தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) மாதிரி கட்டமைப்பைப் புதுப்பிப்பதும், ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) ஆய்வு முறையைச் மேம்படுத்துவதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) மதிப்பீடுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவும் என்கின்றனர்.
2022–23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), 2022–23, 2023–24 மற்றும் 2024–25 ஆண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய தரவுகளுடன் கூடிய செய்திக்குறிப்பை வெளியிட்டது. காலாவதியான 2011–12-ஆம் அடிப்படை ஆண்டிற்குப் பதிலாக இந்த புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை மிகவும் துல்லியமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நீண்டகாலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய புள்ளிவிவர வரிசையின்படி, இந்தியாவின் நடப்பு விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)), 2022–23-ஆம் ஆண்டில் ₹261.18 லட்சம் கோடியாகவும், 2023–24-ஆம் ஆண்டில் ₹289.84 லட்சம் கோடியாகவும், 2024–25-ஆம் ஆண்டில் (முதல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி) ₹318.07 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய புள்ளிவிவரங்கள் பழைய கணக்கீட்டு முறையைவிடச் சற்று குறைவாக (3–4%) உள்ளன. 2024–25-ஆம் ஆண்டிற்கான மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) கணக்கீட்டில், முதன்மைத் துறை (விவசாயம்), இரண்டாம் நிலைத் துறை (தொழில்), மற்றும் மூன்றாம் நிலைத் துறை (சேவை) ஆகியவற்றின் பங்களிப்பு முறையே 21.4%, 25.8% மற்றும் 52.9%-ஆக உள்ளது. இதில் உற்பத்தித் துறையானது சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது 2023–24-ஆம் ஆண்டில் 12.7%-ஆகவும், 2024–25-ஆம் ஆண்டில் 9.3%-ஆகவும் உள்ளது. செலவின அடிப்படையில் பார்த்தால், தனிநபர் நுகர்வுச் செலவானது (Private Final Consumption Expenditure) நடப்பு மற்றும் நிலையான விலைகள் இரண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 56% பங்கைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
புதிய தொடரில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மேம்பாடுகள்
புதிய தொடரில் பின்பற்றப்படும் முறையியலில் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாவதாக, நிதி சாரா தனியார் பெருநிறுவனத் துறையைச் சேர்ந்த பல தொழில்களைச் செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நிறுவனத்தின் மொத்த கூடுதல் மதிப்பு (Gross Value Added (GVA)), அந்நிறுவனம் சமர்ப்பிக்கும் (Management 7/7A) தரவுகளில் உள்ள வருவாய் பங்கீட்டுத் தகவலின் அடிப்படையில் அந்தந்த வணிகச் செயல்பாடுகளுக்குப் பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், 2011-12-ஆம் ஆண்டு தொடரில் மொத்த மொத்தக் கூடுதல் மதிப்பும் அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவதாக, வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பங்களிப்பைக் கணக்கிட, செலுத்தப்பட்ட மூலதனத்தின் (Paid-up Capital) அடிப்படையில் தொழில் மற்றும் நிறுவனத்தின் அளவிற்கேற்ப தனித்தனியான ‘Blown up factor’ பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக, நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs (MCA)) தரவுகளைப் பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் (Limited Liability Partnerships (LLPs)) முழுமையாகக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. நான்காவதாக, குடும்பத் துறையின் (Household Sector) GVA பங்களிப்பைக் கணக்கிட, ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASUSE) வழங்கும் ஒரு தொழிலாளருக்கான சராசரி கூடுதல் மதிப்பு (GVAPW) தரவுகளும், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) வழங்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்துக் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2011-12-ஆம் ஆண்டு தொடரில், அடிப்படை ஆண்டின் மொத்த கூடுதல் மதிப்பீடுகள் பொருத்தமான குறியீடுகளைக் கொண்டு அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கணிக்கப்பட்டன. ஆனால், தற்போது துல்லியமான வருடாந்திர தரவுகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
புதிய தொடரானது, 'இரட்டைப் பணவீக்கக் குறைப்பு' (Double Deflation (DD)) மற்றும் 'அளவு மதிப்பீடு' (Volume Extrapolation (VE)) முறைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம், உண்மையான மொத்த மதிப்பு கூடுதல் (Gross Value Added (GVA)) மதிப்பீட்டை மேம்படுத்துகிறது. இது சர்வதேச வழிகாட்டுதல்களுடன் மிக நெருக்கமாக ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், இது 2022–23-ஆம் ஆண்டிற்கான தனிநபர் இறுதிக் நுகர்வுச் செலவினத்தை (Private Final Consumption Expenditure (PFCE)), குறிப்பாக வருமான மாற்றங்களால் பெரிய பாதிப்பு அடையாத அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்காக, குடும்ப நுகர்வுச் செலவின ஆய்விலிருந்து (Household Consumption Expenditure Survey (HCES 2022–23) பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு நேரடியாகக் கணக்கிடப்படுகிறது.
எதிர்வரும் சவால்கள்
பொது அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகளிலும் 'மொத்த மதிப்பு கூடுதல்' (GVA) தனித்தனியாகக் கணக்கிடப்பட்டு பின் ஒன்றிணைக்கப்படுகிறது. இதில் முதல் இரண்டு துறைகளுக்கான தரவுகள் மிகவும் துல்லியமாக உள்ளன. இருப்பினும், தனியார் நிறுவனத் துறையில், குறிப்பாக நிதிசாரா தனியார் நிறுவனங்களின் மொத்த கூட்டு மதிப்பானது பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் (MCA) தரவுத்தளத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்த நிறுவனங்களின் தரவுகள் தேசிய அளவில் மட்டுமே கிடைப்பதால், அந்த மொத்த மதிப்பை மாநில வாரியாகப் பிரித்து 'மாநில மொத்த மதிப்பு கூடுதலாகக் கணக்கிடுவது ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.
2011–12-ஆம் ஆண்டு தொடரில், தேசிய அளவிலான மொத்த உற்பத்தி மதிப்புக்கூட்டல் (Gross Value Added (GVA)), மாநிலங்களுக்கு இடையே தொழில் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்பட்டது. புதிய தொடரில், இந்த நோக்கத்திற்காக தொழில் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASI) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆகிய இரண்டு தரவுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) தரவுகளில் போதிய தகவல்கள் முழுமையாக இல்லாதது ஒரு பெரிய குறையாக உள்ளது. உதாரணமாக, 2011–12-ஆம் ஆண்டில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் (MCA) தரவுத்தளத்தில் 1,35,802 உற்பத்தி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன, ஆனால், தொழில் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASI) வெறும் 67,649 தொழிற்சாலைகளை மட்டுமே உள்ளடக்கியிருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இத்தகைய குறைவான தரவுகளால், தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் (ASI) அடிப்படையில் கணக்கிடப்படும் மாநிலங்களின் மொத்த கூட்டு மதிப்பு பங்குகள் உண்மையான நிலையை வெளிப்படுத்தாமல் போகலாம் என்கின்றனர். இது மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) மதிப்பீடுகளையும் பாதிக்கக்கூடும் என்கின்றனர். இதைச் சரிசெய்ய, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (MCA) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி தரவுகளைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் முறையை மேம்படுத்துவது அவசியமாகிறது. அதே நேரத்தில், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்வது, மொத்த கூடுதல் மதிப்பில் மாநிலங்களின் பங்கினை இன்னும் துல்லியமாக மதிப்பீடு செய்ய உதவும் என்றும் கூறப்படுகிறது.
மாறுபாடுகளைகச் சரிசெய்தல்
வீட்டு உபயோகப் பொருட்கள் துறை தொடர்பாக, புதிய தொடரின்கீழ் அதன் மொத்த மதிப்பு கூடுதல் (Gross Value Added (GVA)) என்பது, முறைசாராத் துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) வழங்கும் ஒரு தொழிலாளியின் சராசரி மொத்த மதிப்பு கூடுதலை (GVAPW), காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) அடிப்படையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இதற்கு, இந்த இரண்டு கணக்கெடுப்புகளிலிருந்தும் கிடைக்கும் தரவுகள் மிகவும் நம்பகமானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். இருப்பினும், நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பின் (ASUSE) முடிவுகள் சில தொழில்துறைகள் மற்றும் மாநிலங்களில் ஆண்டுக்கு ஆண்டு ஒருவித நிலையற்றத் தன்மையைக் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, முறைசாராத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) அறிக்கையின்படி, இந்தியாவின் "ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு" (இது மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கீட்டில் ஒரு தனிப் பிரிவாகும்) துறைக்கான ஒரு தொழிலாளியின் சராசரி மொத்த மதிப்பு கூடுதல் (Gross Value Added Per Worker (GVAPW)) மதிப்பீடுகள் (கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்கள், மற்றும் வீட்டு அமைப்புகள் மற்றும் பகுதி-நிறுவன அமைப்புகள் உட்பட) 2021–22-ஆம் நிதியாண்டில் ₹1,63,078-ஆகவும், 2022–23-ஆம் ஆண்டில் ₹2,55,447-ஆகவும், மற்றும் 2023–24-ஆம் ஆண்டில் ₹2,01,930-ஆகவும் இருந்தன.
அதேபோல், பீகாரின் உற்பத்தித் துறையின் வருடாந்திர மொத்த கூடுதல் மதிப்பு (GVAPW) மதிப்பீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் முறையே ₹89,638, ₹117,021 மற்றும் ₹100,101-ஆக இருந்தன. இத்தகைய ஏற்ற இறக்கங்களைச் சரிசெய்ய, அடிப்படை ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டுகால நகரும் சராசரியை (Moving Average) பயன்படுத்துமாறு புதிய தரவுத் தொடர் பரிந்துரைக்கிறது. இருப்பினும், முறைசாரா துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (ASUSE) முறையில், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) முறையைப் பின்பற்றி, அடுத்தடுத்த ஆண்டுகளின் மாதிரிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க மேலோட்டமான ஒற்றுமையுடன் கூடிய ஒரு சுழற்சி குழு வடிவமைப்பை பயன்படுத்துவது அதிக நிலையான மதிப்பீடுகளை உருவாக்குமா என்பதை ஆராய்வதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இறுதியாக, தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) மாதிரி கட்டமைப்பைப் புதுப்பிப்பதும், ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASUSE) முறையைச் மேம்படுத்துவதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பீடுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவும் என்கின்றனர்.
ஜி.சி. மன்னா அவர்கள் மனித மேம்பாட்டு நிறுவனத்தில் (IHD) பேராசிரியராகவும், பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கூட்டமைப்பில் (NCAER) மூத்த ஆலோசகராகவும், மற்றும் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும்.
Original Link: New GDP series, charting the path ahead