பொருளாதார ஆய்வறிக்கை இந்தியாவின் ’ஆற்றல் இடைவெளியை’ (Power Gap) சுட்டிக்காட்டுகிறது. இதன் பொருள் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு :


சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியா எவ்வாறு புவிசார் அரசியல் மற்றும் ஒரு இராஜதந்திரரீதியில் ஆற்றல் இடைவெளியை எதிர்கொள்கிறது என்பதையும், அதன் முழு உத்தித் திறனுக்கும் குறைவாகச் செயல்படுகிறது என்பதையும் விரிவாகப் புரிந்துகொள்ள, ஆற்றல் இடைவெளி குறியீட்டிலிருந்து தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளது. இந்தச் சூழலில், ஆற்றல் இடைவெளி குறியீடு (Power Gap Index) பற்றி விரிவாக அறிந்துகொள்வது மிக முக்கியமாகிறது.


பொருளாதார ஆய்வறிக்கை 2025-26-ஆம் அண்டுக்கான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி நிறுவனத்தின் (Lowy Institute) ஆற்றல் இடைவெளி குறியீடு (Power Gap Index), இந்தியா தனது முழு உத்திக்கான திறனுக்கும் குறைவாகச் செயல்படுவதாகக் கூறுகிறது. ரஷ்யா மற்றும் வட கொரியாவைத் தவிர்த்து, ஆசியாவிலேயே மிகக் குறைந்த அளவாக, இந்தியாவின் ஆற்றல் இடைவெளி மதிப்பெண் 4.0-ஆக உள்ளது. 


முக்கிய அம்சங்கள் :


1. ஆற்றல் இடைவெளிக் குறியீடு (Power Gap Index) என்பது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி நிறுவனத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆசிய ஆற்றல் குறியீட்டிலிருந்து (Asia Power Index) பெறப்பட்ட ஒரு இரண்டாம் நிலை பகுப்பாய்வு ஆகும்.


2. ஆசிய ஆற்றல் குறியீடானது, 30 ஆற்றல் அளவீடுகள், 30 கருப்பொருள் துணை அளவீடுகள் மற்றும் 131 குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த குறியீடு, 8 கருப்பொருள் அளவீடுகளில் சராசரி எடையைப் பயன்படுத்தி 27 நாடுகளின் விரிவான ஆற்றலை மதிப்பிடுகிறது.


3. இந்த 8 ஆற்றல் அளவீடுகளில், நாடுகள் என்னென்ன கொண்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளும் நான்கு வள அடிப்படையிலான அளவீடுகளும், தங்கள் நாடுகள் தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு என்ன செய்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளும் நான்கு செல்வாக்கு அடிப்படையிலான அளவீடுகளும் அடங்கும்.


4. வள அடிப்படையிலான அளவீடுகள்


(i) பொருளாதாரத் திறன் : வழக்கமான இராணுவ வலிமை, பாதுகாப்புச் செலவினம், ஆயுதப் படைகள் மற்றும் அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளங்கள், தனித்துவமான திறன்கள் மற்றும் ஆசிய இராணுவ நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(ii) இராணுவத் திறன் : மரபுவழி இராணுவ வலிமை; பாதுகாப்புச் செலவினம், ஆயுதப் படைகள் மற்றும் அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளங்கள், தனித்துவமான திறன்கள் மற்றும் ஆசிய இராணுவ நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(iii) மீள்தன்மை : நாட்டின் நிலைத்தன்மைக்கு ஏற்படும் உண்மையான அல்லது சாத்தியமான வெளிப்புற அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறன், உள்நாட்டின் நிறுவன நிலைத்தன்மை, வளப் பாதுகாப்பு, புவிசார் பொருளாதாரப் பாதுகாப்பு, புவிசார் அரசியல் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தடுப்புத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(iv) எதிர்கால வளங்கள் : எதிர்கால வளங்கள் மற்றும் திறன் அடிப்படையில் கணிக்கப்பட்ட விநியோகம், இது இன்றைய ஆற்றல் பற்றிய கண்ணோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2035-ம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பரந்த வளங்கள், அத்துடன் 2050-ம் ஆண்டிற்கான உழைக்கும் வயது மக்கள்தொகை கணிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


5. செல்வாக்கு அடிப்படையிலான அளவீடுகள்


(i) பொருளாதார உறவுகள் : பொருளாதார சார்புநிலைகள் மூலம் செல்வாக்கையும் அழுத்தத்தையும் செலுத்தும் திறன், வர்த்தக உறவுகள், முதலீட்டுத் தொடர்புகள் மற்றும் பொருளாதார இராஜதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. 


(ii) பாதுகாப்பு வலையமைப்புகள் : தன்னாட்சி இராணுவத் திறனில் ஆற்றலை அதிகப்படுத்தும் பாதுகாப்பு கூட்டாண்மைகள், கூட்டணிகள், பிராந்திய பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் ஆயுதப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மதிப்பீடுகள் மூலம் அளவிடப்படுகிறது.


(iii) இராஜதந்திர செல்வாக்கு : இது ஒரு நாடு அல்லது பிராந்தியத்தின் வெளிநாட்டு உறவுகளின் வலிமையையும் பரவலையும் காட்டுகிறது. இது உலக விவகாரங்களில் அதன் நிலையைப் பிரதிபலிக்கிறது. இது இராஜதந்திர வலைப்பின்னல்கள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகளில் பங்கேற்பு, மற்றும் ஒட்டுமொத்த வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திர லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


(iv) கலாச்சார செல்வாக்கு : இது கலாச்சார ஈர்ப்பு மற்றும் தொடர்பு மூலம் சர்வதேச பொதுக் கருத்தை வடிவமைக்கும் திறன், இது கலாச்சாரப் பரவல், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.


6. இந்தக் குறியீட்டின் நோக்கங்களுக்காக, ஆற்றல் என்பது மற்ற நாடுகள், அரசுசாரா அமைப்புகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் போக்கை வழிநடத்த அல்லது செல்வாக்கு செலுத்த ஒரு நாட்டின் திறன் என வரையறுக்கப்படுகிறது. சுருக்கமாக, நாடுகள் தங்கள் வெளிப்புறச் சூழலை வடிவமைக்கவும் அதற்குப் பதிலளிக்கவும் உள்ள திறனை அளவிடுவதே இந்தக் குறியீட்டின் நோக்கமாகும்.


7. வளங்களுக்கும் செல்வாக்கிற்கும் இடையிலான இடைவெளியின் அடிப்படையில், ஆற்றல் இடைவெளி என்பது ஆசிய ஆற்றல் குறிட்டின் ஒரு இரண்டாம் நிலைப் பகுப்பாய்வை வழங்குகிறது. நாடுகள் தரவரிசையில் எந்த இடத்தில் இருந்தாலும், அவை சிறப்பாகச் செயல்படுபவையாகவோ அல்லது திறனுக்குக் குறைவாகச் செயல்படுபவையாகவோ இருக்கலாம்.


8. தங்கள் வளங்களுடன் ஒப்பிடும்போது ஆசியாவில் அதிக செல்வாக்கு செலுத்தும் நாடுகள் நேர்மறையான ஆற்றல் இடைவெளியைக் கொண்டுள்ளன. மாறாக, தங்கள் வளங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செல்வாக்கைச் செலுத்தும் நாடுகள் எதிர்மறையான ஆற்றல் இடைவெளியைப் பதிவு செய்கின்றன.

ஆற்றல் இடைவெளி குறியீட்டின் முக்கிய அம்சங்கள்


1. இந்தியா தனது முழு உத்திக்கானத் திறனுக்கும் குறைவாகவே செயல்படுகிறது என்று இந்தக் குறியீடு குறிப்பிடுகிறது. ரஷ்யா மற்றும் வட கொரியாவைத் தவிர்த்து, இந்தியாவின் ஆற்றல் இடைவெளி மதிப்பெண் 4.0 ஆகும். இது ஆசியாவிலேயே மிகக் குறைவானது.


2. ஜப்பானின் 11.3 என்ற ஆற்றல் இடைவெளி மதிப்பெண், அது ஒரு மிகச்சிறந்த "திறன்மிகு ஆற்றல்" (smart power) என்பதை வெளிப்படுத்துகிறது. இது வரையறுக்கப்பட்ட வளங்களை திறமையாகப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் பரந்த அடிப்படையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாச்சார செல்வாக்கைச் செலுத்துகிறது.

Knowledge Nugget: What Power Gap Index tells about India’s strategic potential?

3. வட கொரியா தனது அதிகாரத்தை முக்கியமாக அதன் இராணுவ வளங்கள் மற்றும் அணு ஆயுதத் திறனிலிருந்து பெறுகிறது. இருப்பினும், அந்த நாட்டின் இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தனிமைப்படுத்தல் அதன் பிராந்திய செல்வாக்கைக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, அதன் ஆற்றல் இடைவெளி மதிப்பெண் 8.2 ஆக உள்ளது.

Knowledge Nugget: What Power Gap Index tells about India’s strategic potential?

4. வளரும் நாடுகள் பெரும்பாலும் செல்வாக்குக் குறைபாடுகளைப் பதிவு செய்கின்றன — இது அவற்றின் உணரப்படாத சக்தித் திறனையும், வெளிநாடுகளில் தங்கள் சக்தியை வெளிப்படுத்தும் திறனில் உள்ள உள் தடைகளையும் பிரதிபலிக்கிறது.

உலகளாவிய மென்ஆற்றல் குறியீடு-2026 (Global Soft Power Index)

1. உலகம் தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் புவிசார் அரசியல் பதட்டங்களும் பொதுமக்களின் நம்பிக்கைக் குறைவுக்கும், நாடுகளின் நடத்தை மீதான அதிகரித்த கண்காணிப்புக்கும் வழிவகுத்துள்ளன. இதன் விளைவாக, தேசிய நிறுவன அடையாளம் பற்றிய கருத்துக்கள் பலவீனமடைந்து, 55 அளவுகோல்களின் அடிப்படையில் 193 ஐ.நா உறுப்பு நாடுகளுக்குத் தரவரிசை அளிக்கும் 'நிறுவன அடையாள நிதி உலகளாவிய மென் ஆற்றல் குறியீடு-2026'-ல் (Brand Finance Global Soft Power Index) குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

2. இந்த அறிக்கை மென் ஆற்றலை, "வற்புறுத்தலின்றி, ஈர்ப்பு மற்றும் சமாதானப்படுத்துதல் மூலம் சர்வதேச அரங்கில் விருப்பங்களையும் நடத்தைகளையும் வடிவமைக்கும் ஒரு தேசத்தின் திறன்" என்று வரையறுக்கிறது.

3. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 4.6 புள்ளிகள் சரிவைச் சந்தித்த ஒரே நாடு அமெரிக்கா என்ற போதிலும், அது 100-க்கு 74.9 மதிப்பெண்களுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

4. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு தனது மென்ஆற்றல் மதிப்பெண்ணில் (soft power score) அதிகரிப்பைப் பதிவு செய்த ஒரே நாடு இதுவாகும். இந்த நாடு 0.7 புள்ளிகள் அதிகரித்து 73.5-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுடனான இடைவெளியை 1.5 புள்ளிகளுக்கும் குறைவாகக் குறைத்து, 35 தேசிய பிராண்ட் பண்புகளில் 19-ல் உயர் தரவரிசையில் உள்ளது.

5. இந்தியா 48.0 புள்ளிகளுடன் 32-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சரிந்து, 1.8 புள்ளிகள் குறைந்துள்ளது.


Share: