1924-ஆம் ஆண்டின் பெலகாவி அமர்வு ஏன் வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் : 


காங்கிரஸின் தற்போதைய நிலையானது 1924-ஆம் ஆண்டைப் போன்று உள்ளதாகவும், மேலும் இந்த நிலை காங்கிரஸுக்கு 1924-ஆம் ஆண்டிலிருந்தது போன்ற மறுமலர்ச்சிக்கான தேவை உள்ளது  காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேலும், கட்சியானது முக்கியமான மாற்றங்களைச் செய்து வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று கட்சித்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கட்சி தீவிர சுயபரிசோதனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உங்களுக்கு தெரியுமா ? 


1. மகாத்மா காந்தி பிப்ரவரி 1924-ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின், சுதந்திரப் போராட்டத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒற்றுமை இல்லாததால் அவர் அதிருப்தி அடைந்தார். இதை நிவர்த்தி செய்ய, அவர் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 8, 1924 வரை 21 நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இரு சமூகங்களுக்கிடையில் பிளவைக் குறைப்பதே அவரது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. மேலும், காங்கிரஸுக்குள் நிலவும் பரவலானப் பிரச்சினையையும் தீர்க்க விரும்பினார்.


2. கட்சித் தலைவராக காந்தி தலைமையில் நடைபெற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு இதுவாகும். காந்தி டிசம்பர் 1924-ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 1925-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். முந்தைய பம்பாய் மாநிலத்தில் நடந்த இந்த அமர்வில்தான் காந்தி அகிம்சை, வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் "சுயராஜ்யம் (சுயாட்சி)" பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார். 


3. ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், காந்தி தனது அகிம்சை பற்றிய யோசனையை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த இயக்கம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். ஏனென்றால், பிப்ரவரி 1922-ம் ஆண்டில் சௌரி சௌரா காவல் நிலைய சம்பவத்திற்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. இருப்பினும், அகிம்சையே சுதந்திரத்திற்கான ஒரு பயனுள்ள பாதையாக இருந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.


4. இந்து-முஸ்லிம் ஒற்றுமை மற்றும் தீண்டாமையை எதிர்த்துப் போராடுவது குறித்து பேசிய காந்தி, தீண்டாமை சுயராஜ்யத்திற்கு மற்றொரு தடையாக உள்ளது என்று எடுத்துரைத்தார். "இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடைவதைப் போலவே சுயராஜ்யத்திற்கு தீண்டாமையை அகற்றுவது அவசியம் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, காந்தி இதை இந்து பிரச்சினை என்று அழைத்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இந்துக்கள் சுயராஜ்ஜியத்தைக் கோர முடியாது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.


5. சுயராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை, இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை லண்டனில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும், மாகாண அரசாங்கங்கள், சட்டமன்றங்கள் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்துஸ்தானி இருக்க வேண்டும் என்றும் காந்தி பரிந்துரைத்தார். 


6. மக்கள் "சரியான சத்தியாக்கிரகிகளாக" மாற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். "சத்தியாகிரகம் என்றுமே தோல்வியடைவதில்லை என்றும், உண்மையை மெய்ப்பிப்பதற்கு ஒரே ஒரு சரியான சத்தியாகிரகி போதும் என்றும் நான் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறேன் என்று குறிப்பிட்டார். 


7. இந்த அமர்வில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், சரோஜினி நாயுடு மற்றும் கிலாபத் இயக்கத் தலைவர்கள் முகமது அலி ஜவ்ஹர் மற்றும் சவுகத் அலி உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். 


8. இந்த அமர்வு விவசாயிகளின் உணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக இருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இதன் விளைவாக கர்நாடகா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கிராமத் தொழில்கள் ஈர்க்கப்பட்டு காதி திட்டம் பரவியது. காங்கிரஸ் தலைமையிலான முன்னெடுப்புகளில் விவசாயிகளின் பங்கேற்பு அதிகளவில் இணைந்ததையும் இது மேற்கோள்காட்டியது.




Original article:

Share:

தீண்டாமை குறித்து அம்பேத்கர்-காந்தி விவாதம் -திலீப் பி.சந்திரன்

 தீண்டத்தகாதவர்களின் அரசியல் உரிமைகள் குறித்து மகாத்மா காந்திக்கும் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையிலான முக்கிய கருத்தியல் வேறுபாடுகள் யாவை? 'ஹரிஜனங்கள்' மற்றும் 'தலித்துகள்' என்ற சொற்கள் சாதி மற்றும் சமூக சீர்திருத்தம் குறித்த அவர்களின் மாறுபட்ட தத்துவங்களை அவை எவ்வாறு பிரதிபலிக்கின்றன? 


அம்பேத்கர் காந்தியை முதன்முதலில் சந்தித்தபோது


காந்தியின் அழைப்பின் பேரில், அம்பேத்கர் காந்தியை முதன்முதலில் 1931 ஆகஸ்ட் 14 அன்று மகாராஷ்டிராவில் உள்ள மணி பவனில் சந்தித்தார். ஆனால், காந்தி அவருக்கு அலட்சியமாக பதிலளித்தார்.  சிறிது நேரம் அவர் இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது காலம் கழித்து, தீண்டத்தகாதோரின் பிரச்சினைகள் குறித்து அம்பேத்கருக்கும் காங்கிரசுக்கும் எதிரான அம்பேத்கரின் குறைகளுக்கு காந்தியின் பதிலுடன் உரையாடல் தொடங்கியது.  


அம்பேத்கர் பெரிய தலைவர்களையோ அல்லது மகாத்மாக்களையோ நம்பவில்லை என வெளிப்படுத்தினார். மேலும், தீண்டாமைக்கு தீர்வு காண காங்கிரசை சிறிய முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டதாக விமர்சித்தார். “காந்திஜி, எனக்கு தாயகம் இல்லை” என்றும், “சுயமரியாதையுள்ள எந்த தீண்டத்தகாதவனும் இந்த மண்ணைப் பற்றி பெருமைப்பட மாட்டான்” என்றும் அவர் கூறினார். அம்பேத்கர் நாட்டின் சுதந்திரத்தை விட தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.


புறப்படுவதற்கு முன், அம்பேத்கர் காந்தியிடம் முதல் வட்டமேசை மாநாட்டில்  (first Round Table Conference) பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பது குறித்த அவரது கருத்தை காந்தியிடம் கேட்டார். அம்பேத்கர் மாநாட்டில் கலந்து கொண்டார், காந்தியும் காங்கிரஸும் அதை புறக்கணித்தனர். காந்தி, தீண்டத்தகாதவர்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தாலும், அவர்களுக்கென தனித் தொகுதிகளை எதிர்த்தார். மேலும், இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் என்று நம்பினார்.

 

1931-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் போது, ​​தீண்டத்தகாதவர்களின் அரசியல் உரிமைகள் குறித்து காந்திக்கும் அம்பேத்கருக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. “தீண்டத்தகாதவர்களின் அரசியல் உரிமைகளைப் பற்றி பேசுபவர்களுக்கு அவர்களின் இந்தியா தெரியாது” என்று காந்தி கூறியதை மேற்கோள் காட்டினார்.

 

தலித்துகளுக்கான தனித் தொகுதிகளை காந்தி கடுமையாக எதிர்த்தார். "தீண்டாமை வாழ்ந்ததை விட இந்து மதம் அழிந்து போவதை நான் விரும்புகிறேன்" என்று காந்தி கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து தீண்டத்தகாதவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அம்பேத்கரின் கூற்றையும் அவர் ஏற்கவில்லை. அது இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் என்று அஞ்சினார்.


இருப்பினும், காந்தியின் அணுகுமுறை மற்றும் தீண்டாமையை ஒழிப்பதில் காங்கிரஸின் அர்ப்பணிப்பு குறித்து அம்பேத்கர் சந்தேகம் கொண்டிருந்தார். இந்து ஒற்றுமையை விட பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் சுயமரியாதை மற்றும் அரசியல் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த விவாதம் அவர்களின் மாறுபட்ட தத்துவங்களைக் காட்டியது. காந்தி தீண்டத்தகாதவர்களை "ஹரிஜன்கள்" (கடவுளின் குழந்தைகள்) என்று அழைத்தார். அதே நேரத்தில் அம்பேத்கர் "தலித்துகள்" (உடைந்த மக்கள்) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.  வட்ட மேசை மாநாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீர்வு இல்லாமல் முடிந்தது.


காந்தியின் எதிர்ப்பையும் மீறி, தலித் தலைவர்கள் தலித்துகளுக்கு தனித் தொகுதிகளைக் கோரி வந்தனர். அம்பேத்கர் ஆங்கிலேய அமைச்சரவை உறுப்பினர்களுடன் இது பற்றி பேச லண்டன் சென்றார். இறுதியில், ஆங்கிலேய பிரதம மந்திரி ராம்சே மெக்டொனால்ட் 1932-ஆம் ஆண்டு கம்யூனல் விருதை (Communal Award) அறிவித்தார். இது மெக்டொனால்டு விருது (MacDonald Award) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருது பட்டியலிடப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள் உட்பட பிற சிறுபான்மையினருக்கும் தனித் தொகுதிகளை வழங்கியது.


இதற்குப் பதிலடியாக, பூனாவில் உள்ள எரவாடா சிறையில் இருந்த காந்தி, தீண்டத்தகாதவர்களுக்கான தனித் தொகுதிகள் ரத்து செய்யப்படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். காந்தியின் உண்ணாவிரதத்திற்கு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி அம்பேத்கர் செப்டம்பர் 24, 1932 அன்று பூனா ஒப்பந்தத்தில் (Poona Pact) கையெழுத்திட்டார். காந்தியின் சார்பாக மதன் மோகன் மாளவியா கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுடன் தனித் தொகுதிகளை மாற்றியது.


உடன்படிக்கைக்குப் பிறகு, காந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராட தீண்டாமை எதிர்ப்பு கழகத்தை (Anti-Untouchability League) உருவாக்க முன்மொழிந்தார். இருப்பினும், சாதி மற்றும் சமூக சீர்திருத்தம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக காந்தி மற்றும் அம்பேத்கர் இடையே பதற்றம் நீடித்தது.


அம்பேத்கர் 1936-ஆம் ஆண்டில் சாதி ஒழிப்பு (Annihilation of Caste) என்ற நூலை வெளியிட்டார். இது காந்தியை கோபப்படுத்தியது. ஏனெனில், அது இந்து மதத்தையும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் விமர்சித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, காந்தி தனது செய்தித்தாளில் (ஹரிஜன் 11 மற்றும் 18 ஜூலை 1936இல்) இரண்டு கட்டுரைகளை வெளியிட்டார். அந்தக் கட்டுரைகள் டாக்டர். அம்பேத்கரின் குற்றச்சாட்டு என்றதலைப்பில் இருந்தது. அம்பேத்கர் விளம்பரம் தேடுவதாக காந்தி குற்றம் சாட்டினார். 


மதத்திற்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை என்று காந்தி கூறினார். அம்பேத்கர் வேதங்களை தவறாக மேற்கோள் காட்டியதற்காகவும், துறவிகள் மற்றும் ஞானிகளின்  விளக்கங்களை புறக்கணிப்பதாகாகவும் அவர் குற்றம் சாட்டினார். காந்தி அம்பேத்கரை 'இந்து மதத்திற்கு சவால்' என்று கூட அழைத்தார். காந்தியின் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், சாதி ஒழிப்பு ஒரு முக்கியமான புத்தகமாக இருந்தது. பூனா ஒப்பந்தத்தில் ஏற்பட்ட அம்பேத்கரின் ஏமாற்றத்தை இது பிரதிபலிக்கிறது.


1937-ஆம் ஆண்டு வெளியான சாதி ஒழிப்பு (Annihilation of Caste) புத்தகத்தில், அம்பேத்கர் காந்தியின் பதில்களைச் சேர்த்து விரிவான பதிலை அளித்தார். இந்துக்களை சிந்திக்க வைப்பதே தனது நோக்கமே தவிர விளம்பரம் பெறுவது அல்ல என்று விளக்கினார். இந்து நூல்களின் நம்பகத்தன்மை மற்றும் விளக்கம் பற்றிய காந்தியின் சந்தேகங்களை அம்பேத்கர் நிராகரித்தார். உண்மையான நூல்களுக்கும் மற்றும் பிற்காலத்தில் அந்த நூல்களில் இணைக்கப்பட்ட கருத்துகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை பொதுமக்களால் சொல்ல முடியாது என்று அவர் வாதிட்டார்.


  துறவிகளின் அதிகாரம் குறித்து அம்பேத்கர் சந்தேகம் கொண்டிருந்தார். ஏனெனில், அவர்கள் சாதி அமைப்பு மற்றும் தீண்டாமையை ஒருபோதும் எதிர்க்கவில்லை. துறவிகளும் மகாத்மாக்களும் "கற்றறிந்த சிலரிடமிருந்தும் அறியாத பலரிடமிருந்தும் வித்தியாசமாக சாஸ்திரங்களைப் புரிந்துகொள்கிறார்கள்" என்று அவர் கூறினார். அம்பேத்கர் காந்தியை மகாத்மா மற்றும் அரசியல்வாதி என இரட்டை வேடம்  போடுவதாக விமர்சித்தார்.


அம்பேத்கர் காந்தியின் வாதத்தை ஏற்கவில்லை. மதம் அதன் சிறந்த உதாரணங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். அதன் மோசமான நடைமுறைகள் அல்ல. காந்தி வர்ணத்தைப் பற்றிய தனது சொந்த போதனைகளைப் பின்பற்றவில்லை என்றும், வர்ணத்தை சாதியிலிருந்து தெளிவாகப் பிரிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


மதமாற்றம், கிராமக் குடியரசுகள், சத்தியாக்கிரக முறைகள் போன்ற விஷயங்களில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்தது. அம்பேத்கர் சாதி அடிப்படையிலான இந்து சமுதாயத்தை "படிக்கட்டு மற்றும் நுழைவாயில் இல்லாத பல மாடி கோபுரத்துடன்" ஒப்பிட்டார். அதன் நியாயமற்ற கட்டமைப்பைக் காட்டுகிறது. இதன் காரணமாக, அவர் இந்து மதத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். மேலும், 1935-ஆம் ஆண்டில் நாசிக்கில் நான் இந்துவாக இறக்க மாட்டேன் என்று அறிவித்தார். 1956-ஆம் ஆண்டில், அவர் புத்த மதத்திற்கு மாறினார்.


இந்து மதத்தை விட்டு வெளியேறும் அம்பேத்கரின் முடிவை நம்புவது காந்திக்கு நம்பமுடியாததாக இருந்தது. ஏனெனில், மதம் சாதியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் நினைக்கவில்லை.  கிராமக் குடியரசுகள் பற்றிய அவர்களின் கருத்துகளும் வேறுபட்டன. காந்தி கிராமங்களை இந்தியாவின் இதயமாகப் பார்த்தார். அதே சமயம் அம்பேத்கர் கிராமங்களை தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் செழித்தோங்கிய இடங்களாகக் கண்டார். நீதி மற்றும் சமத்துவத்திற்கான அம்பேத்கரின் விருப்பம் அவரை நகரமயமாக்கல், நவீனத்துவம் மற்றும் தொழில்மயமாக்கலை ஆதரிக்க வழிவகுத்தது. இருப்பினும் காந்தி நவீனத்துவத்தை விமர்சித்தார்.


மேலும், 1927-ஆம் ஆண்டில், தீண்டத்தகாதவர்கள் பொதுத் தண்ணீர்த் தொட்டியைப் பயன்படுத்துவதற்கான உரிமையைக் கோரி மஹத்தில் சத்தியாகிரகத்தை (Mahad satyagraha) அம்பேத்கர் வழி நடத்தினார். இருப்பினும், காந்தி தீண்டத்தகாதவர்களை சத்தியாக்கிரகத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்தார். அது "துராக்ரஹா" (பிடிவாதமான வலியுறுத்தல்) ஆக மாறும் என்று அவர் நம்பினார். சாதிப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் மோதலைத் தவிர்க்கவும் "இனிமையான தூண்டுதலை" (sweet persuasion) பயன்படுத்த காந்தி பரிந்துரைத்தார். இது சமூக நீதியை அடைவதற்கான அவர்களின் அணுகுமுறைகளில் உள்ள முக்கிய வேறுபாட்டைக் காட்டியது.




Original article:

Share:

மாநில சட்டமன்ற செயல்பாட்டில் ஆளுநரின் பங்கு என்ன? - பிரியா குமாரி சுக்லா

 • அரசியலமைப்பின் 153வது பிரிவு "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும்" என்று கூறுகிறது. அரசியலமைப்பு தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1956-ஆம் ஆண்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதில், "இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே நபரை ஆளுநராக நியமிப்பதை இந்த பிரிவு எதுவும் தடுக்காது" என்று கூறியது.

 

• அரசியலமைப்பின் பிரிவு 155, "ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். குடியரசுத் தலைவர் தனது கையொப்பம் மற்றும் முத்திரையின் கீழ் ஓர் ஆணையின்  மூலம் ஆளுநர் நியமிக்கப்படுவார்" என்று கூறுகிறது. 


• பிரிவு 156 இன் கீழ், "குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் ஆளுநர் பதவி வகிப்பார். இருப்பினும், பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஐந்தாண்டுகளுக்கு முன் குடியரசுத் தலைவர் தனது விருப்பத்தைத் திரும்பப் பெற்றால், ஆளுநர் பதவி விலக வேண்டும்.  பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் செயல்படுகிறார். ஆளுநரை ஒன்றிய அரசு நியமிக்கலாம்  மற்றும்  நீக்கலாம் என்று குறிப்பிடுகிறது. 


• அரசியலமைப்பின் பிரிவு 157 மற்றும் 158 வது பிரிவுகள் ஆளுநரின் தகுதிகள் மற்றும் அவரது அலுவலக நிபந்தனைகளை வரையறுக்கின்றன. 


 •  ஆளுநர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டும். ஆளுநர் நாடாளுமன்றத்திலோ அல்லது மாநில சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. வேறு எந்த ஆதாயம் தரும் பதவியையும் வகிக்கக் கூடாது. 

   • 2001-ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், ஆளுநரின் நியமனமும் பதவிக்காலமும் ஒன்றிய அமைச்சர்கள் குழுவைப் பொறுத்தது என்பதால், ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயல்படக்கூடும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக, ஆளுநர்கள் பெரும்பாலும் “ஒன்றிய அரசின் முகவர்கள்” என்று எதிர்மறையாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.





Original article:

Share:

பேரிடர் மேலாண்மை மசோதாவில் உள்ள குறைகள் -அமிதா சிங்

 பேரிடர் மேலாண்மைச் சட்டம் (Disaster Management Act), 2005-ல் உள்ள இடைவெளிகளை குறைப்பதற்குப் பதிலாக, இந்த மசோதா பங்கேற்பு ஆளுகை, பொறுப்புடைமை, செயல்திறன் ஆகியவற்றுக்கான வாய்ப்பை சட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. 


டிசம்பர் 24, 2024 அன்று, தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி பகுதியில்  செருத்தூர் கிராமத்தில் கைவிடப்பட்ட வீட்டின் மங்கலான சுவரில் கடல் பயணத்தின் குறியீடுகள் (seafaring graffiti) காணப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 10,000க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சுனாமி, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற கடலோரப் பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.


பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா (Disaster Management (Amendment) Bill) (2024), கடுமையான சிக்கல்களை எழுப்புகிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ல் உள்ள இடைவெளிகளை குறைப்பதற்குப் பதிலாக, இந்த மசோதா பங்கேற்பு ஆளுகை, பொறுப்புடைமை மற்றும் செயல்திறனுக்கான வாய்ப்பை சட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. 


குறைகள் 


முதலாவதாக, அதில் பயன்படுத்தப்படும் சொற்பொருள்கள். இந்த மசோதாவானது “கண்காணித்தல்” மற்றும் “வழிகாட்டுதல்” போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. அவை, மேலிருந்து கீழாகவும் பாதுகாக்கப்படுகின்றன. மாறாக, “மேற்பார்வை” மற்றும் “வழிகாட்டுதல்” போன்ற சொற்கள் சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் அதிக நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம். 


இதற்கு நேர்மாறாக, யோகோஹாமா உத்திகள், ஹியோகோ ஃபிரேம்வொர்க் ஃபார் ஆக்ஷன் (Hyogo Framework for Action) மற்றும் செண்டாய் ஃபிரேம்வொர்க் ஃபார் பேரழிவு அபாயக் குறைப்பு (Sendai Framework for Disaster Risk Reduction) போன்ற உலகளாவிய சட்ட ஆவணங்கள், உள்ளூர் சமூகங்களை பேரழிவுகளுக்கு “முதலில் எதிர்கொள்பவர்கள்” (‘first responders’) என்று குறிப்பிடுகின்றன. இதன் காரணமாக, உள்ளூர் சமூகங்களின் திறன்களையும் அறிவையும் வலுப்படுத்துவது அவசியம். 


இரண்டாவதாக, இந்த மசோதா 'ஆபத்து', 'பின்னடைவு' மற்றும் 'பாதிப்பு' ஆகிய சொற்களை வரையறுக்கிறது என்றாலும், இந்த வரையறைகள் பேரழிவு மேலாண்மையில் உள்ளூர் சமூகங்கள், பஞ்சாயத்துகள், வார்டுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முக்கிய பங்கை ஒப்புக் கொள்ளாமல் வெறும் இயந்திரத்தனமான வார்த்தைகளாக அவர்கள் அங்கீகரிக்காததால் அவை முக்கியத்துவம் பெறவில்லை. 2009-ஆம் ஆண்டில் சுந்தரவனத்தில் ஏற்பட்ட ஐலா புயலின் (Cyclone Aila) போதும், 2013-ஆம் ஆண்டு கேதார்நாத் பனிப்பாறை ஏரி வெடித்த வெள்ளத்தின் போதும் அல்லது 2018-ஆம் ஆண்டில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை அல்லது கடலோரக் காவல்படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்குள் அவர்கள் மக்களை மீட்கத் தொடங்கினர். 


2004 இந்தியப் பெருங்கடல் சுனாமி 


  இந்த மசோதா ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் (intersectional discrimination) பிரச்சனைகளை நிவர்த்தி செய்யவில்லை.  அதிகாரிகள் பாகுபாடு மற்றும் பாதிப்புக்கு நியாயமான அணுகுமுறையை எடுக்கும்போது, ​​தரவு கணிசமாக மாறுகிறது. சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகும், உள்பிரிவினர் பாதிப்பைப் புறக்கணிப்பது, முழுமையான மற்றும் உள்ளடக்கியதாக இருக்கும் மசோதாவின் கூற்றை பலவீனப்படுத்துகிறது. பெண்கள், ஊனமுற்றோர், பட்டியலிடப்பட்ட சமூககங்கள் மற்றும் பால் புதுமையின சமூகங்கள் (LGBTQIA) தாங்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் பல அடுக்குகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.


இந்த மசோதாவில் மாவட்ட அதிகாரிகளின் செயல்திறன் மதிப்பீடு பற்றி குறிப்பிடப்படவில்லை. அதிகாரிகள் பேரழிவிற்குத் தயாராகத் தவறினால், அது ஏற்பட்டால், அவர்கள் தனிப்பட்ட தொண்டு முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் தங்கள் தவறுகளிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்யலாம். இது வாக்காளர்களை அரசியல் ரீதியாக கையாள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.


இந்த மசோதா சட்டத்தில் இருந்து “சட்ட ஒழுங்கை” விலக்குகிறது. “மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்கள்” சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உள்ளடக்கவில்லை என்று குறிப்பிடுகிறது. அப்படியானால், மாநிலச் செயற்குழுக்களில் (State Executive Committees (SECs)) மாநில காவல்துறை இயக்குநர்களை ஏன் சேர்க்க வேண்டும்?

 

பொறுப்புடைமை அடுத்த பிரச்சினை. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் (Disaster Management Act) 12 மற்றும் 13 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவுகள் பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் நிவாரணத்தின் குறைந்தபட்ச நிலைகளை கையாள்கின்றன. மாநில அரசுகள் நிவாரண வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்ற பிரிவு 19ம் கைவிடப்பட்டது. இந்த பிரிவுகளில் விதவைகள், ஆதரவற்றோர், வீடற்றோர் ஆகியோருக்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் உயிர் இழப்பு, வீடு சேதம் மற்றும் வாழ்வாதார மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான உதவிகளும் அடங்கும். மசோதாவில் இதற்கு மாற்று இல்லை. 


பேரிடர் மேலாண்மைச் சட்டம், பேரிடர் மேலாண்மை விதிகளை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான கட்டாயத் தேவைகளை அமைத்துள்ளது. இந்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் இவற்றைப் பின்பற்ற வேண்டும். இருப்பினும், திட்டங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை உறுதி செய்த பிரிவு 35(2b) மற்றும் பிரிவு 35(2d) ஆகியவை மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மசோதாவின் மற்றொரு பகுதியில், மாநில செயற்குழு இனி தயார்நிலைக்கான அடிப்படைகளைச் செய்ய வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  


பிரிவு 22இன் துணைப்பிரிவுகள் (2a) மற்றும் (2b) மசோதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நல்லாட்சியின் அடிப்படை  இந்த மசோதாவில் சிறிதளவே உள்ளது. துறையில் அதிகாரிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான அதன் அளவிடக்கூடிய குறியீடுகளில் பெரும்பாலானவை தெளிவாக இல்லை அல்லது துல்லியமாக குறிப்பிடப்படவில்லை.


இந்த மசோதாவும் இனவாதத்தால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பேரழிவுக்குப் பிறகும் இறக்கும் ஆயிரக்கணக்கான விலங்குகளின்  நலனையும் புறக்கணிக்கிறது. அதே அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (Animal Birth Control (ABC)) விதிகள், 2023ஐ அமல்படுத்துவதில் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு (District Disaster Management Authorities (DDMA)) சிறிய பொறுப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த இடைவெளியானது விதிகளை பாதிக்கிறது மற்றும் பேரழிவு தயார்நிலையையும் பலவீனப்படுத்துகிறது.

 

இந்த மசோதா 41A பிரிவின் கீழ் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (Urban Disaster Management Authority (UDMA)) பரிந்துரைக்கிறது. இந்தக் கூடுதல் அதிகாரத்தின் தேவை எதனால் ஏற்பட்டது? என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிலம், கட்டிடங்கள், மற்றும் சொத்து வரிவிதிப்பு ஆகியவற்றைக் நிர்வகிப்பதன் மூலம் மட்டுமே மாநகராட்சி அதிக வருவாய் ஈட்டுகிறது. ஆனால், நீர்நிலைகள், நகரத்தில் உள்ள காடுகள், ஆற்றுப் படுகைகள், சந்தைகள் ஆகியவற்றின் மீது ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதன் மூலம் நகர்ப்புற வெள்ளத்தை,  பேரிடர் மேலாண்மை  மூலம் எவ்வாறு மேம்படுத்த முடியும்?


பிராந்திய ஒத்துழைப்பு 


இறுதியாக, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை (epizootic diseases) உலகம் எதிர்கொள்கிறது. இந்த சூழ்நிலையில், அதிகரித்த நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் அவசரகால உத்திகள் மூலம் ஒரு பிராந்திய செயல் திட்டம் தேவைப்படுகிறது. இந்த மசோதாவில் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, (SAARC)), மற்றும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC)) போன்றவை பேரிடர்களின் போது உதவுவதற்காக அணுக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். 


 இந்த மசோதா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்கு மற்றும் பொறுப்புகளின் சர்வதேச ஒத்துழைப்பு, ஜனநாயகமயமாக்கல் மற்றும் பரவலாக்கத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இயற்கை பேரழிவுகளுக்கு விரைவான பதிலளிப்பு குறித்த 2011 SAARC ஒப்பந்தத்தை அதில் குறிப்பிட்டிருக்கலாம். தெற்காசிய நாடுகளின் நுண்ணிய எல்லைகளைக் கருத்தில் கொண்டு, பிராந்திய ஒத்துழைப்பைப் புறக்கணிப்பது ஒரு கடுமையான குறைபாடாகும். 


அமிதா சிங், நிறுவனர் மற்றும் தலைவர், பேரிடர் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம் மற்றும் முன்னாள் பேராசிரியர், சட்டம் மற்றும் ஆளுகை மையம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU).




Original article:

Share:

முக்கிய கூட்டாண்மை: இந்தியா மற்றும் குவைத் உறவுகள்

 இந்தியாவும் குவைத்தும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தங்கள் உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கின்றன. 


பிரதமர்  நரேந்திர மோடியின் குவைத் பயணம் 1981 ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமரின் முதல் பயணமாகும். மேலும், குவைத் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்தப் பயணம் வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்துகிறது. குவைத், வளைகுடா கூட்டுறவுக் குழுவில் (Gulf Cooperation Council (GCC)) முக்கிய உறுப்பினராக உள்ளது. அரை மில்லியன் இந்தியர்கள் குவைத்தில் பணிபுரிகின்றனர். இது அவர்களை குவைத்தில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த சமூகமாக (expatriate community) மாற்றுகிறது. 


இந்த சமூகம் நீண்ட கால வர்த்தகம் மற்றும் பயண தொடர்புகளிலிருந்து வளர்ந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் மேற்கு ஆசியாவில் இந்தியாவின் வர்த்தகப் பாதைகளுக்கு குவைத் ஒரு முக்கிய நிறுத்தமாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. குவைத்தில் இருந்த செல்வந்தர்களுக்கு மும்பையில் சொந்த வீடுகள் இருந்தன. 


1961-ஆம் ஆண்டு குவைத் சுதந்திரம் அடையும் வரை இந்திய ரூபாய் தான் அங்கு பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் $10 பில்லியனைத் தாண்டியுள்ளது. இது குவைத்தின் வர்த்தகத்தில் சிறிய அளவு பங்களிப்பாகும். குவைத் நாடு இந்தியாவின் ஆறாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நான்காவது பெரிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதியாளர் நாடு ஆகும்.  மேலும்,   குவைத் இந்தியாவின் ஆற்றல் தேவைகளில் 3% பூர்த்தி செய்கிறது.


வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் தொடர்ந்தாலும், இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான உறவு, ராஜதந்திர மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகள் அதிகம் முன்னேறவில்லை.  சதாம் ஹுசைனின் ஈராக் உடனான இந்தியாவின் கடந்தகால நெருங்கிய உறவின்  காரணமாக சில சிக்கல்கள் உள்ளன. பிரதமர் மோடியின் பயணம், குவைத்துடன் புதிய கூட்டாண்மையை அறிவிப்பதன் மூலம் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய ராஜதந்திர கூட்டாண்மை இதுவாகும். 


குவைத் எமிர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பினரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பிரதமர்  நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய விருதான “தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்” (the Order of Mubarak Al-Kabeer) வழங்கப்பட்டது. இது இந்த  பயணத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


இந்த பயணம் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நேரத்தில் நடந்தது. காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள், லெபனான் மற்றும் ஏமன் மீதான தாக்குதல்களுடன் சேர்ந்து, மேற்கு ஆசியாவின் அமைதியை மிகவும் கடினமாகவும் தொலைவில் இருப்பதாகவும் தோன்றுகிறது. சிரியாவில் அசாத் ஆட்சி அகற்றப்பட்டது. மேலும், வன்முறைக்கு வழிவகுக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அதிகாரம் அளித்துள்ளது. 


கூடுதலாக, இந்தியா-இஸ்ரேல்-அமெரிக்கா-ஐக்கிய அரபு அமீரகம்  (India, Israel, United Arab Emirates, and the United States (I2U2)) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India–Middle East–Europe Economic Corridor (IMEC)) போன்ற முக்கிய இந்திய திட்டங்கள் நிலைமை சீராகும் வரை எந்த முன்னேற்றத்தையும் காணாது.  ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புதிய டிரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்துவது மற்ற பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு ஆதரவிலும் தலைமையிலும் இடைவெளியை ஏற்படுத்தலாம். 


பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தவும், எரிசக்தி மற்றும் போக்குவரத்து வழிகளைப் பாதுகாக்கவும், அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் 8 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தியாவுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக உள்ளது. பிரதமர்  நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து கட்சிகள் விமர்சனம் செய்தாலும், எதிர்காலத்தில் பிரதமருக்கு இது போன்ற பல பயணங்களை புதுடெல்லி திட்டமிட வேண்டியிருக்கும்.

 

Original article:

Share:

நலத்திட்டங்களின் அரசியல், நன்மைகள் மற்றும் நலன்சார் நடவடிக்கைகள் குறித்து…

 நலத்திட்டங்கள் முழுமையான நலனுக்கு மாற்றாக இருக்க முடியாது. 


காங்கிரஸ் கட்சி "தேர்தல் வாக்குறுதிகளை" அறிமுகப்படுத்திய பிறகு, நேரடி பணப் பரிமாற்றத்தை நலன்சார் நடவடிக்கையாகப் பயன்படுத்துவது பிரபலமானது. பின்பு, பிற கட்சிகளும், மாநில அரசாங்கங்களும் தங்கள் வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள இதைப் பயன்படுத்தின. மகாராஷ்டிராவில் “லட்கி பஹின்” (‘Ladki Bahin’) திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசத்தில், “லாட்லி பெஹ்னா” (‘Ladli Behna’) திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டங்கள் ஆளும் கட்சிக்கு மீண்டும் ஆட்சியை தக்கவைக்க உதவியுள்ளன. தமிழ்நாட்டில் “கலைஞர் மகளிர் உரிமை தொகை” (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. ஆளும் கட்சியின் வழக்கமான வாக்காளர் தளத்திற்கு வெளியே உள்ள குழுக்களின் ஆதரவைப் பெறுவதே திட்டத்தின் நோக்கமாகும். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மக்கள் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நலத்திட்ட உதவிகளை எப்போதும் ஆதரிக்கிறது. தற்போது, முன்மொழியப்பட்ட “முதலமைச்சரின் மகிளா சம்மன் யோஜனா” (‘Mukhyamantri Mahila Samman Yojana’) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ₹2,100 வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. நேரடி பணப் பரிமாற்றம் ஏழைப் பெண்கள் மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களாக பெண்கள் வீட்டில் செய்யும் ஊதியமில்லாத பணிகளுக்காக வழங்கப்படுகின்றன. பணவீக்கம் காரணமாக இந்த தொகைகள் சிறியதாக இருந்தாலும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிக்கின்றன. குடும்ப தலைவரை சார்ந்து இருக்காமல், இந்த பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிடலாம் அல்லது சேமிக்கலாம்.  இந்த பலன்கள் பெண்களுக்கு கண்ணியத்தை அளிக்கின்றன. அவர்களில் பலர் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால், இன்னும் வீட்டில் அல்லது முறைசாரா அமைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநிலங்களில் இவை பிரபலமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.


பணப்பரிமாற்றம் மட்டும் முழுமையான நலனுக்கு மாற்றாக இருக்க முடியாது. அரசாங்கமும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் தேவைகளின் அடிப்படையில் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டும். மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கம் குறைந்துள்ளது.  இருப்பினும், இதற்கான காரணங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகின்றன. மகாராஷ்டிரா இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மற்றும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். இருப்பினும், கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடுகையில் இது மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் குறைவான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தெளிவான பிராந்திய மற்றும் பொருளாதார சமத்துவமின்மையும் உள்ளது. மறுபுறம், மத்தியப் பிரதேசம் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மாநிலத்தில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் பிரபலமான திட்டங்கள் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளன. இருப்பினும், இந்த திட்டங்கள் தற்காலிக தீர்வுகளாக மட்டுமே உள்ளன. வேலைவாய்ப்புகளை உருவாக்கும், பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தும் மற்றும் அதிக வாய்ப்புகளை வழங்கும் உண்மையான பொருளாதாரக் கொள்கைகளைப் போல அவை பயனுள்ளதாக இல்லை. ஆம் ஆத்மி கட்சி கடந்த காலத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தி மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. இப்போது, ​​பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பெண்களுக்கான திட்டங்களை பின்பற்ற முயற்சிக்கிறது. இது டெல்லியை மேம்படுத்துவதற்கான  சிந்தனைகள் ஆம் ஆத்மிக்கு இல்லை என்பதை இது உணர்த்துகிறது.




Original article:

Share:

தேர்வு சீர்திருத்த பரிந்துரைகள் குறித்த பார்வை -தலையங்கம்

 தேசிய நுழைவுத் தேர்வுகளில் (national entrance examinations) வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை. அதன் அமலாக்கம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். 


முன்னாள் இஸ்ரோ தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, தேசிய நுழைவுத் தேர்வுகளின் (national entrance exams) வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைகளை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் இந்தியாவின் உயர்கல்வி முறையைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரமாக அமைகிறது. இந்தத் தேர்வுகளில் இடையூறுகள் ஏற்படுவது இந்தியாவில் சாதாரணமாகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 மாநிலங்களில் 41 வினாத்தாள் வெளியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், 1.4 கோடி பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அறிக்கை காட்டுகிறது. 2024-ம் ஆண்டில், NEET மற்றும் UGC-NET ஆகிய இரண்டும் வினாத்தாள் வெளியான சம்பவங்களால் தாமதங்களையும் ரத்துகளையும் எதிர்கொண்டன. பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்விலும் (CUET) சிக்கல்கள் இருந்தன. இதற்கான முடிவுகள் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தாமதமாகி வருகின்றன. கல்வியில் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை காரணமாக, இளம் ஆர்வலர்களுக்கு இது சிரமங்களை உருவாக்கியுள்ளது. சிறந்த உள்கட்டமைப்பு, வலிமையான தேர்வுப் பாதுகாப்பு, தேசிய தேர்வு முகமையிலிருந்து (National Testing Agency (NTA)) சில பொறுப்புகளை மாற்றுவது மற்றும் கடுமையான நெறிமுறைகள் உள்ளிட்ட குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்க படியாகும்.


தனது பரிந்துரைகளில், தேசிய தேர்வு முகமை (NTA) மீதான "அதிக சார்புநிலை" குறைக்கப்பட வேண்டும் என்று குழு கூறியுள்ளது. இதனால், அது நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்துகிறது, ஆட்சேர்ப்பு தேர்வுகளை அல்ல என்று நம்புகிறது. இது 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்டதிலிருந்து, தேசிய தேர்வு முகமை (NTA) 244 தேர்வுகளை நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2019-2021 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு சராசரியாக 67 லட்சத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 122 லட்சமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதானால், முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு ஆளாக்குகிறது. ஏனெனில், NTA மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களை நம்பியுள்ளது. இந்த தேர்வுகளின் பாதுகாப்பை நிர்வகிப்பதில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் தேர்தல் போன்ற அடுக்கு ஒத்துழைப்பையும், வேட்பாளர்களின் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான டிஜியாத்ரா மாதிரியைப் (DigiYatra model) பிரதிபலிக்கும் "டிஜிட்டல்-தேர்வு" (digi-exam) முறையையும் குழு பரிந்துரைத்துள்ளது. தனிநபர் திறனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளை வரிசைப்படுத்தும் "கணினி தகவமைப்பு சோதனைக்கு" இடம்பெயர்வதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செயல்முறையை முழுமையாக ஆய்வு செய்ய குழு பரிந்துரைத்துள்ளது. வலுவான பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவது இதில் அடங்கும். இது சரியான பாதையின் ஒரு முக்கியப் படியாகும். உள்கட்டமைப்புக்கும் செயல்படுத்துதலுக்கும் இடையே உள்ள இடைவெளிகள் அல்லது விருப்பத்திற்கும் வாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளிகள் பெரும்பாலும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்பதை கடந்தகால அனுபவம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, CUET-ன் குறைபாடுகள், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மாற்றத்திற்கு கவனமாக திட்டமிடல் தேவை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதை தவிர்க்க உதவும். பொதுவாக, டிஜிட்டல் மயமாக்குவது அல்லது செயல்முறையை மிகவும் சிக்கலாக்குவது போதாது. அனைத்து மாணவர்களும் ஆதரிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம். கணினிகள் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் குழப்பம் அல்லது மன அழுத்தம் இல்லாமல் அவற்றை வழிநடத்த முடியும்.




Original article:

Share:

வேலைவாய்ப்பை உருவாக்க அரசு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப்போது சவாலாக இருப்பது, வேலைகளின் தரத்தை மேம்படுத்துவதே. - இஷா தயால், போர்னாலி பண்டாரி, அஜய் கே சாஹு

 வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம், பணியின் திறன் மற்றும் பயிற்சி அம்சங்களை இணைப்பதன் மூலம் மேலும் முழுமையானதாக இருக்க முடியும். விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயல்முறைகள் மற்றும் வளங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் எளிமைப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 


இந்தியாவானது வேலைவாய்ப்பில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், அது மெதுவாகவும் தரம் குறைந்ததாகவும் உள்ளது. வேலைவாய்ப்பு-வேலையின்மை கணக்கெடுப்பு மற்றும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (periodic labour force survey (PLFS)) ஆகியவற்றின் படி, 2011-12 மற்றும் 2023-24 க்கு இடையில் பணியாளர்கள் 2.2% வளர்ந்துள்ளனர். அதே காலகட்டத்தில், தொழிலாளர் எண்ணிக்கை (வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள்) சுமார் 2.3% வளர்ச்சியடைந்தது. 78% தொழிலாளர்களுக்கு எழுத்துப்பூர்வ வேலை தொடர்பாக ஒப்பந்தம் இல்லை என்றும், சுமார் 76% பேர் சமூகப் பாதுகாப்புப் நலன்களுக்குத் தகுதி பெறவில்லை என்றும், 72% பேர் ஊதியத்துடன் கூடிய விடுப்புப் பெறவில்லை என்பதை சமீபத்திய தரவு வெளிப்படுத்துகிறது. மேலும், ஒப்பந்த வேலைகள் மிகவும் பொதுவானதாகி வருகிறது. 2018-19 மற்றும் 2022-23-க்கு இடையில் முறையான உற்பத்தியில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 38 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தொழில்துறைகளின் வருடாந்திர கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களின் விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்துடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது.


மேற்கூறியவற்றின் அடிப்படையில், முறையான வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் ஒரு நேர்மறையான படியாகும். இந்த ஆண்டு ஒரு முக்கியமான பட்ஜெட் அறிவிப்பு வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (Employment Linked Incentive (ELI)) ஆகும். இத்திட்டம் இரண்டு ஆண்டுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் (ELI) மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன.


வேலைவாய்ப்பு வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees Provident Fund Organisation (EPFO)) பதிவுசெய்யப்பட்ட முதல் முறையாக பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை (மூன்று தவணைகளில் ரூ. 15,000 வரை) திட்டம் A வழங்குகிறது. இது அனைத்து முறையான துறைகளுக்கும் பொருந்தும். திட்டம் B உற்பத்தித் துறையில் வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது முதல் முறை பணியாளர்களை பணியமர்த்துவதற்கு ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் ஊக்கத்தை வழங்குகிறது. இந்த ஊக்கத்தொகைகள் ஊழியர்களின் முதல் நான்கு ஆண்டுகளில் EPFO ​​பங்களிப்புகளைப் பொறுத்தது. திட்டம் C இரண்டு ஆண்டுகளுக்கு முதலாளிகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை திருப்பிச் செலுத்துகிறது. இது அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் EPF பங்களிப்புக்காகும்.


நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் புதிய மற்றும் நீடித்த தரமான வேலைவாய்ப்பை உருவாக்கும் விரும்பிய நோக்கத்தை அடைய வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் (ELI) உதவ முடியுமா என்பதே கேள்வி. வேலைவாய்ப்பு வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களை குறிவைப்பதே வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (ELI) தனித்துவமான அம்சமாகும். அதாவது தொழிலாளர்களை (மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் சம்பாதிப்பவர்கள்) ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் இதன் வழக்கத்தை நோக்கி நகர்த்துவதாகும். இருப்பினும், திட்டங்கள் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. 


ஒன்று, ஊக்கத்தொகையின் அளவு (size of the incentive) ஆகும். அனைத்து துறைகளிலும் முதல் முறையாக தரமான வேலைகளை உருவாக்க திட்டம் A இல் சம்பள செலவில் மானியம் போதுமானதா? உற்பத்தித் துறையில் குறுகிய கால வேலைவாய்ப்பு உறவுகளின் தன்மையை குறுகிய காலத்திலிருந்து நீண்ட காலத்திற்கு மாற்றுவதற்கு திட்டம் B-யில் உள்ள ஊக்கத்தொகைகளின் அளவு போதுமானதா? 


இரண்டு, வேலைவாய்ப்பு காலத்துடன் இணைக்கப்பட்ட நன்மைகள். வேலைவாய்ப்பு உறவுகளில் குறுகியகாலத் தன்மை தேவை-பக்கத்தில் பரவலாக உள்ளது. ஆனால், பணியாளர்களின் விநியோகப் பக்கமும் பெருகிய முறையில் அடிக்கடி வேலைகளை மாற்றுகிறது. நிறுவனங்கள் தொடர்ச்சியான அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். நிறுவனங்கள் நிரந்தர ஒப்பந்தத்தை வழங்கினாலும், தொழிலாளி நீண்ட காலம் பணிபுரிவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாறாக, ஒரு முக்கிய புகார் என்னவென்றால், புதியவர்கள் சேருகிறார்கள், சில அனுபவங்களைப் பெறுகிறார்கள், மாற்று வாய்ப்புகளுக்கு வெளியேறுகிறார்கள். இது வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், எந்தவொரு ELI நன்மைகளும், ஒரு குறிப்பிட்ட கால வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துடன் இணைக்கப்பட்டால், நிறுவனங்களுக்கு எந்த நன்மையும் அளிக்க வாய்ப்பில்லை. 


மூன்று, அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கான நன்மைகள். வேலையில் பயிற்சி என்பது நிறுவனங்களுக்கு ஒரு செலவு ஆகும். அனுபவம் இல்லாத முதல் முறை ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது, குறிப்பாக சிறப்பு வேலைகளுக்கு நிறுவனங்களை ஈர்க்காது. அந்தக் கண்ணோட்டத்தில், திட்டம் C மிகவும் சாத்தியமானது மற்றும் தற்போதுள்ள பணியாளர்களில் அதிக தரமான வேலைகளை உருவாக்க உதவும். ஆனால் சம்பளத்தின் விகிதத்தில், திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கும்போது EPF நன்மைகள் குறைவானதாகின்றன. 


நான்காவது, தற்போதுள்ள முறைசாரா பணியாளர்கள். தற்போதுள்ள முறைசாரா பணியாளர்களைப் பற்றி மூன்று திட்டங்களும் தெளிவாக இல்லை. ELI நன்மைகளைப் பெற, முறைசாரா தொழிலாளர்கள் EPFO-ல் முதல் முறையாக முறையான ஊழியர்களாக சேர முடியுமா? புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த முறைசாரா தொழிலாளர்களுக்கு இந்தக் கேள்வி முக்கியமானது.


பணியமர்த்தல் பற்றிய முடிவுகள், அதாவது முதல் முறை பணியாளர்களை அல்லது அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்துவது மற்றும் தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில் பணியமர்த்துவது போன்ற முடிவுகள், ஒவ்வொரு நிறுவனத்தாலும் எடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், ELI மூலம் இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது பொருளாதார மற்றும் சமூக நன்மைகளைப் பெறலாம். பெண்கள் நிலையான மற்றும் ஒழுக்கமான பணியாளர்களாகக் காணப்படுகிறார்கள். எனவே, அவர்கள் தக்கவைத்துக் கொள்ள எளிதானவர்கள். அதிக பெண்களை பணியமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க, வேலை விளம்பரங்கள் பாரபட்சமின்றி இருக்க வேண்டும். கூடுதலாக, பெண்களை பணியமர்த்துவதற்கான "செலவு" மானியம், அவர்களின் ஆரம்ப வேலை பயிற்சி உட்பட, உதவலாம். இது பாலின சார்புகளைக் குறைக்கவும், குறிப்பாக உற்பத்தித் துறையில் பெண்களை பாரம்பரியமற்ற பாத்திரங்களில் இருந்து விலக்கி வைத்திருக்கும் சமூக விதிமுறைகளை சவால் செய்யவும் உதவும். இந்த முயற்சிக்கான ஆதரவில், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும்.


ELI பிரச்சனையின் தேவைக்கான பக்கத்தில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதன் மூலம் விநியோகப் பக்கத்துடனும் இணைக்க முடியும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி ஊக்கத்தொகைகள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சத்தில் ஒருங்கிணைந்த கவனம் செலுத்தப்படுகிறது. பயிற்சி மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆதரவளிக்க நாட்டில் பிற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பணியின் திறன் மற்றும் பயிற்சி அம்சங்களை இணைப்பதன் மூலம் ELI திட்டத்தை இன்னும் முழுமையானதாக மாற்ற முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் சொந்த பயிற்சியாளர்கள் / பயிற்சியாளர்கள் முதல் முறையாக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டால், அவர்களின் ஊக்கத்தொகையின் அளவு அதிகரிக்கிறது. 


வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. இந்தியச் சூழலில், தற்போதுள்ள திட்டங்களில் மாற்றங்கள் தொழிலாளர் சந்தையில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க உதவும். இந்தப் பிரச்சினைகளில் பெண்களின் வேலைவாய்ப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் முறைசாரா மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியவை அடங்கும். நிறுவனங்களுக்குத் தெரிந்திருந்தால், விதிகள் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருந்தால், சரியான நேரத்தில் பணம் செலுத்தப்பட்டால், சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகள் இருந்தால், நிறுவனங்கள் அத்தகைய திட்டங்களில் பங்கேற்கும். எனவே, திட்டத்தை வடிவமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் மற்றும் கட்டணங்களை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.




Original article:

Share: