பாரதம் NCAP 2.0 : புதிய விதிகள் வாகனம் மற்றும் பாதசாரிகளின் (pedestrian) பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கலாம்? -தீரஜ் மிஸ்ரா

ஒரு வாகனம் சாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பல பாதுகாப்பு விதிமுறைகள் பொருந்தும் என்றாலும், பாரதம் NCAP ஆனது தனித்துவமானது. ஏனெனில், அது 'விபத்துகளை சிறப்பாக கையாளமுடியும் தன்மை'யில் (crashworthiness) கவனம் செலுத்துகிறது. இது அடிப்படையான 'சாலையில் செல்லுதற்குறிய தகுதியின்' (roadworthiness) தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையாகும். அது என்ன மதிப்பிடுகிறது? என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனங்களின் விபத்துக்கான பாதுகாப்பு செயல்திறனை மதிப்பிடுவதற்கான பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (Bharat New Car Assessment Program) அல்லது பாரத் NCAP-ன் திருத்தப்பட்ட வரைவை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways (MoRTH)) வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதன்முதலில் அக்டோபர் 2023-ல் செயல்படுத்தப்பட்டது. இது வாகன உற்பத்தியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் தங்கள் வாகனங்களை மோட்டார்வாகனத் தொழில் தரநிலைகள் (Automotive Industry Standard (AIS))-197-ன் படி சோதித்துப் பார்த்து, வாகனத்தின் விபத்துத் திறனின் அடிப்படையில் நட்சத்திர தரநிலை மதிப்பீட்டைப் பெறுவதற்கான விரிவான நடைமுறையை வகுத்துள்ளது.


2023-ம் ஆண்டின் பாரத் NCAP திட்டமானது, செப்டம்பர் 30, 2027 வரை செல்லுபடியாகும் அதே வேளையில், புதிய வரைவு விபத்துப் பாதுகாப்பு மதிப்பீடுகளின் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது. இது, புதிய கட்டாய சோதனைகளை அறிமுகப்படுத்துவதுடன், சோதனை வகைகளைப் புதுப்பித்து மதிப்பெண் முறையை திருத்துகிறது. முதல் முறையாக, புதிய வரைவு தரநிலைகள் வாகனங்களை அதன் பாதிக்கப்படக்கூடிய சாலைப்பயனர் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் சோதிக்க முன்மொழிகின்றன. சாலை விபத்துகளில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதசாரிகள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்களில் ஒருவர் ஆவர்.


பாரத் NCAP என்றால் என்ன?


பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (Bharat NCAP), விபத்து சோதனை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் வாகனங்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளை வழங்குகிறது. சிறப்பாகச் செயல்படும் வாகனங்கள் அதிகபட்சமாக ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் முக்கியமாக பாரத் NCAP-ன் மதிப்பீட்டை தங்கள் வாகனங்களில் காண்பிக்க விரும்பும் நிறுவனங்களுக்கும், சில்லறை சந்தையில் வாகனங்களின்  பாதுகாப்பு அம்சங்களை முன்னிலைப்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கும் பொருந்தும்.


ஒரு வாகனம் சாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பல பாதுகாப்புத் தரநிலைகள் பொருந்தும் அதே வேளையில், பாரத் NCAP தனித்துவமானதாக உள்ளது. ஏனெனில், அது அடிப்படையான "சாலைத் தகுதி" தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு படியான "விபத்து" குறித்து கவனம் செலுத்துகிறது.


உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற பிற பாதுகாப்புத் தரநிலைகள் இருந்தாலும், புவியியல் ரீதியாக உலகளவில் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தால் (NCAP) நடத்தப்படும் தரநிலைகளைப் போலவே, பாரத் NCAP ஆனது இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு சான்றிதழ்களை வழங்கவும், வாகனப் பாதுகாப்பில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தன்னார்வத் தன்மை கொண்டது. புனேவில் உள்ள மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் (Central Institute of Road Transport (CIRT)) பாரத் NCAP மதிப்பீடுகளை வழங்குவதற்கான நியமிக்கப்பட்ட நிறுவனமாகும்.


பாரத் NCAP-2.0-ல் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன?


2023-ம் ஆண்டின் பாரத் NCAP-ல், வாகனங்கள் மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்படுகின்றன. 1) வயது வந்தோர் பயணிகள் பாதுகாப்பு (Adult Occupant Protection (AOP)), 2) குழந்தைப் பயணிகள் பாதுகாப்பு (Child Occupant Protection (COP)) மற்றும் 3) பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்கள் (Safety Assist Technologies (SAT)) ஆகும். இவற்றைச் சரிபார்க்க, வாகனத்தின் முன்பக்க தாக்க சோதனைக்கு (frontal impact test) 64 கிமீ/மணி வேகத்திலும், பக்கவாட்டு தாக்க சோதனைக்கு (side impact test) 50 கிமீ/மணி வேகத்திலும், சாய்ந்த பக்கவாட்டு தாக்க சோதனைக்கு (oblique side impact test) 29 கிமீ/மணி வேகத்திலும் வாகனங்களில் சோதனைகள் செய்யப்படுகின்றன. பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக, கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின்கீழ், வாகனங்கள் வேண்டுமென்றே இந்த வேகத்தில் விபத்துக்குள்ளாக்கப்படுகின்றன.


2025-ஆம் ஆண்டு வரைவு திட்டமான பாரத் என்சிஏபி 2.0-இல் (Bharat NCAP 2.0), இரு பிரிவுகளின் (verticals) மற்றும் மோதல் சோதனைகளின் (crash tests) எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு (overall rating) ஐந்து மதிப்பீட்டுப் பகுதிகளால் ஆனதாக இருக்கும். அவை, பாதுகாப்பான ஓட்டுதல் (Safe Driving) – 10%; விபத்தைத் தவிர்த்தல் (Accident Avoidance) – 10%; மோதல் பாதுகாப்பு (Crash Protection) – 55%; பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகளுக்கான பாதுகாப்பு (Vulnerable Road User Protection) – 20%; மோதல்-பிந்தைய பாதுகாப்பு (Post-Crash Safety) – 5%.


அதேபோல, மோதல் பாதுகாப்பு (crash protection) பிரிவின் கீழ் கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய விபத்து சோதனைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக விரிவாக்கப்பட்டுள்ளது:


64 கி.மீ/மணி வேகத்தில் முன்பக்க மோதல் சோதனை (நெகிழ்வான தடுப்புச் சுவருக்கு எதிராக - deformable barrier)

50 கி.மீ/மணி வேகத்தில் பக்கவாட்டு மோதல் சோதனை (நகரும் நெகிழ்வான தடுப்புச் சுவருக்கு எதிராக - mobile deformable barrier)


32 கி.மீ/மணி வேகத்தில் சாய்வான பக்கவாட்டு மோதல் சோதனை (கடினமான தூணுக்கு எதிராக - rigid pole)


50 கி.மீ/மணி வேகத்தில் முன்பக்க மோதல் சோதனை (முழு அகல கடினத் தடுப்புச் சுவருக்கு எதிராக - full width rigid barrier)


50 கி.மீ/மணி வேகத்தில் பின்பக்க மோதல் சோதனை (நகரும் கடினத் தடுப்புச் சுவருக்கு எதிராக - mobile rigid barrier)


இந்த சோதனைகளின்போது, பெரியவர்கள் (ஓட்டுநர், முன்னிருக்கை பயணி, பின் இருக்கை பயணிகள்) மற்றும் குழந்தை பயணிகளுக்கு ஏற்படக்கூடிய காயங்களின் ஆபத்தை மதிப்பீடு செய்ய, மனித உருவப் பொம்மைகள் (Anthropomorphic Test Devices - ATDs) பயன்படுத்தப்படுகின்றன.


பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்களின் பாதுகாப்பை இது எவ்வாறு உறுதி செய்யும்?


2025 வரைவு மூன்று புதிய மதிப்பீட்டு பகுதிகளை அறிமுகப்படுத்துகிறது. அவை, 2023 ஆவணத்தில் கட்டமைப்பு ரீதியாக உள்ளடக்கப்படவில்லை. இது பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்களை (Safety Assist Technologies (SAT)) ஒரு பரந்த தகுதிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தியது. மேலும், புதிய பகுதிகளில் ஒன்று பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர் பாதுகாப்பு பிரிவானது 20 சதவீத தரநிலையைக் கொண்டுள்ளது.


இந்த மதிப்பீடு கட்டாயத் தாக்க சோதனைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. கட்டாய சோதனைகளில் முன்புற மோதல் தடுப்புக்கு (Bumper) எதிரான பாதசாரி கால்வடிவத் தாக்கங்கள் (Pedestrian Legform Impacts), அதே போல் வயது வந்தோர் தலைவடிவ தாக்கங்கள் (Adult headform impacts) மற்றும் இயந்திர உறை பகுதி (engine hood area) மற்றும் வாகனத்தின் முன்புறக் கண்ணாடிக்கு (windshield) எதிரான குழந்தை தலைவடிவ தாக்கங்கள் (Child headform impacts) ஆகியவை அடங்கும். குழந்தை பாதசாரிகள், வயது வந்தோர் பாதசாரிகள் மற்றும் காரில் இருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் பின்புறம் நகரும் சூழ்நிலைகள் தொடர்பான தன்னியக்க அவசரகால நிறுத்து முறையின் (Autonomous Emergency Braking System (AEBS)) விருப்ப மதிப்பீடுகளும் இதில் அடங்கும்.


தன்னியக்க அவசரகால நிறுத்து முறையின் (AEBS) தன்னாட்சி தொழில்நுட்பங்கள் 100% விபத்துகளைத் தவிர்க்க முடியாமல் போகலாம் என்றும், நிலையான சோதனை நிலைமைகளில் மட்டுமே செயல்திறனுக்காக மதிப்பிடப்படுகின்றன என்றும் ஆவணம் கூறுகிறது.


இதேபோல், மற்றொரு மதிப்பீட்டுப் பகுதியான விபத்து தவிர்ப்பு, ஓட்டுநர் தானாகவே உடனடி விபத்துகளைத் தவிர்க்க உதவும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது. நட்சத்திர மதிப்பீட்டுத் திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கு மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு (Electronic Stability Control (ESC)) அமைப்பு கட்டாய தொழில்நுட்பமாக இருக்கும். வாகன உற்பத்தியாளர்கள் தானாக முன்வந்து தன்னியக்க அவசரகால நிறுத்து முறையை (AEBS) வழங்கத் தேர்வு செய்யலாம்.


விபத்துக்குப் பிந்தைய பாதுகாப்புப் பிரிவு விபத்துக்குப் பிறகு ஏற்படும் தீங்கைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. தீ மற்றும் மின் ஆபத்துகளுக்கான ஆற்றல் மேலாண்மை குறித்த கட்டாய சோதனைகள் இதில் அடங்கும். அதாவது, மின்சார அதிர்ச்சிக்கு எதிரான பாதுகாப்பைச் சரிபார்க்கிறது. இதில் பயணியர் வெளியேற்றமும் (Occupant Extrication) அடங்கும். அதாவது, கதவுகள் எவ்வளவு எளிதாகத் திறக்கின்றன மற்றும் இருக்கை-பாதுகாப்பு வார் (seat-belt) கொக்கிகள் எவ்வளவு எளிதாக வெளியேறுகின்றன என்பதைச் சரிபார்க்கிறது.


நட்சத்திர மதிப்பீடும் மாறிவிட்டதா?


ஆம், 2025 ஆவணம் 4-நட்சத்திர மற்றும் 5-நட்சத்திர மதிப்பீடுகளுக்கான தரநிலையின் அளவு முறையே 65 மற்றும் 80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது 2023-ல் 60 மற்றும் 70 புள்ளிகளிலிருந்து அதிகரித்துள்ளது. 1-நட்சத்திரம், 2-நட்சத்திரம் மற்றும் 3-நட்சத்திரங்களுக்கு, தரநிலைப் புள்ளி முறையே 30, 40 மற்றும் 50 ஆகும்.


இதனுடன், பாரத் NCAP-2.0-ல் 3-நட்சத்திர மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பீடுகளைப் பெறுவதற்கு, ஒரு வாகனம் வயது வந்தோர் பயணி பாதுகாப்பில் (Adult Occupant Protection (AOP)) குறைந்தது 55% மதிப்பெண் பெற வேண்டும். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தவறினால் 1-நட்சத்திர தரநிலைக் கொண்ட அபராதம் விதிக்கப்படும். மேலும், 5-நட்சத்திர மதிப்பீடு பெற்ற வாகனம் 'பூஜ்ஜிய' மதிப்பெண்ணில் எந்த ஒரு மதிப்பீட்டையும் கொண்டிருக்க முடியாது. அப்படி நடந்தால், மதிப்பீடு 4 நட்சத்திரங்களாகக் கட்டுப்படுத்தப்படும்.


5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற வாகனம், வாகனங்களில் உருமாற்றமைப்பு (modifiers) பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அந்தந்த விபத்து சோதனைகளில் பயன்படுத்தப்படும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு 'சிவப்பு' வண்ண மண்டலத்தில் எந்த காயத்திற்கும் மதிப்புகளையும் கொண்டிருக்கக்கூடாது என்றும் அது கூறுகிறது.


தற்போதைய நிலவரப்படி, டாடா ஹாரியர், டாடா சஃபாரி, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, சிட்ரோயன் ஏர்கிராஸ், மாருதி சுசுகி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், ஹூண்டாய் டக்சன் போன்ற பல கார்கள் பாரத் NCAP-லிருந்து 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. 


இதற்கான, திருத்தப்பட்ட விதிகள் குறித்த கருத்துகளுக்கான கடைசி தேதி டிசம்பர் 20, 2025 ஆகும்.


 Original Article: Bharat NCAP 2.0: How the new rules could impact vehicle and pedestrian safety.


Share:

அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2025 சர்ச்சை: சண்டிகரின் தனித்துவமான தகுதிநிலை மற்றும் பஞ்சாப் ஏன் மாற்றத்தை எதிர்க்கிறது என்பன குறித்து . . .

 2025ஆம் ஆண்டு 131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதா சண்டிகரின் நிலையை எவ்வாறு மாற்றும்? அது பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுத் தலைநகராக இருப்பது ஏன்? பஞ்சாப் ஏன் அதற்கு மட்டுமே உரிமை கோருகிறது? 


2025ஆம் ஆண்டு 131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதா வரிசை: பொதுமக்களின் போராட்டங்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் நவம்பர் 23-ஆம் தேதியன்று சண்டிகரின் அங்கீகாரத்தை மாற்றுவதற்கானஎந்த மசோதாவும் அடுத்தமாதம் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படாது என்று அறிவித்தது.


முன்னதாக, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒரு செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசு வரவிருக்கும் கூட்டத்தொடரில் 2025ஆம் ஆண்டு 131வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும் என்றும், சண்டிகரை அரசியலமைப்பின் 240-வது பிரிவின் கீழ் சேர்க்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் சண்டிகர் மீதான பஞ்சாபின் உரிமையை "பலவீனப்படுத்த" முயற்சிப்பதாக ஒன்றிய அரசை குற்றம் சாட்ட வழிவகுத்தது.


சண்டிகரின் தற்போதைய நிலை என்ன, அதில் முன்மொழியப்பட்ட மாற்றத்தால் பஞ்சாப் ஏன் பஞ்சாப் கடும் அதிருப்தி அடைந்தது? சண்டிகரின் தனித்துவமான வரலாறு என்ன? 


முன்மொழியப்பட்ட மாற்றம் என்ன?


சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகும். ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற இரு மாநிலங்களின் தலைநகராகவும் உள்ளது. பஞ்சாப் ஆளுநர் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாக கூடுதல் பொறுப்பை வகிக்கிறார்.


சண்டிகர் அரசியலமைப்பின் 240-வது பிரிவின் கீழ் வந்தால், மற்ற யூனியன் பிரதேசங்களில் உள்ள துணைநிலை ஆளுநர் (Lieutenant Governor) போலவே, யூனியன் பிரதேசத்திற்கு ஒரு தன்னிச்சையான  நிர்வாகியை நியமிக்க வழி வகுக்கும்.


அரசியலமைப்பின் பிரிவு 240, சில யூனியன் பிரதேசங்களுக்கு விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தை நமது நாட்டின் குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்; லட்சத்தீவுகள்; தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றம் கலைக்கப்படும்போது அல்லது இடைநிறுத்தப்படும்போது, ​​"அமைதி, முன்னேற்றம் மற்றும் நல்ல ஆட்சிக்காக குடியரசுத் தலைவர் விதிமுறைகளை உருவாக்கலாம் என்று கூறுகிறது.


அவ்வாறு இயற்றப்படும் எந்தவொரு ஒழுங்குமுறையும், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் அல்லது யூனியன் பிரதேசத்திற்குப் பொருந்தக்கூடிய வேறு எந்தச் சட்டத்தையும் ரத்து செய்யலாம் அல்லது திருத்தலாம். மேலும், குடியரசுத்தலைவரால் ஒரு சட்டம் அறிவிக்கப்படும்போது, ​​அந்தப் பிரதேசத்திற்குப் பொருந்தும் நாடாளுமன்றச் சட்டத்தின் அதே சக்தியையும் விளைவையும் கொண்டிருக்கும் என்று சட்டம் கூறுகிறது.


சண்டிகர் இந்தச் சட்டத்தின் கீழ் வந்தால், அது இப்போது இருப்பது போல் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்காது.


ஒன்றிய அரசு இப்போது என்ன சொல்லியிருக்கிறது?


X-தளத்தில் ஒரு பதிவில், உள்துறை அமைச்சகம், சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கான ஒன்றிய அரசின் சட்டம் இயற்றும் செயல்முறையை எளிமைப்படுத்தும் திட்டம் இன்னும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த திட்டம் எந்த வகையிலும் சண்டிகரின் ஆட்சி அல்லது நிர்வாக அமைப்பை மாற்ற முயற்சிக்கவில்லை என்றும் சண்டிகருக்கும் பஞ்சாப் அல்லது ஹரியானா மாநிலங்களுக்கும் இடையிலான பாரம்பரிய சட்டங்களை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியது.


சண்டிகரின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்தபிறகே ஒரு முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது.


இந்த விவகாரத்தில் எந்தக் கவலையும் தேவையில்லை என்றும் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பான எந்த மசோதாவையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.


சண்டிகரின் அங்கீகார மாற்றத்தை பஞ்சாப் ஏன் எதிர்க்கிறது?


சுதந்திரத்திற்குப் பிறகு கட்டப்பட்ட திட்டமிட்ட நகரமான சண்டிகர், பஞ்சாபிற்கு ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற ஒன்றுபட்ட பஞ்சாபின் தலைநகரான லாகூருக்கு மாற்றாக இந்த நகரம் கட்டப்பட்டது.


பிரிவினைக்குப் பிறகு, சிம்லா இந்திய பஞ்சாபின் தற்காலிக தலைநகராக மாற்றப்பட்டது. ஆனால், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மாநிலத்தின் தலைநகராக ஒரு நவீன நகரத்தைக் கற்பனை செய்தார் - இது சண்டிகர் என்ற யோசனைக்கு வழிவகுத்தது. மார்ச் 1948-ல், திட்டமிடப்பட்ட நகரத்தை நிர்மாணிப்பதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசு இமயமலையின் அடிவாரத்திற்கு அடுத்த இடத்தைத் தேர்ந்தெடுத்தன. கட்டுமானத்திற்காக காரரில் (Kharar) 22 கிராமங்கள் கையகப்படுத்தப்பட்டன.


நகரத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை நவீனத்துவ கட்டிடக்கலையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் Le Corbusier உருவாக்கினார். "அழகின் நகரம்" (City of Beauty) செப்டம்பர் 21, 1953 அன்று அதிகாரப்பூர்வமாக பஞ்சாபின் தலைநகராக மாறியது. பின்னர், குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் புதிய தலைநகரை சிறிது நேரத்திலேயே, அதே ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி திறந்து வைத்தார்.


1966ஆம் ஆண்டு பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் (Punjab Reorganisation Act) கீழ், இந்தி பேசும், இந்து பெரும்பான்மை மாநிலமான ஹரியானா பிரிக்கப்பட்டபோது, ​​பஞ்சாப் மற்றொரு பிரிவினையை எதிர்கொண்டது.


இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்திருந்த சண்டிகர், அவர்களின் பொதுவான தலைநகராக மாறியது. சொத்துக்கள் 60:40 விகிதத்தில் பிரிக்கப்பட்டன. அதற்கு யூனியன் பிரதேச அங்கீகாரமும் வழங்கப்பட்டது. இது நகரத்தை ஒன்றிய அரசின்  நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது.


அந்த நேரத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஹரியானாவிற்கு சொந்த தலைநகரம் கிடைக்கும் என்று அறிவித்திருந்தார். சண்டிகரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க ஒரு சுருக்கமான திட்டம்கூட இருந்தது. இருந்த போதிலும் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.


ஜனவரி 29, 1970 அன்று, சண்டிகரின் தலைநகர் திட்டப் பகுதி முழுவதுமாக பஞ்சாபிற்குச் செல்ல வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. பஞ்சாபி சுபா இயக்கத்தின் தலைவரான பதே சிங் (Fateh Singh), சண்டிகரை பஞ்சாபிற்கு மாற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியபோது, அன்றைய அரசாங்கத்திற்கு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


ஆனால், பஞ்சாபின் தலைமை செயலகத்தில் அலுவலகங்களை நடத்துவதற்கு ஹரியானாவிற்கு தற்காலிக இடமும், பஞ்சாபின் விதான் சௌபாவில் இடமும் வழங்கப்பட்டது. சொந்த தலைநகரை உருவாக்கும் வரை சண்டிகரில் உள்ள அலுவலகம் மற்றும் குடியிருப்பு விடுதியை ஐந்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்துமாறு மாநிலத்திற்கு கூறப்பட்டது. புதிய தலைநகரைக் கட்டுவதற்காக ஹரியானாவிற்கு ரூ.10 கோடி மானியமும், அதற்குச் சமமான தொகையை கடனாக ஒன்றிய அரசு வழங்கியது.


ஆனால், ஹரியானா பிரிக்கப்பட்டு ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. மேலும், சண்டிகர் கூட்டுத் தலைநகராக இருப்பது பஞ்சாபின் அதிருப்திக்கு மிகவும் காரணமாக அமைந்தது. ஏனெனில், பஞ்சாப் நீண்ட காலமாக சண்டிகர் நகரம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தது.


சனிக்கிழமை (நவம்பர் 22) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் "சதி வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பஞ்சாப் கிராமங்களை வேரோடு பிடுங்கி கட்டப்பட்ட சண்டிகர், பஞ்சாபிற்கு மட்டுமே சொந்தமானது. எங்கள் உரிமையை நாங்கள் நழுவ விடமாட்டோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றக் கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.


Original Article: Constitution (131st Amendment) Bill 2025 row: Chandigarh’s unique status, and why Punjab opposes proposed change, in 3 points.


Share:

இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டக் குறியீடுகள் (Labour Codes), கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்கள் (gig and platform workers) தொடர்பான பிரச்சினைகளை எவ்வாறு கையாள்கின்றன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


- நாடாளுமன்றம் 2019-ல் ஊதியச் சட்டத்தையும், 2020-ல் மீதமுள்ள மூன்று சட்டங்களான - தொழிலாளர் உறவுகள் சட்டம்; சமூகப் பாதுகாப்பு சட்டம் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தையும் - அங்கீகரித்தது.


— இந்தப் புதிய தொழிலாளர் குறியீடுகள் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை மாற்றும். கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதே அவர்களின் குறிக்கோள், ஏனெனில் அவை முதல் முறையாக கிக் தொழிலாளர்கள், டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்கள் மற்றும் தள ஒருங்கிணைப்பாளர்கள் (aggregators) யார் என்பதை தெளிவாக வரையறுக்கின்றன.


- ஒரு தொழிலாளி வீட்டிற்கும் வேலைக்குச் செல்லும் போது விபத்து ஏற்பட்டால், அது இப்போது வேலை தொடர்பான விபத்தாகக் கருதப்படும் என்றும், அந்தத் தொழிலாளி இழப்பீடு பெறத் தகுதியுடையவர் என்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


- இருப்பினும், இந்த விதிகள் நிலையான கால வேலைவாய்ப்புக்கான விதிமுறைகள், ஆட்குறைப்பு மற்றும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த உரிமையைக் குறைத்தல் போன்ற சில சர்ச்சைக்குரிய விதிகளைக் கொண்டுள்ளன. இந்த சட்டங்கள்  முன்னர் தொழிற்சங்கங்களால் விமர்சனத்திற்கு உள்ளாகின.


— இந்த தொழிலாளர் சீர்திருத்தங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார்.


- வரைவு செயல்முறையின்போது மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான ஆலோசனைகளுக்கு ஏற்ப, இந்த சட்டங்களின் கீழ் தொடர்புடைய விதிகள், ஒழுங்குமுறைகள், திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்வதில் அரசாங்கம் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும்.


— கர்நாடகா, தெலுங்கானா, பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் சமீபத்தில் கிக் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையும், ஒன்றிய அரசு அதன் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கைக் கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.


- நான்கு தொழிலாளர் சட்டங்களின் கீழ், பெண்கள் இரவு நேரப் பணிகளிலும், அனைத்து வகையான வேலைகளிலும் (நிலத்தடி சுரங்கம் மற்றும் கனரக இயந்திரங்கள் உட்பட) அவர்களின் ஒப்புதல் மற்றும் கட்டாயப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


        - தொழிலாளர் குறியீடுகள் நிலையான கால வேலைவாய்ப்பு (FTE) என்ற கருத்தையும் அறிமுகப்படுத்துகின்றன, இதன் கீழ் முதலாளிகள் ஒரு நிலையான கால ஒப்பந்தத்தின் கீழ் நேரடியாக, தொழில்துறையின் பருவகாலத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் நீளத்தை மாற்றியமைக்கும் நெகிழ்வுத்தன்மையுடன் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.


— புதிய தொழிலாளர் சட்டங்கள், முதலாளிகள் நிலையான கால வேலைவாய்ப்பு (Fixed Term Employment (FTE)) மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கின்றன. அவர்களின் வணிகத் தேவைகள் அல்லது பருவகால வேலைகளைப் பொறுத்து, தொழிலாளர்களை எவ்வளவு காலம் வேலைக்கு அமர்த்துவது என்பதை நிறுவனங்கள் தீர்மானிக்கலாம்.



- நிலையான கால வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் ஒரு வருடம் தொடர்ச்சியான பணிக்குப் பிறகு பணிக்கொடைக்கு தகுதி பெறுவார்கள் என்று அமைச்சகம் கூறியது. தற்போது, ​​ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவைக்குப் பிறகு பணிக்கொடை (gratuity) வழங்கப்படுகிறது.


- ஊதிய சட்டம் ஒரு தொழிலாளியின் சம்பளம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதை மாற்றுகிறது. இது அடிப்படை ஊதியப் பங்கை அதிகரிக்கிறது. இதனால் தொழிலாளர்கள் சிறந்த சமூகப் பாதுகாப்பு சலுகைகளைப் பெற முடியும். குறிப்பாக, சேவைத் துறை உள்ள தொழிலாளர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் தேவையான பாதுகாப்பை வழங்க முடிடியும்.


- தற்போதைய அரசாங்கத்தின் நலத்திட்டங்களின் வரம்பிலிருந்து தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதையும் இந்த சட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. சமூகப் பாதுகாப்புக் குறியீட்டின்படி, கிக் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தள ஒருங்கிணைப்பாளர்கள் (aggregators) சமூகப் பாதுகாப்பிற்காக ஆண்டு வருவாயில் 1-2 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். மொத்த பங்களிப்பு தள ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 5 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் வரையறைகளை இறுதி செய்வதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


— மனிஷ் சபர்வால்: நான்கு தொழிலாளர் சட்டங்களும் சரியானவை அல்ல, அதில் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். இருப்பினும், இந்தியாவில் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதில் அவை ஒரு முக்கிய நடவடிக்கையாகும். சட்டங்கள் எளிமையானதாகவும், அதிகப்படியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை விட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும் எதிர்காலத்தையும் அவை காட்டுகின்றன என்று எழுதி இருக்கிறார்.


— தொழிலாளர் சட்டங்களை அறிவிப்பது பின்தங்கிய மாநிலங்களுக்கு உதவுகிறது. ஏனெனில், அவர்களின் இடம்பெயர்வு - மக்களை வேலைகளுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக வேலைகளுக்கு அழைத்துச் செல்வது - கடவுளின் விருப்பம் அல்ல.


— பீகாரில் பெரும்பாலான மக்கள் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் அல்லது சுயதொழில்களில் வேலை செய்கிறார்கள். இதனால் அவர்களால் வாழ்வதற்கான போதுமான வருமானத்தை பெற முடியாது. முக்கியப் பிரச்சனை என்னவென்றால், பீகாரில் உற்பத்தி, நல்ல ஊதியம் தரும் வேலையை வழங்கும் போதுமான வணிகங்கள் அல்லது தொழில்கள் இல்லை.


— புதிய தொழிலாளர் சட்டங்கள் 1,228 பிரிவுகளை 480-ஆகவும், 1,436 விதிகளை 351-ஆகவும், 84 பதிவேடுகளை 8-ஆகவும், 31 அட்டவணைகளை 1 ஆகவும், 8 பதிவேடுகளை 1-ஆகவும், 4 உரிமங்களை 1-ஆகவும் குறைக்கின்றன. இது ஆயிரக்கணக்கான இணக்க நடவடிக்கைகளை ஆயுதமாக்கிய 65 பிரிவுகளை குற்றமற்றவையாக (decriminalise) மாற்றியுள்ளன.


— இது வேலை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது. பெண்கள் மீதான நியாயமற்றக் கட்டுப்பாடுகளை நீக்குகிறது. மேலும், மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகைகளின் பெயர்வுத்திறனை (portability of benefits) செயல்படுத்துகிறது.


- தொழிலாளர் குறியீடுகள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பை ஏற்றுக்கொள்கின்றன. அரசாங்கம் முக்கியமாக இரண்டு விஷயங்களை மட்டுமே நம்பியிருக்கும்: அவை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், மற்றும் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டங்கள் ஆகும்.


— கடந்தகாலத்தில், சுற்றறிக்கைகள், அரசாங்க உத்தரவுகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்கள், குறிப்புகள், கொள்கைகள் மற்றும் பல போன்ற பல வேறுபட்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இது பெரும்பாலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பொறுப்புணர்வைக் குறைத்தது, சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தியது.


— இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் நமிகவும் தீங்கு விளைவிக்கும், குறிப்பாக, சிறு வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. பெரிய நிறுவனங்களுக்கு பணம் மற்றும் தொடர்புகள் இருந்ததால் அவற்றைக் கையாள முடிந்தது. இந்தச் சட்டங்கள் பல சீன தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு இடம்பெயர்வதைத் தடுத்தன.


- இந்தச் சட்டங்கள் இந்தியாவின் தொழிலாளர்களில் 50% பேரை குறைந்த ஊதியம் பெறும் சுயதொழில் அல்லது விவசாய வேலைகளைச் செய்ய வைத்தன. பெரும்பாலும் தங்களைத் தாங்களே சுரண்டின. சட்டங்கள் எழுதப்பட்ட, விளக்கப்பட்ட விதம் மற்றும் அமல்படுத்தப்பட்ட விதத்தில் ஏற்பட்ட ஊழல் மற்றும் குழப்பம், சட்டத்தின் ஆட்சியின் மீதான மக்களின் மரியாதையை இழக்கச் செய்தன.


உங்களுக்குத் தெரியுமா?


— முன்னதாக, இந்தியாவில் மிகவும் சிக்கலான மற்றும் பழைய தொழிலாளர் சட்டங்கள் அதிகமாக இருந்தன. இதனால் வணிகங்கள் விதிகளைப் பின்பற்றி அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது கடினமாக இருந்தது. கிக் தொழிலாளர்கள், இயங்குதள தொழிலாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் (Micro, Small, and Medium Enterprises (MSME’s)) மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற பல தொழிலாளர்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பைப் பெறவில்லை. வெவ்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த தொழிலாளர் சட்டங்களை மாற்றத் தொடங்கின. இது குழப்பமான விதிகளின் கலவையை உருவாக்கியது. எனவே, இந்த முழு அமைப்பையும் எளிமைப்படுத்தவும் மேம்படுத்தவும் புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.


— தொழிலாளி (Labour) என்பது ஒரு பொதுப் பட்டியல் பாடமாகும். மேலும், பெரும்பாலான மாநிலங்கள் நான்கு சட்டங்களுடன் இணைக்கப்பட்ட விதிகளை இறுதி செய்திருந்தாலும், நாடு முழுவதும் செயல்படுத்தல் போதிய அளவில் இல்லை. இந்த தாமதம் தொழிலாளர்களுக்கான சீரற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் பல மாநிலங்களில் செயல்படும் முதலாளிகளுக்கு இடையே சிக்கலான தன்மைக்கு வழிவகுக்கிறது.


Original Article: How do the Labour Codes address issues related to gig and platform workers in India?


Share:

ஆளுநரின் தன்னிச்சை அதிகாரத்தின் விரிவு -ஆர். மோகன்

உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை, ஆளுநரின் தன்னிச்சை அதிகாரத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், அதை நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாகவும் ஆக்கியுள்ளது.


“ஆனால், அரசியிடம் (Queen) அப்படிப்பட்ட வீட்டோ (தடை) அதிகாரம் இல்லை. இரு அவைகளும் ஒருமனதாக ஒரு சட்டத்தை அவருக்கு அனுப்பினால், அவர் தன் மரணம் தொடர்பான ஆவணத்தில்கூட கையெழுத்திட வேண்டும். அவருக்குச் சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாகக் கூறுவது கடந்த காலத்தின் கற்பனையான விஷயம் ஆகும் (The English Constitution, Walter Bagehot, 1865).”


அரசியலமைப்பின் பிரிவு 143-ன் கீழ் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது. இந்தக் கேள்விகள் முக்கியமாக, அரசியலமைப்பின் பிரிவு 200-ல் விளக்கப்பட்டுள்ளபடி, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கையாளும்போது ஒரு மாநில ஆளுநரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியதாக உள்ளது.


ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் தங்கள் விருப்புரிமை அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் பொறுப்புகளை நிறைவேற்றுவது எவ்வாறு மோதல்களுக்கும் வழக்குகளுக்கும் வழிவகுத்தது என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்று கருதப்படுகிறது. 


கவனிக்க வேண்டிய புள்ளிகள் 


தமிழ்நாடு வழக்கில் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர் பரிந்துரையில் நீதிமன்றத்தின்முன் வந்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு கேள்விகள் எழுப்பப்பட்டன. முதலாவதாக, ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்போது, ஒப்புதலை நிறுத்தி வைக்கும்போது மற்றும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒரு மசோதாவை ஒதுக்கி வைக்கும்போது ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் இருக்கிறதா என்பது பற்றியதாக உள்ளது. இரண்டாவதாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவின் மீது ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் எவ்வளவு காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் இருந்தன.


நீதிமன்றத்தின் கருத்தின்படி, ஒரு மசோதா முன்வைக்கப்படும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் மூன்று செயல்பாடுகளில் தன்னுடைய விருப்பப்படி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது, மேலும் அதற்கென்று காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்பட முடியாது. இருப்பினும், நீண்டகாலமாக, விளக்கமளிக்கப்படாமல் மற்றும் வெளிப்படையான செயலின்மை நிகழ்வுகளில், நீதிமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் உள்ளது.


ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்டால், அது மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறபோது, ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ல், மசோதாக்களை அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கவர்னர்-ஜெனரல் மற்றும் ஆளுநருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் வரைவுப் பிரிவு 175-ன் படி, ஒரே ஒரு அவை கொண்ட சட்டமன்றத்திற்கு ஒரு மசோதாவைச் செய்தியுடன் திருப்பி அனுப்பும் இந்த அதிகாரம் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, ஆளுநருக்கு இந்த ‘தன்னிச்சையான அதிகாரத்தை’  வழங்கும் வார்த்தைகளும், ‘ஒரே அவை’ என்ற குறிப்பும் நீக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. 


1985-ஆம் ஆண்டில் அரசமைப்பில் பத்தாவது அட்டவணை  சேர்க்கப்படுவதற்கு முன்னர், மசோதாக்கள் அமைச்சரவையின் ஆதரவின்றி நிறைவேற்றப்படுவதற்கு ஒரு இயல்பான சாத்தியக்கூறு இருந்தது என்று நீதிமன்றம் கருதியது. கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்திற்குப் பிறகு, கட்சி உறுப்பினர்கள் கட்சியின் கொறடாவுக்கு (party whip) எதிராகச் செயல்பட முடியாது என்பதையும் நீதிமன்றம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.


எனவே, மசோதாவை மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்புவதற்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கோ அமைச்சரவை ஆளுநருக்கு அறிவுரை வழங்குவது என்பது சாத்தியமற்றது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இருப்பினும், இந்தக் கருத்து, A மற்றும் B ஆகிய இரண்டு கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கம் சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொள்வதில்லை.


மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது, ​​ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு, கட்சி B கட்சி C கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. அவர்களின் புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கட்சி B மசோதாவை முன்மொழிய வேண்டாம் என்று முடிவு செய்கிறது. எனவே, புதிய அரசாங்கம் இயற்கையாகவே ஆளுநருக்கு மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்த வாய்ப்புள்ளது. இதே போன்ற சூழ்நிலைகளை அரசியலமைப்பு ஆலோசகர் பி.என். ராவ் முன்னர் குறிப்பிட்டிருந்தார். இவை அனைத்தும் பிரிவு 200-ன் கீழ் எந்த மறைக்கப்பட்ட விருப்புரிமை அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்கின்றனர். 


உதவி மற்றும் ஆலோசனை குறித்து


அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு சில உள்ளார்ந்த விருப்புரிமை இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இல்லையெனில், அரசியலமைப்பிற்கு முரணான ஆலோசனையை அமைச்சரவை வழங்கினாலும், ஆளுநர் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறியுள்ளது. 


இங்கே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலில், அமைச்சரவை உறுப்பினர்கள் அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு இருப்பதாகப் பிரமாணம் செய்யும் நிலையில், அவர்கள் ஏன் அத்தகைய ஆலோசனையை வழங்குவார்கள்? இரண்டாவதாக, அரசியலமைப்புக்கு முரணான அத்தகைய ஆலோசனை ஆளுநருக்கு வழங்கப்பட்டால், ஆளுநருக்கு அமைச்சரவையின் உதவியும் ஆலோசனையும் தேவையில்லாத பிரிவு 356-ன் கீழ், ஒன்றிய அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்புவதிலிருந்து அவர்/அவள் தடுக்கப்படுகிறாரா? மூன்றாவதாக, அத்தகைய ஆலோசனை மத்திய அமைச்சரவையால் வழங்கப்பட்டால், குடியரசுத் தலைவருக்கு ஏதேனும் தன்னிச்சையான அதிகாரம் உள்ளதா?


சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை, பிரிவு 200-ன் இரண்டாவது நிபந்தனையின் கீழ் மட்டுமே ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது என்றும், அது மிகவும் குறைந்த அளவு தான் என்றும் கூறியது. இதற்கு மாறாக, தற்போதைய ஆலோசனை ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், அதனை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியாததாகவும் ஆக்கியுள்ளது. ஒப்புதல் அளித்தல், நிறுத்தி வைத்தல் மற்றும் செய்திகளை அனுப்புதல் (தனியாக நிறுத்தி வைத்தல் இருக்க முடியாது என்று ஆலோசனை கூறுகிறது) ஆகிய அதிகாரங்கள் விருப்புரிமையின் கீழ் வருபவையாகவும், நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படாத ஒன்றாகவும் இருக்கும்பட்சத்தில், அதன் விளைவு மாநிலங்கள் ஆளுநரின் நிர்வாகத்தின் ஒரு வடிவமாக உருவாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர். 


ஆளுநர் மத்திய அரசு ஊழியர் அல்ல என்பதையும் ஹர்கோவிந் பாண்ட் எதிர். ரகுகுல திலக், 1979 (Hargovind Pant vs Raghukul Tilak, 1979) வழக்கில்  நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், சர்க்காரியா, வெங்கடாசலய்யா மற்றும் பூஞ்சி ஆணையங்கள் பரிந்துரைத்த, ஆளுநர்களை நியமிப்பதற்கான வழிமுறைகள் எதையும் ஒன்றிய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


சொராப்ஜியின் கவனிப்பு


1985-ஆம் ஆண்டில், சாலி சொராப்ஜி (Soli Sorabjee) ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளுக்கு அல்லது அதிக அரசியல் அதிகாரத்தைத் தேடுபவர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்கும் நடைமுறை வளர்ந்து வருவதை வன்மையாகக் கண்டித்தார். இதனால், மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் போது மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.  ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய-மாநில உறவுகள்

குறித்து மூன்று ஆணையங்கள் (Centre-State relations commissions) அளித்த பயனுள்ள பரிந்துரைகளை, இப்போது ஆளுநர்களைக் குறை கூறுபவர்கள் அன்று புறக்கணித்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டுகிறார். 


ஆளுநர்களால் ஏற்படும் மசோதா மீதான நீண்ட காலதாமதங்கள் குறித்து மாநிலங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கான நிலையான காலக்கெடுவை நிர்ணயிக்கும் நடவடிக்கை குறித்த யோசனை எழுந்தது. முன்னாள் கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே, பல்வேறு ஆளுநர்களால் அனுப்பப்பட்ட 74 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். சில மசோதாக்கள் ஏழு, ஆறு, ஐந்து அல்லது மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தன என்றும் கூறினார்.  மேலும், 58 மசோதாக்கள் ஒரு வருடமாக நிலுவையில் இருந்தன. மேலும், கர்நாடகத்தை ஆறு ஆண்டுகள் காத்திருக்க வைத்த பிறகு, அதன் 1983-ஆம் ஆண்டின் கல்வி மசோதா இன்னும் "பரிசீலனையில் உள்ளது" என்று உள்துறை அமைச்சகம் இறுதியாக மாநிலத்திற்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். (Mainstream, June 8, 1991).


மூன்று ஆணையங்களும் தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்கப் பரிந்துரைத்தன. யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையே சுமூகமான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பில், ஒருமித்த கருத்தை எட்டி, சட்டப்பிரிவு 200-ஐ திருத்தி காலக்கெடுவை ஏன் சேர்க்கக்கூடாது? என்று வலியுறுத்தப்படுகிறது. இன்று ஆளும் கட்சியாக இருப்பவர் நாளைக்கு எதிர்க்கட்சியாக இருக்கலாம், மற்றும் அதற்கு நேர்மாறாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். 


தமிழ்நாட்டு வழக்கில் இருந்த முந்தைய நிலைப்பாட்டை நீதிபதிகளின் ஆலோசனை முடிவு தற்போது மாற்றியமைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டபூர்வமாக ஆலோசனையுடன் ஒன்றிணைக்கப்படாவிட்டாலும், இந்த ஆலோசனைக்கு வலுவான வாதத்திறன் மதிப்பு உள்ளது என்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநர்கள் தங்கள் சொந்த விருப்ப அதிகாரங்களை தெளிவான காலக்கெடுக்கள் இல்லாமல் பயன்படுத்த அனுமதித்தால் நிலைமை மாறுமா? என்பது மட்டுமே இப்போதைய முக்கியக் கேள்வி என்கின்றனர். 


ஆர். மோகன், இந்திய வருவாய் பணித்துறையின் முன்னாள் அதிகாரி.


 Original Article: The amplitude of gubernatorial discretion 


Share:

உழைப்பும் மரியாதையும்: நான்கு தொழிலாளர் குறியீடுகள், எதிர்கொள்ளவிருக்கும் பாதை குறித்து . . .

வேலைவாய்ப்பு, தொழில் உறவுகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை வணிக மற்றும் முதலீட்டு சமூகம் ஒரு முக்கிய சீர்திருத்தமாகப் பார்க்கிறது. நாடாளுமன்றம் இந்தச் சட்டங்களை 2019-2020-ஆம் ஆண்டில் நிறைவேற்றினாலும், பல்வேறு காரணங்களால் இந்தச் சட்ட அமலாக்கம் தாமதமானது என்கின்றனர். இந்தச் சட்டங்கள் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்து, நிறுவனங்களின் வருடாந்திர இணக்கச் சுமையை வெகுவாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் தேவையான விதிகளை வகுக்கவும், ஏற்றுக்கொள்ளவும் ஒன்றிய அரசு உதவும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்கனவே தங்கள் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன.  இந்தியா, அதன் பழைய தொழிலாளர் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதாக, தாராளமய சந்தையின் ஆதரவாளர்கள் (Free market advocates) நீண்ட காலமாகக் கருதுகின்றனர். புதிய சட்டங்கள் முதலாளி-தொழிலாளர் உறவுகள், சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஊதியக் கட்டமைப்புகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 மில்லியன் மக்கள் பணிபுரியும் வயதை அடைவதால், வளர்ந்துவரும் தனது இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இந்தியா ஏராளமான வேலைகளை உருவாக்க வேண்டும். இந்தப் போக்கு பல ஆண்டுகளுக்குப் பயனளிக்கும் என்று தெரிவிக்கின்றனர். இந்த உயர்ந்துவரும் பணியாளர்களை ஈர்க்க, 2030-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 78.5 லட்சம் வேளாண் அல்லாத வேலை வாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்று 2023-24 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு தெரிவிக்கின்றது.


தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்படுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்ட போதிலும், தொழிற்சங்கங்களால் எழுப்பப்பட்ட கவலைகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படவில்லை. தொழிலாளர் பிரதிநிதிகள், இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையத்தின் (2002-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது) தொழிலாளர்களுக்கு ஆதரவான பரிந்துரைகளை அரசாங்கம் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக, முதலாளிகளுக்குச் சாதகமான அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சட்டங்களின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர். அந்தப் பிரச்சினைகள் இப்போது காலாவதியாகிவிட்டன. ஆனால், வேலையின் தன்மை அதிவேகமாக மாற்றமடைந்து வருகிறது. போர்கள், வர்த்தகத் தடைகள் மற்றும் காலநிலைப் பிரச்சினைகளால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மற்றும் தொழில்துறை உற்பத்தித்திறன் இரண்டையும் மேம்படுத்துவது அவசியமாகும். மேலும், தொழிலாளி-முதலாளி இடையிலான ஆரோக்கியமான உறவை உறுதி செய்வது இதற்கு முக்கியமாகும். கிக் பணி (ஊதியத்திற்காகச் செய்யப்படும் எந்தவொரு குறுகிய கால முறைசாரா வேலை) மற்றும் இயங்குதள வேலைகள் (ஒரு டிஜிட்டல் செயலி அல்லது இணையதளம் (உதாரணமாக, uber அல்லது swiggy போன்றவை) மூலம் ஏற்பாடு செய்யப்படும் வேலை) வேலைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை வேலை, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு பற்றிய வழக்கமான வரையறைகளை சீர்குலைத்து வரும் நிலையில், தொழிலாளர் துறையை புத்திசாலித்தனமாகச் சீர்திருத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். 1940-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 46 முறை கூடிய இந்தியத் தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference (ILC)) அதன் பிறகு நடத்தப்படவில்லை. விரிவான முத்தரப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு மட்டுமே தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். எனவே, இந்தத் தொழிலாளர் சட்டங்களைச் சீராக அமல்படுத்துவதை உறுதிசெய்ய, இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 47-வது அமர்வை அரசாங்கம் நடத்துவது தற்போது அவசியமாகிறது. இந்தச் செயல்பாட்டில், முதலாளிகள் மற்றும் ஊழியர்களுடன் சேர்த்து மாநில அரசுகளும் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 


 Original Article: Labour and honour: On the four Labour Codes, the path ahead.


Share:

உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்து எதைக் குறிக்கிறது? -ரங்கராஜன் ஆர்.

 ஏப்ரல் மாதம் 2025-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் விளைவாக குடியரசுத் தலைவரின் குறிப்பால் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னென்ன? உச்சநீதிமன்றம் தனது கருத்தில் தெரிவித்த முக்கிய அம்சங்கள் என்னென்ன? ஆளுநர்கள் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டுமா?


உச்சநீதிமன்றம், அரசியலமைப்பின் 143-வது பிரிவின் கீழ் செய்யப்பட்ட குடியரசுத் தலைவரின் குறிப்பு குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. அதன் கருத்தில், ஏப்ரல் மாதம் 2025-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இரு நீதிபதிகள் அமர்வின் முடிவை அது பெரும்பாலும் நிராகரித்துள்ளது.


குடியரசுத் தலைவரின் குறிப்பு என்ன?


தற்போதைய குறிப்பு, ஏப்ரல் மாதம் 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்திற்கும் தமிழ்நாடு ஆளுநருக்கும் இடையே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பின் விளைவாகும். அதில் மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க மூன்றுமாத காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. அத்தகைய மசோதாக்கள் மீதான ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தனது அசாதாரண அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தி, ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாத, தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு 'ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கருதப்படும்' ('deemed assent') என்கிற அங்கீகாரத்தை வழங்கியது.


சட்டப்பிரிவுகள் 200 மற்றும் 201 எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்பது குறித்து 14 கேள்விகளை இந்தக் குறிப்பு எழுப்பியுள்ளது. அரசியலமைப்பில் எந்த காலக்கெடுவும் குறிப்பிடப்படாதபோது, நீதிமன்றங்கள் காலஅட்டவணைகளை நிர்ணயிக்க முடியுமா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு மசோதா சட்டமாவதற்கு முன்பு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் ஆய்வுசெய்ய முடியுமா என்றும் அரசு கேட்டது. கூடுதலாக, சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள் எவ்வளவு தூரம் நீட்டிக்க முடியும் என்பது குறித்தும் அது தெளிவுபடுத்தக் கோரியது.


தற்போதைய கருத்து என்ன?


உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்தது. இது ஒரு 'செயல்பாட்டுக் குறிப்பு' (functional reference) என்று கூறியது. ஏனெனில், இது முக்கிய அரசியலமைப்பு அதிகாரிகளின் அன்றாட செயல்பாட்டையும், மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு இடையேயான உறவையும் பாதிக்கிறது. இந்த கருத்தின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஒரு மாநிலச் சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றும்போது, ​​ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் மூன்று தேர்வுகள் உள்ளன: அதற்கு ஒப்புதல் அளிப்பது, அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது, அல்லது கருத்துகளுடன் அதனைத் திருப்பி அனுப்புவது ஆகும். ஆளுநர் இந்தத் தேர்வுகளுக்கு இடையே சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியதில்லை. பொதுவாக, நீதிமன்றங்கள் இம்முடிவுகளை கேள்வி கேட்க முடியாது. ஆனால், ஆளுநர் எந்த விளக்கமும் இன்றி மிக நீண்டகாலம் தாமதித்தால், நீதிமன்றங்கள் ஆளுநரைச் செயல்பட உத்தரவிடலாம். அரசியலமைப்புச் சட்டம் காலக்கெடுவை நிர்ணயிக்காததால், ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்களும் காலக்கெடுவை உருவாக்க முடியாது. பிரிவுகள் 200 மற்றும் 201-ன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள், அந்த மசோதா சட்டமாவதற்கு முன்பு, நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட முடியாது. மேலும், ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்குப் பதிலாக உச்சநீதிமன்றம் பிரிவு 142-ஐப் பயன்படுத்த முடியாது. எனவே, "நிகழ்நிலை ஒப்புதல்" (deemed assent - தாமதத்தால் தானாகவே ஒப்புதல் ஆனது) என்ற கருத்து அனுமதிக்கப்படவில்லை.


பிரச்சினைகள் என்ன?


சர்க்காரியா கமிஷன் (Sarkaria Commission) (1987) ஒரு மசோதா தெளிவாக அரசியலமைப்பிற்கு முரணாக இருந்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டிய அரிதான நிகழ்வுகளில் மட்டுமே ஆளுநர் தனது தன்னிச்சையான அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என்று கூறியது. ஷம்ஷேர் சிங் (1974) மற்றும் நபாம் ரெபியா (2016) போன்ற வழக்குகளில், ஆளுநர்கள் வழக்கமாக அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தற்போதைய தீர்ப்பில், ஒரு மசோதா ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பப்படும்போது, பிரிவு 200-ன் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரங்களுக்குள் உட்படும் என்று முந்தைய வழக்குகளை நீதிமன்றம் விளக்கியுள்ளது. இது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் சட்டமன்ற அதிகாரத்தை பலவீனப்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

 

பஞ்ச் கமிஷன் (Punchhi Commission) (2010), ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து ஆறு மாதங்களுக்குள் அவர் முடிவெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. கே. எம். சிங் வழக்கில் (2020), அரசியலமைப்பு எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், சபாநாயகர்கள் தகுதி நீக்க மனுக்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிப்பதை தமிழ்நாடு வழக்குத் தீர்ப்பும் ஆதரித்தது. ஆனால், தற்போதைய கருத்து இந்த நிலைப்பாட்டை மறுத்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.


முன்னேறிச் செல்வதற்கான வழி என்ன?


நமது கூட்டாட்சி அமைப்பில் உள்ள முக்கியப் பிரச்சினை என்னவென்றால், ஆளுநர் பதவி மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டது என்கிற கருத்து நிலவுகிறது.  ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர், தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க உதவ வேண்டியவர். ஆனால், கூட்டாட்சி என்பதும் நமது அரசியலமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் முடிவுகளை ஆளுநர்கள் தடுப்பதற்கான ஒரு காரணமாக இந்தப் பதவி பயன்படுத்தப்படக் கூடாது என்று கருத்து தெரிவிக்கின்றனர். நியமிக்கப்படும் ஆளுநர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு சரியான நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


ஆர். ரங்கராஜன் ஒரு முன்னாள் IAS அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் தற்போது ‘Officers IAS Academy’-இல் பயிற்சி அளிக்கிறார்.


Original Article: What does the SC’s advisory opinion imply?


Share:

53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்றார். தலைமை நீதிபதி எவ்வாறு நியமிக்கப்படுகிறார்? -ரோஷ்னி யாதவ்

 தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி சூர்யகாந்த் இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

தற்போதைய செய்தி?


நவம்பர் 24 அன்று தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்றார். மேலும், பிப்ரவரி 9, 2027 வரை தலைமை நீதிபதி பதவியில் நீடிப்பார். குறிப்பாக, மற்ற நிதிபதிகளுடன் ஒப்பிடும் போது சூர்யகாந்தின் பதவி காலம்  நீண்டதாக இருக்கும். இது அவரது அமர்வுக்கு பல உயர்மட்ட அரசியலமைப்பு மற்றும் சமூக வழக்குகளை தீர்ப்பதற்கான நீட்டிக்கப்பட்ட வாய்ப்பை வழங்கும். இந்த சூழலில், இந்தியாவின் உச்ச நீதிபதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார், நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் குறித்த முக்கியமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. பிரிவு 124(1) இந்தியாவில் ஒரு உச்ச நீதிமன்றம் இருக்க வேண்டும் என்றும் அதில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது.



2.  ஒவ்வொரு உச்ச நீதிமன்ற நீதிபதியையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர்களை நியமிப்பதற்கு முன், குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை அவசியம் என்று கருதி அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். தலைமை நீதிபதி அல்லாத வேறு ஒரு நீதிபதியை நியமிக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நிதிபதியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரிவு 124(2) கூறுகிறது.



3. குடியரசுத் தலைவர் நீதிபதிகளை நியமிக்கிறார். இதைச் செய்வதற்கு முன், அவர் அவசியம் என்று கருதினால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் சில நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இருப்பினும், இந்த நியமனங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சரியான நடைமுறையை அரசியலமைப்பு விளக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை.




4. மரபுப்படி, உச்ச நீதிமன்றத்தில் மிக நீண்ட காலம் பணியாற்றிய நீதிபதியே அனுபவத்தின் அடிப்படையில்  தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இந்த செயல்முறை இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான 'நடைமுறை குறிப்பாணை' (Memorandum of Procedure (MoP)) எனப்படும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது.


5. இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றத்தின் மிகவும் மூத்த நீதிபதியில் இருந்து, அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடைமுறை குறிப்பாணை (MoP) கூறுகிறது. 1999ஆம் ஆண்டு இந்த விதி இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, தற்போதைய தலைமை நீதிபதிக்குப் பிறகு மூத்த நீதிபதி அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்பது ஏற்கனவே ஒரு மரபாக இருந்தது.


6. இந்திய தலைமை நீதிபதி நியமன செயல்முறை, சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரத் துறை (Union Minister of Law, Justice and Company Affairs) அமைச்சர், தற்போதைய தலைமை நீதிபதியிடம் அடுத்த தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பரிந்துரை கேட்கும்போது செயல்முறை தொடங்குகிறது என்று அமைச்சகம் கூறுகிறது. இது வழக்கமாக தற்போதைய தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடக்கும். எனவே, அக்டோபர் 27 அன்று, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார்.


7. இந்திய தலைமை நீதிபதியின் பரிந்துரையைப் பெற்ற பிறகு, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அந்தப் பரிந்துரையை பிரதமரிடம் சமர்ப்பிப்பார்; பிரதமர் அதன்படி அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார். மரபுப்படி, அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றிய அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும். இருந்தபோதிலும், அவர்கள் வழக்கமாக தற்போதைய தலைமை நீதிபதியின் பரிந்துரையைப் பின்பற்றுவார்கள்.





மூன்று நீதிபதிகள் வழக்குகள் (Three Judges Cases)


கொலீஜியம் என்பது உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும் முறைமையாகும். இது உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளால் உருவானது. இவை “நீதிபதிகள் வழக்குகள்” என அழைக்கப்படுகின்றன.


முதல் நீதிபதிகள் வழக்கு: 'எஸ்.பி. குப்தா Vs. யூனியன் ஆஃப் இந்தியா' (SP Gupta Vs Union of India), 1981ஆம் ஆண்டு வழக்கில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதிகள் நியமனம் குறித்த இறுதி முடிவை நிர்வாகக் குழுவிற்கு வழங்கியது. உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவு பிரிவு 217-ல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு அரசியலமைப்புச் அதிகாரம் வழங்கிய எந்த ஒரு நபரிடமும் இருந்தும் (constitutional functionaries) வரலாம், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமிருந்து பரிந்துரை பெற வேண்டிய தேவையில்லை என்று தீர்ப்பளித்தது.


— பிரிவுகள் 124 மற்றும் 217-ல் பயன்படுத்தப்படும் "ஆலோசனை" (consultation) என்ற சொல் "ஒப்புதல்" (concurrence) என்று அர்த்தமல்ல என்றும் கூறியது. எனவே, குடியரசுத்தலைவர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பார் என்றாலும், அவரது முடிவு அவர்கள் அனைவருடனும் உடன்படுவதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசியலமைப்பு அமர்வு கூறியது.


— முதல் நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் அதிகார சமநிலையை நிர்வாகத்திற்கு சாதகமாக மாற்றியது. இந்த நிலை அடுத்த 12 ஆண்டுகளுக்கு நீடித்தது..


இரண்டாவது நீதிபதிகள் வழக்கு: 1993ஆம் ஆண்டு 'உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்-பதிவு சங்கம் Vs இந்திய ஒன்றியம்' (‘The Supreme Court Advocates-on-Record Association Vs Union of India’) வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 'எஸ்.பி. குப்தா' வழக்கில் தீர்ப்பை ரத்து செய்து, உயர் நீதித்துறையில் நீதிபதிகளை நியமிப்பதற்கும் இடமாற்றம் செய்வதற்கும் 'கொலீஜியம் அமைப்பு' (Collegium System) என்ற ஒரு குறிப்பிட்ட நடைமுறையை வகுத்தது. மேலும், தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் சேர்ந்து முடிவுகளை எடுப்பார் என்றும், அவர்கள் கொலீஜியம் அமைப்பை உருவாக்குவார்கள் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததுது.




மூன்றாவது நீதிபதிகள் வழக்கு: 1998ஆம் ஆண்டு, அப்போதைய குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன், "ஆலோசனை" என்ற வார்த்தையின் பொருள் குறித்து அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் (ஆலோசனை அதிகார வரம்பு) உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு தனது குறிப்பை வழங்கினார். தலைமை நீதிபதியின் கருத்தை உருவாக்குவதில் "ஆலோசனை" என்பது பல நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டுமா அல்லது தலைமை நீதிபதியின் ஒரே கருத்து மட்டுமே "ஆலோசனையாக” இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.


- இதற்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இரண்டு நீதிபதிகளுக்குப் பதிலாக, தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளால் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. முன்மொழியப்பட்ட பெயர் வந்த உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்  கூறியது.


நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறை பெரும்பாலும் தெளிவாக இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. 

அதிகாரப்பூர்வ அமைப்பு அல்லது செயலகம் எதுவும் இல்லை. மேலும், தகுதி அல்லது தேர்வுக்கான தெளிவான விதிகள் இல்லாமல் மறைமுகமாக இந்த செயல்முறை செய்யப்படுகிறது.


தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (National Judicial Appointments Commission (NJAC) Act)) சட்டம்


1. 2000ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.என். வெங்கடாச்சலியா ஆணையம், கொலீஜியத்திற்கு பதிலாக ஒரு தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்க பரிந்துரைத்தது.


2. ஆகஸ்ட் 2014-ல், இந்திய நாடாளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் 99வது திருத்தத்தின் மூலம், தேசிய நீதித்துறை நியமன ஆணைய (National Judicial Appointments Commission (NJAC)) சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்கள் தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஒரு (independent commission) அமைப்பை உருவாக்கியது. இது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் பணியை ஏற்கனவே இருந்த கொலீஜியம் அமைப்பிலிருந்து எடுத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.


3. தேசிய நீதித்துறை நியமன ஆணையமானது இந்திய தலைமை நீதிபதியை அதிகாரபூர்வத் தலைவராகவும், இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிகாரபூர்வ உறுப்பினர்களாகவும், ஒன்றியசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அதிகாரபூர்வ உறுப்பினராகவும், குடிமை சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பிரபல நபர்களையும் உள்ளடக்கி இருந்தது. அவர்களில் ஒருவர் தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் பரிந்துரைக்கப்படுவார். பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்ககுடியினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகங்கள் அல்லது பெண்களிடமிருந்து பரிந்துரைக்கப்படுவார்.


4. உச்ச நீதிமன்றம் இது போன்ற சட்டங்கள் செல்லாது என்று அறிவித்த பிறகு, அந்தச் சட்டங்கள் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரத்து செய்யப்பட்டன.


Original Article: Justice Surya Kant takes oath as 53rd CJI. How is CJI appointed? 


Share: