இந்தியாவின் கார்பன் வரவு வர்த்தக திட்டத்தின் இலக்குகளை மதிப்பிடுதல் -வைபவ் சதுர்வேதி, தர்ஷ்னா சிங்

 கார்பன் சந்தை இலக்குகளின் தேவைகளை மொத்த பொருளாதார அளவில் மதிப்பிட வேண்டும். அவற்றை தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது துறைகளின் அளவில் மதிப்பிடக் கூடாது.


இந்திய அரசு சமீபத்தில் இந்தியாவின் கார்பன் வரவு வர்த்தக திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) இணக்க பொறிமுறையில் உள்ள ஒன்பது கனரக தொழில்துறைகளில் எட்டு துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு (எஃகு ஆலை போன்றவை) பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் உற்பத்தி தீவிரத்திற்கான இலக்குகளை அறிவித்தது. எட்டு துறைகளான அலுமினியம், சிமெண்ட், காகிதம் மற்றும் மரக்கூழ், க்ளோர்-அல்கலி, இரும்பு மற்றும் எஃகு, ஜவுளி, பெட்ரோ கெமிக்கல் மற்றும் பெட்ரோ சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகும். எனவே, இவை தேவைகளை இலக்குகளா இல்லையா என்பதை புரிந்து கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா?


முதலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி இது: நாம் தேவையை நிறுவன மட்டத்தில் அளவிட வேண்டுமா அல்லது துறை மட்டத்தில் அல்லது பொருளாதார மட்டத்தில் அளவிட வேண்டுமா? எங்கள் பகுப்பாய்வு இந்தியாவின் கார்பன் சந்தை இலக்குகளின் தேவையை மொத்த பொருளாதார அளவில் மதிப்பிட வேண்டும் என்பதையும், தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது துறைகளின் அளவில் அல்ல என்பதையும் காட்டுகிறது.


பொருளாதார அளவிலான பார்வை மிகவும் முக்கியமானது


பெரிய தொழில்களுக்கான இந்தியாவின் முக்கிய எரிசக்தி சேமிப்பு திட்டமான செயல்திறன், சாதனை மற்றும் வர்த்தகம் (Perform, Achieve and Trade (PAT)) திட்டத்தைப் பார்ப்பதன் மூலம் இதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். PAT திட்டத்தில், அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்களுக்கு அவற்றின் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க இலக்குகள் வழங்கப்படுகின்றன. அவை தேவைக்கு அதிகமாக ஆற்றலைச் சேமித்தால், அந்த கூடுதல் சேமிப்புகளை தங்கள் இலக்குகளை அடைய முடியாத பிற தொழில்களுக்கு விற்கலாம். PAT சுழற்சி I (2012–14) காலத்தில் நான்கு தொழில்களின் தரவை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் கலவையான முடிவுகள் கிடைத்தன. சில நிறுவனங்களில், உற்பத்தி அலகுக்கு பயன்படுத்திய எரிசக்தி (ஆற்றல் தீவிரம்) அதிகரித்தது. ஆனால், மற்றவற்றில் குறைந்தது. துறை மட்டத்தில், எரிசக்தி தீவிரம் இரண்டு துறைகளில் (காகிதம் மற்றும் க்ளோர் அல்கலி) உயர்ந்தது மற்றும் மற்ற இரண்டில் (அலுமினியம் மற்றும் சிமெண்ட்) குறைந்தது.  எனினும், நாங்கள் நான்கு துறைகளிலிருந்தும் உமிழ்வுகள், வெளியீடு மற்றும் விலை தரவை இணைத்து பணவீக்கத்திற்கு சரி செய்தபோது, ஒரே அளவு பொருளாதார வெளியீட்டை உற்பத்தி செய்ய, ஒட்டுமொத்தமாக, குறைந்த ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.


இது சில நிறுவனங்கள் அல்லது துறைகளில் ஆற்றல் திறன் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாடு இன்னும் அதிக திறனுடன் மாறலாம் என்பதை காட்டுகிறது. நாங்கள் மற்ற PAT சுழற்சிகள் மற்றும் துறைகளிலும் இதே போன்ற நடத்தையை கண்டோம். இந்த கண்டுபிடிப்புகள் நமக்கு ஒரு பயனுள்ள நுண்ணறிவை வழங்குகின்றன  இந்தியாவின் PAT திட்டம் மொத்த மட்டத்தில் எரிசக்தி தீவிரம் குறைப்பை அடைய சந்தை பொறிமுறைகளை திறம்பட பயன்படுத்த முடிந்தது. சில நிறுவனங்களுக்கு அது அதிகரித்தபோதிலும் ஒட்டுமொத்த எரிசக்தி தீவிரம் குறைந்தது, சந்தை பொறிமுறை வேலை செய்தது என்பதை காட்டுகிறது; அந்த நிறுவனங்கள் விலையுயர்ந்த உள்நாட்டு மாற்றங்களை மேற்கொள்வதற்கு பதிலாக எரிசக்தி திறன் சான்றிதழ்களை வாங்க முடிந்தது.


ஆனால், இதுவே மொத்த எரிசக்தி தீவிரம் குறைப்பு தீவிரமானதா அல்லது வழக்கமான வணிகமா என்பதை எங்களுக்கு சொல்லவில்லை. இருப்பினும், இது அது தீவிரமானதா இல்லையா என்பதை அறிய ஒருவர் மொத்த இலக்கை மட்டுமே பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை நமக்கு சொல்கிறது. அதாவது, வெளிப்புற-உந்துதல் சந்தைக்கு, மொத்த மட்டத்தில் குறைப்பை அடைவது 'அனைத்து' நிறுவனங்களுக்கும் நிறுவன மட்டத்தில் அதே அளவை அடைவதை விட மிகவும் முக்கியமானது. உமிழ்வு வர்த்தக திட்டம் தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது துறைகளை பற்றி கவலைப்படவில்லை. இது நாட்டின் பொருளாதார மட்டத்தில் மொத்த விளைவை மையமாகக் கொண்டுள்ளது. உண்மையான இலக்கு அளவிடப்பட வேண்டும்.


ஆனால், உமிழ்வுகளை குறைக்கவும் நிறுவன அல்லது துறை மட்ட இலக்குகள் முக்கியமல்லவா? எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆணையத்தின் (Council on Energy, Environment and Water (CEEW)) ஆராய்ச்சி கட்டுரை ஒன்று நிறுவன அல்லது துறை மட்ட இலக்குகள் நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு இடையிலான நிதி பரிமாற்றங்களை மட்டுமே தீர்மானிக்கின்றன. ஒட்டுமொத்த உமிழ்வு தீவிரம் குறைப்பை அல்ல என்பதை காட்டுகிறது.


PAT திட்டத்தின் கீழ், கடந்த கால செயல்திறனுடன் புதிய CCTS இலக்குகளை ஒப்பிடுவது அவை எவ்வளவு லட்சியமானவை என்பதற்கான முழுமையான படத்தைத் தராது. கடந்த காலத்தில் உமிழ்வு வெட்டுக்கள் சிறியதாக இருந்ததால், அவை எதிர்காலத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நமது காலநிலை நடவடிக்கைகள் காலப்போக்கில் வலுவாக மாற வேண்டும். எனவே, கடந்த காலத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் நீண்டகால காலநிலை இலக்குகளை அடையத் தேவையானவற்றுடன் புதிய இலக்குகளை ஒப்பிட வேண்டும் அதன் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDC)) மற்றும் 2070ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு போன்றவையாகும். நாட்டின் ஒட்டுமொத்த தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இலக்குடன் தொழில்துறை சார்ந்த CCTS இலக்குகளை நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும், பொருளாதார அளவிலான மாதிரியாக்க மதிப்பீடுகள் இந்த விவகாரத்தில் பயனுள்ள தகவல்களை வழங்க முடியும்.


உமிழ்வு தீவிரம் குறையும்


இந்தியாவிற்கான  தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDC)) 2030 இணைந்த உமிழ்வு குறைப்பு காட்சியின் எங்கள் சமீபத்திய மாதிரியாக்கத்தின் படி, இந்தியாவின் எரிசக்தி துறையின் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு தீவிரம் (மொத்த உள்நாட்டு அலகுக்கு) 2025 மற்றும் 2030ஆம் ஆண்டுக்கு இடையில் சராசரி வருடாந்திர 3.44% வீதத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில், இந்தியாவின் உற்பத்தி துறையில் மதிப்பு சேர்க்கையின் உமிழ்வு தீவிரம் (Emissions intensity of value added (EIVA]) அதே காலகட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தது 2.53% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறுகிய காலத்தில், தொழில்துறை மற்ற துறைகளை விட மெதுவான வேகத்தில் கார்பன் நீக்கம் (decarbonise) என்பதை குறிக்கிறது. குறிப்பாக மின்சக்தி துறை, இது அதிக குறைந்த செலவு தணிப்பு வாய்ப்புகளை கொண்டுள்ளது.


எட்டு துறைகளுக்கான தற்போதைய கார்பன் வரவு வர்த்தக திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) இலக்குகளின் அடிப்படையில், 2023-24 முதல் 2026-27 வரை உற்பத்தி மதிப்புக்கு சராசரி ஆண்டு உமிழ்வு குறைப்பு (EIVA என அழைக்கப்படுகிறது) 1.68% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது துறை விலைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி வளர்ச்சியைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்த தொழில்துறை இலக்குகள் போதுமான அளவு வலுவாகவோ அல்லது போதுமான அளவு லட்சியமாகவோ இல்லாமல் இருக்கலாம் என்பதை ஆரம்ப அறிகுறிகள் காட்டுகின்றன.


கார்பன் வர்த்தக திட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதால் இது நேரடியாக ஒப்பிடக்கூடியதல்ல என்றாலும், அனைத்து துறைகளுக்கும் விரிவான மாதிரியாக்கம் முடிக்கப்படும் வரை இது கிடைக்கும் மிகவும் பொருத்தமான அளவுகோல் அளவுகோலாகும். இறுதியில், உமிழ்வுகளில் மொத்தக் குறைப்பு இந்தியாவின் முயற்சி உண்மையிலேயே லட்சியமாக உள்ளதா என்பதைக் காண்பிக்கும்.


வைபவ் சதுர்வேதி எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆணையத்தில் மூத்த உறுப்பினராக உள்ளார். தர்ஷ்னா சிங் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆணையத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராக உள்ளார்.



Original article:

Share:

இயல்பு குடியிருப்பாளர் என்று தகுதி பெற்றவர்கள் யார்? -ரங்கராஜன் .ஆர்

 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act, 1950) பிரிவு 20 என்ன கூறுகிறது? ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்று தங்களை வகைப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்? வெளிநாட்டு இந்தியர்கள் (Overseas Indians (NRIs)) வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules) எதை நிர்வகிக்கின்றன?


தற்போதைய செய்தி: இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India (EC)) பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர மறு ஆய்வு (Special Intensive Revision (SIR)) ஒன்றை தொடங்கியுள்ளது. இது ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான நோக்கத்திற்காக இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்பது பற்றிய விவாதத்தைத் இது அதிகரிக்க செய்துள்ளது. 


'இயல்பு குடியிருப்பாளர்' (ordinarily resident) என்றால் யார்?


தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 விதிகளைப் பின்பற்றி வாக்காளர் பட்டியல்களை உருவாக்குகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 19, ஒரு நபர் ஒரு பகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு "இயல்பு குடியிருப்பாளராக" இருக்க வேண்டும் என்று கூறுகிறது.


பிரிவு 20 இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்ற சொல்லிற்கு பொருளை வழங்குகிறது. ஒரு நபர் ஒரு தொகுதியில் வசிக்கும் வீட்டை சொந்தமாக வைத்திருப்பதாலோ மட்டுமே அவர் அந்தத் தொகுதியில் 'இயல்பு குடியிருப்பாளராக' கருதப்படக்கூடாது என்று குறிப்பிடுகிறது. 


(அ) மத்திய அரசின் ஆயுதப் படைகளில் இருப்பவர்கள்


(ஆ) மாநில ஆயுதக் காவல் படையில் இருந்து அந்த மாநிலத்திற்கு வெளியே பணிபுரியும் நபர்கள்


(இ) இந்தியாவிற்கு வெளியே இந்திய அரசாங்கத்திற்காக பணிபுரியும், அல்லது


(ஈ) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் குடியரசுத்தலைவரால் அறிவிக்கப்பட்ட அரசியலமைப்பு பதவியை வகிக்கும் நபர்கள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படாவிட்டால் அவர்கள் வாழ்ந்த இடத்தில் 'இயல்பு குடியிருப்பாளர்' என்று கருதப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் இதில் அடங்குவர்.


2010இல் சேர்க்கப்பட்ட பிரிவு 20A, வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் (non-resident Indians (NRIs)) தங்கள் கடவுச்சீட்டு (passport) முகவரி உள்ள தொகுதியில் பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கிறது.


தேர்தல் ஆணையத்துடன் உடன் கலந்தாலோசித்து ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வாக்காளர்கள் பதிவு விதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி வாக்காளர் பட்டியல்களின் தயாரிப்பு மற்றும் அதில் பெயர்கள் சேர்த்தல்/நீக்குதல் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.


ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன?


ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இயல்பு குடியிருப்பாளர் வேண்டும் என்ற தேவை, வாக்காளர் அந்த தொகுதியுடன் உண்மையான தொடர்பை பராமரிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளது. இது பிரதிநிதித்துவ பொறுப்புடைமையை (representative accountability) பாதுகாக்கிறது. இது மோசடியான பதிவுகளை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மன்மோகன் சிங் வழக்கில் (1999) கௌஹாட்டி உயர்நீதிமன்றம், இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்ற சொல் அந்த இடத்தில் வழக்கமாக வசிக்கும் நபர் என்று பொருள்படும் என்று சுட்டிக்காட்டியது. அது நிரந்தர தன்மையுடைதாக இருக்க வேண்டும்.  தற்காலிக அல்லது சாதாரணமானதாக இருக்கக்கூடாது. அது அந்த நபர் நிரந்தரமாக வசிக்கும் நோக்கம் கொண்ட இடமாக இருக்க வேண்டும். ஒரு நியாயமான மனிதர் அவரை/அவளை அந்த இடத்தின் வசிப்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் பிரச்சினை எழுகிறது. 2020-21ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) நமது மக்கள்தொகையில் 11% பேர் வேலைவாய்ப்பு தொடர்பான காரணங்களால் இடம்பெயர்ந்தனர் என்று மதிப்பிட்டது. இதன் பொருள் சுமார் 15 கோடி வாக்காளர்கள் தங்கள் மாநிலங்களுக்குள் அல்லது வெளியே புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் ஆண்டின் ஒரு பகுதிக்கு மட்டுமே இடம்பெயர்ந்து சில மாதங்களுக்கு வீடு திரும்புகிறார்கள். 


பல கட்டுமான மற்றும் பாதுகாப்புத் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு அருகிலுள்ள தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வேலைக்காக, ஒரே மாநிலத்திற்குள் அல்லது வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம் மாறிச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் சொத்துக்கள் இருக்கும் தங்கள் சொந்த மாநிலத்திற்குத் தொடர்ந்து திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள் அதே  பகுதியில் வாக்களிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அங்கு இல்லையென்றாலும், அந்த இடத்தில் "இயல்பு குடியிருப்பாளர்" என்ற முக்கிய யோசனையை இன்னும் பூர்த்தி செய்கிறார்கள் என்று நீதிமன்றங்கள் நம்புகின்றன.


எந்தவொரு புலம்பெயர்ந்தவரும் விரும்பினால், இந்தியாவில் எங்கும் தங்கள் புதிய வசிப்பிடத்திற்கு தங்கள் வாக்காளர் பதிவை மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. ஆனால், அரசாங்கம் "இயல்பு குடியிருப்பாளர்" என்ற பொருளை கண்டிப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் பெயர்களை அவர்களின் உண்மையான தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால், அது ஜனநாயக செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும். இது அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கக்கூடும். ஏனெனில், பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் தாங்கள் பணிபுரியும் தற்காலிக இடத்தில் வாக்காளர்களாகப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அல்லது அனுமதிக்கப்படுவதில்லை.




முன்னோக்கி செல்வதற்கான வழி என்னவாக இருக்கும்?


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் சேவை வாக்காளர்கள், அறிவிக்கப்பட்ட பதவியை வகிக்கும் நபர்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர்கள் அத்தகைய இடத்தில் நிரந்தரமாக வசிக்காமல் இருந்தாலும் கூட தங்கள் தொகுதியில் வாக்குரிமையை தக்கவைத்துக்கொள்ளும் விருப்பத்தை வழங்குகிறது. இது ஒப்பிடக்கூடிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் என்றாலும், பெரும்பாலான தொழிலாளர்கள், குறுகிய கால அல்லது நீண்ட கால, அவர்களின் பகுதியில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் புலம்பெயர்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


அவர்கள் தங்கள் பூர்விக வசிப்பிடத்துடன் நெருக்கமான தொடர்புகளை தொடர்ந்து பராமரிக்கிறார்கள் மற்றும் அத்தகைய தொகுதியில் தங்கள் வாக்களிக்கும் உரிமையை தக்கவைத்துக்கொள்ள தேர்வு செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அல்லது தேர்தல் விதிகளை (election rules (RER)) மாற்றலாம். அவர்கள் தேர்தல்களில் பங்கேற்க உதவும் நியாயமான மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகள் இருக்க வேண்டும். புலம்பெயர்ந்தோர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், வாக்காளர் விவரங்களை ஆதாருடன் இணைப்பதன் (Aadhaar seeding) மூலம் அந்தப் பிரச்சினையைத் தனித்தனியாக தீர்க்க முடியும்.


ரங்கராஜன் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.



Original article:

Share:

புகையும் கந்தகமும்: சல்பர் டையாக்சைடு உமிழ்வுகள், பொது சுகாதாரம் குறித்து..

 இந்தியாவிற்குள் வெவ்வேறு சுற்றுச்சூழல் தரநிலைகள் இருக்க முடியாது.


இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் இனி  எரிவாயு கந்தக நீக்க (Flue Gas Desulphurisation (FGD)) அமைப்புகளை கட்டாயமாக நிறுவுவதிலிருந்து சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. இது தீங்கு விளைவிக்கும் சல்பர் டையாக்சைடு (sulphur dioxide (SO2)) உமிழ்வைக் குறைக்க உதவுகிறது. இந்த முடிவு அரசாங்கத்தின் 2015-ஆம் ஆண்டு விதிக்கு எதிரானது. இது அனைத்து நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களும் (600 அலகுகள் கொண்ட சுமார் 180 ஆலைகள்) சல்பர் டையாக்சைடு வெளியேற்றும் அமைப்புகளை  நிறுவ வேண்டும் என்று கூறியது. இந்த அமைப்புகள் 2017-ஆம் ஆண்டிற்குள் நிறுவப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 8% அலகுகள் மட்டுமே எரிவாயு கந்தக நீக்க அமைப்பை  நிறுவியுள்ளன. 


அனைத்தும் பொதுத்துறை தேசிய வெப்ப மின் கழகத்தால் (National Thermal Power Corporation (NTPC)) நிறுவப்பட்டுள்ளன. சல்பர் டையாக்சைடு  அமில  உமிழ்வு என்பது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB))  மூலம் கண்காணிக்கப்படும் வாயுக்களில் ஒன்றாகும். இது காற்றில் சல்பேட்டுகளாகவும் மாறி, காற்று மாசுபாட்டை அதிகரிக்கும். இந்தியாவில் SO2 அளவுகள் பொதுவாக பாதுகாப்பான வரம்புகளுக்குள் இருந்தாலும், இது FGD அமைப்புகளை நிறுவுவதற்கான அவசரத்தைக் குறைத்துள்ளது. அதிக செலவுகள், மின்சார விலையில் அதிகரிப்பு மற்றும் COVID-19 தொற்றுநோயால் தாமதம் ஏற்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.


 2024-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கடைசி காலக்கெடுகள் முடிவடைந்தபோதிலும், அறிவியல் நிறுவனங்களுடனான கலந்தாலோசனைகள் மற்றும் புதிய ஆய்வுகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் (Environment Ministry) எடுத்த முடிவு, தற்போதைய கொள்கையை முற்றிலுமாக மறுக்கும் விதமாக உள்ளது. இந்திய நிலக்கரியில் குறைந்த சல்பர் டையாக்சைடு இருப்பதாக ஒரு நிபுணர் குழு கூறுகிறது. எரிவாயு கந்தக நீக்க  (FGDs) அமைப்புகளை கொண்ட மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நகரங்களில் சல்பர் டை ஆக்சைடு (SO2) அளவுகள் அவை இல்லாத நகரங்களைப் போலவே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதையும், இந்த அளவுகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வரம்பை விட மிகக் குறைவாக இருப்பதையும் கண்டறிந்துள்ளது.


இரண்டு சந்தர்ப்பங்களிலும், அளவுகள் பாதுகாப்பான வரம்புகளுக்குள் உள்ளன. சல்பர் டையாக்சைடு பற்றி கவலைப்படுவதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை என்றும் குழு கூறியது. பசுமை இல்ல வாயுக்களிலிருந்து வரும் சில வெப்பத்தைத் தடுப்பதன் மூலம் புவி வெப்பமடைதலைக் குறைக்க உதவுகின்றன என்றும் மின்சார அமைச்சர் கூறினார். எனவே, சல்பர் டையாக்சைடை வெளியேற்றுவது வெப்பமயமாதலை மோசமாக்கும் மற்றும் இந்தியாவின் காலநிலை இலக்குகளை பாதிக்கும். இருப்பினும், கந்தங்கள் வெப்பத்தைக் குறைக்கின்றன என்று காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC)) அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இது முற்றிலும் நல்லது என்று கூறவில்லை.


2028-ஆம் ஆண்டுக்குள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மின் உற்பத்தி நிலையங்கள்  20%  மட்டுமே எரிவாயு கந்தக நீக்க  (FGDs) அமைப்புகளை நிறுவ வேண்டும். இவை தேசிய தலைநகர் தலைநகரிலிருந்து 10 கி.மீ.க்குள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் அல்லது அதிக மாசுபாட்டிற்கு பெயர் பெற்ற பகுதிகளில் அமைந்துள்ளன. 

இது, FGD-களை நிறுவுவது, நிலக்கரி ஆலை நன்றாக வேலை செய்கிறதா அல்லது சல்பர் டையாக்சைடு (sulphur dioxide (SO2)) எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதைப் பொறுத்து அல்லாமல், அது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தது என்பதைக் காட்டுகிறது. வெவ்வேறு இடங்களில் ஒரே மாசுபடுத்திக்கு வெவ்வேறு விதிகள் இருப்பது இந்தியாவுக்கு அசாதாரணமானது. மாசுபாடு குறித்த விதிகளை மாற்றுவது திறந்த பொது விவாதம் மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இல்லையெனில், நல்ல அறிவியலுடன் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் வாக்குறுதியை அது பலவீனப்படுத்துகிறது.



Original article:

Share:

நகர்ப்புற மாவோயிசம் (Urban Maoism) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நகர்ப்புற மாவோயிசம் (Urban Maoism) என்ற மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அரசியல் போராட்டக்காரர்கள் (political protesters) அல்லது ஆர்வலர்களுக்கு (activists) எதிராக இந்த மசோதா தவறாகப் பயன்படுத்தப்படாது என்று உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார். மாவோயிஸ்டுகள் (Maoists) மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாக அவர் கூறினார். இப்போது, அவர்கள் நகரங்களில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஜனநாயக அமைப்புக்கு எதிராகத் திருப்ப முயற்சிக்கின்றனர். "நகர்ப்புற மாவோயிசம்" (urban Maoism) அதிகரித்துவரும் அச்சுறுத்தல் குறித்து அவர் எச்சரித்தார். மேலும், இந்த மசோதா அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்றும் கூறினார்.


கருத்து வேறுபாடுக்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை ஃபட்னாவிஸ் எடுத்துரைத்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். இருப்பினும், வன்முறை இருந்தால், பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) தொடர்புடைய விதிகள் பொருந்தும். அத்தகைய சந்தர்ப்பங்களில் புதிய சட்டம் பயன்படுத்தப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.



உங்களுக்குத் தெரியுமா? :


மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு (Maharashtra Special Public Security (MSPC) Bill) மசோதா, 2024-ன் நோக்கங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை, ஒரு முக்கிய கவலையை எடுத்துக்காட்டுகிறது. நக்சலைட்டின் அச்சுறுத்தல் நக்சல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்று அது கூறுகிறது. மாறாக, நகர்ப்புறங்களிலும் அதன் இருப்பு அதிகரித்து வருகிறது. இது நக்சல் முன்னணி அமைப்புகள் (Naxal front organisations) மூலம் நடக்கிறது.


இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் இந்த மசோதா, 'சட்டவிரோத செயல்பாடு' (unlawful activity) என்பதை "ஒரு தனிநபர் அல்லது அமைப்பு ஒரு செயலைச் செய்வதன் மூலமாகவோ அல்லது பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகள் மூலமாகவோ அல்லது அடையாளம் மூலமாகவோ அல்லது காணக்கூடிய பிரதிநிதித்துவம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ எடுக்கும் எந்தவொரு செயலாகவும், (i) பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதிக்கு ஆபத்து அல்லது அச்சுறுத்தலாக அமைவது; அல்லது (ii) பொது ஒழுங்கைப் பேணுவதில் தலையிடுதல் அல்லது தலையிட முயற்சித்தல் அல்லது (iii) சட்டத்தின் நிர்வாகம் அல்லது அதன் நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களில் தலையிடுதல் அல்லது தலையிட முயற்சித்தல்" போன்ற  'சட்டவிரோத நடவடிக்கை'யை உருவாக்கும் நான்கு பிற செயல்களையும் இந்த  மசோதா வரையறுக்கிறது.


இத்தகைய மசோதாவை நிறைவேற்றும் 5-வது மாநிலமாக மகாராஷ்டிரா மாறுகிறது. இது இப்போது மேலவையில் (upper house) மேலும் விவாதத்திற்காக தாக்கல் செய்யப்படும்.



Original article:

Share:

சமீபத்திய உலகளாவிய வர்த்தக முன்னேற்றங்களின் பின்னணியில் இந்தியாவிற்கு, WTO வர்த்தகக் கொள்கை மறுஆய்வு அமைப்பின் முக்கியத்துவம் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• வர்த்தக தகராறுகளை தீர்ப்பதற்கான மன்றத்தை அமெரிக்கா கைவிட்டுவிட்டு, அதற்குப் பதிலாக இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுவரும் நேரத்தில், உலக வர்த்தக அமைச்சகத்தில் தயாரிப்புகள் நடைபெறுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் பெரும்பாலும் உலகளாவிய வர்த்தக அமைப்பிற்கு இணங்காதவை என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். விதிகள் அடிப்படையிலான அமைப்புக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் இது குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


• உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்ப்பு அமைப்பில் (Dispute Settlement Body (DSB)) நீதிபதிகள் நியமனத்தை அமெரிக்கா தொடர்ந்து தடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் பரந்த அளவிலான சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் ஆசிய நாடுகளுடன் கட்டமைக்கப்பட்ட வர்த்தக ஒத்துழைப்பை நிறுவுவதற்கு ஐரோப்பா தலைமையிலான முயற்சியை தொடங்க முன்மொழிந்தார் - இது WTO-க்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• வான் டெர் லேயென் பிரசல்ஸ் மற்ற 11 உலகளாவிய பொருளாதாரங்களான விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்தக ஒப்பந்தத்துடன் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP)) கைகோர்த்து உலகளாவிய வர்த்தகப் பதற்றங்களை கட்டுப்படுத்த போராடி வரும் உலக வர்த்தக அமைப்பிற்கு மாற்றாக ஒரு நிறுவனத்தை உருவாக்க பரிந்துரைத்ததாக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இந்த வாரம் தொடக்கத்தில் தெரிவித்தது.


• இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு எதிராக பல தகராறுகளை தாக்கல் செய்து வருவதால் இது இந்தியாவிற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்தது.


•டிரம்ப் நிர்வாகம் வரிகளை மேலும் உயர்த்தியதைக் கருத்தில் கொண்டு, எஃகு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க வரிகளுக்கு எதிராக அமெரிக்காவிற்கு எதிராக WTO விதிமுறைகளின்கீழ் பழிவாங்கும் வரிவிதிப்புகளை விதிக்கும் தனது திட்டத்தை இந்தியா திருத்தியது.


• அமெரிக்கா முதலில் மார்ச் 12 அன்று அலுமினியம், எஃகு இறக்குமதியில் 25 சதவீதம் கட்டணம் விதித்தது. ஜூன் 3 அன்று இந்த கட்டணங்கள் மேலும் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டன.



Original article:

Share:

நமாமி கங்கை திட்டம் -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான இந்தியாவின் முயற்சி, மதிப்புமிக்க பரஸ்பர கற்றலின் வாய்ப்பைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் நதிகளைப் புத்துயிர் பெறுவதற்கான விரிவான கொள்கை சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைக்க உதவும்.


• இந்திய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக 2014-ல் தொடங்கப்பட்ட நமாமி கங்கை திட்டம், கங்கையின் நீர் தரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.


• சமீபத்தில் நடைபெற்ற தூய்மையான மகா கும்பமேளாவைத் தவிர, கங்கை நதியின் ஆரோக்கியம் மேம்பட்டு வருவதற்கான சான்றாக, கங்கை டால்பின் போன்ற முக்கிய உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தேசிய தூய்மை கங்கை இயக்கம் (National Mission for Clean Ganga (NMCG)) சுட்டிக்காட்டுகிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, NMCG-ன் நெகிழ்வான கொள்கைகளும் புதிய அணுகுமுறைகளும் பழைய கங்கை செயல் திட்டத்திலிருந்து வேறுபட்டுள்ளன.


• ஒரு பணி நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்ட நமாமி கங்கை திட்டம், சட்ட மற்றும் நிறுவன கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பிலிருந்து ஜல் சக்தி அமைச்சகத்தில் (முன்னர் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்ச்சி அமைச்சகம்) ஒரு நிர்வாக அணுகுமுறைக்கு மாறியுள்ளது.


• இந்தத் திட்டம் மாசுபாட்டைக் குறைப்பதிலிருந்து நதியின் சுற்றுச்சூழல் நிலையை மேம்படுத்துவதற்கான மாற்றத்தையும் குறிக்கிறது. இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட திட்டத்தால் தெரிவிக்கப்பட்ட நதிப் படுகை அணுகுமுறையை NGP பின்பற்றியுள்ளது. ஐரோப்பாவில் உள்ளதைப் போலவே, புகழ்பெற்ற நதி மறுசீரமைப்புத் திட்டங்களிலும், இத்தகைய மாற்றங்கள் பல தசாப்தங்கள் எடுத்தன. ரைன் நதியை மீட்டெடுக்க 1950-ல் நிறுவப்பட்ட ரைன் பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் (International Commission for the Protection of the Rhine (ICPR)), 1986-ல் சாண்டோஸ் பேரழிவிற்குப் பிறகுதான் இந்த மாற்றங்களைச் செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


• தேசிய தூய்மை கங்கை இயக்கம் (National Mission for Clean Ganga (NMCG)) 2016-ஆம் ஆண்டு  கங்கை ஆறு (புத்துயிர், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) (River Ganga (Rejuvenation, Protection and Management) ஆணைய உத்தரவு மூலம் தொடங்கப்பட்ட உடனேயே அதிகாரத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டது. முன்பு அமைக்கப்பட்ட தேசிய கங்கை ஆற்றுப்படுகை ஆணையம் (National Ganga River Basin Authority) இந்த உத்தரவின் மூலம் கலைக்கப்பட்டு தேசிய கங்கை ஆணையமாக (National Ganga Council (NGC)) மாற்றப்பட்டது. கொள்கை வகுப்பதில் அசாதாரண சுறுசுறுப்பைக் காட்டும் பிற நிறுவன கண்டுபிடிப்புகளும் உள்ளன.


• NGC-க்கு பிரதமர் தலைமை வகிக்கிறார். கரையோர மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 10 ஒன்றிய அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவையும், விரிவான நிதி மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்களுடன் NMCG-ன் இயக்குநர் தலைமையிலான நிர்வாகக் குழுவையும் தேசிய கங்கை ஆணையம் வழி நடத்துகிறது.

• 2016-ஆம் ஆண்டு உத்தரவின் முக்கிய அம்சம் என்னவென்றால், அது மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களை முக்கியமான கூட்டாளிகளாகக் கருதுகிறது. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களையும் உள்ளடக்கிய மாநில மற்றும் மாவட்ட கங்கா குழுக்களுடன் ஒரு அமைப்பை இது அமைத்தது. இருப்பினும், இந்த முயற்சியுடன்கூட, நமாமி கங்கைத் திட்டத்தில் மாநில அரசுகளின் ஈடுபாடு குறைவாகவே உள்ளது. அவற்றின் பலவீனமான சட்ட, நிறுவன மற்றும் நிதி ஆதரவு திட்டத்தின் நீண்டகால வெற்றி குறித்த கவலைகளை எழுப்புகிறது.


• ஒன்றிய அரசின் யமுனை திட்டம் மிகவும் சிக்கலான ஒன்றாகும். இருப்பினும் இந்த திட்டத்தால் ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்க முடியும். மற்ற அனைத்து திட்டங்களும் முக்கிய இந்திய நதிகளைப் போலவே, யமுனையும் ஒரு மாநிலங்களுக்கு இடையேயான நதியாகும்.



Original article:

Share:

மண்டலக் குழுக்கள் குறித்து… -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி 


ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 27-வது கிழக்கு மண்டலக் குழு (Eastern Zonal Council) கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கிழக்கு மண்டல குழுவில் - ஜார்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு கிழக்கு மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.


2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 25 மண்டல குழு கூட்டங்கள் நடைபெற்றதற்கு ஒப்பிடும்போது, 2014 முதல் 2025 வரையிலான காலத்தில் 63 மண்டல குழு கூட்டங்கள் நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மண்டல குழுக்கள் விவாத மன்றங்களிலிருந்து "கூட்டு முயற்சிகளின் இயந்திரங்களாக" (engines of cooperation) மாற்றமடைந்துள்ளன என்றும், அவற்றின் கூட்டங்களில் பேசப்பட்ட பிரச்சனைகளில் 83% தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


முக்கிய அம்சங்கள்:


1. 1956-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, மண்டலக் குழுக்களை உருவாக்கும் யோசனையை முன்மொழிந்தார். மாநிலங்களை மறுசீரமைப்பது குறித்த விவாதத்தின்போது, மாநிலங்களை 4 அல்லது 5 மண்டலங்களாகப் பிரித்து, இந்த மாநிலங்களிடையே "கூட்டுறவுப் பழக்கத்தை வளர்க்க" (to develop the habit of cooperative working) ஒரு ஆலோசனைக் குழுவைக் கொண்டிருக்கலாம் என்று பரிந்துரைத்ததாக உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) பதிவுகள் தெரிவிக்கின்றன.


2. நேருவின் பார்வையில், மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956-ன் பகுதி III-ன் கீழ் ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை சட்டரீதியான அமைப்புகள் (statutory bodies) ஆகும்.


3. மண்டலக் குழுக்களின் தற்போதைய அமைப்பு பின்வருமாறு:


கிழக்கு மண்டல குழுவில் (Eastern Zonal Council) பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.


 வடக்கு மண்டலக் குழு (Northern Zonal Council) ஹரியானா, இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் மற்றும் டெல்லி, சண்டிகர் யூனியன் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.


மத்திய மண்டலக் குழு (Central Zonal Council) - சத்தீஸ்கர், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.


மேற்கு மண்டலக் குழு (Western Zonal Council) கோவா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி (Dadra & Nagar Haveli) மற்றும் தமன் & தீவு (Daman & Diu) யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.


 தென்மண்டலக் குழு (Southern Zonal Council) - ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.


4. இதனுடன், வடகிழக்குக் குழு (North Eastern Council (NEC)) ஒரு சட்டரீதியான ஆலோசனை அமைப்பாக NEC சட்டம் 1971 (84 of 1971) கீழ் உருவாக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ஷில்லாங்கில் இயங்கத் தொடங்கியது. இதில் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களாக உள்ளன. முன்பு கிழக்கு மண்டல குழுவில் இருந்த சிக்கிம் மாநிலம் 2002-ஆம் ஆண்டில் வடகிழக்கு மண்டலக் குழுவில் சேர்க்கப்பட்டது.


5. ஒவ்வொரு குழுவின் அமைப்பு பின்வருமாறு:


(a) ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒவ்வொரு சபையின் தலைவராக (chairman) இருக்கிறார்.


(b) ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் சுழற்சி முறையில் அந்த மண்டல சபையின் துணைத்தலைவர்களாக (Vice-Chairman) செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு வருட காலம் பதவி வகிக்கிறார்கள்.


(c) ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் முதல்வர் மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட மற்ற இரு அமைச்சர்கள், மற்றும் அந்த மண்டலத்தில் உள்ள யூனியன் பிரதேசங்களிலிருந்து இரு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.


(d) ஒவ்வொரு மண்டல குழுவிற்கும் திட்டக்குழுவால் (planning commission) நியமிக்கப்பட்ட ஒரு நபர், தலைமைச் செயலாளர்கள் (Chief Secretaries) மற்றும் அந்த மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தால் நியமிக்கப்பட்ட மற்றொரு அதிகாரி போன்ற முக்கிய நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.


6. 2018-ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை, ஒன்றிய உள்துறை அமைச்சரை வடகிழக்கு சபையின் பதவி வகிக்கும் தலைவராக (ex-officio chairman) நியமிக்கவும், வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சராக (Minister of Development of North Eastern Region (DoNER)) சபையின் துணைத்தலைவராக பணியாற்றவும் ஒப்புதல் அளித்தது.


7. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மற்றும் மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளை சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் தீர்க்க மண்டல குழுக்கள் ஒரு சிறந்த மன்றமாக அமைகின்றன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட மாநிலங்களுக்கான ஒத்துழைப்பு முயற்சிகளின் பிராந்திய மன்றங்களாக இந்த குழுக்கள்  செயல்படுகின்றன.


அரசியலமைப்பு அமைப்பு மற்றும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு


01. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் (constitutional body) சட்டப்பூர்வ அமைப்புக்கும் (statutory body) உள்ள வேறுபாடு என்ன?


அரசியலமைப்பு அமைப்புகள் என்பவை அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். அவற்றின் அதிகாரங்களும் பொறுப்புகளும் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அரசாங்க அதிகாரத்தை சரிபார்த்து சமநிலைப்படுத்தும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் பங்கு வெறும் நிர்வாக செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான குழு (Inter-State Council) ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும்.


மறுபுறம், சட்டரீதியான அமைப்புகள் (Statutory bodies) என்பது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் சட்டத்தால் நிறுவப்பட்ட அமைப்புகளாகும். அவை அரசியலமைப்பிலிருந்து நேரடியாக இல்லாமல் சட்டத்திலிருந்து அவற்றின் அதிகாரத்தைப் பெறுகின்றன. மண்டலக் குழுக்கள் (Zonal Councils) சட்டரீதியான அமைப்புகள் ஆகும்.


மாநிலங்களுக்கிடையேயான குழு (Inter-State Council)


1. அரசியலமைப்பின் 263-வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டது. தேவைப்பட்டால் குடியரசுத்தலைவர் இந்த குழுவை உருவாக்கலாம். அதன் முக்கிய கடமைகள்:


(a) மாநிலங்களுக்கிடையே எழக்கூடிய தகராறுகளை விசாரித்து அவற்றின் மீது ஆலோசனை வழங்குதல்;


(b) சில அல்லது அனைத்து மாநிலங்கள் அல்லது மத்திய அரசு மற்றும் ஒன்று அல்லது பல மாநிலங்களுக்கு பொதுவான நலன் உள்ள விஷயங்களை விசாரித்து விவாதித்தல்; அல்லது


(c) அந்தப் பிரச்சினைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைத்தல்


இந்த குழு பல்வேறு அரசாங்கங்களுக்கிடையேயான விவாதங்களுக்கான ஒரு மன்றமாக பணியாற்ற வேண்டும். 


2. குறிப்பிடத்தக்க வகையில், மாநிலங்களுக்கிடையேயான குழு ஒரு நிரந்தர அரசியலமைப்பு அமைப்பு அல்ல. 1988-ஆம் ஆண்டில், நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் பின்வருமாறு: 


(a) பிரிவு 263 கீழ் அரசுகளுக்கிடையேயான குழு (Inter-Governmental Council (IGC)) என்று அழைக்கப்படும் நிரந்தர மாநிலங்களுக்கிடையேயான குழு அமைக்கப்பட வேண்டும்.


(b) சமூக-பொருளாதார திட்டமிடல் மற்றும் மேம்பாடு தவிர, பிரிவு 263-ன் உட்பிரிவுகள் (b) மற்றும் (c)-ல் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் அரசுகளுக்கிடையேயான குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.


3. பிரதமரே இந்தக் குழுவின் தலைவராக உள்ளார். அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துள்ள ஆறு அமைச்சர்களும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.


4. 1990-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களுக்கிடையேயான குழு பதினொரு 11 கூடியுள்ளது. கடைசி கூட்டம் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அங்கு மத்திய-மாநில உறவுகள் குறித்த பஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள், அடையாள அட்டையை (Aadhaar) அடையாளங் காட்டியாக பயன்படுத்துதல், மற்றும் மானியங்கள், நன்மைகள் மற்றும் பொது சேவைகளை வழங்குவதற்கு நேரடி பலன் பரிமாற்றத்தை (Direct Benefit Transfer (DBT)) பயன்படுத்துதல் ஆகியவை விவாதிக்கப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள் ஆகும்.


5. நிலைக்குழு, வழக்கமான விவாதங்களை நடத்துவதற்கும், குழு பரிசீலிக்க வேண்டிய விஷயங்களைக் செயல்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலில் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு மத்திய-மாநில உறவுகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் செயல்படுத்தவும், குழுவின் பரிந்துரைகளின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதை கண்காணிக்கவும் இந்த நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடைசியாக நவம்பர் 2024 இல் அமைக்கப்பட்டது.



Original article:

Share:

இந்தியாவின் பாலின இடைவெளி அறிக்கை (Gender Gap Report) தரவரிசையை ஓர் எச்சரிக்கையாகப் பார்க்கவும். -பூனம் முத்ரேஜா, மார்டண்ட் கௌசிக்

 இந்தியா பாலின சமத்துவத்தை அதன் பொருளாதார மற்றும் மக்கள்தொகை முன்னேற்றத்தின் முக்கியப் பகுதியாகக் காணவேண்டும்.


இந்தியா இப்போது ஒரு பெரிய உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளிலும் முன்னணியிலும் உள்ளது. நாடு உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை (2025) ஒரு யதார்த்தமான சரிபார்ப்பை வழங்குகிறது. பாலின சமத்துவத்தை அடைவதில் இந்தியா இன்னும் மிகவும் பின்தங்கியிருப்பதை இது காட்டுகிறது.


கட்டமைப்பு சிக்கல்கள்


இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது. பொருளாதார பங்கேற்பு மற்றும் சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வில் இது மிகவும் குறைவாக உள்ளது. உண்மையான பாலின சமத்துவத்திற்கு இந்தப் பகுதிகள் முக்கியமானவையாகும். இந்த மதிப்பெண்கள் வெறும் சமூகக் குறிகாட்டிகள் மட்டுமல்ல. அவை தேசிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் கட்டமைப்பு தோல்வியின் அறிகுறிகளாகும்.


கல்வி நிலைகள் மேம்பட்டிருந்தாலும், பெண்களின் ஆரோக்கியத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வதில் இந்தியா இன்னும் போராடுகிறது. பிறக்கும்போது இந்தியாவின் பாலின விகிதமானது, உலகில் மிகவும் சமநிலையற்ற ஒன்றாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. இது ஆண் குழந்தைகளுக்கான வலுவான விருப்பத்தை பிரதிபலிக்கிறது. மேலும், இப்போது பெண்கள் ஆண்களைவிட குறைவான ஆரோக்கியமான ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளனர்.


இத்தகைய விளைவுகள், குறிப்பாக குறைந்த வருமானம் மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள பெண்களுக்கு, மகப்பேறு ஆரோக்கியம், தடுப்பு பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் நீண்டகால புறக்கணிப்பை சுட்டிக்காட்டுகின்றன. சுகாதாரத்திற்கான பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள், குறிப்பாக முதன்மையான பராமரிப்பு மட்டத்தில், பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படை சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் அவசியமாகும். நல்ல ஆரோக்கியம் இல்லாமல், பொருளாதார சேர்க்கை சாத்தியமற்றது. 15 முதல் 49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 57% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey (NFHS))-5 அறிக்கையின்படி, இது அவர்களின் கற்றல், வேலை அல்லது கர்ப்பத்தை பாதுகாப்பாக சுமக்கும் திறனைக் குறைக்கிறது. இந்த பொதுவான மற்றும் சரிசெய்யக்கூடிய பிரச்சனை, பெண்களின் ஆரோக்கியம் தேசிய வளர்ச்சிக்கு முன்னுரிமையாகக் கருதப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.


பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு துணைக் குறியீட்டில் (Economic Participation and Opportunity subindex) இந்தியா 143-வது இடத்தில் உள்ளது. பெண்கள் இன்னும் ஆண்கள் சம்பாதிப்பதைவிட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். பெண் தொழிலாளர் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 2015-ம் ஆண்டில், பாலின இடைவெளிகளை குறைப்பது 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 770 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் என்று மெக்கின்சி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது. இருப்பினும், 2025-ம் ஆண்டில், இந்தியா இந்த வாய்ப்பை தவறவிட்டதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில், உலகளாவிய பொருளாதார பாலின இடைவெளியைக் குறைக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆகலாம். இந்த மெதுவான முன்னேற்றத்திலும் இந்தியா பின்தங்கியுள்ளது.


ஒரு புறக்கணிப்பு


இந்தப் பிரச்சினை வேலைகளின் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. பெண்கள் பெரும்பாலும் முறைசாரா மற்றும் வாழ்வாதார வேலைகளில் வேலை செய்கிறார்கள். முடிவெடுக்கும் பகுதிகளிலும் (decision-making spaces) அவர்கள் மிகவும் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். இவற்றில் வாரிய அறைகள் (boardrooms) மற்றும் பட்ஜெட் குழுக்கள் (budget committees) போன்ற இடங்களும் அடங்கும். இதன் காரணமாக, கொள்கைகள் பெரும்பாலும் பெண்களின் உண்மையான அனுபவங்களைப் புறக்கணிக்கின்றன. ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை என்பது பெண்களின் நேரத்தையும், சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய சுமையாகும். நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பின்படி, இந்தியப் பெண்கள் ஆண்களைவிட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமாக ஊதியம் பெறாத வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். இதுபோன்ற போதிலும், இந்த முக்கியமான பணி தேசிய புள்ளிவிவரங்களில் கணக்கிடப்படவில்லை. பொதுக் கொள்கைகளிலும் இது சிறிய நிதியைப் பெறுகிறது.


குழந்தை பராமரிப்பு மையங்கள், முதியோர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகப்பேறு சலுகைகள் போன்ற பராமரிப்பு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பெண்கள் மீதான சுமையைக் குறைக்கும். இது மில்லியன் கணக்கான பெண்கள் பணியிடத்தில் சேர்வதற்கு அல்லது மீண்டும் திரும்புவதற்கு உதவும். இந்த சேவைகள் இல்லாதது பாலின மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் இடைவெளியைக் காட்டுகிறது.


மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளில் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளைச் சேர்க்கத் தொடங்க வேண்டும். நேரத்தைப் பயன்படுத்தும் ஆய்வுகள், பாலின பட்ஜெட் மற்றும் பராமரிப்பு உள்கட்டமைப்பில் நேரடியாக முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் இதைச் செய்யலாம். உருகுவே மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ளலாம். இந்த நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களில் பராமரிப்புப் பொருளாதாரங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன, மேலும் நல்ல பலன்களைக் கண்டுள்ளன.


மூத்த குடிமக்களை ஆதரித்தல்


இந்தியா அதன் மக்கள்தொகை மாற்றங்களில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதாவது, இந்தியாவானது இன்னும் பல இளைஞர்களைக் கொண்டிருப்பதால் அது பயனடைகிறது. ஆனால், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மக்கள்தொகையில் சுமார் 20% பேர் முதியவர்களாக இருப்பார்கள். இந்த முதியவர்களில் பெரும்பாலோர் மிகவும் வயதான பெண்களாக இருப்பார்கள். அவர்களில் பலர் ஆதரவிற்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கும் கைம்பெண்களாக இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், NFHS-5 அறிக்கையில் காட்டப்பட்டுள்ளபடி, கருவுறுதல் விகிதங்கள் மாற்று நிலைக்குக் (replacement level) கீழே குறைந்துவிட்டன. இதன் பொருள் குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. இதன் விளைவாக, வேலை செய்யும் வயதுடைய மக்கள் குறைந்துவிடும். இதற்கிடையில், முதியவர்களைப் பராமரிக்க வேண்டிய தேவைகள் அதிகரிக்கும்.


பொருளாதாரம் தொடர்ந்து வளர, பெண்கள் மீது கவனம் செலுத்துவது முக்கியம். பெண்கள் மக்கள்தொகையில் பாதியாக உள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாகவும், ஆதரவுடனும், வேலை செய்யக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். பாலின சமத்துவம் (Gender equality) என்பது இனி உரிமைகள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்வகிப்பதற்கும் இது அவசியம்.


பெண்கள் பணியிடத்திலிருந்து தொடர்ந்து வெளியேறினால் அல்லது சேர அனுமதிக்கப்படாவிட்டால், சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். இது ஒரு சிறிய குழு தொழிலாளர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நாட்டின் நிதி நிலைத்தன்மையையும் பலவீனப்படுத்தும். இது நடப்பதைத் தடுக்க, நமக்கு ஒருங்கிணைந்த கொள்கைகள் தேவை. இந்தக் கொள்கைகள் சுகாதாரம், வேலைகள் மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளை இணைக்க வேண்டும்.


இந்தியாவிற்கு போதுமான கட்டமைப்புகள் மற்றும் லட்சியங்கள், முழக்கங்கள் உள்ளன. இதற்கு உண்மையான முதலீடு தேவை. இதில் பெண்களின் தேவைகளில் கவனம் செலுத்தும், பொது சுகாதார அமைப்புகளும் அடங்கும். ஊதியம் பெறாத வேலையை மிகவும் நியாயமாகப் பகிர்ந்து கொள்ளும் பராமரிப்பு சேவைகளில் முதலீடு செய்வது இதில் அடங்கும். இதற்கான கொள்கைகள் பெண்களை பயனாளிகளாக மட்டுமல்ல, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பாளர்களாகவும் நடத்த வேண்டும்.


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையானது வெறும் தரவரிசை அல்ல. இது ஒரு எச்சரிக்கையான தரநிலை. இந்தியா பாலின சமத்துவத்தை அதன் பொருளாதார மற்றும் மக்கள்தொகை எதிர்காலத்தின் மையப் பகுதியாக மாற்றவில்லை என்றால், அது அடைய கடினமாக உழைத்த முன்னேற்றத்தை இழக்க நேரிடும்.


பூனம் முத்ரேஜா இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளார். மார்தண்ட் கௌஷிக் அதே அமைப்பில் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புக்கான மூத்த நிபுணர் ஆவார்.



Original article:

Share: