தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான பதவி நீக்கத் தீர்மான அறிவிப்பு : பிரிவு 324-ல் கவனிக்க வேண்டியவை. - மனஸ் ஸ்ரீவஸ்தவா

தற்போதைய செய்தி :


பாரபட்சமான நடத்தை மற்றும் "தேர்தல் மோசடி மற்றும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையை ஏற்படுத்துதல்" உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான பதவி நீக்கத் தீர்மானத்திற்கான அறிவிப்புகளைச் சமர்ப்பித்தன. இது அரசியலமைப்பின் பிரிவு 324-ஐ மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


பிரிவு 324 (1): அரசியலமைப்பின்கீழ், நாடாளுமன்றத்திற்கும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு நடைபெறும் அனைத்துத் தேர்தல்களுக்கும், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களுக்கும் உரிய வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் அத்தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.


பிரிவு 324 (2): தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேவையான அளவில் குடியரசுத் தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப பிற தேர்தல் ஆணையர்களையும் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையரும் மற்ற தேர்தல் ஆணையர்களும், இதற்காக நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறது.


பிரிவு 324 (3): வேறு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டால், தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையத்தின் தலைவராக செயல்படுவார் என்று குறிப்பிடுகிறது.


பிரிவு 324 (4): "மக்களவைக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கும் நடைபெறும் ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கு முன்னரும், அத்துடன் சட்டமன்ற மேலவையைக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்தின் மேலவைக்கு நடைபெறும்   பொதுத் தேர்தலுக்கு முன்னரும், அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலுக்கு முன்னரும், பிரிவு (1)-ன் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதில் ஆணையத்திற்கு உதவுவதற்காக, குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு, அவர் முக்கியமெனக் கருதும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கலாம் என்று குறிப்பிடுகிறது.


பிரிவு 324 (6): தேர்தல் ஆணையம் ஏதேனும் கோரிக்கையை முன் வைக்கும் போது, குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர், தேர்தல் ஆணையத்திற்கோ அல்லது மாநில தேர்தல் ஆணையருக்கோ, அவர்களின் பணிகளை நிறைவேற்ற தேவையான பணியாளர்களை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.





சிறப்புக் கவனம்: பெற்றுள்ள பிரிவு  324 (5) பற்றி 


அரசியலமைப்பின் பிரிவு 324 (5), தலைமைத் தேர்தல் ஆணையரை உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவது போன்ற நடைமுறை (impeachment) மூலம் மட்டுமே நீக்க முடியும். வேறு காரணங்களுக்காக அவர்களை பதவியில் இருந்து நீக்கமுடியாது என்று குறிப்பிடுகிறது.


தேர்தல் ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில், அது தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையிலே செய்ய வேண்டும் என்று இந்த பிரிவு குறிப்பிடுகிறது.


இந்த பிரிவு, இந்த செயல்முறை “நாடாளுமன்றம் உருவாக்கும் சட்டங்களுக்கு உட்பட்டது” (provisions of any law made by Parliament) என்றும் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் தொடர்பான (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act) சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 11, ராஜினாமா மற்றும் நீக்குதல் பற்றிய விதிகளை குறிப்பிடுகிறது. இந்த சட்டம் அரசியலமைப்பில் கூறியுள்ள அதே முறையையே பின்பற்றுகிறது.


'நீதிபதிகள் விசாரணை சட்டத்தின் பிரிவு (Judges Inquiry Act) பிரிவு 3-ன் படி, ஒரு நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு ஒரு கோரிக்கை மனுவை (address) சமர்ப்பிப்பதற்கான தீர்மானம், மக்களவையில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறைந்தது 100 உறுப்பினர்களாலும், மாநிலங்களவையில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறைந்தது 50 உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும்.


மக்களவை சபாநாயகரோ அல்லது மாநிலங்களவை தலைவரோ ஒரு தீர்மானத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதைத் முடிவு செய்யலாம். அந்தத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், விசாரணை மேற்கொள்வதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை சபாநாயகரோ அல்லது தலைவரோ அமைக்க வேண்டும். இக்குழுவின் உறுப்பினர்களாக, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் மற்றும் ஒரு புலமை பெட்ரா சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற வேண்டும்.


அந்தக்குழுவின் விசாரணை அறிக்கை பின்னர் சபாநாயகரிடமோ அல்லது தலைவரிடமோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதிபதி ஒருவர் முறைகேடான நடத்தை கொண்டவர் என்றோ அல்லது பணிபுரிய இயலாத தகுதிக்குறைபாடு கொண்டவர் என்றோ அக்குழு கண்டறியுமானால், அந்தத்தீர்மானம் எந்த அவையிலோ உள்ளதோ, அந்த அவைகளால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சட்டம் கூறுகிறது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான கோரிக்கை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.


2023-ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் பற்றி…


டிசம்பர் 2023-ல் நிறைவேற்றப்பட்ட, 'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (ECs) நியமிப்பதற்காக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு ஒன்றிய அமைச்சர் (Union Cabinet Minister) ஆகியோரைக் கொண்ட ஒரு தேர்வுக் குழுவை அமைக்கிறது. புதிய சட்டம், முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, உச்சநீதிமன்றத்தின  தலைமை நீதிபதியை (CJI) மாற்றி ஒன்றிய அமைச்சரை கொண்டு வந்தது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 


'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023'-ன் பிரிவு 5-ன் படி, இப்பதவிகளுக்கான வேட்பாளர்கள், தற்போது பணியில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற செயலாளர் (Secretary) நிலையிலான அதிகாரிகளாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறது


தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுவதற்காக, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு ஐவர் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரிப்பதற்காக, சட்ட அமைச்சரின் தலைமையில், செயலாளர் பதவிக்குக் குறையாத தகுதியுடைய மேலும் இரு நபர்களைக் கொண்ட ஒரு 'தேடல் குழுவை' அமைப்பதற்கான விதிகள் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.


பிரிவு 8-ன் படி, தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது பிற தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை, தேர்வுக் குழுவானது வெளிப்படையான முறையில் தேர்வுக் குழுவே வகுத்துக்கொள்ளும். தேர்வுக் குழுவால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களைத் தவிர, வேறு எந்தவொரு நபரையுமே தேர்வுக் குழுவானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.


  2023-ஆம் ஆண்டு அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றியம் வழக்கில்: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட மூன்று நபர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.


Original Link: Impeachment notice against CEC Gyanesh Kumar: What to read in Article 324.


Share:

தேர்தல் செயல்முறை என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கியக் அம்சங்கள்:


நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் வன்முறை இல்லாததாகவும், சலுகைகள் அற்றதாகவும் நடைபெற வேண்டும். இதற்கு மாறாக ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அல்லது புகார்கள் அளிக்கப்பட்டால், ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


• தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து தேர்தல்  அட்டவணையை அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.


• நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 824 தொகுதிகளில்  உள்ள  2.18 லட்சம் வாக்குச்சாவடிகளில், மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஒரு மாத காலத்தில் தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குப் பயணத்தை மேற்கொண்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.


நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் இவர்களில் 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


 ஜூன் 2025-ல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை (SIR), மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. திருத்தத்தின் பணியின் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியல்கள் புதிதாக உருவாக்கப்பட்டன; இதில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களும் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், குறிப்பிட்ட சில வகை வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை உள்ளிட்ட தகுதி நிலைகளை நிரூபிப்பதற்காகக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் பணிக்கப்பட்டனர்.


 மாநிலங்கள் முழுவதும் வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகத் திருத்தும் பணி கடைசியாக 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்றது. அதன் பின்னர், வாக்காளர் பட்டியல் ஆண்டுதோறும் மற்றும் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 2025 ஜூன் 24 அன்று சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள உத்தரவிட்டபோது, வேகமான நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த நடவடிக்கை முக்கியமானது என்றுதேர்தல் ஆணையம் தெரிவித்தது.





உங்களுக்குத் தெரியுமா?


இந்தியாவில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ‘பெரும்பான்மை பெறுபவர் வெற்றி பெற்றவர்’ (first-past-the-post) என்ற வாக்குபதிவு முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுகிறார். இது தேர்தல்களை நடத்துவதற்கான அடிப்படையான முறைகளில் ஒன்றாகும்.


• மறுபுறம், மாநிலங்களவை மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல்களைப் பொறுத்தவரை, 'விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ’ (proportional representation) முறையைப்  பின்பற்ற வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தத் தேர்தலில் 'ஒற்றை மாற்று வாக்கு முறை' (Single Transferable Vote System) பின்பற்றப்படுகிறது. இந்த முறை, மாநிலங்களவையின் அமைப்பு, வெவ்வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்தை வெளிப்படையாக  காட்டுவதை உறுதிசெய்ய உதவுகிறது.


  வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) என்பது, வழக்கமான ஆண்டுதோறும் செய்யும் திருத்தம் போதுமானதாக இல்லையென தேர்தல் ஆணையம் நினைக்கும் போது நடத்தப்படும் பெரிய அளவிலான வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறையாகும். இந்த திருத்தத்தில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்தல், முன்னரே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், இணையவழிச் சமர்ப்பிப்புகள் மற்றும் பழைய வாக்காளர் தரவுகளைப் புதிதாகச் சரிபார்த்தல் போன்ற பணிகளும் அடங்கும்.


இந்திய அரசியலமைப்பின் 324வது சரத்து, வாக்காளர் பட்டியல்களை மேற்பார்வையிடவும் புதுப்பிக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு 'முழுமையான அதிகாரங்களை' (plenary powers) வழங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் 21-வது பிரிவும், தற்போதைய வாக்காளர் பட்டியலில் பிழைகள் இருப்பதாக கண்டறிந்தால், தேர்தல் ஆணையம் தீவிர திருத்தத்திற்கு உத்தரவிட அதிகாரம் பெற்றுள்ளது.


Original Link: What is the process of election?


Share:

திருநங்கையர் உரிமைப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்கள் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானவை. அவை அமல்படுத்தப்படக் கூடாது. -சஷாங்க் மகேஸ்வரி

சட்டப்பூர்வமான சலுகைகளையும் பாதுகாப்புகளையும் சரியாக வழங்குவதற்குத் தெளிவான வரையறைகள் அவசியம் என்று இந்தத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள் கூறலாம். இருப்பினும், நிர்வாக வசதிக்காக ஒருபோதும் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ அல்லது மீறவோ முடியாது என்கின்றனர். 


இந்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு (National Legal Services Authority (NALSA)) vs இந்திய ஒன்றிய அரசுக்கு (National Legal Services Authority vs Union of India (2014)) இடையிலான 2014-ஆம் ஆண்டு வழக்கில், பாலின அடையாளம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பில், திருநங்கைகள் தங்களின் கண்ணியம், தன்னாட்சி மற்றும் சமத்துவத்தின் ஒரு பகுதியாகத் தங்களின் பாலின அடையாளத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. இருப்பினும், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026, "திருநங்கை" என்பதற்கான சட்டப்பூர்வ வரையறையை மாற்றுவதன் மூலம் கடுமையான அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களை எழுப்புகிறது.


இந்தத் திருத்தமானது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் பிரிவு 2(k)-ஐ மறுவரையறை செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது 'திருநங்கைகள்' (Transgender Persons (TG)) என்பதற்கான வரையறையை இரண்டு குழுக்களாகக் குறைக்கிறது: முதலாவதாக, ஹிஜ்ரா, கின்னர், அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற பாரம்பரிய சமூக-கலாச்சாரக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்  என்றும்  இரண்டாவதாக, பிறப்புறுப்புகள், குரோமோசோம்கள், ஹார்மோன்கள் அல்லது இனப்பெருக்க வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகள் போன்ற உயிரியல் பாலின பண்பு மாற்றங்களுடன் பிறந்தவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது 2019-ஆம் ஆண்டின் முந்தைய சட்டத்திலிருந்து ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.  ஏனெனில், பழைய சட்டம் மருத்துவரீதியான மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், பிறப்பின் போது வழங்கப்பட்ட அடையாளத்துடன் ஒத்துப்போகாத பாலின அடையாளத்தைக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரையறையைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்தச் சட்டத்திருத்தத்திற்கான அடிப்படைப் பின்னணிக் காரணம் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலினம் என்பது ஒருவரின் சுய விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்குக் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது என்றும், மாறாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உயிரியல் காரணங்களால் பாகுபாட்டை எதிர்கொள்பவர்களுக்கு மட்டுமே அத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வரையறையைத் துல்லியமாக்குவதன் மூலம் இதற்கான சலுகைகள் மற்றும் பலன்கள் சரியான முறையில் அடையாளம் காணப்பட்ட தகுதியுள்ள நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே  இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. 


இருப்பினும், இந்த வாதமானது இந்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்கின்றனர். பாலினத்தை உயிரியல்ரீதியாக மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெளிவாக நிராகரித்தது. குறிப்பாக, உயிரியல் பண்புகளே பாலினத்தை அடையாளம் காண்பதற்கான இறுதி அடிப்படை என்று கருதிய 'கார்பெட் எதிர். கார்பெட்' (1970) (Corbett vs Corbett (1970) case) வழக்கின் அணுகுமுறையை நிராகரித்தது. அதற்குப் பதிலாக, ஒரு நபரின் பாலின அடையாளம் என்பது முக்கியமாக அந்த நபரின் சுயமான உளவியல் புரிதல் மற்றும் சமூக அனுபவத்தால் உருவாவதே என்று நீதிமன்றம் கூறியது. இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21-வது பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுடன் பாலின அடையாளத்தை இணைப்பதன் மூலம், மருத்துவ அல்லது உயிரியல் சான்றுகள் தேவையின்றி தனிநபர்கள் தங்கள் பாலினத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை நீதிமன்றம் அங்கீகரித்தது. இச்சூழலில், கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தமானது நீதிமன்றம் மாற்ற நினைத்த அதே பழைய அணுகுமுறையை மீண்டும் கொண்டு வரும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பாலின அங்கீகாரத்தை உயிரியல் பண்புகள் அல்லது குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்திருப்பதன் அடிப்படையில் அமைப்பதன் மூலம், இந்த மசோதா சுய-அடையாளத்தைவிட உயிரியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த மாற்றம் வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல என்றும் இது உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலிருந்து, ஒருவரின் அடையாளத்தை அரசு சரிபார்க்கும் முறையாக மாற்றக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


இந்தச் சட்டத்திருத்தமானது பாலின அடையாளத்தை (Gender Identity) சட்டம் புரிந்து கொள்ளும் விதத்தில் உள்ள ஒரு ஆழமான சிக்கலை வெளிப்படுத்துகிறது. பல அறிஞர்களின் கருத்துப்படி, "திருநங்கை/திருநம்பி" (Transgender) என்பது ஒரு விரிவான சொல்லாகும். இதில் மருத்துவரீதியான அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள் உட்பட, பிறப்பின்போது அடையாளப்படுத்தப்பட்ட பாலினத்திலிருந்து மாறுபட்டு வாழும் பலதரப்பட்ட மக்கள் அடங்குவர். சமூக-கலாச்சாரக் குழுக்கள், பாலின அடையாளம் மற்றும் இடைப்பால் (Intersex) நிலைகள் போன்ற வெவ்வேறான கருத்துருக்களை உயிரியல் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சட்டத்தில் ஒன்றிணைப்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். இத்தகைய குழப்பமானது பாலின விதிமுறைகளுக்கு உட்படாத மக்களின் உண்மையான வாழ்வியல் அனுபவங்களை மறைப்பதோடு, சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்திற்குப் பதில் மருத்துவநிலைகளைச் சார்ந்த ஒன்றாக மாற்றிவிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


இத்தகைய ஒரு முக்கிய மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் சட்டமியற்றும் செயல்முறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. சட்டங்களை உருவாக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் பிரிவினருடன் முறையான ஆலோசனைகளை மேற்கொள்வது, அவர்களின் உண்மை வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்யவும், அதன் மூலம் அச்சட்டத்தின் நீதியையும் செயல்திறனையும் மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தியாவில் திருநங்கைகளுக்கான சட்ட வரைவுகள் முதல் 2019-ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது (Transgender Persons Protection of Rights Act (TG Act)) வரையிலான நகர்வுகள், திருநங்கையர் சமூகத்தினரை போதுமான அளவு இதில் ஈடுபடுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. முறையான உரையாடல் இன்றி அவர்களின் அங்கீகாரத்தை குறைக்க முயற்சிப்பது, விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் அதே ஜனநாயகக் குறைபாடுகளை மீண்டும் ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


இந்தத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள், சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் பாதுகாப்புகளைச் சரியாக வழங்குவதற்குத் தெளிவான வரையறைகள் அவசியம் என்கின்றனர். இருப்பினும், நிர்வாக வசதிக்காக ஒருவரின் அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. திருநங்கைகளாக அங்கீகரிக்கப்படுபவர்களின் தகுதியைக் குறைப்பது சட்டமியற்றுபவர்களின் உண்மையான நோக்கமாக இருக்கக்கூடாது என்றும் மாறாக, ஒருவரின் சுய-அடையாளத்தை மதிக்கும் அதே வேளையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


இறுதியாக, 2026-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு முக்கியத்துவம் என்பது அது முன்னிறுத்தும் 'அடையாளம்' சார்ந்த கருத்தைப் பொறுத்தே அமைகிறது. தேசிய சட்டப் பணிகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)), தன்னாட்சி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அமைந்த உரிமை சார்ந்த முறையை ஆதரித்தது. அதற்கு நேர்மாறாக, இந்தத் திருத்தம் மீண்டும் உயிரியல் மற்றும் சமூக அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழைய முறையைக் கொண்டுவருவது போல் தோன்றுகிறது. இதன் விளைவாக, ஒருவரது பாலின அடையாளத்தை அவரே தீர்மானிக்கும் சுய-தீர்மான அரசியலமைப்பு வாக்குறுதியானது மாறி, அது அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுப்பாட்டு முறையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 


சஷாங்க் மகேஸ்வரி, ஜிண்டால் சர்வதேச சட்டப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Original Link: Amendments to Trans Act go against constitutional rights. They must not be implemented.


Share:

"நேரு பணவீக்கத்திற்கு கொரியப் போரே காரணம் என்று கூறினார்" என பிரதமர் மோடி விமர்சனம்: நேரு அன்று கூறியது என்ன? அந்தப் போருக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு என்ன? - ரிஷிகா சிங்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜவஹர்லால் நேருகூட ஒருமுறை இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உலகளாவிய சூழலையே காரணமாகக் கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: அன்றைய காலகட்டத்தில் உலகச் சூழல் உண்மையில் எப்படி இருந்தது, அந்த சவால்களை இந்தியா எவ்வாறு எதிர்கொண்டது?


சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு (LPG) உருளைகளை மக்கள் பதுக்குவதாகவும், அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இதற்கு ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் மத்திய அரசைத் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர்.


இந்த வாரத் தொடக்கத்தில், உலகளாவிய விநியோகத் தடைகளை சரிசெய்ய உலகத் தலைவர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், கள்ளச் சந்தை விற்பனையைத் தடுக்கவும், வதந்திகள் பரவுவதை நிறுத்தவும் மாநில அரசுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய சூழலை நேரு அவர்கள் முன்பு குறிப்பிட்ட ஒரு கருத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.


பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், முன்னொரு காலத்தில் பண்டிட் நேரு அவர்கள் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி செங்கோட்டை உரையில், வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நடந்த போர் இந்தியாவில் விலைவாசியை உயர்த்தியதாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், உலகளாவிய நெருக்கடிகள் நாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இன்று உலகம் கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி மக்களைத் தவறாக வழிநடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி குறிப்பிட்ட நேருவின் கருத்தை மீண்டும் சுட்டிக்காட்டினார். உக்ரைன் போர் தொடங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், 1951-ஆம் ஆண்டிலேயே கொரியப் போர் இந்தியாவின் பணவீக்கத்தைப் பாதிக்கும் என்று நேரு குறிப்பிட்டிருந்ததை நினைவு கூர்ந்தார். ஆனால், இன்று உலகம் முழுவதும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் போர் இந்தியாவைப் பாதிக்கும் என்று சொன்னால் அதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.


பணவீக்கம் மற்றும் கொரியப் போர் குறித்து ஜவஹர்லால் நேரு கூறியது என்ன?


முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது 1951-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், நாடு சுதந்திரம் அடைந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்தியா தனது ஒற்றுமையையும் திறன்களையும் இன்னும் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார். சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு இடைவிடாத விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், இன்றைய சவால்கள் நிறைந்த உலகில் விழிப்புடன் இல்லாதவர்கள் தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் எச்சரித்தார்.


மக்கள் விலைவாசி உயர்வு மற்றும் கள்ளச் சந்தை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சிக்கல்கள் இரண்டு காரணங்களால் ஏற்படுகின்றன என்று அவர் விளக்கினார். ஒன்று கொரியப் போர் போன்ற நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்கள் என்றும் மற்றொன்று நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய உள்நாட்டு காரணங்கள் என்றும் குறிப்பிட்டார்.


கள்ளச் சந்தை என்பது கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வகை குற்றம் என்றும், அதனை அரசு மிகக் கடுமையான முறையில் கையாள வேண்டும் என்றும் நேரு கூறினார். இருப்பினும், கடந்த காலங்களில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் கையாளப்பட்ட விதம் எதிர்பார்த்த அளவிற்குத் திறம்பட அமையவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.


அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதார நிலைமை எவ்வாறு இருந்தது?


புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) வெளியிட்ட இந்தியாவின் புள்ளிவிவர ஆண்டு புத்தகத்தின் ஒரு அத்தியாயம், முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் (1951–56) தொடக்கத்தில் இந்தியா அகதிகளின் வருகை, கடுமையான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற பெரும் சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிடுகிறது. இத்தகைய மையப்படுத்தப்பட்ட திட்டங்கள், நாட்டின் முக்கியப் பொருளாதார இலக்குகளை நோக்கி வளங்களைச் சரியாக வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் நேருவுக்கு முன்னதாகவே, அன்றைய நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் அவர்கள் தனது 1951-52-ஆம் ஆண்டிற்கான நிதிநிலைத் திட்ட உரையில் கொரியப் போரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.


விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருந்ததால், அது மிகுந்த கவலைக்குரிய காலம் என்று அவர் குறிப்பிட்டார். அசாம் மாநில நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் இந்தச் சூழல் மேலும் மோசமடைந்ததாகவும், அதே சமயம், உலகம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள்ளேயே கொரியப் போர் தொடங்கியதும், மீண்டும் ஒரு மிகப்பெரிய உலகளாவிய மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியதாக சி.டி. தேஷ்முக் விவரித்தார்.


போரின் காரணமாக சணல் பொருட்கள், கச்சா பருத்தி, பருத்திக் கழிவுகள் மற்றும் கச்சா கம்பளி போன்ற இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததாக தேஷ்முக் சுட்டிக்காட்டினார். இதனால் ஏற்படும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் இந்த பொருட்களின் மீது ஏற்றுமதி வரிகளை அரசாங்கம் விதித்தது. மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட ராணுவக் கட்டமைப்பு நடவடிக்கைகளால் அடிப்படைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது என்றும் இது சந்தையை நிலைப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.


1958-ஆம் ஆண்டின் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் தேசிய வருமானம் 11 முதல் 12 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டத்திற்கான செலவு எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்தபோதிலும், தேசிய வருமானம் உண்மையில் 18 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சர்வதேச நாணய நிதியம் இந்தத் திட்டத்தை ஒரு மிகப்பெரிய வெற்றி என்று அங்கீகரித்தது.


மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) அறிக்கை, நிர்ணயிக்கப்பட்ட 2.1 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கைவிட, 3.6 சதவீதம் என்ற அதிகப்படியான வளர்ச்சியை இந்தியா எட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கடைசி இரண்டு ஆண்டுகளில் கிடைத்த நல்ல விளைச்சலே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டது. நாட்டில் வறுமை மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை நீடித்தபோதிலும், அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்தல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்துதல் போன்ற இலக்குகள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டன.



கொரியப் போருக்கு இந்தியா எவ்வாறு எதிர்வினை ஆற்றியது?


பனிப்போரின்போது அணிசேரா கொள்கையைப் பின்பற்றிய இந்தியா, அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் (United States of Soviet Russia (USSR)) இடையே நிலவிய போட்டியைச் சமாளிக்க, தனது ராஜதந்திரரீதியான முயற்சிகள் மற்றும் பொருள் உதவிகளின் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் நிறுத்தத்திற்கு பங்களித்தது.


கொரியா 1910-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை ஜப்பானின் ஆட்சியின்கீழ் இருந்தது. போர் முடிந்தபிறகு, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நேச நாட்டுப் படைகள் கொரியாவைத் தற்காலிகமாக இரண்டு பகுதிகளாகப் பிரித்தன: அதன்படி வட பகுதி சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும், தென்பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் கொண்டு வரப்பட்டன.


இந்த பிரிவினையானது அமெரிக்காவால் வரையப்பட்டு, சோவியத் யூனியனால் (USSR) ஏற்றுக்கொள்ளப்பட்ட 38-வது அட்சரேகை (38th Parallel) கோட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில், கொரியா எவ்வாறு சுதந்திரம் பெறவேண்டும் என்பது குறித்த கருத்து வேறுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்தன.


1950-ஆம் ஆண்டு வடகொரியா தென்கொரியாவின்மீது படையெடுத்தபோது, அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐநா பாதுகாப்பு கூட்டமைப்பு (UN Security Council (UNSC)) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்துடன் (USSR) நெருக்கமான உறவைக் கொண்டிருந்தபோதிலும் இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரித்தது. இருப்பினும், நிலைமையை மென்மையாகக் கையாளும் விதமாக, அந்தப் படையெடுப்பை "ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, "அமைதிக்கு ஏற்பட்ட இடையூறு"  என்று பயன்படுத்துமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 


அமெரிக்கா இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்குக் கொண்டு சென்றபோது, வடகொரியா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவாக சீனாவும் போரில் இணைந்தது. இந்தியாவின் போர்நிறுத்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தாலும், போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பாக இந்தியா முன்வைத்த ஒரு முக்கியமான யோசனை 1953-ஆம் ஆண்டு ஜூலை மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியத் தூதர் வி. கே. கிருஷ்ண மேனன் மிக முக்கியப் பங்காற்றினார்.


சியோலில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவல்படி, ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளையின்கீழ் (UN Command) இந்தியா 627 பேரைக் கொண்ட ராணுவ மருத்துவக் குழுவை அனுப்பியது; இந்தக் குழு சுமார் 2,20,000 நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கி சேவையாற்றியதாகவும் கூறப்படுகிறது. 



Original Link: PM Modi says ‘Nehru blamed inflation on Korean war’: What did the former PM say, India’s links to that war.


Share:

மும்பை மேயரின் 'சிவப்பு விளக்கு' (Lal Batti) சர்ச்சை: வாகனங்களில் சுழல் விளக்குகளைப் பயன்படுத்துவது குறித்த விதிகள் யாவை? - ஜீஷான் ஷேக்

சட்டப்படி, அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் சிவப்பு நிறச் சுழல் விளக்குகளைப் (red beacon lights) பயன்படுத்த அனுமதி இல்லை. அவசரக்காலச் சேவைகள் அல்லது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமே இத்தகைய ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.


மும்பை மேயர் ரிது தாவ்டேயின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. விதிமுறைகளை மீறி இந்த விளக்குகள் பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மேயரின் கார் மற்றும் அவருக்குப் பாதுகாப்பாகச் செல்லும் வாகனத்தில் இருந்த அந்த விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரஹன்மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation (BMC)) கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச்  மாதம் 15-ஆம் தேதியன்று  தெரிவித்தது.


மகாராஷ்டிராவில் வாகனங்களில் ஒளிரும் சுழல் விளக்குகளை பயன்படுத்துவது குறித்த விதிகள் மீது இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்ன?


கடந்த வாரம், மேயரின் அதிகாரப்பூர்வ காரின் முன்பக்கத்தில் சிவப்பு மற்றும் நீலநிற விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின.


இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, மேயரின் கார் மற்றும் அவருக்குப் பாதுகாப்பாகச் செல்லும் வாகனத்தில் இருந்த சுழல் விளக்குகளை பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) ஞாயிற்றுக்கிழமையன்று அகற்றியது. மாநகராட்சிப் பொறுப்பாளர்கள் பதவியேற்கும்போது அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக வாகனங்கள் வழங்கப்படுவதாகவும், இந்த விதிமீறல் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக அந்த விளக்குகள் நீக்கப்பட்டதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


விதிமுறைகள் என்ன கூறுகின்றன?


இந்தியாவில் வாகனங்களில் சுழல் விளக்குகள் அல்லது ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்துவது முக்கியமாக 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளின்கீழ் (Central Motor Vehicles Rules, 1989) கட்டுப்படுத்தப்படுகிறது; எந்தெந்த வகை வாகனங்கள் இத்தகைய விளக்குகளைப் பொருத்தலாம் என்பதை இந்த விதிகளே தீர்மானிக்கின்றன.


பல ஆண்டுகளாக, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் தங்களின் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் சாலையில் வெளிப்படுத்துவதற்காக "லால் பத்தி" (lal batti) என்று அழைக்கப்படும் சிவப்பு நிறச் சுழல் விளக்குகளைத் தங்கள் வாகனங்களில் பயன்படுத்தி வந்தனர்.


இந்தியச் சாலைகளில் நிலவிவந்த "விஐபி கலாச்சாரத்தை" (VIP culture) ஒழிக்கும் நோக்கில், ஒன்றிய அரசு 2017-ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்து, நாடு முழுவதும் அரசு வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகளைப் பயன்படுத்தத் தடை விதித்தது. இந்த நடைமுறை மாற்றம் மே மாதம் 1-ஆம் தேதி, 2017-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களைச் சாமான்ய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பழைய வழக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.


திருத்தப்பட்ட புதிய விதியின்படி, அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களது வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 


எந்தெந்த வாகனங்கள் ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்தலாம்?


காவல்துறை வாகனங்கள், மருத்துவ ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பேரிடர் மீட்பு வாகனங்கள் போன்ற அவசரக்கால அல்லது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே தற்போது ஒளிரும் விளக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் மற்ற ஓட்டுநர்களை எச்சரிக்கவும், அவசரச் சூழல்களில் இந்த வாகனங்கள் விரைவாகச் செல்வதற்கு வழிவிடவும் பெரிதும் உதவுகின்றன.


சிவப்பு மற்றும் நீல நிற விளக்குகள் பொதுவாக காவல்துறை அல்லது அவசரக்கால வாகனங்களுடன் மட்டுமே தொடர்புடையவை ஆகும். எனவே, அரசியல்வாதிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இத்தகைய விளக்குகளைப் பயன்படுத்துவது, விதிமீறல்கள் குறித்த சந்தேகங்களை மக்களிடையே எழுப்பக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


அனுமதியின்றி இத்தகைய விளக்குகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் (Motor Vehicles Act) அபராதம் அல்லது தண்டனைகள் விதிக்கப்படலாம் என்றும் போக்குவரத்துத் துறையினர் பலமுறை எச்சரித்துள்ளனர்.


இந்த விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளின் (Central Motor Vehicles Rules (CMVR)) ஒரு பகுதியாக இருப்பதால், இவை மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்கின்றனர். உரிய அனுமதியின்றி தனியார் அல்லது அரசு வாகனங்களில் இத்தகைய விளக்குகளைப் பொருத்துவது போக்குவரத்து காவல்துறையினரின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


இதற்கான அரசியல்ரீதியான எதிர்வினை என்னவாக இருந்தது?


முன்னாள் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததோடு, விதிகள் எவ்வாறு அலட்சியப்படுத்தப்பட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டன என்றும் கேள்வி எழுப்பினார்.


இருப்பினும், மேயர் மீது அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதாகவும், சிவப்பு விவிளக்குகளைப் பயன்படுத்துவதற்கான தடை குறித்து அவருக்கு முன்பே தெரிந்திருந்தது என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.


இந்த விவகாரத்தைப் பற்றி விசாரித்ததாகவும், அப்போது அந்த வாகனத்தின் முகப்பில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்டிருந்ததை அறிந்ததாகவும் பட்னாவிஸ் கூறினார். மேலும், இதில் மேயர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் மாநிலத்தில் ஏற்கனவே சிவப்பு சுழல் விளக்குகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் விதி அவருக்கும் தெரியும் என்றும் மேயர் அவர்கள் மீது அவர் தேவையில்லாமல் குற்றம் சாட்டப்படுவதாகவும் பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Original Link: Mumbai Mayor’s ‘lal batti’ controversy: What are the rules on using beacon lights on vehicles?


Share:

கீழடி மற்றும் மேலும் 7 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடுத் தொல்லியல் துறைக்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அனுமதி அளித்துள்ளது. - என். சாய் சரண்

நிபுணர் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, மார்ச் 13 அன்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.


பல மாத கால தாமதத்திற்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)), தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறைக்கு (Tamil Nadu State Department of Archaeology (TNSDA)) மாநிலத்தில் உள்ள 8 வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள இறுதியாக அனுமதி அளித்துள்ளது. இதில் கீழடியில் மேற்கொள்ளப்படவுள்ள 11-ஆம் கட்ட அகழாய்வும் அடங்கும்.


அதிகாரிகளின் தகவல்படி, சிவகங்கை மாவட்டத்தின் கீழடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்; தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டினமருதூர்; தென்காசி மாவட்டத்தின் கரிவலம் வந்தநல்லூர்; கடலூர் மாவட்டத்தின் மணிக்கொல்லை; விழுப்புரம் மாவட்டத்தின் அடிச்சனூர்; கோயம்புத்தூர் மாவட்டத்தின் வெள்ளலூர்; சேலம் மாவட்டத்தின் தெலுங்கனூர்–மாங்காடு; மற்றும் நாகப்பட்டினத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்தியத் தொல்லியல் துறையின், 'ஆய்வு மற்றும் அகழாய்வுப் பிரிவு' (Exploration and Excavation Section) சார்பில், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, 'பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்களைப் பாதுகாத்தல் விதிகள், 1959'-ன் (Ancient Monuments and Archaeological Sites and Remains Rules, 1959) கீழ், மார்ச் 13 அன்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.


2025 ஜூலை மாதத்தில், 2025–26 மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த இந்த இடங்களில் அகழாய்வு நடத்த தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை (TNSDA), இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) அனுமதியை கோரியது. தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அனுமதி கோரி மீண்டும் இந்தியத் தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஏனெனில், தமிழ்நாட்டில் அகழாய்வு பருவம் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே நடைபெறுகிறது.


சமீபத்தில், ஆண்டின் இரண்டாம் பாதியில் பருவமழை காரணமாக களப்பணிகள் பாதிக்கப்படும் என்பதைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் அகழாய்வு மேற்கொள்ள  ஒன்றிய அரசு கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் வலியுறுத்தியிருந்தார்.


கடந்த ஆண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள, ஒரு காலத்தில் 'காவிரிப்பூம்பட்டினம்' என்று அழைக்கப்பட்ட பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரின் கடற்கரைப் பகுதியில், நீருக்கடியில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் மாநில தொல்லியல் துறை இந்தியத் தொல்லியல் துறையிடம் கடிதம் எழுதியிருந்தது. அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நீருக்கடியில் ஆய்வு மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்தியத் தொல்லியல் துறை வழங்கியது. அதன் பின்னர், பூம்புகார் கடற்கரைப் பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.


Original Link: ASI permits T.N. Archaeology Department to conduct excavations in Keeladi, seven other sites.


Share:

1937-ம் ஆண்டின் ஷரியத் சட்டத்திற்கு எதிரான சவால், வாரிசுரிமைச் சட்டம் சிவில் சார்ந்ததா அல்லது மதம் சார்ந்ததா என்பதை எவ்வாறு வடிவமைக்கிறது? -அமால் ஷேக்

2024-ல் நிறைவேற்றப்பட்ட உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை (UCC) மேற்கோள் காட்டி, ஒரே மாதிரியான நம்பிக்கை, குடும்பம் மற்றும் குடியுரிமை கொண்ட இரண்டு முஸ்லிம் பெண்கள் இப்போது அவர்களின் அஞ்சல் குறியீடு (postal code) காரணமாக வெவ்வேறு சொத்துரிமைகளைப் பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக அது குறிப்பிடுகிறது.


ஒரு முஸ்லிம் பெண் தனது தந்தை இறக்கும்போது எவ்வளவு வாரிசுரிமையைப் பெறுகிறார் என்பதை எது தீர்மானிக்கிறது. இது அவருடைய மதம் அல்லது அவருடைய முகவரி சார்ந்ததா?. கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நீதிப்பேராணை மனு (writ petition), இன்று இந்தியாவில், இந்தக் கேள்விக்கான பதிலாக 'அவரது முகவரி'யாகவே இருக்கக்கூடும் என்று அந்த மனு வாதிடுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, இக்கருத்தை வெளிப்படையாக மறுக்கவில்லை.


பொது சிவில் சட்டம் (UCC) "மிகவும் பயனுள்ள பதில்" (the most effective answer) என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோருடன் இணைந்து, 1937-ம் ஆண்டு முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டத்திற்கு (Muslim Personal Law (Shariat) Application Act) எதிரான ஒரு வழக்கை விசாரித்தனர். உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்த மனு கோருகிறது. 'உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம், 2024' நடைமுறைக்கு வந்தபிறகு, பிற மாநிலங்களில் தொடர்ந்து 'முஸ்லிம் தனிநபர் சட்ட (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டத்தைப்-1937' (Muslim Personal Law (Shariat) Application Act) பயன்படுத்துவது என்பது, வாரிசுரிமை சார்ந்த விவகாரங்களில் தன்னிச்சையானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், பாகுபாடு நிறைந்ததாகவும் மாறிவிட்டது என்று அந்த மனு வாதிடுகிறது.


தனிநபர் சட்ட நடைமுறைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை முடிவுசெய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. முஸ்லிம் வாரிசை நிர்வகிக்கும் தனி சட்டப்பூர்வ சட்டம் இல்லாததால், பரம்பரை விதிகளை ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும், இது ஒரு சட்ட வெற்றிடத்தை உருவாக்கக்கூடும் என்ற கவலைகளையும் நீதிபதிகள் கூறினர்.


"அதிகப்படியான பதட்டம் புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும், இறுதியில் சரிசெய்ய முயற்சிக்கும் செயல்பாட்டில் நீதிமன்றம் கிடைக்கும் நன்மைகளை பறிக்கக்கூடும்" என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் குறிப்பிட்டார். மற்றொரு சட்ட அமைப்பை ஏற்படுத்தாமல் 1937 சட்டத்தை நீக்குவது முஸ்லிம் பெண்களை சட்டப் பாதுகாப்பு இல்லாமல் விட்டுவிடக்கூடும் என்று எச்சரித்தார். இந்த விதிகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் சாத்தியமான தீர்வுகளைக் குறிப்பிட மனுவில் திருத்தம் செய்யுமாறு மனுதாரர்களிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதுடன், இதன் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.


மனுவில் என்ன சொல்கிறது?


மனு மதரீதியான வாதங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அரசியலமைப்பு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இது பரம்பரை மற்றும் சாசன உரிமைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், உத்தரகண்ட் பொது சிவில் சட்டம் (UCC) ஒரு காலத்தில் 1937 ஷரியத் விண்ணப்பச் சட்டத்தை அரசியலமைப்புரீதியான சவால்களிலிருந்து பாதுகாத்த பொதுவான தன்மையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது என்ற அடிப்படையில் உள்ளது.


ஒருமைப்பாடு இனி இல்லை என்ற நிலை ஏற்பட்ட பிறகு, ‘முஸ்லிம் தனிநபர் சட்ட (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டம்-1937’ (Muslim Personal Law (Shariat) Application Act) என்பது முற்றிலும் மதச்சார்புடைய தன்மையைக் கொண்டது என்று உரிமை கோர முடியாது என்று அந்த மனு கூறுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், எவ்விதக் கேள்விக்கும் இடமின்றி இச்சட்டம் பொருந்தும் என்றும் கூற இயலாது. மாறாக, அது ஒரு சிவில் சட்டமாகவே கருதப்பட வேண்டும். இது, ஒரு சிவில் சட்டமாக இருப்பதால், அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள சமத்துவக் கோட்பாடுகளுக்கு அது உட்பட்டதாக அமைகிறது.


இந்த இடைவெளி தோன்றிய பிறகு, அச்சட்டம் வெறும் ஒரு மதச்சார்புடைய நிலையாக இருப்பதை நிறுத்திவிட்டது என்று அந்த மனு மேலும் வாதிடுகிறது. மேலும், சிவில் சட்டங்களை அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் பரிசீலிக்க முடியும்.


ஷரியத் சட்டத்தின்கீழ், ஒரு முஸ்லிம் ஆண் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சுதந்திரமாக உரிமை கோர முடியாது. அவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே தீர்மானிக்க முடியும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செல்ல வேண்டும். உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தின் கீழ், அந்த கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்கள், ஒரே குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒத்த சொத்துக்களை வைத்திருப்பவர்கள் இப்போது ஒரே நாட்டிற்குள் சிவில் சட்டத்தின்கீழ் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள் என்று மனு கூறுகிறது.


அரசியலமைப்புப் பிரிவு 14-ன் கீழ் மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்கு முக்கியப் பகுதியாக உள்ளது. 1937 சட்டத்தின் உண்மையான நோக்கம் பொதுவான தன்மையைக் கொண்டுவர அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு பொதுவான சட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த பிரச்சினை இனி மத பன்மைத்துவத்தைப் (religious pluralism) பற்றியது அல்ல என்று மனு வாதிடுகிறது. இது தன்னிச்சையான சட்ட பன்மைத்துவத்தைப் (legal pluralism) பற்றியது என்று அது கூறுகிறது. இந்திய ஒன்றியம் ஒரு மாநிலத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமைகளைப் பெற அனுமதிக்கிறது, ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதே உரிமைகளை நீட்டிக்கவில்லை என்றால், அது பாகுபாட்டை உருவாக்குகிறது என்று அது கூறுகிறது. மனுவின்படி, இது அரசியலமைப்புப் பிரிவு 14 மற்றும் பிரிவு 15-ன் கீழ் மதங்களுக்கு இடையேயான பாகுபாட்டிற்கும் வழிவகுக்கிறது.


ஒரே மாதிரியான நம்பிக்கை, குடும்ப பின்னணி மற்றும் குடியுரிமையைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு முஸ்லிம் பெண்கள் இப்போது அவர்களின் அஞ்சல் குறியீடு காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் வசிப்பதால் மட்டுமே வெவ்வேறு சொத்துரிமைகளைப் பெறுகிறார்கள் என்று மனு வாதிடுகிறது.


நியாயமான அடிப்படைக் காரணம் இல்லாவிட்டால், அரசு மக்களை சமமாக நடத்துவதை அரசியலமைப்புப் பிரிவு 14 தடை செய்கிறது. ஒரு நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே அது அவ்வாறு செய்ய முடியும். இந்த யோசனை நியாயமான வகைப்பாடு (reasonable classification) என்று அழைக்கப்படுகிறது. ஒரு வகைப்பாடு செல்லுபடியாகும் வகையில் இருக்க, அது ஒரு உண்மையான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அந்த வேறுபாடு சட்டத்தின் நோக்கத்துடனும் தெளிவாக தொடர்புடையதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில், வேறுபாட்டிற்கு தெளிவான அல்லது தர்க்கரீதியான அடிப்படை இல்லை என்றும், ஒரு பெண் வசிக்கும் இடத்திற்கும் அவள் பெற வேண்டிய சொத்தின் பங்கிற்கும் இடையே நியாயமான தொடர்பு இல்லை என்றும் மனுதாரர்கள் கூறுகிறார்கள்.


வரலாற்றுரீதியாக தனிப்பட்ட சட்டத்தை இந்த வகையான சட்ட சவாலில் இருந்து பாதுகாத்த மத சுதந்திர உத்தரவாதமான அரசியலமைப்புப் பிரிவு 25-ல், மரபுரிமை "முவாமலாத்-muamalat" (சிவில் பரிவர்த்தனைகளின் களம்)-க்கு சொந்தமானது, "இபாதத்-ibadat" (வழிபாட்டுச் செயல்கள்) என்பதன் கீழ் வராது என்று மனு கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, பரம்பரை சமூக தொடர்புகள் மற்றும் சிவில் பரிவர்த்தனைகள் என வகைப்படுத்துகிறது. மேலும், வாரிசுரிமை வழிபாட்டுச் செயல்களின்கீழ் வராது. அவ்வாறு செய்வதன் மூலம், வாரிசுரிமை ஒரு மதச்சார்பற்ற சிவில் ஒப்பந்தமாக அது கூறுகிறது. இது ஒரு முக்கிய மத நடைமுறை அல்ல. மேலும், அதை சிவில் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம், அரசியலமைப்புப் பிரிவு 25(2)(b)-ன் கீழ் சிவில் விஷயங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரத்தை அரசு பெறுகிறது.


உத்தரகண்டிற்கு வெளியே ஷரியத் சட்டத்தைப் பயன்படுத்துவது "பொருளாதார வன்முறையில் அரசு ஈடுபடுவதற்குச் சமம் என்பதைக் குறிக்கிறது". இது மதத்தை மறுப்பது அல்ல, மாறாக "பிரிவு 21-ன் கீழ் கண்ணியமான வாழ்க்கை" என்று அது கூறுகிறது.


உத்தரகண்ட் பொது சிவில் சட்டம் 2024 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜக அரசாங்கத்தால் பிப்ரவரி 2024-ல் நிறைவேற்றப்பட்டது. இது சுதந்திரத்திற்குப் பிறகு எந்தவொரு இந்திய மாநிலமும் இயற்றிய இந்த வகையான முதல் சட்டமாக இது மாறியது. பொது சிவில் சட்டம் 1998 முதல் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.


மாநிலத்தின் பொது சிவில் சட்டம் பட்டியல் பழங்குடியினரைத் தவிர அனைத்து மக்களுக்கும் பொருந்தும். மாநில அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் அல்லது இணங்காததற்காக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோரும் நேரடி உறவுகள் குறித்த அதன் விதிகள் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்படுகின்றன.


1937 ஷரியத் சட்டம்


ஷரியத் சட்டம் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் மத அமைப்புகள் நீண்டகாலமாக பிராந்திய பழக்கவழக்கங்கள் பெண்களுக்கு குர்ஆனிய மரபுரிமைச் சட்டம் உரிமையாகக் கொண்ட பங்குகளைக் கூட மறுப்பதாக வாதிட்டு வந்தன. பஞ்சாப், வங்காளம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், உள்ளூர் பழக்கவழக்கங்கள் குர்ஆனிய விதிகளை முற்றிலுமாக மாற்றியமைத்தன.


1937-ம் ஆண்டு சட்டம், பெண்களுக்கு நிலையான பங்குகளை வழங்கும் ஷரியா சட்டத்துடன்கூடிய பழக்கவழக்கங்களை ரத்து செய்தது. இது பல பெண்களுக்கு இருந்த முதல் சட்டப்பூர்வ தளம் ஷரியா சட்டத்தளமாகும். குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நீதித்துறையின் போதனைகளிலிருந்து பெறப்பட்ட "ஃபாரைட்" (faraid) என்று ஷரியா மரபுரிமையை பரிந்துரைக்கிறது. இந்தப் பங்குகள் நிலையானவை மற்றும் கட்டாயமானவை. ஒரு ஒற்றை மகள் சொத்தில் பாதியைப் பெறுகிறாள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மகள்கள் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கைப் பெறுகிறார்கள். குழந்தைகள் இருந்தால் ஒரு விதவைக்கு எட்டில் ஒரு பங்கும், யாரும் இல்லையென்றால் நான்கில் ஒரு பங்கும் கிடைக்கும். ஒரு உயில் இந்த நிலையான பங்குகளை ரத்து செய்யவோ குறைக்கவோ முடியாது. "வாசிய்யா" (wasiyyah) அல்லது சாசன உயில் (testamentary will), சொத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுமே. இது வாரிசுகள் அல்லாதவர்களுக்கு மட்டுமே சொத்தை வழங்க முடியும்.


மனு இந்த முறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முறையின்கீழ் பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே பெறுகிறார்கள் என்று மனுதாரர்கள் கூறுவது சரிதான். ஆனால் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB)) மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் விரைவாக சுட்டிக்காட்டுவது போல், மகன்களுக்கும் மகள்களுக்கும் இடையிலான 2:1 விகிதம் ஒரு பெரிய நிதி கட்டமைப்பிற்குள் இருப்பதாக கூறுகிறது.


அதிக பங்கைப் பெறும் ஆணுக்கு நிதிக் கடமைகள் உள்ளன. அவர் "நஃபக்கா" (nafaqah) வழங்க வேண்டும். இதன் பொருள், அவர் தனது மனைவியை, தனது மகள்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை ஆதரிக்க வேண்டும். அவர் சார்ந்திருக்கும் பெண் உறவினர்களையும் ஆதரிக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக, ஒரு பெண்ணின் வாரிசுரிமை முழுமையாக அந்தப் பெண்ணிற்குச் சொந்தமானது. அந்தப் பெண் அதை வீட்டிற்குச் செலவிட வேண்டியதில்லை. திருமணத்தில் அந்தப் பெண் பெறும் "மெஹர்" அந்த பெண்ணுக்கு மட்டுமே சொந்தமானது. "ஃபரைட்" (Faraid) முறை முஸ்லிம் பெண்களுக்கு வாரிசுரிமை பெறும் உரிமையையும் வழங்கியது. இஸ்லாமியத்திற்கு முந்தைய அரேபியா முறையில், பெண்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் சொத்தாகக் கருதப்பட்டதால், "ஃபரைட்" (Faraid) முஸ்லிம் பெண்களுக்கு வாரிசுரிமை பெறும் உரிமையையும் உறுதி செய்தது.


அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) செய்தித் தொடர்பாளர் சையத் காசிம் ரசூல் இலியாஸ், மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாரியத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். "பராமரிப்பு மற்றும் அனைத்து வீட்டுச் செலவுகளும் ஆணின் மீதுதான் உள்ளன. அதேநேரத்தில் பெண் அத்தகைய கடமைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார். ஒரு பெண் தனது பெற்றோரிடமிருந்து எதைப் பெற்றாலும், அல்லது வேலைவாய்ப்பின் மூலம் சம்பாதித்தாலும், அந்தப் பெண் வீட்டுச் செலவுகளுக்குச் செலவிட வேண்டிய அவசியமில்லை. அந்தப் பெண் தனது தனிப்பட்ட வருமானத்தை முழுவதுமாக அந்தப் பெண்ணுடைய சொந்த விருப்பப்படி செலவிடலாம்."


75 ஆண்டுகால முன்னுதாரணங்கள்

முக்கிய சட்டப் பிரச்சினையாக பம்பாய் மாநிலம் vs நரசு அப்பா மாலி-1951 (State of Bombay vs Narasu Appa Mali) தீர்ப்பு உள்ளது. தனிநபர் சட்டங்கள், பிரிவு 13(1) இன் கீழ் "நடைமுறையில் உள்ள சட்டங்கள்" அல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனிநபர் சட்டங்கள் சட்டத்திலிருந்து அல்ல, மத நூல்களிலிருந்து அவற்றின் அதிகாரத்தைப் பெறுகின்றன என்று அது கூறியது. எனவே, அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவற்றை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் 2018 சபரிமலை தீர்ப்பில், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 1951 தீர்ப்பை குறைபாடுள்ள பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார். இருப்பினும், 1951-ம் ஆண்டு தீர்ப்பு முறையாக ரத்து செய்யப்படவில்லை.


ஷயாரா பானோ vs இந்திய ஒன்றியம் (Shayara Bano vs Union of India) வழக்கில் 2017-ம் ஆண்டு முத்தலாக் தீர்ப்பு இந்த பிரச்சினையைச் சமாளிக்க ஒரு வழியைக் கண்டறிந்தது. ஷரியா விண்ணப்பச் சட்டம் ஷரியாவை சட்டப்பூர்வ சட்டமாக மாற்றியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் காரணமாக, இது அரசியலமைப்பின் 13-வது பிரிவின் கீழ் "நடைமுறையில் உள்ள சட்டம்" (law in force) என்று தகுதி பெற்றது. இதன் விளைவாக, உடனடி முத்தலாக் ஒரு தன்னிச்சையான சட்டப்பூர்வ ஏற்பாடாகும் என்பதால் ரத்து செய்யப்பட்டது.


தற்போதைய மனுவும் பரம்பரை உரிமைக்கான அதே அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. முத்தலாக் ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தைப் பிரித்திருந்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்பே அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) கூட இதை "விரும்பத்தகாதது" என்று விவரித்திருந்தது. இதற்கு நேர்மாறாக, ஃபரைத் (Faraid) அத்தகைய உள் கருத்து வேறுபாட்டை எதிர்கொள்வதில்லை. இது நேரடியாக குர்ஆனை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தெய்வீக கட்டளையாக இஸ்லாமிய நீதித்துறையின் பல்வேறு பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது.


கடந்த வாரம், அமர்வு ஒரு நடைமுறை கவலையை எழுப்பியது. 1937 சட்டத்தின் பரம்பரை விதிகள் ரத்து செய்யப்பட்டு, நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை இயற்றவில்லை என்றால், முஸ்லிம் வாரிசுரிமையை எது நிர்வகிக்கிறது? மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அந்த சூழ்நிலையில் இந்திய வாரிசுரிமைச் சட்டம் பொருந்தும் என்று வாதிட்டார். நீதிபதி பாக்சி அதை ஏற்கவில்லை. ஒரு சட்டத்தை ரத்து செய்வது தேவையற்ற வெற்றிடத்தை உருவாக்கக்கூடும் என்றும், "சட்டமன்றத்தின் ஞானத்திற்கு இணங்குவது நல்லது" (defer to the wisdom of the legislature) என்றும் கூறினார்.


நீதிமன்றங்கள் தனிநபர் சட்டங்களில் தலையிடும்போது, விளைவுகள் நீதிமன்ற அறைக்கு அப்பால் செல்வதைக் கண்டுள்ளன. 1985-ம் ஆண்டில், ஷா பானு வழக்கில், விவாகரத்து பெற்ற ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பராமரிப்புக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு வருடத்திற்குள், இந்தத் தீர்ப்பின் பிரதிபலிப்பாக, நாடாளுமன்றம் 1986-ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை (Muslim Women (Protection of Rights on Divorce) Act) நிறைவேற்றியது. இந்த புதிய சட்டம், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்தது. தனக்கு ஆதரவாக அமைந்திருந்த அத்தீர்ப்பை, பொதுவெளியில் நிராகரிக்குமாறு ஷா பானுவே பிற்காலத்தில் வற்புறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அத்தீர்ப்பின் மையக் கோட்பாடு உடனடியாக மீட்டெடுக்கப்படவில்லை. 2001-ம் ஆண்டில், வேறொரு தனி வழக்கின் மூலமாகவே அது மீட்டெடுக்கப்பட்டது.


பரந்த அளவிலான கேள்வி


இவ்விவகாரம் மதம் சார்ந்ததோ அல்லது இறையியல் சார்ந்ததோ அல்ல என்று அந்த மனு வாதிடுகிறது. குர்ஆனை மறுவிளக்கம் செய்யுமாறு தான் கோரவில்லை என்றும் அது குறிப்பிடுகிறது. மேலும், நம்பிக்கை சார்ந்த விதிமுறைகளை ரத்து செய்யவோ அல்லது நீக்கவோ தான் முயலவில்லை என்றும் அது கூறுகிறது. இவ்விவகாரம் மதச்சார்பற்றதே தவிர, மதரீதியானது அல்ல என்று அது வலியுறுத்துகிறது.


எனினும், முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, அந்த வேறுபாடு பொருந்தாது. "ஃபரைட்" (Faraid) முறைக்கும், 1937-ஆம் ஆண்டு சட்டத்திற்கும் இடையே எவ்விதப் பிரிவும் இல்லை. அந்தச் சட்டத்தை, ஒரு இறைக்கட்டளையை (divine command) அரசு அங்கீகரித்ததற்கான சான்றாகவே அவர்கள் நோக்குகின்றனர்.


அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) இந்த மனுவை "தீங்கானது" (mischievous) என்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை மீறுவதாகவும் விவரித்தது. இந்த வாரியத்தின் நிலைப்பாடு பல நிலைகளைக் அடிப்படையாகக் கொண்டது.


முதலாவதாக, இன்னும் ரத்து செய்யப்படாத நரசு அப்பா மாலி தீர்ப்பு (Narasu Appa Mali judgment), தனிநபர் சட்டத்தை அரசியலமைப்புரீதியாக சவால் செய்ய முடியுமா என்ற கேள்வியை ஏற்கனவே தீர்த்து வைத்துள்ளது. இரண்டாவதாக, ஃபராய்ட் (faraid) என்பது கொள்கை தேர்வு தொடர்பான விஷயம் மட்டுமல்ல, அவை குர்ஆனின் குறிப்பிட்ட வசனங்களிலிருந்து பெறப்பட்டவை. மேலும், முஸ்லிம் அறிஞர்கள் அவற்றை தெய்வீகமாக கட்டளையிட்டதாகக் கருதுகின்றனர் என்றும் ஃபரைட்டை சட்டமன்றம் அல்லது நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.


மனு ஒரு அறிக்கையில் அதன் வலுவான மற்றும் மிகவும் முக்கிய வாதத்தை முன்வைக்கிறது. இதில், குடியரசின் ஒரு பகுதியில் சமத்துவம் அடையப்பட்டவுடன், மற்றொரு பகுதியில் மத பன்மைத்துவத்தின் பெயரில் அதை மறுக்க முடியாது என்று அது கூறுகிறது. அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு சமத்துவத்தின் விரிவாக்கம் தேவை, அதன் கட்டுப்பாடு அல்ல என்று அது வாதிடுகிறது.


மேலும், மனு ஒரு புவியியல் வாதத்தையும் முன்வைக்கிறது. இருப்பினும், இந்த வாதத்தை இரண்டு வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளலாம். உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தின் இருப்பு உத்தரகண்டில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கும் மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கும் இடையே அரசியலமைப்பிற்கு முரணான சமத்துவமின்மையை உருவாக்கினால், அதற்கான தீர்வு கோட்பாட்டளவில் முஸ்லிம்களுக்கான உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை திரும்பப் பெறுவதாக இருக்கலாம். அப்படியானால், சட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டியதில்லை. மனு இந்த சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மனு குறிப்பிடுவது போல் புவியியல்ரீதியில் அதன் தர்க்கம் தெளிவானதாகவோ அல்லது நேரடியானதாகவோ இல்லை என்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குகிறது.



Original Link: How a challenge to 1937 Shariat Act frames inheritance law as a civil statute vs religious instrument question?.


Share: