ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface (ULI)) என்றால் என்ன? - லாலதேந்து மிஸ்ரா

 ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface (ULI)) விவசாயிகள் கடன் பெறுவதை எவ்வாறு எளிதாக்கும்? கடன் வழங்குபவர்களுக்கு இது எவ்வாறு உதவும்?


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (digital public infrastructure) உருவாக்கி வருகிறது. ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (என்ற புதிய தொழில்நுட்ப தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்பு மையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தளம், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் கடன் பெறுவதை எளிதாக்கும்.

 

ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface (ULI)) என்றால் என்ன? 


 ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் என்பது பல்வேறு ஆதாரங்களில் இருந்து வாடிக்கையாளரின் டிஜிட்டல் நிதி மற்றும் நிதி அல்லாத தரவை எளிதாக அணுக கடன் வழங்குபவர்களுக்கு உதவும் தளமாகும். பல்வேறு வகையான கடன் வாங்குபவர்களுக்கு ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் கடன் செயல்முறையை எளிதாக்குகிறது  என்கிறார் ரிசர்வ் வங்கியின்  தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் பன்சால் (Rajesh Bansal). பல்வேறு மாநிலங்களின் நிலப் பதிவுகள் உட்பட டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்கிறது மற்றும் கடன் சோதனைகளை விரைவுபடுத்துகிறது. குறிப்பாக கடன் வரலாறு இல்லாத சிறு மற்றும் கிராமப்புற கடன் வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும்.


 ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் 'பிளக் அண்ட் ப்ளே' (‘plug and play’) அணுகுமுறைக்கு தரப்படுத்தப்பட்ட பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களை (Application Programming Interfaces (API)) பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பு தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளை எளிதாக்குகிறது. பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களை எளிதாக அணுக அனுமதிக்கிறது. விரைவாக கடன் வழங்குவதன்   மூலம் கடன் வாங்குபவர்கள்  விரைவாக பயனடைவார்கள். 


தரப்படுத்தப்பட்ட, பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (standardised Application Programming Interfaces (APIs)) மூலம் அரசாங்க பதிவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வாடிக்கையாளர் தரவை கடன் வழங்குபவர்கள் பெற முடியும். பெரு நிதி (FinTech) நிறுவனங்கள் பல கடன் வழங்குபவர்களுடன் இணைவதற்கும் வாடிக்கையாளர்களைப் பற்றிய சிறந்த நுண்ணறிவைப் பெறுவதற்கும் இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்.


அது எப்படி வேலை செய்யும்? 


  கடன் வரலாறு (credit history) அல்லது தேவையான ஆவணங்கள் இல்லாத முதல் முறையாக கடன் கோருபவர்களுக்கு, வங்கிக் கடன் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 

ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் மூலம், டிஜிட்டல் கடன் தகவல்களை இப்போது ஒரே தளத்தின் மூலம் அணுக முடியும். இந்த தளம் தரவு வழங்குநர்கள் மற்றும் கடன் வழங்குநர்களை இணைக்கிறது. வருங்கால கடன் வாங்குபவர்களுக்கு கடன்களைப் பெறுவதை எளிதாக்குகிறது. 


ஒருங்கிணைந்த கடன் இடைமுகமானது கடன் விண்ணப்பதாரரின் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய தரவை அணுகுவதற்கு வசதியாக இருக்கும் அதே வேளையில், நிதித் துறையைச் சேர்ந்த வீரர்களை 'பிளக் அண்ட் ப்ளே' (‘plug and play’) மாதிரியின் மூலம் தளத்துடன் இணைப்பதன் மூலம் தரவை அணுக அனுமதிக்கிறது. எனவே, கடன் விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைத் தேடிப் பாதுகாக்க வாரங்கள் செலவிட வேண்டியதில்லை. 


அதற்கு பதிலாக வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company (NBFC)) அல்லது நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்த கடன் இடைமுக இயங்குதளத்தில் கிடைக்கும் ஆதாரங்களில் இருந்து விண்ணப்பதாரரைப் பற்றிய தரவைப் பெறும்.


ஒருங்கிணைந்த கடன் இடைமுகம், விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைச் சேகரிக்கத் தேவையில்லாமல், கடன் விண்ணப்பதாரர்களின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய தரவை நிதி நிறுவனங்கள் அணுக முடியும். எடுத்துக்காட்டாக, பால் கூட்டுறவு சங்கங்கள், நிலப் பதிவுகள் மற்றும் விவசாய முறைகள் ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் ஒரு பால் பண்ணையாளர் தங்கள் கடன் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யலாம். இதன் பொருள் கடன் வழங்குபவர்கள் விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் கடன் தகுதியை விரைவாகக் காணலாம், கடன் ஒப்புதல்கள் மற்றும் விநியோகங்களை சில நிமிடங்களுக்கு விரைவுபடுத்தலாம்.

 

நில உரிமை இல்லாததால் விவசாயக் கடனைப் பெற அடிக்கடி போராடும் குத்தகை விவசாயிகளும் கடன்களைப் பெறலாம். ஒருங்கிணைந்த கடன் இடைமுக இயங்குதளம் விவசாய உள்ளீடுகளுக்கான நிதிகளின் பயன்பாட்டைக் கண்காணிக்க முடியும், நில உரிமையைக் காட்டிலும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் விவசாயிகளின் அடையாளத்தை வங்கிகள் சரிபார்க்க அனுமதிக்கிறது. 

இது எப்படி தொடங்கியது? 


ஆகஸ்ட் 10, 2023 அன்று, கடன் வழங்குவதை எளிமையாக்குவதற்காக (Frictionless Credit) பொது தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இப்போது ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. விரைவான டிஜிட்டல் முன்னேற்றத்துடன், டிஜிட்டல் கடன் வழங்கலுக்கு கடன் மதிப்பீட்டு தரவு ஒரு இடத்தில் கிடைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. 

 

இதற்கு தீர்வு காண, ₹1.6 லட்சத்திற்கும் குறைவான கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card (KCC)) கடன்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு முன்னோடி திட்டம் செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்டது. மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் இந்தத் திட்டம் சோதிக்கப்பட்டது. முடிவுகள் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்தன. இம்முறையின் மூலம், கடன் வாங்குபவரின் வீட்டு வாசலில், உதவி அல்லது சுய சேவை முறையில், எந்த ஆவணமும் இல்லாமல் கடன்களை வழங்க முடிந்தது. 



Original article:

Share:

சீனா-ஆப்பிரிக்கா மன்றத்தின் நடவடிக்கைகளை இந்தியா கண்காணிக்க வேண்டும் -அபிஷேக் மிஸ்ரா

 பெய்ஜிங்கில் நடைபெறும்  சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் (Forum on China-Africa Cooperation (FOCAC)) கூட்டத்தில் ஆப்பிரிக்க தலைவர்களின் கருத்துக்கள், ஆப்பிரிக்காவுடன் இந்தியா தனது சொந்த கூட்டாண்மையை வடிவமைக்க உதவும்.


சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கான  மன்றத்தின் ஒன்பதாவது கூடுகை பெய்ஜிங்கில் செப்டம்பர் 4-6 தேதிகளில் வரை நடைபெறவுள்ளது. அதிக பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு, அதிக கடன், அரசியலமைப்பிற்கு முரணான இராணுவ கையகப்படுத்தல்கள், இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்கள் போன்ற புவிசார் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஆப்பிரிக்க நாடுகள் எதிர் கொண்டு நேரத்தில் இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. மேலும், மத்திய தரைக்கடலில் வணிக கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  


கூடுதலாக, துருக்கி, ரஷ்யா, தென் கொரியா மற்றும் அமெரிக்க-ஆப்பிரிக்க தலைவர்களின் உச்சிமாநாடு ஆகியவற்றுடன் சமீபத்திய பல ஆப்பிரிக்கா + 1 உச்சிமாநாடுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்கத் தலைவர்களும் "உச்சிமாநாட்டு சோர்வை" (summit fatigue) உணர்கிறார்கள். அனைத்து 54 தலைவர்களும் கலந்து கொள்வதற்குப் பதிலாக, 15 நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையம் (African Union Commission (AUC)) ஆகியவற்றை உள்ளடக்கிய பன்ஜுல் மாதிரியைப் (Banjul format) பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

 

ஆப்பிரிக்காவிற்கான சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (Forum on China-Africa Cooperation (FOCAC)) பயனுள்ளதாக இருக்க, ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் சொந்த செயல்திட்டத்தை அமைத்து தங்கள் திட்டமிடலில் அதிக கட்டுப்பாட்டை எடுக்க வேண்டும். ஆப்பிரிக்காவில் சீன உத்திகள் பற்றிய பல அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன. ஆனால், ஆப்பிரிக்காவில் மிகக் குறைவாகவே உள்ளன.


 சீனாவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை (Communist Party of China (CCP)) புரிந்து கொள்வதற்கு ஆப்பிரிக்க நாடுகளில் போதுமான திறன், நிபுணத்துவம் அல்லது அரசியல் விருப்பம் இல்லாததால் இந்த தகவல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, ஆப்பிரிக்க அரசாங்கங்கள் கண்டத்தில் கிடைக்கும் சீனாவைப் பற்றிய கலாச்சார மற்றும் மொழி நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவில்லை. இதன் விளைவாக, ஆப்பிரிக்காவின் செல்வாக்கு குறைவாக உள்ளது. சீன தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது. இதன் விளைவாக, ஆப்பிரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் இக்கட்டான நிலையில் உள்ளனர். 


 சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (Forum on China-Africa Cooperation (FOCAC)) 2024- இன் ஆப்பிரிக்க முன்னுரிமைகள் 


பொருளாதார ரீதியாக, 2022-ஆம் ஆண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்யும் சீனா மிதமான முன்னேற்றத்தையே கண்டுள்ளது. சீனாவின் பொது சுங்க நிர்வாகத்தின் (China’s General Administration of Customs) தரவுகளின்படி, 2024-ஜனவரி முதல் ஜூலை வரை சீனா-ஆப்பிரிக்கா வர்த்தகம் 167 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. சீன ஏற்றுமதிகள் மொத்தம் $97 பில்லியன், ஆபிரிக்க ஏற்றுமதிகள் மொத்தம் $69 பில்லியன். இந்த வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது.

 

ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான மற்றும் வலுவான விவசாயத் துறையை உருவாக்குவது முக்கியமானது. தற்போது, மூல முந்திரி பருப்பை வறுத்தெடுப்பது போன்ற விவசாய பொருட்களை பதப்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது. சிறிய அளவிலான விவசாயத்தில் அனுபவம் வாய்ந்த சீனா, இந்தியா போன்ற நாடுகள், ஆப்பிரிக்க நிலைமைகளுக்கு ஏற்ற பயிர்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உருவாக்குவதன் மூலம் உதவ முடியும். 


ஆப்பிரிக்க விவசாயத்தை ஆதரிப்பதற்கும், காலநிலை மாற்றத்திற்கு மிகவும் நெகிழக்கூடியதாக மாற்றுவதற்கும் தேவையான நிபுணத்துவம் மற்றும் கருவிகள் அவர்களிடம் உள்ளன. வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த செயற்கைக்கோள் அமைப்புகளை உருவாக்குவது போன்ற ஆப்பிரிக்க விவசாயத்தை மேலும் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடியதாக மாற்றுவதற்கான கருவிகளும் உள்ளது. 


பசுமை எரிசக்தி மற்றும் தொழில் வளர்ச்சியும் முக்கியமானது. ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச நட்புநாடுகளை, சுத்திகரிப்பு மற்றும் செயலாக்க மையங்களை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. ஜிம்பாப்வேயில், சீன நிறுவனங்கள் பேட்டரி தர லித்தியத்தை உற்பத்தி செய்வதற்கும் மதிப்பு சங்கிலியை மேலே கொண்டு செல்வதற்கும் அடிப்படை லித்தியம் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். 


இருப்பினும், நாள்பட்ட மின்சார பற்றாக்குறை, போதிய மின் உற்பத்தி மற்றும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (environmental, social, and governance (ESG)) செலவுகள் ஆகியவை சர்வதேச நிறுவனங்களுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மூல கனிமங்களைச் சுத்திகரிப்பதை கடினமாக்குகின்றன. 


சீனா மற்றும் ஆப்பிரிக்க கடன் -  இந்தியாவுக்கான படிப்பினைகள் 


ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன்  தருவதில் சீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. பாஸ்டன் பல்கலைக்கழக உலக வளர்ச்சிக் கொள்கை மையத்தின் கூற்றுப்படி (Boston University Global Development Policy Center) 2000-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆப்பிரிக்க அரசாங்கங்கள் மற்றும் பிராந்திய குழுக்களுக்கு சீனா சுமார் $170 பில்லியன் கடனை வழங்கியது.  சீனக் கடன்கள் ஆப்பிரிக்காவின் பொது மற்றும் தனியார் கடனில் 12% மட்டுமே. சீன “கடன் பொறி இராஜதந்திரம்” ( debt trap diplomacy) பற்றிய யோசனை விவாதிக்கப்படுகிறது. சீனாவின் கடன் வழங்கும்  சில  நடைமுறைகள் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். 


AidData-வின் 2022-ஆம் ஆண்டு ஆய்வில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவுக்கான சீனக் கடன்களில் பாதி இறையாண்மைக் கடன் பதிவுகளில் பட்டியலிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. இது கடன் அளவை துல்லியமாக மதிப்பிடுவதை கடினமாக்குகிறது. 


வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் வெளிப்படுத்தாதது பற்றிய கவலைகள் இருந்தாலும், சீனா கடன்களை மன்னிக்கவோ அல்லது ரத்து செய்யவோ வாய்ப்பில்லை. மாறாக, சீனா சிறிய, வட்டியில்லா கடன்களை தள்ளுபடி செய்யலாம்.


கடந்த காலத்தில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் (Forum on China-Africa Cooperation (FOCAC)) கூட்டங்களில் ஆப்பிரிக்காவின் அணுகுமுறை பெரும்பாலும் ஒழுங்கற்றதாக இருந்தது. இப்போது, ​​ஆப்பிரிக்க அரசாங்கங்கள் ஒரு தெளிவான ராஜதந்திரத்தை உருவாக்கி, அடுத்த FOCAC உச்சிமாநாட்டிற்கு முன் தங்கள் நிலைகளை ஒருங்கிணைக்க விரும்புகின்றன. வெறும் உதவிகளைப் பெறுவதை விட, வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தவும்,  தங்கள் தயாரிப்புகளின் மதிப்பை மேம்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


ஆப்பிரிக்காவில் இந்தியாவின் தலையீடு சீனாவின் தலையீடு போன்றது என்று சிலர் கூறுகிறார்கள். இந்தியா சுதந்திரமாக இயங்குகிறது மற்றும் தொழில்நுட்பம், மனித வளம், விவசாயம் மற்றும் மருந்து போன்ற துறைகளில் அதிக வளர்ச்சியடைந்துள்ளது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தில் ஆப்பிரிக்கத் தலைவர்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விதம், ஆப்பிரிக்காவுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்கான முக்கியமான பாடங்களை இந்தியாவுக்குக் கற்பிக்கக்கூடும்.


முதலில், இந்தியா ஆப்பிரிக்காவுடன் நிலையான ஈடுபாட்டை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு (India-Africa Forum Summit (IAFS)) 2015-ல் நடந்தது. CII-EXIM வங்கி கூடுகை மற்றும் இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு போன்ற வழக்கமான கூட்டங்கள் நடந்தாலும், இந்தியா விரைவில் நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாட்டை நடத்த வேண்டும். 


ஆப்பிரிக்காவின் எட்டு பிராந்திய பொருளாதார சமூகங்களுடன் (recognised regional economic communities (RECs)) கலந்தாலோசித்து, பரஸ்பர நலன்களைப் பற்றி விவாதிக்க இந்தியா-ஆப்பிரிக்க யூனியன் டிராக் 1.5 பேச்சுவார்த்தை (India-African Union Track 1.5 Dialogue) அமைக்கப்படலாம்.  அடிஸ் அபாபா, எத்தியோப்பியா, ஆப்பிரிக்க ஒன்றியம் அடிப்படையாக கொண்டது. நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டை நடத்த வேண்டும். வழக்கமான ஆலோசனைகளை மேம்படுத்த புதுதில்லியில் ஒரு பிராந்திய ஆப்பிரிக்க ஒன்றியம் (African Union (AU)) அலுவலகத்தையும் நிறுவ முடியும்.


இரண்டாவதாக, ஆப்பிரிக்கப் பொருளாதாரங்களை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்கவும், தொழில்மயமாக்கலை ஆதரிக்கவும் இந்தியா உதவ முடியும். இந்திய நிறுவனங்கள் விவசாயம், மருந்து மற்றும் உற்பத்தி போன்ற அதிக மதிப்புள்ள துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். 


ஆப்பிரிக்காவில் உற்பத்தித் தளங்களை அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் சந்தைகளுக்குச் சேவை செய்யலாம். பண்ணை இயந்திரமயமாக்கல், உணவு பதப்படுத்துதல், நீர்ப்பாசனம், குளிர்பதன சேமிப்பு மற்றும் 'டிரிபிள் ஏ' (மலிவு, பொருத்தமான மற்றும் தகவமைக்கக்கூடிய) தொழில்நுட்பங்களைப்  (‘Triple A’ (affordable, appropriate and adaptable) technologies) பயன்படுத்துவதில் முதலீடுகள் கவனம் செலுத்த வேண்டும்.


மூன்றாவதாக, இந்தியா அதிக தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் புதுமையான நிதி தீர்வுகளை ஆராய வேண்டும். COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஆப்பிரிக்க நாடுகள் புதிய கடன்களைப் பற்றி எச்சரிக்கையாக உள்ளன. எனவே, பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் கலப்பு நிதி ஆகியவற்றை இந்தியா பரிசீலிக்க வேண்டும். 

இந்திய வங்கிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு குறைந்த விலைக் கடன் வழங்குவது இந்திய நிறுவனங்களுக்கு வங்கித் திட்டங்களை உருவாக்க உதவும். EXIM வங்கியின் வர்த்தக உதவித் திட்டம் (Trade Assistance Programme) போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கவும் வங்கி உறவுகளை விரிவுபடுத்தவும் முடியும்.


தொழில்நுட்ப பயன்பாடு (Technology use)


பயோமெட்ரிக்ஸ், மொபைல் இணைப்பு மற்றும் ஜன் தன் தொழில்நுட்பம் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஆப்பிரிக்காவுடனான டிஜிட்டல் மற்றும் உடல் தொடர்புகளை மேம்படுத்த முடியும். கென்யா, நமீபியா, கானா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் ஆர்வத்துடன், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface (UPI)) மற்றும் RuPay சேவைகள் மொரிஷியஸில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. 


வங்கியை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி அபாயத்தைக் குறைக்கவும், இந்தியா டாலர் அடிப்படையிலான கடனுக்குப் பதிலாக ரூபாய் அடிப்படையிலான கடனைப் பயன்படுத்த வேண்டும். இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மாற்று விகித ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க உதவும்.


குடிமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஆப்பிரிக்க நாடுகள்  அதன் உத்திகளில் அதிக கட்டுப்பாட்டை எடுத்து வருகின்றன. ஆப்பிரிக்கா முதலீட்டிற்கான சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தில் (Forum on China-Africa Cooperation (FOCAC)) ஆப்பிரிக்கத் தலைவர்கள் சீனாவுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது, ஆப்பிரிக்காவுடனான தனது சொந்த கூட்டாண்மையை மேம்படுத்த இந்தியாவுக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கற்பிக்கும்.


அபிஷேக் மிஸ்ரா, மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் (Manohar Parrikar Institute for Defence Studies and Analyses (MP-IDSA)) இணை ஆய்வாளராக உள்ளார்.



Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டமும், அதில் உள்ள சிக்கல்களும்

 வரி முறையை (tax regime) மேம்படுத்த சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தினால் சிறப்பாகச் செயல்பட முடியும்.  

 

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம்  ஏழு வருட மறைமுக வரி முறையை பகுபாய்வு செய்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி ஆணையத்தின்  செப்டம்பர் 9-ஆம் தேதி நடக்கவுள்ளது. ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு,  மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் இந்த கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. வரி செலுத்துவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், கொள்கை வழிகாட்டுதல்களை அமைப்பதற்கும், ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் மாநிலப் பிரதிநிதிகள் தலைமையில் நடைபெறும் கூட்டம் முக்கியமானது.  இந்த  ஆணையத்தின் கூட்டம் தவறாமல் நடக்க வேண்டும். நடக்கவிருக்கும் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையத்தின் சிக்கலான கட்டமைப்பை  ஆராய்வதாகும்.


சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம், ஜூன் மாதத்தில் 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (ministerial group (GoM)) செய்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு  செய்யமுடிவு செய்தது.  இருப்பினும், மாநில அமைச்சர்களின் சமீபத்திய கருத்து முன்னேற்றம் மிகவும் சவாலாக இருக்கலாம் என்று கூறுகிறது. வருவாய் நிலையானதாக இருக்கும்போது பெரும்பாலான உறுப்பினர்கள் மாற்றங்களைச் செய்ய தயங்குகிறார்கள். குறைந்தபட்சம் குழுவின் விவாதங்களுக்கு ஒரு காலக்கெடுவை அமைக்க வேண்டும் மற்றும் ஒருமித்த கருத்தை எட்டுவது டினமாக இருந்தால், புதிய விகிதக் கட்டமைப்பிற்கான (revamped rate structure) சில விருப்பங்களை  பரிந்துரைக்க ஊக்குவிக்க வேண்டும்.


பின்னர், ஆணையம் மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்கலாம். முக்கிய மாற்றங்களைத் தவிர, ஆரோக்கியக் காப்பீடு (health insurance) மற்றும் ஆயுள் காப்பீடு (life cover) போன்ற சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான 18% சரக்கு மற்றும் சேவை வரியை சரிசெய்ய வேண்டுமா? என்பதையும் சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யலாம். சமீபகாலமாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தியும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

 

மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் மதுபானம் போன்ற பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரியில் சேர்ப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இதை பல ஆண்டுகளாக சேர்க்க விரும்பினர். ஆனால், மாநிலங்கள் இந்த முடிவை எதிர்க்கலாம். அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரிக்காக தங்கள் வரி அதிகாரத்தை அதிகம் விட்டுக் கொடுத்தனர். மேலும் பல மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு இடையேயான உறவு  மோசமாகிவிட்டதாக (“acrimonious”), முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.


இந்த பிரச்சினைகளை ஆணையம் எவ்வாறு கையாள்கிறது என்பதைக் கவனிப்பது முக்கியம் என்றாலும், சரக்கு மற்றும் சேவை வரி ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. ஆண்டு வருவாய் சுமார் 10% அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மூன்று மாதங்களில் நிகர சரக்கு மற்றும் சேவை வரி(Net GST) வரவுகள் 7-%க்கும் குறைவாகவே அதிகரித்துள்ளன. இருப்பினும், பணத்தைத் திரும்பப்பெறுதல் கணிசமாகக் குறைவாக இருந்த மாதங்களில் அவை சுமார் 15%அதிகரித்தது. 


இந்த தரவுகள் குறைவாக இருந்தாலும், ஆணையம் அதை  நிராகரிக்கக்  கூடாது. தொழில்களுக்கான பதிவுசெய்தல், பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களின் பெரிய வரிக் கோரிக்கைகளால் ஏற்படும் குழப்பங்கள் போன்ற தவறான திருப்பங்களைத் தடுக்க உதவும்.



Original article:

Share:

பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதாவில் உள்ள சிக்கல்கள் - பிரதிக்ஷா உல்லால், சினேகா பிரியா யானப்பா

 அறிமுகபடுத்தப்பட்ட மசோதா கூட்டுறவு கூட்டாட்சியை (cooperative federalism) பாதிக்கும். மேலும், இந்த மசோதா ஒன்றிய அரசிற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


ஆகஸ்ட் 1, 2024 அன்று, ஒன்றிய அரசு மக்களவையில் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதாவை (Disaster Management (Amendment) Bill) அறிமுகப்படுத்தியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை சமாளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 (Disaster Management Act), முன்பை இருந்ததை விட இப்போது அதிக அளவில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல இருப்பதை  மசோதா காட்டுகிறது.


ஒன்றிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும் என்று தற்போது உள்ள சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மசோதா தற்போதுள்ள தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (National Crisis Management Committee)  மற்றும் உயர்மட்டக் குழு (High-Level Committee) போன்ற அமைப்புகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குகிறது. இந்த மாற்றம் பேரிடர் காலங்களில் சிக்கலை ஏற்படுத்தும். இது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராகவும் உள்ளது. 


இந்த மசோதா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை (State Disaster Management Authorities) வலுப்படுத்தும் என்று புதிய மசோதா கூறுகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் திட்டங்களை தயாரிப்பதற்கு இந்த அதிகாரிகள் பொறுப்பு. இந்த மசோதா மாநில தலைநகரங்கள் மற்றும் நகராட்சிகளைக் கொண்ட நகரங்களுக்கு 'நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை' (Urban Disaster Management Authority’) உருவாக்குகிறது.

இருப்பினும், திட்டத்தை மேம்படுத்துவதற்கு தேவையான  நிதி ஒதுக்கப்படாமல் இருந்தால், இந்தத் திட்டம் அதிகமான சிக்கல்களை உருவாக்ககூடும்.


அதிகாரக்குவிப்பு (Centralisation)  ஒரு கவலையாக உள்ளது  


இந்த திருத்த மசோதா, தேசிய பேரிடர் நிவாரண நிதியை (National Disaster Response Fund) மாற்றியமைத்து, நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விவரங்களை நீக்குகிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் ஒரு பெரிய பிரச்சினை, பேரிடர்களின் போது மாநில அரசுகள் நிதி தேவைகளுக்காக ஒன்றிய அரசை சார்ந்து உள்ளன. தேவைப்படும் போது உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று இந்த பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி மறுக்கப்பட்டது. கர்நாடகாவிற்கு பேரிடர் மேலாண்மை நிதி  மிகவும் தாமதமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது.  


தற்போதைய ஏற்பட்டுள்ள காலநிலை நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 படி பேரழிவுகள் என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 

‘பேரழிவு' (‘disaster’) என்பதற்கான  வரையறை 


  ஜூலை 25, 2024 இல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் இணை அமைச்சர் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் வெப்ப அலைகளை அறிவிக்கப்பட்ட பேரழிவாக வகைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிடவில்லை என்று அமைச்சர் கூறினார். அறிவிக்கப்பட்ட பேரிடர்களின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டிய தேவை இல்லை என்ற 15-வது நிதி ஆணையத்தின் கருத்துடன் இந்த அறிக்கை உடன்படுகிறது.

 

புயல், வறட்சி, பூகம்பங்கள், தீ, வெள்ளம், சுனாமிகள், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், மேக வெடிப்புகள், பூச்சி தாக்குதல்கள், உறைபனி மற்றும் குளிர் அலைகள்  போன்ற பேரிடர்கள் தேசிய பேரிடர் நிவாரண நிதியம் மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியத்தின் கீழ்  பட்டியலில் உள்ளன.  

இந்தியாவில் "பேரழிவு" என்பதன் கடுமையான வரையறை உலகளாவிய பார்வைகளுடன் முரண்படுகிறது. உலகம் முழுவதும், வெப்ப அலைகளை காலநிலை தொடர்பான பேரழிவுகளாக வகைப்படுத்த உடன்பாடு உள்ளது. ஏனெனில், அவை சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் 536 நாட்கள் வெப்ப அலைகள் பதிவாகின. இது 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவான உட்சபட்ச வெப்ப நிலையாகும். 2013-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் வெப்ப அலையின் காரணமாக 10,635 பேர் இறந்துள்ளனர். அதிகரித்து வரும் வெப்ப அலைகள் வளர்ந்து வரும் பேரழிவு அபாயத்தைக் குறிக்கிறது. 


பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் தற்போது முன்மொழியப்பட்ட மசோதா ஆகியவை பேரிடராகக் கணக்கிடுவதற்கு போதுமான வரையறையைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், சட்டத்தின் கீழ் ஏற்படும் பேரழிவுகளின் பட்டியலில் வெப்ப அலைகள் போன்ற காலநிலை நிகழ்வுகள் குறிப்பிடப்படவில்லை. அவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உதாரணமாக, சில வட இந்திய மாநிலங்களில் 40°C வெப்பநிலை சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இமயமலையில் அது வெப்ப அலையாக கருதப்படுகிறது. 


இந்தச் சட்டம், நீண்ட வெப்ப அலைகளை இயற்கைப் பேரிடர்களான வெள்ளம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட, அவை பேரிடர்களாக குறிப்பிடப்படவில்லை. சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட மசோதாவில் உள்ள பேரழிவுகளின் பாரம்பரிய வரையறையுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் சரியாக பொருந்தாததால் இது ஒரு பிரச்சனையாக உள்ளது.  காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட  பேரழிவுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட பகுதிகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன. இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.


தொடர்புடைய சிக்கல்கள் 


இருப்பினும், சில முக்கியமான கேள்விகள் உள்ளன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள சமச்சீரற்ற அதிகாரத்தால் ஏற்படும் தற்போதைய பிரச்சினைகளை முன்மொழியப்பட்ட மசோதா சரிசெய்யுமா? மாநிலங்கள் நிதிக்காக ஒன்றிய அரசையே நம்பியிருக்க வேண்டுமா?  பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்று இந்த மசோதா கூறினால், கடந்த கால பேரழிவுகளில் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது செய்யப்பட்ட தவறுகளிலிருந்து அது கற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. பேரிடர் மேலாண்மை நிதியை உறுதி செய்வதில் ஒன்றிய அரசின் முயற்சிகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஒன்றிய அல்லது மாநில அரசு காரணமா என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பேரழிவுகளை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது மற்றும் எதிர்கால நிகழ்வை எவ்வாறு கணிப்பது என்பதைக் குறித்து நாம் விவாதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியை (cooperative federalism) அடைவதில் இருந்து திசைதிருப்பும்.


பிரதிக்ஷா உல்லால் சட்டக் கொள்கைக்கான விதி மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.



Original article:

Share:

வேளாண் தொழில் முனைவுகளுக்கு நிதியளிக்கும் ஒரு உறுதியான வழி - ஷாஜி கே.வி.

 தொடக்க மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான வேளாண் நிதி' (Agri Fund for Startups and Rural Enterprises' (AgriSURE)), 300 கோடி ரூபாயை விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆரம்ப கட்ட தொழில்முனைவுகளில் (ஸ்டார்ட்-அப்) முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  


விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக விளங்குகின்றன. இத்துறை நாட்டின் 54 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இது இந்தியாவின் மொத்த மதிப்பு கூட்டுதலில் (Gross Value Added (GVA)) சராசரியாக 18 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. 


இந்திய விவசாயிகளின் ஆக்கப்பூர்வமான அரசாங்க முயற்சிகள் மற்றும் முயற்சிகள் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. இந்த முயற்சிகள் உலகளாவிய விவசாய ஏற்றுமதியில் நாட்டை ஒரு முக்கிய நிலையில் நிலைநிறுத்தியுள்ளன. 


சிதறிய பங்குகள்


சிறிய நில உடைமைகள், குறைந்த மகசூல், மண் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் போன்ற சவால்களை இந்தத் துறை எதிர்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT)), பிளாக்செயின் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் இந்த சவால்களில் பலவற்றை எதிர்கொள்ள முடியும். 


இது வேளாண் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில், குறிப்பாக ஊரகத் துறையில் புதிய தொழில்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்குகிறது.  பல ஸ்டார்ட்-அப்கள் விவசாயத் துறைக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்ப தீர்வுகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன. இந்த முன்னேற்றங்கள் விளைச்சல் மற்றும் வள மேலாண்மையை மேம்படுத்த தரவு உந்துதல் முடிவெடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பெரும் வாக்குறுதியைக் கொண்டுள்ளன. 


2025-ஆம் ஆண்டில் இந்திய வேளாண் தொழில்நுட்பத் துறை 24 பில்லியன் டாலரை எட்டக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி அதிகரித்து வரும் விவசாயிகள் விழிப்புணர்வு, கிராமப்புறங்களில் அதிகரித்த இணைய ஊடுருவல் மற்றும் பல்வேறு அரசாங்க முயற்சிகளால் இயக்கப்படுகிறது. வேளாண் தொழில்நுட்ப நிலப்பரப்பு கணிசமாக வளர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் 50-க்கும் குறைவான ஸ்டார்ட்-அப்களில் இருந்து 2023-ஆம் ஆண்டில் சுமார் 2,800 ஆக வளர்ந்துள்ளது. 


கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் வேளாண் தொழில்நுட்பத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. கோவிட்-19 சவால்கள் இருந்தபோதிலும், இத்துறை அதிகரித்த முதலீட்டை அனுபவித்துள்ளது. 


மூலதன உட்செலுத்துதல்


2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இணை முதலீட்டு மாதிரியின் கீழ் கலப்பு மூலதனத்துடன் கூடிய நிதியை நபார்டு வழங்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். 

இந்த நிதி வேளாண் விளைபொருள் மதிப்புச் சங்கிலி தொடர்பான வேளாண் மற்றும் கிராமப்புற தொழில்களுக்கான தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்கும். 


தொடக்க மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான வேளாண் நிதி' (Agri Fund for Startups and Rural Enterprises' (AgriSURE)), என்ற பெயரில் புதிய நிதி உருவாக்கப்படுகிறது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து இந்த நிதியை வழங்கும். 


தொடக்க மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான வேளாண் நிதி' (Agri Fund for Startups and Rural Enterprises' (AgriSURE)), செபி பதிவு செய்யப்பட்ட வகை ₹750 கோடி ரூபாய் இருக்கும்.  இந்திய அரசு மற்றும் நபார்டு வங்கி தலா 250 கோடி ரூபாயை பங்களிக்கும், மீதமுள்ள 250 கோடி ரூபாய் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும். 


வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பில் ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேளாண் தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட்-அப்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், இந்தத் துறையில் முதலீடு செய்ய தொழில்துறையில் உள்ள பிற நிறுவனங்களையும் ஊக்குவிக்கும். 


இந்த நிதியம் இரண்டு திட்டங்களைக் கொண்டிருக்கும்: 'வேளாண் ஸ்டார்ட்-அப்களை ஆதரிப்பதற்கான நேரடித் திட்டம்' மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதிகளை (Agriculture Infrastructure Fund) ஆதரிக்க 'ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்' (Fund of Fund) திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும். 


தொடக்க மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான வேளாண் நிதி' (Agri Fund for Startups and Rural Enterprises' (AgriSURE)) கீழ் நேரடி திட்டம் ₹300 கோடி ரூபாய் கொண்டிருக்கும். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வாய்ப்புகளை மையமாகக் கொண்ட ஆரம்பகட்ட தொழில் முனைவுகளில் முதலீடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. '


ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்'  (Fund of Fund)  திட்டத்தில் ரூ.450 கோடி ரூபாய் இருக்கும்.  இது செபி, பதிவு செய்யப்பட்ட துறை மற்றும் துறை சார்ந்த சமபங்கு மற்றும் கடன் விவசாய உள்கட்டமைப்பு நிதிகளில் (Agriculture Infrastructure Fund)  முதலீடு செய்யும். சமபங்கு மற்றும் கடன் கருவிகள் போன்ற பல்வேறு வகையான நிதியுதவிகளுக்கான அணுகல் இல்லாததால் தங்கள் வணிகத்தை மேம்படுத்த போராடும் தற்போதுள்ள வேளாண் மற்றும் வேளாண் தொழில்நுட்ப தொடக்கங்களுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதே இந்த நிதியின் ஒட்டுமொத்த நோக்கமாகும்.



Original article:

Share:

உலகிற்கு முன்னிருக்கும் தேர்வுகள்: வளர்ச்சி அல்லது விரிவாக்கம் -சசி சேகர்

 கடந்த பத்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நீடிக்க வேண்டுமானால், நாம் ஐ.நா.வை சீர்திருத்த வேண்டும். 


1991 முதல் 2019 வரையிலான ஆண்டுகள் மனித வரலாற்றில் மிகவும் அமைதியான ஆண்டுகளாகும். சில ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர, போர்கள் கடந்த காலத்தின் ஒரு விஷயமாகத் தோன்றின. செக்கோஸ்லோவாக்கியா அமைதியாக செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா என பிரிந்தது. சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்தது. இருப்பினும், இந்த நிகழ்வுகள் இந்தியா மற்றும் இஸ்ரேலின் சுதந்திரத்தின் போது காணப்பட்ட அளவுக்கு வன்முறையை ஏற்படுத்தவில்லை. 


1989-ல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட பின்னர் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்ததே உலக அமைதிக்கான இந்த காலகட்டத்திற்கு முக்கிய காரணமாகும். 1991-ல் சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு இந்த ஆதிக்கம் அதன் உச்சத்தை எட்டியது. 


இந்த ஆண்டுகளில், நவ-முதலாளித்துவம் (neo-capitalism) ஒரு சக்திவாய்ந்த சக்தியாக உருவெடுத்தது. அடுத்த முப்பது ஆண்டுகளில் உலகளவில் வறுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தின. இந்த நடவடிக்கைகளின் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர்.


நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீதான செப்டம்பர் 11 தாக்குதல் மிகவும் குறிப்பிடத்தக்க பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகும், இது 3,000 பேரைக் கொன்றது மற்றும் பில்லியன் கணக்கான டாலர்களை அழித்தது. அதே நாளில், பயங்கரவாதிகள் கடத்தப்பட்ட விமானத்தை, அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் மீது வேண்டுமென்றே மோதினர். இதன் காரணமாக அங்கு பணியில் இருந்த பலர் இறந்தனர். இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தன. சந்தேகத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மேற்கு நாடுகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. அமெரிக்கா இறுதியில் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் கண்டுபிடித்தது, இது ஈராக் படையெடுப்பு பற்றி பதிலளிக்கப்படாத கேள்விகளை எழுப்பியது.

 

ரஷ்யாவும் சீனாவும் ஆக்ரோஷமாக மாறிவிட்டன. ரஷ்யா சிரியாவை குண்டுவீசி, கிரிமியாவை இணைத்து, உக்ரைனைத் தாக்கியது. கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடன் சீனா மோதுகிறது. தைவானின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. மேலும், தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. உலகளாவிய பேரழிவுகள் ஆக்கிரமிப்பு காரணமாக ஏற்படுகின்றது.

 

ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அடுத்த மாதம் இரண்டாம் ஆண்டை எட்டவுள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகள் மோதல்களைக் கையாளுகின்றன. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலையை ஈரான் கையாள்கிறது மற்றும் பழிவாங்குவதாக உறுதியளித்துள்ளது. இஸ்ரேல்-லெபனான் மோதலும் மோசமடைந்து வருகிறது.


மோதல்கள் பொருளாதார வளத்தை பாதிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி, கெய்வ் மற்றும் மாஸ்கோவுக்குச் சென்றார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


ஜெலென்ஸ்கியின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க எச்சரிக்கைகளை அலட்சியம் செய்திருப்பது, இந்த தலைவர்கள் அமைதியை அடைவதைவிட தங்கள் சொந்த உருவத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்று தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் நடவடிக்கைகள் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தை நினைவூட்டுகின்றன.

 

மரணங்களை எவ்வாறு தவிர்ப்பது 


ஐக்கிய நாடுகளின் (United Nations ) பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும். ஆனால், அது தற்போது சில சக்திவாய்ந்த நாடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஸ்லோவேனியாவின் ஜனாதிபதி, நடாசா பிர்க் முசார், உலகளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக ஐநா உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார். எனினும், போர்கள் போர்க்களத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு ஆணயத்திற்குள் வீட்டோ அதிகாரங்கள் மூலமாகவும் நடத்தப்படுகின்றன.


கடந்த 25 ஆண்டுகளாக, ஐ.நா.வில் சீர்திருத்தம் செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பாதுகாப்பு ஆணையம் செயல்படாமல் உள்ளது. குறைந்தபட்சம் மூன்று நாடுகளாவது தங்கள் நலன்கள் காரணமாக நடவடிக்கைகளைத் தடுக்க தங்கள் வீட்டோ அதிகாரங்களை (veto powers) அடிக்கடி பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு ஆணையத்தில் வீட்டோ அதிகாரங்களுக்கு முக்கிய சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கத் தொடங்குவதற்கான நேரம் இது என்று முசார் நம்புகிறார்.


சசி சேகர். ஹிந்துஸ்தான் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக உள்ளார்.



Original article:

Share:

மருந்துகள் சட்டம் விதி 170 தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்தை (AYUSH Ministry ) உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது -அனோனா தத்

 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விதி, ஆயுஷ் தயாரிப்புகளுக்கான தவறான விளம்பரங்களை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் ஜூலை 1 அறிவிப்பு  முந்தைய ஆகஸ்ட் 29, 2023 தேதியிட்ட நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.


நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர், பதஞ்சலி ஆயுர்வேதிற்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, ஆயுஷ் அமைச்சகத்தை விமர்சித்தனர். ​​ஜூலை 1 ஆம் தேதி ஆயுஷ் அமைச்சகம், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Drugs and Cosmetics Act) சட்டத்தின் விதி 170ன் கீழ் "எந்த நடவடிக்கையையும் தொடங்கவோ/எந்த நடவடிக்கையும் எடுக்கவோ கூடாது" என்று மாநில உரிமம் வழங்கும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது. 


2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விதி, ஆயுஷ் தயாரிப்புகளின் தவறான விளம்பரங்களைத் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் ஜூலை 1 அறிவிப்பு,  முந்தைய  ஆகஸ்ட் 29, 2023 தேதியிட்ட முந்தைய கடிதத்தில் அதன் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.


விதி 170 (Rule 170) என்றால் என்ன?


2018-ஆம் ஆண்டில், ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருந்துகளின் பொருத்தமற்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மருந்துகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான விதி 170-ஐ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.


ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை மாநில உரிமம் வழங்கும் ஆணையத்திடம் ஒப்புதல் மற்றும் தனித்துவமான அடையாள எண்ணைப் பெறாத வரை, தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதை இந்த விதி தடை செய்கிறது. 


உற்பத்தியாளர்கள் அதிகாரப்பூர்வ புத்தகங்களில் இருந்து மருந்துக்கான குறிப்புகள் மற்றும் பகுத்தறிவு போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பயன்பாட்டிற்கான அறிகுறி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மருந்துகளின் தரம் பற்றிய சான்றுகள் போன்ற விவரங்களையும் வழங்க வேண்டும்.


விளம்பரத்தின் உள்ளடக்கங்கள் மோசமானதாகவோ இருந்தால்,தொடர்பான விளம்பரங்கள், பிரபலங்கள் அல்லது அரசு அதிகாரிகளின் புகைப்படங்கள் அல்லது சான்றுகளை சித்தரிக்கும் வகையில், உற்பத்தியாளர் அவர்களின் தொடர்பு விவரங்களை வழங்கவில்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று விதி கூறுகிறது. 


நாடாளுமன்றக் நிலைக்குழு தவறான கூற்றுக்கள் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இந்த சிக்கலை முன்கூட்டியே தொடர வேண்டியதன் அவசியத்தை முன்னிலைப்படுத்திய பின்னர் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. அலோபதி மருந்துகளைப் போலவே, ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்களும் மருந்து கட்டுப்பாட்டாளரிடம் உரிமம் பெற வேண்டும். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்படி, புதிய அலோபதி மருந்துகளின் ஒப்புதலுக்கான கட்டம் I, II மற்றும் III சோதனைகள் அல்லது ஒரு மருந்து சந்தைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், பொதுவான பதிப்புகளுக்கான சமமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.


இருப்பினும், ஆயுஷ் மருந்துகளுக்கு இதுபோன்ற சோதனைகள் தேவையில்லை. மேற்கூறிய சட்டத்தின்படி, பெரும்பாலான ஆயுஷ் மருந்துகள் அந்த குறிப்பிட்ட ஸ்ட்ரீமின் அதிகாரப்பூர்வ நூல்களில் வழங்கப்பட்ட பகுத்தறிவின் அடிப்படையில் அனுமதிக்கப்படலாம். 


பாம்பு விஷம், பாம்பு தலை, ஆர்சனிக் மற்றும் பாதரசம் போன்ற கன உலோகங்கள் மற்றும் சில கலவைகள் போன்ற சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 60 குறிப்பிட்ட பொருட்களைப் கொண்ட கலவைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு சோதனைகள் தேவை. இந்த பொருட்கள் கொண்ட மருந்துகள் அல்லது புதிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மருந்துகளுக்கு, உரிமம் வழங்க ஆதாரம் தேவைப்படுகிறது."


ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (Ayurvedic, Siddha, and Unani Drugs Technical Advisory Board (ASUDTAB)), ஆயுஷ் மருந்துகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் ஒரு நிபுணர் அமைப்பானது, மே 2023-ல் ஒரு கூட்டத்தில், மருந்துகள் மற்றும் மந்திர சிகிச்சை சட்டத்தில் திருத்தங்களாக விதி (Drugs and Magic Remedies Act) 170 தவிர்க்கப்படலாம் என்று கூறியது. இதுபோன்ற தவறான விளம்பரங்களை நிர்வகிக்கும் சட்டம்  சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களால் புதுப்பிக்கப்படுகிறது.



Original article:

Share: