அடிப்படையை தவறவிடுதல் : வட இந்தியாவின் காற்றின் தரப் பிரச்சினை குறித்து . . .

 காற்றின் தரப் பிரச்சினை குறித்து அரசாங்கம் பொதுமக்களிடம் பேச வேண்டும். அதற்கு அச்சுறுத்தல் தேவையில்லை.


நவம்பர் 24 அன்று, டெல்லி அரசாங்கம் இந்தியா கேட் (India Gate) அருகே ஒரு சிறிய மற்றும் அமைதியான கூட்டத்தை எதிர்கொண்டது. நகரத்தின் காற்றின் தரக்குறியீடு 400-க்கு அருகில் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்த கூடியிருந்தனர். டெல்லி அரசாங்கம் இந்தக் கூட்டத்தை பலத்த காவல் முன்னிலையில் (police presence) எதிர்கொண்டது. இது ஒரு வெளிப்படையான கேள்வியை எழுப்பியது. இங்கு அச்சுறுத்தலானது பொதுமக்கள் பாதுகாப்பா அல்லது அரசியல் சங்கடமா? குளிர்காலத்தில் வட இந்தியாவில் காற்றின் தரம் பெரும்பாலும் டெல்லி பிரச்சினையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், கண்காணிப்பு நிலையங்கள் (monitoring stations) இஸ்லாமாபாத்தைச் சுற்றி இருந்து பீகார் வரை தொடர்ச்சியான மாசுபட்ட காற்று மண்டலத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த பகிரப்பட்ட வான்வெளியில் (airshed) தொழில், மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விவசாயத்திலிருந்து வரும் மாசுபாடு பரவுகின்றன. இதனால்தான் இந்தியா கேட் போராட்டங்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. டெல்லியின் நடுத்தர வர்க்கத்தினர் பொதுவாக காற்று சுத்திகரிப்பான்களைப் (air purifiers) பயன்படுத்துவதன் மூலமும், ஜன்னல்களை மூடுவதன் மூலமும், விடுமுறைக்குச் செல்வதன் மூலமும், தனிப்பட்ட முறையில் நிறைவின்மையாக இருப்பதன் மூலமும் மாசுபாட்டைக் கையாள்கின்றனர். ஆனால் இந்த முறை, அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தேர்ந்தெடுத்தனர். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு பதிலாக காவல் துறையுடன் பதிலளித்துள்ளது. விரைவு அதிரடிப் படைப் பிரிவுகளைப் (Rapid Action Force) பயன்படுத்துவது, அரசாங்கம் இந்தக் கூட்டங்களை ஒரு ஆட்சிப் பிரச்சினையாக அல்ல, சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது. வட இந்தியாவின் குளிர்காலப் புகை மூட்டம், பரந்த தேசிய நெருக்கடியின் மிகவும் புலப்படும் பகுதியாகும். காற்றுத் தர வாழ்க்கை குறியீடு (Air Quality Life Index) போன்ற துகள் மாசுபாட்டின் நீண்டகால பகுப்பாய்வுகள், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதுகாப்பற்ற காற்று இப்போது வழக்கமாகிவிட்டது என்பதைக் காட்டுகின்றன. மேலும், தற்போதைய விதிகள், கண்காணிப்பு மற்றும் அமலாக்க அமைப்புகள் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளில் போதுமானதாக இல்லை என்பதையும் அவை காட்டுகின்றன. இந்தப் பிரச்சினையை ஒரு பருவகால அவசரநிலையாக மட்டும் கருதுவது, அது ஒரு நிரந்தரப் பிரச்சினை என்பதற்கான ஆதாரங்களை புறக்கணிக்கிறது. நிரந்தரப் பிரச்சினைக்கு நிரந்தர அமைப்புகள் தேவை. இந்த நெருக்கடியை நிர்வகிப்பதற்கான முக்கிய அலகாக வான்வெளி (airshed) இருக்க வேண்டும்.


இன்று, மத்திய அமைச்சகங்கள், மாநிலத் துறைகள், நகராட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு ஒழுங்குமுறை அமைப்புகள் என பல துறைகளுக்கிடையே பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் பகுதி அதிகார வரம்பு (partial jurisdiction) மற்றும் கலப்பு ஊக்கத்தொகைகளைக் (mixed incentives) கொண்டுள்ளன. இந்த பல பகுதி துறைகளாக இருப்பதை நிவர்த்தி செய்வதற்காக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management) உருவாக்கப்பட்டது. மேலும், உமிழ்வு கட்டுப்பாட்டை இயக்கவும், மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைக்கவும், தடைகளை விதிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் நடவடிக்கைகள் பிரச்சினையின் அளவு அல்லது நிலைத்தன்மையுடன் பொருந்தவில்லை. அரசாங்கங்கள் மற்றும் முக்கிய உமிழ்வாளர்களிடமிருந்து (major emitters) காலக்கெடுவுக்கு உட்பட்ட துறைசார் திட்டங்களை கோருவதற்கும், தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம் இணக்கத்தைக் கண்காணிப்பதற்கும், அனைத்து தரவுகளும் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அதன் ஆணையைப் பயன்படுத்துவதே இப்போது அதன் பணியாகும். அரசாங்கங்கள் தொழில்நுட்பரீதியில் விரைவான திருத்தங்களையும் கைவிட வேண்டும். இந்த நடவடிக்கைகள் பொது நிதி மற்றும் நிர்வாக முயற்சியை பயன்படுத்தும் அதே வேளையில் உமிழ்வின் முக்கிய ஆதாரங்களை அப்படியே விட்டுவிடுகின்றன. கடுமையான விதிமுறைகள் மற்றும் உண்மையான அமலாக்கத்தின் மூலமாக, மாசுபடுத்தும் ஆலைகள் தெளிவான காலக்கெடுவிற்குள் ஓய்வு பெற வேண்டும் அல்லது மறுசீரமைக்கப்பட வேண்டும். தூய்மையான எரிபொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ஆதரவு மற்றும் பயிர் எச்சங்களை எரிக்கும் விவசாயிகளுக்கு நம்பகமான மாற்று வழிகளுடன், மின்சாரம், தொழில், போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் தலையீடுகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த தீர்வுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால், அவை நீடித்த மாற்றங்களுக்கு வழிவகுக்கும். மேலும் அவற்றை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கையைவிட ஒரு தைரியமான அரசியல் பார்வை வேண்டும்.


Original Article: Losing the plot: On North India’s air quality issue


Share: