாரம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், முறையான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பதும் அவசியமாகிறது. 


சமூகத்தை ஈடுபடுத்துதல்


ஏழாவதாக, குடிமக்கள் பங்கேற்பு என்பது அமைப்பின் ஒரு வழக்கமான பகுதியாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் சமூக ஈடுபாடு இல்லாமல் நியாயமான மற்றும் நிலையான நகர்ப்புற மேம்பாடு நடக்க முடியாது என்பதையும் தெரிவிக்கின்றனர். சட்டப்பிரிவு 243S-ன் கீழ் உள்ள ‘வார்டு’ குழுக்களுக்கான விதியானது, உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்த 30 நாட்களுக்குள் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் அமைக்கப்பட வேண்டும் மற்றும் அவற்றுக்கு வரவுசெலவுத் திட்டங்கள் மற்றும் மேற்பார்வைக்கான தெளிவான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற முறையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அனைத்து குடிமக்களும் கலந்து கொள்ளும் இத்தகைய குழுக்கள் இல்லையெனில், நகராட்சி நிர்வாகம் மக்களிடம் இருந்து தூரமாகவும், வெளிப்படையாக இல்லாததுபோலும், மக்களுக்கு சரியான பதில் அளிக்காததுபோலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


எட்டாவது, பெரிய நகரங்களுக்கு சிறிய நகரங்களைவிட மாறுபட்ட நிர்வாக அமைப்புசீர்திருத்தமாக தேவை என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பாலான பங்களிப்பையும், நகர்ப்புற மக்கள்தொகையில் பெரும்பான்மையையும் கொண்டிருந்தாலும், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இன்னும் வலுவான நிர்வாக மாதிரி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நகரங்களுக்கு தனித்தனி நிர்வாக மாதிரிகளை உருவாக்க, சட்டப்பிரிவுகள் 243Q மற்றும் 243ZE ஆகியவை முழுமையாக திருத்தப்பட வேண்டும் என்கின்றனர். 


ஒன்பதாவது சீர்திருத்தமாக, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்க வேண்டும், அதே நேரத்தில் மாநகராட்சிகள் அவற்றின் அன்றாட முடிவுகளில் தலையிடுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகராட்சி மன்றங்களில் சேர அனுமதிக்கும் பிரிவு 243R(2) நீக்கப்பட வேண்டும். நகர்ப்புற மன்ற உறுப்பினர்கள் தங்கள் நகரங்களில் முழுமையாக கவனம் செலுத்த, ஒரே நேரத்தில் மாநில அல்லது தேசிய சட்டமன்றப் பதவிகளை வகிக்கக் கூடாது போன்ற வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர். 


இறுதியாக, பத்தாவது முக்கியமான சீர்திருத்தம் என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் தேசிய அளவிலும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும் அல்லது வலுப்படுத்த வேண்டும். இந்தத் துறைகள் நகர்ப்புற வளர்ச்சித் துறைகளைப் போன்று உள்கட்டமைப்பு விஷயங்களில் கவனம் செலுத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.


இவற்றில் சில சீர்திருத்தங்களின் பகுதிகளைச் சில மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன, ஆனால் இப்போதுள்ள பணி என்னவென்றால், அவற்றை சுமார் 5,000 நகராட்சிகளில் நடைமுறைக்குக் கொண்டு வருவதுதான். இந்தியா அதிக வளர்ச்சியையும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய வாழ்க்கைத் தரத்தையும் அடைய வேண்டுமானால், அதன் நகரங்கள் அரசியலமைப்பின்படி முழுமையாக அதிகாரமளிக்கப்பட வேண்டும்.


சந்தோஷ் நர்குந்த், ஜனாக்ரஹா குடிமக்கள் மற்றும் ஜனநாயகம் மையத்தின் கொள்கை ஈடுபாட்டு இயக்குநராக உள்ளார். மான்சி வர்மா, ஜனாக்ரஹாவின் கொள்கை ஈடுபாட்டு மேலாளராக உள்ளார்.


Original Article: Key constitutional fixes that India’s cities still need 

Share:

செயல்படாத INO-வும் செயல்படவிருக்கும் JUNO-வும் -வாசுதேவன் முகுந்த்



INO : இந்தியாவை தளமாகக் கொண்ட நியூட்ரினோ ஆய்வகம் - India-based Neutrino Observatory 


JUNO : ஜியாங்மென் நிலத்தடி நியூட்ரினோ ஆய்வகம் - Jiangmen Underground Neutrino Observatory


முந்தைய பத்தாண்டுகளில், ஒரு முக்கியமான அறிவியல் மர்மத்தை (scientific mystery) உடைக்க உதவும் திறனை இந்தியா கொண்டிருந்தது. ஆனால், இப்போது சீனா முன்னேறியுள்ளது


சீனா தனது, ஜியாங்மென் நிலத்தடி நியூட்ரினோ ஆய்வகத்தை (Jiangmen Underground Neutrino Observatory(JUNO)) கட்டி முடித்துள்ளது. இது இந்தியாவை தளமாகக் கொண்ட நியூட்ரினோ ஆய்வகம் (India-based Neutrino Observatory(INO)) பல ஆண்டுகளாக முடங்கி இருப்பதால் ஒரு கசப்பான தருணமாகும். JUNO மற்றும் INO இரண்டும் நியூட்ரினோக்கள் எனப்படும் துணை அணு துகள்களைப் (subatomic particles) படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், நியூட்ரினோக்கள் துணை அணு துகள்கள், அவை அரிதாகவே பொருளுடன் தொடர்பு கொள்வதால் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம். இதனால்தான் INO மற்றும் JUNO இரண்டு ஆய்வகங்களும் மிகப் பெரியவை. அதிக பொருள் நியூட்ரினோக்கள் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வுசெய்ய அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன.


ஜூனோவில் (JUNO) முன்னேற்றம்


இருப்பினும், இந்தியாவில் INO-வின் பிரச்சனைகளுக்கு இந்த உணர்வுக் கருவியின் (detector) பெரிய அளவு பங்களிப்பு காரணமாக இருக்கலாம். INO உணர்வுக் கருவி (INO detector) 50 கிலோடன் எடை கொண்டது. இது ஒரு ஆய்வகத்திலோ அல்லது ஏற்கனவே உள்ள இருப்பிடத்திலோ பொருத்த முடியவில்லை. இதனால், தமிழ்நாட்டின் தேனியில் உள்ள ஒரு மலைக்குள் இதை வைக்க INO குழு திட்டமிட்டது. மற்ற ஆராய்ச்சிக்கான வசதிகளும் அங்கு நிறுவப்பட

இருந்தன. மேலும், மலையின் பாறையாந்து உணர்வுக் கருவிகளுக்கு இயற்கையான கேடயமாக செயல்படும். இது ஒரு விலையுயர்ந்த தனி கட்டமைப்பின் தேவையைத் தவிர்த்தது.


இருப்பினும், இந்தப் பகுதியில் கட்டுமான நடவடிக்கைகளின் அளவும், திட்டத்திற்கு நிதியளிக்க உதவிய அணுசக்தித் துறையின் ஈடுபாடும், உள்ளூர் மக்களை கவலையடையச் செய்தன மற்றும் உள்ளூர் தலைவர்கள் அரசியல் ஆதாயம் பெற இதைப் பயன்படுத்தினர். INO-இன் ஒத்துழைப்பானது (பின்னோக்கிப் பார்க்கும்போது) நடைமுறையைப் பின்பற்றாமல், இந்தத் திட்டம் எவ்வளவு பாதிப்புகுள்ளதாக மாறக்கூடும் என்பதை மதிப்பிடாமல் தவறு செய்தது. அவ்வாறு செய்திருந்தால், சில பொதுமக்களின் உணர்வுகளுக்கு சிறப்பாக பதிலளிக்கவும் நிர்வகிக்கவும் உதவியிருக்கும்.


2010-களின் பிற்பகுதியில், சீனா ஜூனோவுடன் விரைவாக முன்னேறி வந்ததால் INO-ன் தாமதங்கள் கவலைக்கிடமாக இருந்தன. உணர்வுக் கருவியை  (detector) இயக்க குறைந்த எண்ணிக்கையிலான மானியங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறும் நம்பிக்கையில் INO ஒத்துழைப்பில் சிக்கல் இருந்தது. ஜூனோவை 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க சீனா திட்டமிட்டது. இருப்பினும், அந்த காலக்கெடு ஐந்து ஆண்டுகள் முன்னதாக இருந்தது. 2025-ஐ இலக்காகக் கொண்டிருந்திருந்தால், INO-க்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஏனென்றால் அது இனி ஒரு இறுக்கமான காலக்கெடுவை எதிர்கொள்ளாது. ஒருவேளை அது இன்னும் வெற்றி பெற்றிருக்காது என்றாலும் அது சாத்தியமற்றதாகவும் இருந்திருக்காது.


இன்று, INO திட்டம் முடங்கி இருக்கும் நிலையில், ஜூனோ (JUNO) அதன் முதல் பகுப்பாய்வுகளை வெளியிட்டுள்ளது. நவம்பர் 18 அன்று ஜூனோ குழு இரண்டு முன் அச்சிடப்பட்ட ஆவணங்களை பதிவேற்றியது. ஒன்று "JUNO உணர்வு கருவிகளின் ஆரம்ப செயல்திறன் முடிவுகளை" (initial performance results of the JUNO detector) அறிவித்தது. ஆர்மீனியா, பெல்ஜியம், பிரேசில், சிலி, தைவான், செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாகிஸ்தான், ரஷ்யா, ஸ்லோவாக்கியா, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றதன் மூலம், இந்தியா விரும்பிய சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்த்தது என்பதை அதன் நாடுகளின் ஆராய்ச்சியாளர் பட்டியல் வெளிப்படுத்துகிறது.


இந்தியாவிலிருந்து எந்த ஆராய்ச்சியாளர்களும் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. விண்வெளி அறிவியல் துறையில் இதேபோன்ற ஒரு பிரச்சினையை பத்திரிகையாளர் ஜதன் மேத்தா குறிப்பிட்டார். 2020-ம் ஆண்டில் சீனா தனது சாங்-இ-5 (Chang’e-5) பயணத்தில் சந்திரனில் இருந்து கொண்டு வந்த பாறைகளை அணுகுவதற்கான பயன்பாடுகளின் (முதல்) பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இல்லாததால் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். நியூட்ரினோ இயற்பியல் மற்றும் சந்திர மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதில் இந்தியா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் துறைகளில் பல சிறந்த அறிஞர்களைக் கொண்டுள்ளது.


இரண்டாவது முன் அச்சிடப்பட்ட ஆய்வறிக்கை INO-ன் ஆய்வின் நோக்கத்தை விவரித்தது. நியூட்ரினோக்களைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றாலும், இயற்பியலாளர்கள் அவை மூன்று வகைகளில் அல்லது நிலைகளில் வருகின்றன என்பதையும், அவை விண்வெளியில் பயணிக்கும்போது இந்த வகைகளுக்கு இடையில் மாறலாம் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.


மூன்று நியூட்ரினோ நிறைகள் எவ்வாறு வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிவது ஒரு முக்கியமான திறந்த கேள்வியாக, இது நியூட்ரினோ அலைவுகளுடன் தொடர்புடையது. இந்த அலைவுகள் மூன்று கோணங்களால் விவரிக்கப்படுகின்றன. அவை, θ-12 (தீட்டா ஒன்று இரண்டு), θ-13 (தீட்டா ஒன்று மூன்று), மற்றும் θ-23 (தீட்டா இரண்டு மூன்று) ஆகும். முந்தைய சோதனைகள் θ-13 ஐ அளவிட்டன. மேலும், JUNO மற்றும் INO ஆகியவை நியூட்ரினோ நிறை வரிசையை தீர்மானிக்க இந்த முந்தைய வரிசையைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டன. இரண்டாவது ஆய்வறிக்கையில், JUNO ஒத்துழைப்புக்குழு θ-12-ஐ மிகவும் துல்லியமாக அளவிட்டதாக, முந்தைய கண்டுபிடிப்புகளுடன் பரவலாக ஒத்துப்போகும் வகையில் தெரிவித்தது.


இதன் பின்னணியில், உயர் ஆற்றல் இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானியும், JUNO திட்ட மேலாளரும், செய்தித் தொடர்பாளருமான யிஃபாங் வாங், “இந்த அளவிலான துல்லியத்துடன், ஜூனோ விரைவில் நியூட்ரினோ நிறை வரிசையை தீர்மானிக்கும், மூன்று-நிலை அலைவு கட்டமைப்பை சோதிக்கும், அதைத் தாண்டி புதிய இயற்பியலைத் தேடும்” என்று கூறியிருந்தார்.


உயரும் தடை


INO திட்டக் குழு (சில சமயங்களில்), அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் இந்த நீண்ட போராட்டத்தில் நடந்துகொண்ட விதம் பற்றி நாம் விவாதிக்கலாம். ஆனால் இந்தத் துறையில் ஒரு பேருந்தை ஒருமுறை தவறவிட்டால் அடுத்த பேருந்தைப் பிடிக்கலாம் என்று பொருளில்லை; அடுத்த முறை உங்கள் முயற்சிக்கு ஏதாவது பலன் வேண்டுமானால் அது சாதாரண பேருந்தைவிட மிகவும் அதிநவீனமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். கடந்த புத்தாண்டில் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான அறிவியல் மர்மத்தை உடைக்க உதவும் திறனும் வளங்களும் இருந்தன. ஆனால் JUNO அந்த சவாலை வென்றுவிட்டால், அடுத்த பெரிய மர்மத்தைத் தாக்க இந்தியாவிடம் தேவையான வளங்கள் இருக்காது — ஏனெனில் அது இன்னும் அதிக சிறப்புத் தேவைப்படும், இன்னும் அதிநவீன தொழில்நுட்பங்களை வேண்டி நிற்கும். அப்படியிருந்தாலும், இளம் விஞ்ஞானிகளின் புத்திக் கூர்மையையும், வளம் படைக்கும் திறமையையும் எதிர்த்து பந்தயம் கட்ட ஒரு முட்டாள் மட்டுமே துணிவான்.


"வளக் கட்டுப்பாடுகள்" (resource constraints) என்ற யோசனை மிகவும் வெறுப்பூட்டுகிறது. சில நேரங்களில் இந்த கட்டுப்பாடுகள் உண்மையானவை. மற்ற நேரங்களில், ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதைத் தவிர்ப்பதற்கு அல்லது உள்ளூர் சமூகங்கள் அதன் விளைவுகளை நிர்வகிக்க உதவும் திறன்கள் மற்றும் பொருட்களை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு நிர்வாகிகளால் அவை ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தியா ஒரு பெரிய அறிவியல் திட்டத்திற்குத் தயாராக இல்லை என்று எங்களால் நம்ப முடியவில்லை. வானியல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு பகுதிகளில் உள்ள பெரிய தரைத்தள அடிப்படையிலான தொலைநோக்கிகள் பெரிய அறிவியலின் எடுத்துக்காட்டுகளாகும். மேலும் இந்தியாவில் ஏற்கனவே அவற்றில் பல உள்ளன. ஒருவேளை பெரிய பாடம் என்னவென்றால், நமது விஞ்ஞானிகள் மட்டும் தயாராக இருக்கிறார்களா என்பதை மட்டும் வைத்து அத்தகைய திட்டத்தை முயற்சிக்கக்கூடாது, அறிவியலுக்கு அப்பாற்பட்ட மற்றும் தரைதளத்தில் உள்ள நிலைமைகளும் தயாராக உள்ளனவா என்பதையும் நாம் சரிபார்க்க வேண்டும்.


Original Article: The INO that wasn’t and the JUNO that is 

Share:

வந்தே மாதரத்தின் உறுதிமொழியை நிலைநாட்டுவோம் -ராஜ கார்த்திகேயா

தேசியப் பாடலின் 150-வது ஆண்டு நிறைவில், இந்தியாவில் சுற்றுச்சூழல் எவ்வளவு தூய்மையாக உள்ளது என்று சிந்திக்க ஒரு நல்ல தருணத்தை வழங்குகிறது.


இந்தியாவின் சுதந்திரத்திற்கான போர்க்குரலாக மாறிய வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாட இந்தியா தொடங்கியுள்ளது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் காலத்தால் அழியாத வார்த்தைகளான சுஜலம், சுபலம், மலையஜ சீதளம், சஸ்ய-ஷ்யாமலம் (தெளிவான நீர்நிலை நிறைந்தது, பழங்கள் நிறைந்தது, மலைக்காற்றால் குளிர்ச்சியடைந்தது, அறுவடை நிறைந்த வயல்களுடன் செழிப்பானது மற்றும் பசுமையானது”) என்பதை நாம் எவ்வளவு தூரம் உணர்ந்துள்ளோம் என்று சிந்திக்க ஒரு நல்ல தருணமாகும்.


பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட நிலம்


இந்தியாவின் சுற்றுச்சூழல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகின் சிறந்த நாகரிகங்களில் ஒன்றின் தொட்டிலாக மாறுவதற்கு மிக முக்கியமானதாக பன்முகத்தன்மை உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் கருவுறுதல் விகிதம் அதன் மண்ணின் வளத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய மக்கள்தொகையை ஆதரிக்க ஏராளமான அறுவடைகளை வழங்க முடிந்தது. உலகின் நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு வெறும் 2.4% மட்டுமே என்றாலும், உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு, உலகின் உயிரினங்களில் சுமார் 8% இந்தியாவிற்கு தாயகமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. 91,200-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களும் 45,500-க்கும் மேற்பட்ட தாவரங்களும் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவின் மழை பெய்யும் காற்றின் நம்பகத்தன்மை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, புகழ்பெற்ற புவியியலாளர் ஹால்ஃபோர்ட் மெக்கிண்டர், இந்தியாவை உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் "பருவமழை ஆற்றல்" (Monsoon power) என்று விவரித்தார்.


ஆனால் இந்த வளமான சுற்றுச்சூழல் பாரம்பரியம் ஒரு கேள்வியை எழுப்புகிறது. நமது நாகரிகத்தை வடிவமைத்த கூறுகளான சுஜலம், சுபலம், மலையஜ சீதளம் ஆகியவற்றை நாம் எவ்வளவு சிறப்பாகப் பாதுகாத்துள்ளோம்? உயிர்களை நிலைநிறுத்தும் இந்தியாவின் ஆறுகள் இப்போது கடுமையான சிக்கலில் உள்ளன. கிட்டத்தட்ட 43% நதி கண்காணிப்பு அமைப்புகள் கன உலோக மாசுபாட்டின் (heavy metal contamination) தடயங்களைக் கண்டறிந்துள்ளன.


பல இந்திய நதிகளில் பூச்சிக்கொல்லிகளின் அளவு (pesticide content) அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட மிக அதிகமாக உள்ளது. உலகளாவிய நீர் தர தரவரிசையில், இந்தியா 122 நாடுகளில் 120வது இடத்தில் உள்ளது. இதில் குறிப்பிடும்படியாக, நமது நீர் ஆதாரங்களிலிருந்து (aquifers) வரும் தண்ணீரை நாம் நம்பவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. 


கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 60% இந்திய குடும்பங்கள் தங்கள் குழாய் நீருக்காக வடிகட்டியைப் பயன்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டது. யமுனை நதியில் ஏற்படும் மாசுபாடு இப்போது இணையப்பதிவில் (memes) தோன்றலாம். ஆனால், நாம் நமக்காக உருவாக்கிய துயரத்தில் மகிழ்ச்சிக்கு இடமில்லை.


இந்தியாவில் 40%-க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. ஆச்சரியப்படத்தக்க வகையில், புற்றுநோய் நோயாளிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நமது காலத்தின் நெருக்கடி


பங்கிம் சந்திர சட்டர்ஜி மட்டுமல்ல, கவிஞர் காளிதாசர் முதல் தாகூர் வரை, இந்தியாவின் புதிய மற்றும் மணம் கொண்ட காற்றைப் புகழ்ந்தனர். டெல்லியின் காற்று தரக் குறியீடு (Air Quality Index (AQI)) பற்றி இன்று அவர்கள் என்ன சொல்ல வேண்டும்? அக்டோபர் 30 அன்று, உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் முதல் 40 இடங்களைப் பிடித்தன. பயண வலைத்தளங்கள் இப்போது இந்தியாவில் உள்ள இடங்களுக்கு "50-க்கும் குறைவான காற்று தரக் குறியீடு” (an AQI less than 50) இருப்பதை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்துகின்றன.

காற்று மாசுபாட்டின் நிதிச் செலவு இப்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 9.5% ஆகும். இது சமீபத்திய பத்தாண்டு காலங்களில் இந்தியா அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை அழிக்க அச்சுறுத்துகிறது. அக்டோபரில் வெளியிடப்பட்ட லான்செட் ஆய்வு ஒரு குழப்பமான உண்மையைக் காட்டியது. அதில், மனிதனால் உருவாக்கப்பட்ட காற்று மாசுபாட்டால் 2022-ல் 17 லட்சம் இந்தியர்கள் அகால மரணம் அடைந்தனர். இந்த எண்ணிக்கை 2010-ஐ விட 38% அதிகமாகும்.


மசாலாப் பொருட்கள் மற்றும் கனிம வளங்களுக்குப் பெயர் பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய செல்வம் எப்போதும் அதன் வேளாண்மைதான். நாட்டில் குறைந்தது 66 வகை பழங்கள் மற்றும் 29 வகை தானியங்கள் அதன் நிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தியா, குறிப்பிடத்தக்க விவசாய பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் விவசாயம் இன்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வருகிறது. மேலும், அதற்கு வலுவான மற்றும் நிலையான ஆதரவு தேவை. காலநிலை மாற்றத்தின் தாக்கம் எண்ணற்ற வழிகளில் வெளிப்பட்டுள்ளது. வெப்பநிலையின் அதிகரிப்பு முதல் மண்ணின் தரத்தை பாதித்த ஒழுங்கற்ற மழைப்பொழிவு வரை கணிக்க முடியாத்தாகி வருகிறது. இதன் விளைவாக கர்நாடகாவில் விளையும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்-சி-ன் அளவு குறைந்து வருவதாக குறிப்பிடுகிறது. மகாராஷ்டிராவில் திராட்சைகளில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் மரங்கள் தாமதமாக பூக்கின்றன.


சுத்தமான காற்று மற்றும் தண்ணீருக்கான உரிமை


வந்தேமாதரம் மக்களைத் திரட்டுவதற்கான ஒரு எழுச்சியூட்டும் கூக்குரலைவிடவும், சுதந்திரத்திற்கான ஒரு முழக்கத்தைவிடவும் அதிகமாக இருந்தது. அது எப்போதும் இந்தியர்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒரு பொருளாக இருந்தது, இன்றும் உள்ளது. அதன் வார்த்தைகள் இந்திய மக்களுக்கு அவர்களின் தாயகம் பற்றிய வாக்குறுதியைக் குறிக்கின்றன. வந்தே மாதரத்தின் எத்தனை சரணங்களைப் பாட வேண்டும் என்பது குறித்து பல ஆண்டுகளாக பல அரசியல் விவாதங்களைக் கண்டிருக்கிறோம். நமது தேசியப் பாடலின் வார்த்தைகள் இன்று எவ்வளவு உண்மை என்பது குறித்து, கருத்தியல் மற்றும் பாகுபாடான

எல்லைகளைத் தாண்டி ஒரு விவாதம் நடத்த வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.


அதேபோல், நமது உடல்நலம், நம்முடைய பெற்றோரின் ஆயுள், நமது குழந்தைகளின் நல்வாழ்வு ஆகியவை பணயத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது, ஒவ்வொரு குடிமகனும் முன்னே வந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். காற்று மாசுக்கு எதிரான சமீபத்திய இந்தியா கேட் போராட்டம் ஒரு அறிகுறியாக மட்டுமே இருக்கலாம். பங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் “ஆனந்தமடம் (Anandamath)” நாவலில், 1770-ல் தாய்நாட்டை காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க உறுதியாக இருந்த ஒரு குழு சந்நியாசிகள் குறித்து வர்ணிக்கப்படுகிறது. 2025-ல் அந்த உறுதி, ஆரோக்கியமான சுற்றுச்சூழலைக் கோரும் இளம் ஆர்வலர்களிடம் தொடர்கிறது. மாசின் கொடுமைகளிலிருந்தும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலற்ற தன்மையிலிருந்தும் விடுதலையை கோரும் ஒவ்வொரு பதாகை மற்றும் சமூக ஊடகப் பதிவிலும் அந்த உறுதி வெளிப்படுகிறது.


வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நிறைவை விட சுஜல், சுபால் மற்றும் சஷ்ய-ஷ்யமல் (Sujal – சுத்தமான நீர்;  Suphāl – பயனுள்ள/சிறந்த விளைவு; Sasya-shyamal – பசுமையான பயிர்கள்) இந்தியாவுக்கான அழைப்பை எழுப்புவதற்கு இதைவிட ஒரு சந்தர்ப்பமான தருணம் இருக்க முடியுமா? சுத்தமான காற்றிற்கான நமது உரிமைக்காக மட்டுமல்ல, நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் வந்தே மாதரத்தின் வாக்குறுதியை மீட்டெடுக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது.


இந்தியாவில் காலநிலை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2017-18-ஆம் ஆண்டில் ராஜா கார்த்திகேயா ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் வட்டங்களில் பயணம் செய்தார்.


Original Article: Uphold the promise of Vande Mataram 
Share:

வரையறுக்கப்பட்ட வாய்ப்பு : இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து . . .

இந்தியா ரூபாயை நிலைப்படுத்த எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும்.


நவம்பர் 2024-ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இப்போது வரை, ரூபாயின் மதிப்பு சுமார் 7% சரிந்து, ஒரு டாலருக்கு சுமார் ₹83.4-லிருந்து ₹89.2 ஆகக் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி அசாதாரணமானது அல்ல. 2018-ம் ஆண்டில், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 11% முதல் 12% வரை சரிவைக் கண்டுள்ளது. அரசியல் மற்றும் வர்த்தக சூழ்நிலைகள் அந்த முந்தைய காலத்தின் எதிரொலிகளைக் கொண்டிருப்பதால் இந்த ஒப்பீடு என்பது அறிவுறுத்தலாகும். 2018-ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், உலகளாவிய டாலர் வலுவடைந்து, அதிகரித்துவரும் அமெரிக்க வட்டி விகிதங்கள் மற்றும் வர்த்தக பதட்டங்கள் ரூபாய் உட்பட வளர்ந்துவரும் சந்தை நாணயங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தின. இந்திய ரிசர்வ் வங்கி அதன் முதல் நீண்டகால நாணய மாற்றத்தை ஒரு முறையான பணப்புழக்க சரிபார்ப்பாகப் பயன்படுத்தியது. 2019-ம் ஆண்டில், இது மூன்று ஆண்டு டாலர்/ரூபாய் பரிமாற்றத்தை $5 பில்லியன் நிறைவு செய்தது. பிப்ரவரி 2025-ல், உலகளாவிய நெருக்கடியின்போது வங்கி அமைப்பில் நீண்டகால ரூபாய் பணப்புழக்கத்தை செலுத்துவதற்காக $10 பில்லியன் டாலர்/ரூபாய் வாங்குதல்-விற்பனை பரிமாற்ற ஏலத்தை அது நடத்தியது. இத்தகைய பரிமாற்றங்கள் மத்திய வங்கிகளால் பணப்புழக்கத்தை வழங்குவதற்கும், அந்நிய செலாவணி இருப்புக்களை அதிகரிப்பதற்கும், டாலர் உயரும்போது அல்லது மூலதனம் தலைகீழாகப் பாயும்போது ஒழுங்கற்ற நாணயத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும் ஒரு நிலையான கருவியாக உதவுகிறது. நவம்பரில் ஏற்பட்ட கடுமையான ரூபாய் வீழ்ச்சி வெளிப்புற அழுத்தங்களால் ஏற்பட்டது. நிச்சயமற்ற காலங்களில் மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பரணாகப் (hedge) பயன்படுத்தியதால், பொன் இறக்குமதி அதிகரித்ததே இதற்குக் காரணம். விரிவடையும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் அதிக அமெரிக்க வர்த்தக வரிவிதிப்புகளுக்கு மத்தியில் போட்டித்தன்மையைப் பராமரிக்க ஏற்றுமதியாளர்கள் போராடுகிறார்கள். இந்த கடினமான உலகளாவிய சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணை குறைவாகவே உள்ளது. ஆனால் நிர்வகிக்கப்படும் மாற்று விகித அமைப்பின்கீழ், மாற்று விகிதத்தை நிர்ணயிப்பதற்குப் பதிலாக 'நிலையற்றத் தன்மையை குறைக்க' மட்டுமே முடியும்.


கடந்த ஆண்டு நவம்பர் முதல் இப்போது வரை, ரூபாயை நிலைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி சுமார் $50 பில்லியன் அந்நிய செலாவணியை விற்றது. அப்படியிருந்தும், வெளிப்புற அழுத்தங்களை எடுத்துக்காட்டும் வகையில் ரூபாய் மதிப்பு இன்னும் பலவீனமடைந்துள்ளது. இருப்பினும், சில எச்சரிக்கையான நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு சுமார் $693 பில்லியனாக இருப்பாக உள்ளது. உள்நாட்டில் சில்லறை பணவீக்கம் கடுமையாகக் குறைந்துள்ளது. அக்டோபர் 2025-ல் நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 0.25% ஆக மட்டுமே இருந்தது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கு வரம்பாக 2% முதல் 6% வரை விட மிகக் குறைவு. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூபாயில் மிதமான வீழ்ச்சியை அனுமதிக்க இடம் உள்ளது. குறிப்பாக, ஆக்கிரமிப்பு விகித உயர்வை நாடாமல் இந்தியா மலிவான ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து ஒப்பீட்டளவில் விலை உயர்ந்த அமெரிக்க எண்ணெய் இறக்குமதிக்கு மாறும்போது இது சாத்தியமாகும். நிதியாண்டு-2025-ல் மொத்த இறக்குமதிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் கச்சா எண்ணெய் இருப்பதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் விலை உயர்ந்த எண்ணெய் இறக்குமதியும் இணைந்து பணவீக்கத்தை மீண்டும் அதிகரிக்கக்கூடும். இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, பணவியல் நிலைப்படுத்தல் மட்டும் போதுமானதாக இருக்காது. இந்தியாவின் நீண்டகால பாதிப்பை மத்திய அரசு நிவர்த்திசெய்ய வேண்டும். எண்ணெயை அதிகமாகச் சார்ந்திருத்தல். விரைவான போக்குவரத்து மின்மயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் உத்தியின் கட்டாயங்களாகக் கருதப்பட்டு அவசரமாகப் பின்பற்றப்பட வேண்டும். இவை வர்த்தக வழிகளைப் பன்முகப்படுத்தும் என்ற நம்பிக்கையில், இந்தியா கவனம் செலுத்தியுள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களின் தொகுப்பிற்கு மாறாக, கவனமாக திட்டமிடப்பட்ட வர்த்தகக் கொள்கையுடன் செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆசியான் உடனான வர்த்தக ஒப்பந்தங்கள் வர்த்தக சமநிலையை இந்தியாவிற்கு எதிராக சாய்த்துள்ளன.


Original Article: Limited room: On the Indian rupee

Share: