தேர்தல் ஆணையம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரானதல்ல. எனவே, இந்தக் கேள்வி கேட்பது நியாயமானது: நம்மால் மின்னணு முறையில் வாக்களிக்க முடியும் என்றால், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்க ஏன் இன்னும் காலாவதியான முறைகளைப் பயன்படுத்துகிறோம்?
இந்தியா, தனது வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகப் பராமரிக்க அடிக்கடி சிரமப்பட்டு வருகிறது. இடப்பெயர்வு, நகரங்களின் வளர்ச்சி மற்றும் மனிதத் தவறுகள் காரணமாக, வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் ஒரே ஒரு முறை மற்றும் சரியான இடத்தில் மட்டுமே பட்டியலிடப்படுவதை உறுதிசெய்வது கடினம் என்று கூறப்படுகிறது.
ஒரு ஜனநாயகம் அதன் வாக்காளர் பட்டியல் துல்லியமாக இருக்கும்போதும், அது துல்லியமானது என்று மக்கள் நம்பும்போதும் மட்டுமே நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machine (EVMs)) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கைப் பதிவு (Voter Verifiable Paper Audit Trail (VVPAT)) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எனவே, நியாயமான ஒரு கேள்வியை எழுப்பலாம்: வாக்குப்பதிவு மின்னணு முறையில் செய்யப்படும்போது, வாக்காளர் பட்டியல் ஏன் இன்னும் காலாவதியான, பழைய பாணி முறைகள் மூலம் பராமரிக்கப்படுகிறது?
கடந்த 15 ஆண்டுகளில், ஆதார் மற்றும் அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் பல பொதுச் சேவைகளுக்கு அடிப்படையாக மாறியுள்ளன. ஆதார் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவமான, சரிபார்க்கப்பட்ட அடையாளத்தை வழங்குகிறது. இது மொபைல் போன்கள், எளிய செயலிகள் மற்றும் டிஜிலாக்கர் (DigiLocker) போன்ற தளங்களுடன் இணைக்கப்படும்போது, ஒரு நபரின் உண்மைத்தன்மை, இந்த அமைப்பில் தனிப்பட்டவரா, மற்றும் அவர்களின் தகவல் புதுப்பித்த நிலையில் உள்ளதா ஆகிய மூன்று விஷயங்களை அரசாங்கம் எளிதாக உறுதிப்படுத்த உதவுகிறது.
கோவின், கோவிட்-19 தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (Covid Vaccine Intelligence Network (CoWIN)) தளத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் தடுப்பூசிகள், தேதிகள், மையங்கள் மற்றும் பூஸ்டர் செலுத்த வேண்டிய தேதிகள் ஆகிய அனைத்தையும் பதிவு செய்யும் ஒரு கடினமான வேலை அரசுக்கு இருந்தது. அது ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்காக, அவர்களில் பலருக்கு டிஜிட்டல் கருவிகளுடன் பழக்கம் இல்லாதபோதும், சில மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டியிருந்தது. ஒவ்வொரு நபரையும் அதிகாரிகள் சென்று சரிபார்ப்பதற்குப் பதிலாக, கோவின் (CoWIN) ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பை உருவாக்கியது, அதில் மக்கள் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் உதவியுடன் தங்களைத் தாங்களே பதிவு செய்து கொள்ள முடிந்தது என்று கூறுகின்றனர்.
வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதற்காக, ஆதார் ஒரு செல்லுபடியாகும் அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்படலாம் (ஆனால் குடியுரிமைக்கான ஆதாரமாக அல்ல) என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வழக்கில் கூறியுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ளவர்களைப் பொறுத்தவரை, சந்தேகிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இருந்தால் ஒழிய, அவர்களின் குடியுரிமை அனுமானிக்கப்படலாம், அத்தகைய சந்தர்ப்பத்தில் முறையான விசாரணை செயல்முறை பயன்படுத்தப்பட வேண்டும். நடைமுறையில், தேர்தல் ஆணையத்தின் முக்கியப் பணிகள் பின்வருமாறு: இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல், 18 வயதை அடைந்த புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, உண்மையான வாக்காளர்களைச் சேர்ப்பது (முன்பு விடுபட்டவர்கள்), மற்றும் நகல் அல்லது போலியான பதிவுகளை நீக்குதல் போன்ற அனைத்துப் பணிகளுக்கும் ஆதார் அடையாள அட்டை பயன்படும் என்று தெரிவிக்கின்றனர்.
தேர்தல் ஆணையம் ஆதார் எண்களைச் சேமிக்க வேண்டியதில்லை, மாறாக, வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் (Electoral Photo Identity Card (EPIC)) தாங்களே இணைக்கலாம். அதற்குப் பதிலாக, ஒரே நபர் வாக்காளர் பட்டியலில், வேறு வேறு வாக்குச்
சாவடிகளிலோ அல்லது தொகுதிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட முறை பட்டியலிடப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய, பெயர் தெரியாத குறிப்பு குறியீடுகளைப் (anonymous reference codes) பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
இறந்துபோனவர்களின் பெயர்களைச் சரியாக நீக்க, குடிமக்கள் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தலாம் — குறிப்பாக முக அங்கீகாரத்தை — ஒரு ஸ்மார்ட்போன் மூலமாகவோ அல்லது ஒரு பொதுச் சேவை மையத்திலோ பயன்படுத்தலாம். அங்கீகரிப்பவர்கள் “உறுதிசெய்யப்பட்ட உயிருடன் இருப்பவர்கள்” என்று குறிக்கப்படுவார்கள், மேலும் மற்றவர்களுக்கு மட்டுமே களச் சரிபார்ப்பு (field verification) தேவைப்படும் என்கின்றனர். 18 வயது பூர்த்தியானவர்களை ஆதாரைப் பயன்படுத்தி அங்கீகரிக்கவும், படிவம் 6-ன் மூலம் டிஜிட்டல் பதிப்பைச் சமர்ப்பிக்கவும் ஒரு பாதுகாப்பான இணையதளம் அல்லது செயலி வாயிலாக அனுமதிக்கலாம். மேலும், சிரமங்களை எதிர்கொள்பவர்கள் ஒரு சேவை மையங்களைப் பயன்படுத்தலாம். வாக்காளர் முகவரிகளை ஆதார் முகவரிகளுடன் ஒப்பிட்டு, பல வாக்காளர்கள் இல்லாத வீட்டில் பட்டியலிடப்பட்டிருப்பது அல்லது வெளிப்படையாகப் போலிப் பதிவுகள் போன்ற பிழைகளைச் சுட்டிக்காட்டலாம். பின்னர் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (Booth-level officers) சந்தேகத்திற்குரிய பதிவுகளின் சிறிய மற்றும் மிகவும் துல்லியமான பட்டியலை மட்டுமே சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஒருமுறை தொடங்கி, தொடர்ந்து காலப்போக்கில் நடக்கும் ஒரு பணிக்காக, நகல்களை அகற்றுதல் மற்றும் பதிவுகளைச் சரிபார்த்தலின் முதல் சுற்றை ஒரு சில மாதங்களில் செய்து முடிக்க முடியும் என்கின்றனர். அதன்பிறகு, அந்தப் பட்டியலைப் பராமரிப்பது என்பது எளிதான, தொடர்ச்சியான செயல்முறையாகிவிடும். மேலும், இந்த அணுகுமுறை, வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புகளை எப்போதாவது நடக்கும், சர்ச்சைக்குரிய நிகழ்விலிருந்து, நாட்டின் மிக முக்கியமான ஆவணமாகிய, அதிகாரப்பூர்வமாக எண்ணப்படும் மக்களின் பட்டியலை, தொடர்ந்து கவனத்துடன் பராமரிக்கும் ஒரு வழக்கமான பணியாக மாறுகிற வாய்ப்புள்ளது என்கின்றனர்.
எழுத்தாளர், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India (UIDAI)) நிறுவனர் தலைமை இயக்குநரும், இந்திய அரசின் முன்னாள் செயலாளருமாவார்.
Original Article: A better way to clean up the electoral roll — use Aadhaar