Showing posts with label Biodiversity. Show all posts
Showing posts with label Biodiversity. Show all posts

தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டம் என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

இந்த வருடம் இந்தியாவின் சுதந்திர தினமும் அமெரிக்காவின் தேசிய தேனீக்கள் தினமும் ஒரே நாளில் அமைந்தன. ஒரு தேனீ என்பது மனிதனின் விரல்நுனியில் அமரக்கூடிய மிகச்சிறிய பூச்சியாகும். அப்படியிருக்க, அமெரிக்கா இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது? ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்  வேளாண் அமைப்பின் கருத்துப்படி, பயிர்களில் மகரந்தச் சேர்க்கையைச் செய்து முடிக்கும் தேனீக்களின் பங்களிப்புதான் உலகளாவிய வேளாண் உற்பத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாகும். இது உலகின் முன்னணி 115 உணவுப் பயிர்களில் 87 பயிர்களின் விளைச்சலை கணிசமாக உயர்த்துகிறது என்று அசோக் குலாட்டி, சுவாங்கி ராத் மற்றும் தன்மய் அதிகாரி ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.


முக்கிய அம்சங்கள்:


• தேனீக்கள் பயிர் விளைச்சலை அதிகரிப்பதோடு, வேளாண் விளைபொருட்களின் ஊட்டச்சத்துத் தரத்தையும் மேம்படுத்துகின்றன. இந்தியா தனது வேளாண்துறையை உற்பத்தித்திறன் மிக்கதாகவும் சத்தானதாகவும் மாற்ற வேண்டுமானால், தேனீக்களை வேளாண் தொழிலாளர்களின் சிறந்த நண்பர்களாகக் கருத வேண்டும். உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் கடுகு வயல்களையோ அல்லது இமாச்சலப் பிரதேசத்தின் ஆப்பிள் தோட்டங்களையோ கடந்து செல்லும்போது, ​​இந்தப் பூச்சிகளின் பங்களிப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தேனீக்களின் உதவியால் இந்தியா உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய தேன் உற்பத்தியாளராகவும், சீனாவிற்கும் நியூசிலாந்திற்கும் அடுத்தபடியாக, மதிப்பின் அடிப்படையில் மூன்றாவது மிகப்பெரிய தேன் ஏற்றுமதியாளராகவும் உருவெடுத்துள்ளது.


• மகரந்தச் சேர்க்கையைத் தவிர்த்து, தேனீ வளர்ப்பு மூலம் வேளாண் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கவும் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன. இந்தியாவில் தேன் உற்பத்தியானது கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது 2013-14-ஆம் ஆண்டில் சுமார் 76,000 டன்னாக இருந்த உற்பத்தியானது, 2025-26-ஆம் ஆண்டில் சுமார் 1,51,000 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் தேன் உற்பத்தித் திறனின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும், இந்தியாவில் உற்பத்தியாகும் தேனில் ஏறக்குறைய 70 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு 2025-26-ஆம் ஆண்டில் சுமார் 208 மில்லியன் அமெரிக்க டாலராகும். உலகளாவிய தேன் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 8.4 சதவீதமாக உள்ளது.


• இருப்பினும், இந்தியாவின் அதிக மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது, நாட்டின் உள்நாட்டு தேன் சந்தை சிறிய அளவிலேயே உள்ளது. இந்தியாவில் ஒரு நபரின் சராசரி தேன் நுகர்வு ஆண்டுக்கு சுமார் 37 கிராம் மட்டுமே, இது இந்தத் துறையில் இன்னும் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருப்பதைக் காட்டுகிறது. தேனின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதும், சில்லறை விற்பனை வாய்ப்புகள் மேம்படுவதும் ஒரு பலமான உள்நாட்டு சந்தையை உருவாக்கும். இது வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்த உதவுவதோடு, உயர்தர தேனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


• இந்தத் பல்வகைப்படுத்தல் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாடத்தை வெளிப்படுத்துகிறது. வர்த்தகத் தடைகள் பல நேரங்களில் மீள்தன்மையையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கின்றன. ஒரே ஒரு முக்கிய வாடிக்கையாளரை மட்டும் நம்பியிருப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் தேன் துறை பல்வேறு நாடுகளின் சந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இது ஒரே ஒரு நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, நீண்டகால ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது.


• சீர்திருத்தங்களும் முதலீடுகளும் மட்டுமே இந்த வாய்ப்பு நிலையான மாற்றத்தைத் தருமா அல்லது தற்காலிகமானதாக மட்டுமே இருக்குமா என்பதைத் தீர்மானிக்கும். அணுக்கரு காந்த அதிர்வு (Nuclear Magnetic Resonance (NMR)) பரிசோதனைக்கூடங்களில் முதலீடு செய்வது, மண்டலம் சார்ந்த பதப்படுத்துதல் (cluster-based processing), சுந்தரவனக் காடுகள் மற்றும் ராம்பன் சுலை போன்ற தனித்துவமான பூ வகை தேன்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது, மற்றும் வேளாண் குழுக்களை வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளாக மாற்றுவது ஆகியவை விதிமுறைகளுக்கான செலவைக் குறைத்து, இந்திய தேன் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவின் உயர்தரச் சந்தைகளுக்குச் செல்ல உதவும். தேன் மெழுகு, புரோபோலிஸ் (பிசின்), ராயல் ஜெல்லி மற்றும் மகரந்தம் உள்ளிட்ட உலகளாவிய தேனீ உற்பத்திப் பொருட்களின் சந்தை ஏற்கனவே மிகப்பெரியதாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் இதன் மதிப்பு சுமார் 12.7 பில்லியன் டாலர் மற்றும் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா மொத்த தேன் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருக்காமல், அதிக மதிப்புள்ள பிற தேனீ சார்ந்த பொருட்களுக்குத் தன் கவனத்தை விரிவுபடுத்த ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• நிதி ஆயோக் (NITI Aayog) தகவலின்படி, இனிப்புப் புரட்சி (Sweet Revolution) என்பது இந்திய அரசின் ஒரு இலட்சியத் திட்டமாகும். இது தரமான தேன் மற்றும் அது சார்ந்த பிற பொருட்களின் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக, தேனீ வளர்ப்பை (Apiculture) ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.


— தேனீ வளர்ப்பு என்பது குறைந்த முதலீடும், அதிக திறமையும் தேவைப்படும் ஒரு வணிக மாதிரியாகும். இதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக உருவெடுத்துள்ளது. இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த பொருள் என்பதால், நல்ல தரமான தேனுக்கான தேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுமட்டுமன்றி, ராயல் ஜெல்லி (Royal jelly), தேன் மெழுகு (Beeswax), மகரந்தம் (Pollens) போன்ற தேனீ வளர்ப்பு சார்ந்த பிற பொருட்களும் மருந்துகள், உணவு மற்றும் பானங்கள், அழகுசாதனப் பொருட்கள் எனப் பல துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 


— தேனீ வளர்ப்பை விரிவுபடுத்துவது வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தேனீப் பாதுகாப்பை உறுதி செய்யும், மேலும் பயிர் உற்பத்தித்திறனையும் மகரந்தச் சேர்க்கையையும் அதிகரிக்கும். 'இனிப்புப் புரட்சிக்கு' ஊக்கமளிக்கும் வகையில், அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பை ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி, அதன் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அரசாங்கம் தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தைத் தொடங்கியது.


— உலகின் ஏழு அறியப்பட்ட தேனீ சிற்றினங்களில் நான்கு இந்தியாவில் காணப்படுகின்றன. இவற்றில் ‘கிழக்கத்திய தேனீ’ (Apis cerana) மற்றும் 'ஐரோப்பிய தேனீ’ (Apis mellifera) ஆகிய இரண்டும் வளர்ப்புத் தேனீக்களாகவும், ‘மலைத் தேனீ’ (Apis dorsata) மற்றும் ‘சிறிய தேனீ’ (Apis florea) ஆகிய இரண்டும் காட்டுத் தேனீக்களாகவும் இருக்கின்றன. தேனீக்கள் மகரந்தச்சேர்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. குறிப்பாக எண்ணெய் வித்துக்கள், பழத்தோட்டப் பயிர்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், மரப் பயிர்கள் மற்றும் அலங்கார மலர்கள் ஆகியவை தேனீக்களின் மகரந்தச்சேர்க்கையால் பெருமளவில் பயனடையும் முதன்மைப் பயிர்களாகும்.


— தேனீக்களின் பாதுகாப்பும் அவற்றின் இனப்பெருக்கமும் அப்பகுதியில் உள்ள உள்ளூர் தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளையே முழுமையாகச் சார்ந்துள்ளன. ஏனெனில், இந்தத் தாவரங்களே தேனீக்களுக்குத் தேவையான முதன்மை உணவாக விளங்குகின்றன. சுமார் 500 வகையான பூக்கும் தாவரங்கள் தேனீக்களின் தீவனத்திற்கான முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. கடுகு, தைல மரம், லிச்சி, சூரியகாந்தி, புங்கன், இமயமலைப் பலவகை மலர்கள், கருவேல மரம் மற்றும் காட்டுப் பூக்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் தேன், வெவ்வேறு வகையான இயற்கைச் சுவைகளைத் தருகிறது. தாவரங்களின் இந்தத் தாராளமான இருப்பு, தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக லாபம் தரும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.


Original Link: What is the National beekeeping & Honey Mission (NBHM)?

Share:

இந்தியா தனது முதல் நகோயா நெறிமுறை அறிக்கையைச் சமர்ப்பித்தது. - குஷ்பூ குமாரி

பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு உடன்படிக்கையின் (CBD) கீழ், நகோயா நெறிமுறை குறித்த தனது முதல் தேசிய அறிக்கையை (National Report (NR1)) இந்தியா சமர்ப்பித்துள்ளது. இந்த நெறிமுறை எதைக் குறிக்கிறது? மேலும், இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?


தற்போதைய செய்தி


சமீபத்தில், அணுகல் மற்றும் பயன் பகிர்வு (access and benefit sharing (ABS)) தொடர்பான நகோயா நெறிமுறையின் (Nagoya Protocol) செயலாக்கம் குறித்த முதலாவது தேசிய அறிக்கையை (National Report (NR1)) இந்தியா சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை, தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்துடன் (National Biodiversity Authority (NBA)) இணைந்து, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) 2026 பிப்ரவரி 27 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது, கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் குறித்த நெறிமுறையின் 29-வது பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. இந்த அறிக்கையானது, 2017 நவம்பர் 1 முதல் கடந்த ஆண்டின் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தின் (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) இலக்கு 13-க்கு பங்களிக்கும் அதே வேளையில், நகோயா நெறிமுறையைச் செயல்படுத்துவதன் மூலம் ஏற்படும் நாட்டின் முன்னேற்றத்தையும் இது எடுத்துரைக்கிறது.





2. அறிக்கையின்படி, இந்தியா, 'அணுகல் மற்றும் பயன் பகிர்வு' (Access and Benefit-Sharing) வழிமுறையை, மூன்று அடுக்கு நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயல்படுத்துகிறது. இந்தக் கட்டமைப்பானது, தேசிய அளவில் NBA-வையும்; துணை-தேசிய அளவில் மாநிலப் பல்லுயிர் வாரியங்கள் (State Biodiversity Boards (SBBs)) அல்லது ஒன்றியப் பிரதேசப் பல்லுயிர் மன்றங்களையும் (Union Territory Biodiversity Councils (UTBCs)) மற்றும் உள்ளூர் அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்ட பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களையும் (Biodiversity Management Committees (BMCs)) உள்ளடக்கியுள்ளது. இந்த பரவலாக்கப்பட்ட அமைப்பு, தேசிய, மாநில மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.


3. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பை (UN Framework Convention on Climate Change (UNFCCC)) உருவாவதற்குக் காரணமாக அமைந்த 1992 ரியோ பூமி (Rio Earth Summit) உச்சிமாநாட்டிலிருந்தே, பல்லுயிர் பெருக்கத்திற்கான கூட்டமைப்பும் (Convention on Biological Diversity (CBD)) தோன்றியது. உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதும், இயற்கைச் சூழல் மண்டலங்களை மீட்டெடுப்பதும், உலகின் உயிரியல் வளங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வது  பல்லுயிர் பெருக்கத்திற்கான கூட்டமைப்பின் நோக்கங்களாகும்.


4. இந்தியா உட்படப் பல நாடுகள், 1994-ஆம் ஆண்டில் பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டை (CBD) ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டன. இதில் மூன்று முக்கிய அம்சங்கள் குறித்துப் பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்பட்டது: அவை,


(i) உயிரியல் வளங்களை வரம்பின்றிப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்;


(ii) இவ்வளங்களின் மருத்துவப் பண்புகள் போன்ற பயன்பாடுகளுக்காக, அவற்றை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும்;


(iii) இவ்வளங்களைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் துணை நிற்கும் மக்களுக்கும் சமூகங்களுக்கும், அவர்களின் முயற்சிகளுக்காக உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.


5. பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாடு (CBD) என்பது சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது பற்றியது மட்டுமல்ல. இது இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது குறித்தும், இவ்வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசுகிறது. உதாரணமாக, ஐரோப்பாவில் உள்ள ஒரு மருந்து நிறுவனம் தமிழ்நாட்டில் வளரக்கூடிய சில செடிகளின் மருத்துவ குணங்களை பயன்படுத்த விரும்பினால், அந்த பயன்பாட்டினால் கிடைக்கும் நன்மைகள் பணம் அல்லது பிற வகையிலானவை அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். இதில், அந்த குறிப்பிட்ட உயிரியல் வளத்தை பாதுகாத்து வந்த உள்ளூர் பழங்குடியினர் (indigenous மக்கள்) உட்பட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும்.

6. பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு ஒப்பந்தம் இரண்டு ‘துணை’ ஒப்பந்தங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துள்ளது. அவை, 2003-ஆம் ஆண்டின் கார்டஜீனா (Cartagena Protocol) நெறிமுறை மற்றும் 2014-ஆம் ஆண்டின் நகோயா நெறிமுறை ஆகும். இந்த இரண்டு ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இடங்களின் பெயர்களையே கொண்டுள்ளன.


7. உயிரியல் பாதுகாப்பு குறித்த கார்டஜீனா நெறிமுறையானது, மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களைக் கையாளுதல், அவற்றை கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றைச் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்வதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க முயல்கிறது. உதாரணமாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops), இயற்கைச் சூழல் மண்டலங்களில் நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால்தான், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தனி  பண்ணைகளில் பயிரிடப்படுகின்றன.


8. நகோயா நெறிமுறை (Nagoya Protocol) என்பது உயிரியல் மற்றும் மரபணு வளங்களின் (biological & genetic resources) வர்த்தகப் பயன்பாட்டை (commercial utilisation) பற்றியதாகும். உதாரணமாக, மருந்து நிறுவனங்கள் இந்த வளங்களை பயன்படுத்தும் சூழல்களில் இது பொருந்தும். இந்த ஒப்பந்தம், வளம் உள்ள நாடுகள் தங்களது மரபணு வளங்களுக்கு சட்டபூர்வமாக, நியாயமான முறையில் அணுகலை (access) வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அதே நேரத்தில், அந்த வளங்களை பயன்படுத்தி கிடைக்கும் நன்மைகள் அந்த நாடுகளுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கும் சமமாகவும் நியாயமாகவும் (fair and equitable) பகிரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், உயிரியல் வளங்களின் மீதான நாடுகளின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பொதுவான கோட்பாடுகளையும், அவற்றின் வர்த்தக பயன்பாட்டிற்கான விதிமுறைகளையும் இது நிர்ணயிக்கிறது.


9. இந்த நடைமுறையின் கீழ், உயிரியல் பல்லுயிர்வகைமையில் (biodiversity) வளமான நாடுகள், ஆராய்ச்சி அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக தங்களது உயிரியல் வளங்களை பயன்படுத்த விரும்புவோருக்கு அவற்றை அணுகும் வாய்ப்பை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேவேளையில், அந்த வளங்களைப் பயன்படுத்தும் முகமைகள், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்களை உள்ளூர் சமூகங்களுடன் பகிர்ந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த அணுகல் மற்றும் பயன் பகிர்வு, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆகிய இரண்டு நிலைகளிலும் செயல்படுகிறது.


10. 1993-ஆம் ஆண்டு ஒப்பந்தமான பல்லுயிர் பாதுகாப்பு மாநாட்டில் (CBD) கையொப்பமிட்ட நாடுகள், காலநிலை கூட்டங்களைப் போல ஆண்டுதோறும் இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, பல்லுயிர் இழப்பைத் தடுத்து இயற்கைச் சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான ஒரு உலகளாவிய திட்டத்தில் பணியாற்றுகின்றன. பல்லுயிர் பாதுகாப்பு மாநாட்டில் காலநிலை மாநாட்டின் விளைவுகள்:


17-வது காலநிலை மாநாடு இது 2026 அக்டோபர் 19 முதல் 30 வரை ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற  உள்ளது.


16-வது காலநிலை மாநாடு: இது 2024 அக்டோபர் 21 முதல் நவம்பர் 1 வரை கொலம்பியாவின் காலியில் நடைபெற்றது. இந்த மாநாடு, குறிப்பாக பழங்குடியினர் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் சமமான பகிர்வை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் வரிசைத் தகவலுக்கான காலி நிதியத்தை (Digital Sequence Information (DSI)) நிறுவியதோடு முடிவடைந்தது. மேலும், உலகளவில் பல்லுயிர் முயற்சிகளுக்கு நிதியளிக்க, 2030-க்குள் ஆண்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.


15-வது காலநிலை மாநாடு: இது 2022-ல் கனடாவின் மாண்ட்ரீலில் நடைபெற்றது. இது உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு (Global Biodiversity Framework (GBF)) எனப்படும் ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்கியது. அதன்படி, 2030-க்குள் அடையப்பட வேண்டிய நான்கு குறிக்கோள்களும் 23 இலக்குகளும் உள்ளன. இந்த உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு, உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் 2015-ஆம் ஆண்டின் காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துடன் ஒப்பிடப்படுகிறது.


பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு


1. இந்தியாவில் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்காக அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறது மற்றும் குடிமக்கள் மீது அடிப்படைக் கடமைகளை விதிக்கிறது.


பிரிவு 48A-அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy): "அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டின்  வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறது.


பிரிவு 51-A(g)-அடிப்படைக் கடமைகள் ((Fundamental Duties))  ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கைச் சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தவும், உயிரினங்கள்மீது கருணை காட்டவும் கடமையை விதிக்கிறது.


2. அரசியலமைப்பு வழிகாட்டுதல்கள் தவிர, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பேணுதலுக்கான சட்டப்பூர்வமான விதிகளும் உள்ளன: அவை மீன்வளச் (Fisheries Act) சட்டம், 1897, வனவிலங்கு பாதுகாப்புச் (Wildlife Protection Act) சட்டம், 1972, பல்லுயிர் (Biological Diversity Act) சட்டம், 2002 ஆகும்.


3. 1994-ல் இந்தியா அங்கீகரித்த, ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பாதுகாப்பு உடன்படிக்கையில் மறைந்துள்ள நோக்கங்களை நிறைவேற்றும் இந்தியாவின் முயற்சியின் விளைவாகவே 2002-ஆம் ஆண்டில் பல்லுயிர் (Biological Diversity Act) சட்டம், உருவானது. இந்தச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் – பல்லுயிரைப் பாதுகாத்தல், அதன் வளங்களை நீடித்த முறையில் பயன்படுத்துதல், மற்றும் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை ஒரு நியாயமான செயல்முறையின் மூலம் நேர்மையாகவும் சமமாகவும் பகிர்ந்தளிப்பது ஆகும்.


4. இதேபோல், பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டின் (CBD) ஆணைகளைச் செயல்படுத்துவதற்காக, 1999-ஆம் ஆண்டு தேசிய பல்லுயிர் பாதுகாப்பு உத்தி மற்றும் செயல் திட்டம் (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) 2008-இல் புதுப்பிக்கப்பட்டது. 2010-ல் நகோயாவில் நடைபெற்ற பல்லுயிர் பெருக்கத்திற்கான  மாநாட்டின் COP 10-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐச்சி பல்லுயிர் பாதுகாப்பு (Aichi Biodiversity targets) இலக்குகளுடன் இந்தத்திட்டத்தை சீரமைப்பதற்காக, 2014-ல் திருத்தங்கள் செய்யப்பட்டன.


5. இதன் தொடர்ச்சியாக, ஐச்சி இலக்குகளுக்குப் பதிலாக COP15-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட குன்மிங்-மான்ட்ரியல் பல்லுயிர் (Kunming-Montreal Biodiversity Framework) பாதுகாப்பு கட்டமைப்புடன் திட்டத்தை சீரமைப்பதற்காக, இந்தியா தனது, 'தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தை' (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) 2024 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான  காலகட்டத்திற்காக, கொலம்பியாவின் காலி நகரில் நடைபெற்ற COP 16 மாநாட்டில் அறிமுகப்படுத்தியது. 2030-ஆம் ஆண்டு வரையிலான பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும் வகையில், இது 23 தேசிய பல்லுயிர் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.







Original Link: India submits first Nagoya Protocol Report.


Share: