2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்களைச் சேகரிப்பது குறித்து . . .

 சாதிவாரி கணக்கெடுப்பதற்கான 'திறந்த-முறை' (open-ended) அணுகுமுறை, பயன்பாட்டிற்கு ஏற்ற தரவை வழங்காமல் போகலாம்.


2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்திற்கான முன்னோட்டப் பணிகள் (rehearsal), கடந்த ஜூலை 6 முதல் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அதாவது, பதிலளிப்பவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடுவதற்காக ஒரு 'திறந்த கட்டம்' (open column) இதில் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர் அந்தப் பதிலைப் பதிவு செய்வார். 2011-ம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பிலும் (Socio-Economic and Caste Census (SECC)) சாதியைக் குறிப்பிட இதேபோன்ற திறந்த கட்டம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. ஏனெனில், இது அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும். இந்த முன்னோட்டப் பணிகள் சோதனை ஜூலை 20 அன்று முடிவடைகிறது. அதன் பிறகு சாதிவாரியாகக் கணக்கிடுவதற்கான வழிமுறையை இறுதி செய்வோம் என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த முன்னோட்ட சோதனையின் முடிவுகள், ஏற்கனவே அறியப்பட்ட ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதாவது, 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் (SECC) காணப்பட்டதைப் போல, சாதிவாரி குறித்த திறந்தநிலை பதில் சிக்கலான தரவுகளையே அளிக்கிறது, அது இறுதியில் பயன்படுத்த முடியாததாக நிரூபிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினமல்ல. இந்த முறையானது, சாதியைப் பட்டியலிட்ட கடைசி கணக்கெடுப்பான 1931-ல் 4,147 "சாதிப் பெயர்கள்" மட்டுமே பதிவான நிலையில், 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் 46 லட்சத்திற்கும் அதிகமான "சாதிப் பெயர்கள்" பதிவாக வழிவகுத்தது. பல பதிலளிப்பவர்கள் தங்கள் குடும்பப் பெயர்கள் (surnames), உட்பிரிவுகள் (sub-castes) மற்றும் குலப் பெயர்களைச் சாதிப் பெயர்களாகக் கருதிப் பதிவு செய்தனர். இது பதிவுகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்ததுடன், தரவுகளைக் குழப்பமானதாகவும் சீரற்றதாகவும் மாற்றியது. 2021-ல், சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) தரவுகளில் அதிகப்படியான பிழைகள் இருந்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இடஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு அந்தத் தரவுகள் போதுமான அளவு நம்பகமானதாக இல்லை என்றும் அது கூறியது. அதற்குப் பதிலாக, இந்த முன்னோட்ட சோதனையானது ஒரு சிறந்த முறையைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருவிகளில், கவனமாகத் தொகுக்கப்பட்ட சாதிகள் மற்றும் உட்பிரிவுகளின் பட்டியல் முன்பே ஏற்றப்பட்டிருக்கும். இதன்மூலம், கணக்கெடுப்பாளர் பதிலளித்தவரிடம் கேட்ட பிறகு 'சரியான' பதிவைத் தேர்ந்தெடுக்க முடியும். தவறுகளும் பொருத்தமின்மைகளும் ஏற்படக்கூடும். ஆனால், 2022-23 பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படுத்தியபடி, இந்த முறை மேலும் பயன்படுத்தக்கூடிய தரவுகளை வழங்கக்கூடும்.


மொழி, மதம், பாலினம் போன்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் மற்ற அடையாளங்களைப் போலல்லாமல், சாதி என்பது ஒரு அருவமான மற்றும் பகுத்தறிவற்ற அடையாளமாகும் (abstract and irrational identity). அது மக்களை உயிரியல், உடல் அல்லது சுயமாக அறிவிக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துவதில்லை. மாறாக, அது பிறப்பின்போதே அவர்களுக்கு ஒரு சமூக அடையாளத்தை வழங்குகிறது. இந்த அடையாளம் ஒரு சமூகப் படிநிலைக்குள் வைக்கப்படுகிறது. இந்தப் படிநிலை கூட நிலையானதாகவோ அல்லது தெளிவானதாகவோ இல்லை. வெவ்வேறு சாதிகள் பெரும்பாலும் தங்களின் சமூக தகுதிநிலை குறித்த கருத்துக்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளன. சமூகநீதிக்கு உறுதியளித்த இந்திய அரசியலமைப்பு, தீண்டாமையை ஒழித்து, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்து, ஒரு குடிமகனின் நிலையை பிறப்பு தீர்மானிக்காத ஒரு குடியரசின் வாக்குறுதியை அளித்து, சாதிக்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அப்படியென்றால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏன் சாதியைக் கணக்கிட வேண்டும்? ஏனெனில், கணக்கிடும் செயலே இந்த அருவமான அடையாளத்தை (abstract identity) வலுப்படுத்தவோ அல்லது நிரந்தரமாக்கவோ முடியும்.இதற்கான முக்கிய காரணம், சாதி என்பது சுயமாக அடையாளம் காணப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது சமூகத்தால் திணிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, அது தொடர்ந்து சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைய, நலத்திட்டங்களுக்கும் சமூகநீதிக் கொள்கைகளுக்கும் சாதித் தரவுகள் தேவைப்படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய நடவடிக்கைகள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தக்கூடும். நலத்திட்டங்களையும் இடஒதுக்கீட்டையும் இன்னும் துல்லியமாக இலக்கு வைப்பதன் மூலம், அனுபவப்பூர்வமான சாதித் தரவுகள், வசதி படைத்தவர்கள் மற்றும் இடஒதுக்கீட்டால் ஏற்கனவே பயனடைந்து வரும் சாதி அமைப்புகள், மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிப்பது போன்ற கேள்விகளுக்கும் வழிகாட்ட முடியும். இவற்றில், மேம்பட்ட தரவுகள் இன்றியமையாதவை. சாதியைக் கணக்கிட வேண்டுமானால், அதைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். அதை வரையறுக்கப்படாத முறையில் பதிவு செய்வது என்பது, அதன் நோக்கத்தை நிறைவேற்றாது.


Original article : Checkbox caste: On the counting of caste, Census 2027.

Share:

'மறக்கப்படுவதற்கான உரிமை' என்றால் என்ன? - ஜி. எஸ். பாஜ்பாய்

 வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு தனியுரிமையையும், வெளிப்படையான நீதியையும், பேச்சு சுதந்திரத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது? மறக்கப்படுவதற்கான உரிமையைச் செயல்படுத்துவதில் என்ன சவால்கள் எஞ்சியுள்ளன? டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act (DPDP)) என்ன பங்கு வகிக்கிறது? தகவல்களை அழித்தல் (erasure) அல்லது பட்டியலிலிருந்து நீக்குதல் (de-indexing) தொடர்பான கோரிக்கைகளை யார் தீர்மானிக்க வேண்டும்?


தற்போதைய செய்தி:


சில நாட்களுக்கு முன்னர் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில், 'மறக்கப்படுவதற்கான உரிமை' (right to be forgotten) தொடர்பான கோட்பாடுகளை வரையறுத்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய தளங்களில் உள்ள தங்களின் டிஜிட்டல் தடயங்கள் (Digital Footprints) காரணமாக, வழக்குகள் தங்களுக்கு சாதகமாக முடிவடைந்த பிறகும் தொடர்ந்து பாதிக்கப்படும் நபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், நீதிமன்றம் புதிய சட்டக் கோட்பாட்டை (Jurisprudence) உருவாக்கியுள்ளது.





‘மறக்கப்படுவதற்கான உரிமை’  (right to be forgotten) என்றால்  என்ன?


"மறக்கப்படுவதற்கான உரிமை" (Right to be Forgotten) என்பது, பொதுமக்கள் அணுகக்கூடிய டிஜிட்டல் சூழலில் (Public Digital Environment) இருக்கும் தகவல்கள்,   தொடர்ந்து கிடைப்பதால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தி, அதே நேரத்தில் பொதுநலனுக்கு எந்தப் பயனும் அளிக்காத நிலையில், அந்தத் தகவல்களை முழுமையாக நீக்க (Erasure) அல்லது பட்டியலிலிருந்து நீக்கம் (De-indexing) செய்யக் கோரும் உரிமையாகும்.


2014-ஆம் ஆண்டில், மரியோ கோஸ்டேஜா கொன்சாலஸ் என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குடிமகன், கடன் தீர்க்கப்பட்ட பின்னரும், பறிமுதல் செய்யப்பட்ட தனது வீட்டின் ஏலம் குறித்த பழைய செய்தித்தாள் அறிவிப்பை கூகுள் தொடர்ந்து காண்பிப்பதாக ஐரோப்பிய நீதி மன்றத்தில் புகார் அளித்தபோது, ​​இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றது. வழக்கில் நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது,  அந்தத் தீர்ப்பு, தகவலை அழித்தல் (Right to Erasure) என்ற உரிமைக்கான கோரிக்கைக்கு அடித்தளத்தை அமைந்தது.  இந்த உரிமை பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் (General Data Protection Regulation (GDPR)) 17-வது பிரிவில் இணைக்கப்பட்டது.


இந்திய சட்டத்தில் மறக்கப்படுவதற்கான உரிமை என்ற கருத்து எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது?


2017-ஆம் ஆண்டு கே.எஸ். புட்டசாமி vs  இந்திய யூனியன் (K.S. Puttaswamy v. Union of India) வழக்கில், உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் தனியுரிமை (Privacy) என்பது ஒரு அடிப்படை உரிமை (Fundamental Right) என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கையாண்டன.


சில திருமண மற்றும் குற்றவியல் வழக்குகளில் பெயர்களை மறைக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற குறிப்பிட்ட சூழல்களில் அடையாளத்தை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், 'வெளிப்படையான நீதி' (open justice) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வேறு சில சூழல்களில் அது போன்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

முரண்பட்ட இந்த அணுகுமுறைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த மற்றும் தெளிவான சட்டக் கட்டமைப்பு (Coherent Framework) இல்லாததே உண்மையான சவாலாக இருந்தது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காகவே மே 2026-ல் வெளியான டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க  முயற்சி செய்தது.


டெல்லி உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?


மே 29 அன்று, லக்ஷ் வீர் சிங் யாதவ் vs இந்திய யூனியன் (Laksh Vir Singh Yadav v. Union of India) வழக்கைத் தொடர்ந்து வந்த, 30-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மனுக்களின் மீது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம், "மறக்கப்படுவதற்கான உரிமை" என்பது அரசியலமைப்பின் பிரிவு 21 வழங்கும் மனித கண்ணியத்திற்கான உரிமை (Right to Dignity) மற்றும் தகவல் தனியுரிமை (Informational Privacy) ஆகியவற்றிலிருந்து உருவாகும் உரிமை என்று கூறியது. முறையான விகிதாச்சாரச் சோதனை என்பது பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளது: அதில் தரவுகளைத் தக்கவைப்பதற்குச் சட்டபூர்வமான நோக்கம் இருக்க வேண்டும். தனியுரிமைக்கு ஏற்படும் பாதிப்புக்கும் பொதுநலனுக்கும் இடையே சமநிலை காக்கப்பட வேண்டும். மேலும், தீர்ப்பை முழுமையாக நீக்குவதற்குப் பதிலாகப் பெயர்களை மறைப்பது போன்ற, தனிநபரின் தனியுரிமையில் மிகக் குறைந்த அளவே தலையிடும் செயல்முறைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சட்டத் தரவுத்தளங்கள் இந்தமுறையைப் பின்பற்றுவதற்கு நீதிமன்றம் இரண்டு வார காலக்கெடுவை விதித்ததுடன், வழக்கின் உண்மைகளை நீக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்களை மட்டுமே மறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் விளக்கமளித்தது..


மறக்கப்படுவதற்கான உரிமை, அரசியலமைப்பு கொள்கைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது?


இது ஒரு தனித்த உரிமை அல்ல. இது பெரும்பாலும் பிரிவு 19(1)(a)-ன்கீழ் உள்ள பேச்சு மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் (freedom of speech and press),  வெளிப்படையான நீதிக் கொள்கை மற்றும் பொதுமக்களின் அறியும் உரிமை ஆகியவற்றுடன் முரண்படுகிறது. குறிப்பாகக் கடுமையான குற்றவியல் வழக்குகளில் பொதுநலன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்போது, ​​தனிநபர் தனியுரிமைக்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும், ஒரு வழக்கு முடிவடைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும், இணையத்தில் நிலைத்திருக்கும் டிஜிட்டல் தடயங்கள் (Digital Presence) காரணமாக ஒருவரின் வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படக் கூடாது என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது. வழக்கு எண் அல்லது முக்கியச் சொல் தேடல் (keyword search) மூலம் தீர்ப்புகளை இப்போதும் பொதுவெளியில் பெறமுடியும். பெயரின் அடிப்படையில் தேடுவது மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


நடைமுறைச் சவால்கள் என்னென்ன?


இதைச் செயல்படுத்துவதே மிகவும் சவாலான பணியாகும். ஒரு நபர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் என்ற (Acquittal) தீர்ப்பைப் பெற்றிருந்தாலும், நீதிமன்றம் அவரது பெயரின் அடிப்படையில் வரும் தேடல் முடிவுகளை (Name-based Search Results) நீக்க உத்தரவிட்ட பிறகும், அந்தத் தீர்ப்பு அல்லது அதனுடன் தொடர்புடைய தகவல்கள் தேடுபொறிகளில் (Search Engines) முதல் இடத்தில் தொடர்ந்து இருக்கும். தேடுபொறிகளின் செயல்பாட்டு முறை காரணமாக, அந்த நபர்மீது முன்பு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, அல்லது “குற்றத்தின் நிழல்” (Shadow of Crime) என்ற எண்ணமே பயனருக்குத் தேடல்களில் முதலில் தெரியும். தேடல் பட்டியலிலிருந்து நீக்குவது (de-indexing) தேடுபொறியில் பலனளிக்கலாம். ஆனால், அது தகவலின் நகல் பிரதிகள் (mirrors), காப்பகப் பிரதிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளைத் தடுக்க முடியாது. தளங்களுக்கு இடையே பயனுள்ள தொழில்நுட்ப இணக்கமும் ஒருங்கிணைப்பும் இல்லாவிட்டால், இந்த உரிமை நடைமுறையில் முழுமையாக செயல்படாமல், பெயரளவிலான  உரிமையாகவே இருந்து விடும்.


மறக்கப்படுவதற்கான உரிமைக்கும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (Digital Personal Data Protection Act (DPDP)) சட்டத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?


தற்போதைய சூழலில், 2023-ஆம் ஆண்டு டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 12-இல் தரவை அழிப்பதற்கான (statutory right to erasure) வரையறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. இது முதன்மையாக ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டதுடன், மறக்கப்படுவதற்கான உரிமை மிகவும் தேவைப்படும் நீதித்துறைப் பதிவுகள் மற்றும் பொது ஆவணக்காப்பகங்களை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. விதிகள் அறிவிக்கப்படாததாலும், தரவுப் பாதுகாப்பு வாரியம் முழுமையான செயல்திறனுடன் செயல்படாததாலும் இந்தச்சட்டம் குறைகளை கொண்டதாக  உள்ளது.


அழித்தல் அல்லது பட்டியலிருந்து நீக்குதல் தொடர்பான கோரிக்கைகளை யார் தீர்மானிக்க வேண்டும்?


செயல்திறனுக்கும் (Efficiency) பொறுப்புக்கூறலுக்கும் (Accountability) இடையேதான் சவால் உள்ளது. ஒவ்வொரு கோரிக்கையையும் நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவது குறிப்பிடத்தக்க தடைகளை உருவாக்கும். அதே, சமயம் அதுபோன்ற முடிவுகளை முழுவதுமாக தொழில்நுட்ப நிறுவனங்களிடம் விட்டுவிடுவது, முறையான செயல்முறை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகிறது. இதைவிட ஒரு வேகமான அணுகுமுறை, ஒரு படிநிலை அமைப்பாகும். அந்த சூழலில் வழக்குகள் தளங்களாலும், ஆட்சேபிக்கப்பட்ட வழக்குகள் தரவுப் பாதுகாப்பு வாரியத்தாலும், நீதித்துறை வழக்குகள் நீதிமன்றங்களாலும் விசாரிக்கப்படலாம்.


டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்து, தரவுப் பாதுகாப்பு வாரியம் ஒன்றை அமைத்து, இணையத் தளங்களும் அதற்குக் கட்டுப்படும் வரை, இந்தத் தீர்ப்பு கொள்கை அளவிலான அறிவிப்பாக மட்டுமே இருக்கும். கருத்துச் சுதந்திரம் (Freedom of Expression) மற்றும் வெளிப்படையான நீதி  ஆகியவற்றுக்கு இடையிலான மோதல் என்பது உண்மையான ஒன்றாகும். எனவே, இந்த இரண்டு உரிமைகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் நிறுவனங்களை உருவாக்குவதே இனி மேற்கொள்ள வேண்டிய முக்கிய உருவாக்குவதே முக்கியப்பணியாகும்.


ஜி. எஸ். பஜ்பாய், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார். அவர், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஆய்வாளரான விபூதி ஷர்மாவின் உதவியை ஏற்றுக்கொள்கிறார்.


Original article : What is the right to be forgotten? -G S  Bajpai

Share:

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போர்முறையை மாற்றியமைக்கிறது: இந்தியா எவ்வாறு ஈடுகொடுக்க முடியும்? -ராஜ் சுக்லா

 ஈரான் முதல் வெனிசுலா வரையிலான உலகளாவிய உதாரணங்கள் காட்டுவது என்னவென்றால், இந்தியா தனது சொந்த இறையாண்மை அணுகுமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)), ராணுவ சுயாட்சி மற்றும் கணினி வழிமுறை அடிப்படையிலான போர் உத்திகள் ஆகியவற்றின் கூட்டுமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.


செயற்கை நுண்ணறிவு (AI), ராணுவ சுயாட்சி மற்றும் கணினி வழிமுறை சார்ந்த போர்முறை (Algorithmic warfare) ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையானது, நவீன போர்கள் நடத்தப்படும் முறையையும், நாடுகள் தங்களுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வழியையும் மாற்றி அமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவானது நேரடிப் போர் நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் அதேவேளையில், சுயாட்சி அமைப்புகள் மனிதர்களின் தலையீடு இன்றித் தன்னிச்சையாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்புகளை மிகவும் ஆபத்தானதாக மாற்றுவது எதுவென்றால், ‘Algorithms’ எனப்படும் கணினி வழிமுறைகள் வழங்கும் துல்லியமான இலக்குத் திறன்தான். இந்த மூன்று தொழில்நுட்பங்களும் இணைந்து, வரவிருக்கும் ஆண்டுகளில் போர்க்களத்தின் செயல்திறனையும், அதன் அழிவுத் திறனையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் ராஜதந்திர மற்றும் இராணுவத் தலைமை, தற்போதைய போர்க்களச் சூழலை ஒரு மேன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) போன்றதொரு வரலாற்றுத் தருணமாக அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில், இன்று போரியல் துறையில் முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.




தொழில்நுட்ப மோதல்: உக்ரைன், வெனிசுலா மற்றும் ஈரான்


துப்பாக்கி மருந்து மற்றும் அணுஆயுதங்களுக்குப் பிறகு, ராணுவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய புரட்சி, ட்ரோன்கள் (Drones) ஆகும். இவை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அது சார்ந்த பிற தொழில்நுட்பங்களுடன் இணையும்போது, போரிடும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைப்பதுடன், நாடுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.


இவற்றின் தாக்கம் ரஷ்யா-உக்ரைன் போரில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உக்ரைன் நாடு 'டெல்டா' (Delta) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தரவு பகுப்பாய்வு தளத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தளம் ரேடார் படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே அறிவார்ந்த அமைப்பாக மாற்றுகிறது. டெல்டா தளம் பல்வேறு வகையான ட்ரோன்களுடன் இணைந்து செயல்பட்டு ஒரு டிஜிட்டல் 'Kill web' (இலக்குகளை அழிக்கும் வலைப்பின்னல்) அமைப்பை உருவாக்குகிறது. இது ஒரு இலக்கைக் கண்டறிவதற்கும் அதை அழிப்பதற்கும் இடைப்பட்ட நேரத்தை வெறும் சில நிமிடங்களாகக் குறைக்கிறது.


ரஷ்ய-உக்ரைன் எல்லை நெடுகிலும் உள்ள 35 கிலோமீட்டர் தூரப் பகுதி மரணப் பகுதி (Death zone) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில், பீரங்கிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது, போர் பீரங்கிகளால் நகரவே முடியவில்லை. மேலும், தரைப்படை வீரர்கள் கண்காணிப்பு ட்ரோன்களால் உடனடியாகக் கண்டறியப்பட்டு, சில நிமிடங்களிலேயே ட்ரோன்கள் மூலமாகத் தாக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் போர் வீரர்களால் செய்யப்பட்ட பல பணிகளை இப்போது ஆளில்லா அமைப்புகளே செய்கின்றன. தகவல் சேகரிப்பது, இலக்குகளைக் கண்டறிவது, வெடிமருந்துகள் மற்றும் உணவுகளை வழங்குவது மற்றும் காயமடைந்தவர்களை மீட்பது ஆகியவை இதில் அடங்கும்.


கடந்த ஆண்டு உக்ரைன் பயன்படுத்திய பீரங்கி குண்டுகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக, இந்த ஆண்டு சுமார் 80 லட்சம் ட்ரோன்களை வாங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள், 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தரைப்படைகளுக்கு வான்வழி ஆதரவு தருவதில் தொடங்கி, 2,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று நீண்டதூரத் தாக்குதல்களை நடத்தும் அபாரத் திறனை ராணுவத் தளபதிகளுக்கு வழங்குகின்றன.


வெனிசுலாவில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிபரான நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடிப்பதற்காக அமெரிக்கா நடத்திய நடவடிக்கையின்போது, ‘Anthropic’ நிறுவனத்தின் 'Claude AI' என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மதுரோவின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும், அவரது அடுத்தகட்ட நகர்வுகளை முன்கூட்டியே கணிக்கவும் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ராணுவத் தலைவர்களுக்கு உதவியது. அதன்பிறகு, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காக மின்னணுப் போர் (Electronic warfare) மற்றும் இணையவழித் தாக்குதல்கள் ஆகியவை 'Delta Force’ ஹெலிகாப்டர் தாக்குதலுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.


ஈரானில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது, மனிதர்கள் சிந்தித்துச் செயல்படும் வேகத்திற்குப் பதிலாக இயந்திர வேகத்தில் இலக்குகளைத் தாக்கும் திட்டங்களைத் தயாரிக்க உதவியது. இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகத் துல்லியமான தாக்குதல்கள், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி காலை சில நிமிடங்களிலேயே ஈரானியத் தலைவர்கள் ஏறக்குறைய அனைவரையும் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


தானியங்கிக் கட்டுப்பாடு 


ராணுவத் தொழில்நுட்பம் மிக அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா விமானப் போர்முறை, மனிதர்கள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் நிலையிலிருந்து மாறி, இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சுயமாகச் செயல்படும் தானியங்கி கட்டுப்பாட்டுக்கு மாறி வருகிறது. கடற்படைக் கப்பல்களும் மனித தளபதிகளுக்குப் பதிலாக, சுயமாக முடிவெடுக்கும் தானியங்கி மென்பொருள் அமைப்புகளை நோக்கி நகர்கின்றன. வான்வழிப் போரில், 'Anduril' என்ற பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனம் உருவாக்கியுள்ள YFQ-44A ‘Fury’ என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் தானியங்கி போர் விமானம், வான்வழிப் பாதுகாப்பின் எதிர்காலம் மனிதர்களும் செயற்கை நுண்ணறிவும் (AI) இணைந்து செயல்படுவதைச் சார்ந்தே இருக்கும் என்பதைக் காட்டுகிறது. மேலும், பாதுகாப்புத் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், பெரிய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து சுறுசுறுப்பாகச் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை நோக்கி மெதுவாக நகர்வதையும் இது உணர்த்துகிறது.


அதேநேரத்தில், பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழில்நுட்பங்களும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருகின்றன. 'Mythos' எனப்படும் ஒரு மெய்நிகர் இணையவழி ஆயுதம் (Virtual cyber weapon), எதிரிகளின் கணினி இயங்குதளத்தையே முடக்கக்கூடிய திறன் கொண்டது. ‘DeepSeek’ மற்றும் தாவின் ஸ்கேலிங் விதி (Tau's Law of Scaling) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களும், ‘Nvidia’ நிறுவனத்தின் 4-நானோமீட்டர் ‘Blackwell’ சிப்களுக்குப் போட்டியாக 2031-ஆம் ஆண்டுக்குள் 1.4-நானோமீட்டர் டிரான்சிஸ்டர் அடர்த்தியை அடைய வேண்டும் என்ற ‘Huawei’ நிறுவனத்தின் இலக்கும், சீனாவின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு ராணுவ மற்றும் ராஜதந்திரரீதியான போட்டியைத் தீவிரப்படுத்துகின்றன என்பதைக் காட்டுகின்றன.


போர்க்களத்தில், ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் ஒருமுறை புதிய மென்பொருட்களும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய வன்பொருட்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே, இதுவரை முக்கியமாக ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பாதுகாப்பு அமைச்சகம், இனி மேம்பட்ட மென்பொருட்களையும் உருவாக்கும் ஒரு அமைப்பாக மாற வேண்டும்.


இந்தியா என்ன செய்ய வேண்டும்?


பாதுகாப்புத் துறையின் எதிர்காலம் என்பது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. இப்போதிலிருந்தே, செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்கித் தொழில்நுட்பம் மற்றும் கணினி வழிமுறை போர்முறை (Algorithmic warfare) ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் பின்வரும் வழிகளில் நடைமுறைப்படுத்தலாம்:





'டெல்டா' (Delta) தளத்தைப் போன்ற, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு தரவு பகுப்பாய்வுத் தளத்தை  உடனடியாக உருவாக்க வேண்டும்.


ட்ரோன்களை மனித உதவியின்றித் தானாகவே ஒருங்கிணைக்கும் மென்பொருளை உருவாக்க வேண்டும். இது பறவைகள், உள்நாட்டு விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து, இலக்குகளை அழிக்குமாறு தாக்குதல் நடத்துவோருக்கு வழிகாட்டும்.


2028-ஆம் ஆண்டிற்குள் 50 லட்சம் ட்ரோன்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு வகையான ட்ரோன்களின் கையிருப்பைக் கொண்டிருக்க வேண்டும்.


ட்ரோன்களை தாக்கி அழிக்கும் குழுக்களுடன், லேசர் மற்றும் மைக்ரோவேவ் ஆயுதங்கள் போன்ற பல்வேறு வகையான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control (LoC)) மற்றும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் "Kill webs" (எதிரி ட்ரோன்களைக் கண்டறிந்து உடனடியாக அழிக்கும் வலைப்பின்னல்) அமைப்பை உருவாக்க உதவும்.


பூமியின் தாழ்வட்டப் பாதையில் (Low-Earth orbit (LEO)) அதிகப்படியான செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும். இதன் மூலம், வெறும் கண்காணிப்பு என்கிற அளவோடு நின்றுவிடாமல், எதிரிகளின் நகர்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து ஆக்கிரமிப்புடன் தாக்கும் உளவுத் துறை, கண்காணிப்பு மற்றும் உளவுப் பணி (Intelligence, surveillance and reconnaissance) என்ற நிலைக்கு நாம் மாற முடியும்.


2027-ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நிதிநிலைத் திட்டம் இந்த மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்படும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயில், குறைந்தபட்சம் 40 விழுக்காட்டை இத்தகைய தொழில்நுட்பத் தீர்வுகளுக்காகவே செலவிட வேண்டும்.




இது ஒரு மிகப்பெரிய சவாலாகும். இதற்கு நமது ராணுவக் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பில் பெரிய மாற்றம் தேவைப்படும். இருப்பினும், இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது போர்க்களத்தில் போர் முறையையே மாற்றியமைப்பதாக இருக்கும். இது நெருக்கடியான சூழ்நிலைகளில் இந்தியா செயல்படுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, பாகிஸ்தானைவிட போர்முனையில் அதிகப்படியான மேலாதிக்கத்தைப் பெறவும், சீனாவிற்கு எதிராக சமச்சீரற்ற தற்காப்புத் தடுப்பை உருவாக்கவும் இந்தியாவிற்கு வழிவகுக்கும்.


ராஜ் சுக்லா, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாகப் பணியாற்றி, ராணுவப் பயிற்சிப் பிரிவின் (ARTRAC) ராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.


Original article : AI is reshaping warfare: How India can keep pace. -Raj Shukla

Share:

தண்ணீர் பற்றாக்குறை: கழிவுநீர் சுத்திகரிப்பு என்பது ஒரு நிலையான தீர்வா? -அருணாங்ஷு தாஸ்

 நீரில் பல வகையான உயிரியல் மற்றும் வேதியியல் அசுத்தங்கள் நிறைந்துள்ளன. இதனால், பொது சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பை உறுதிசெய்ய பயனுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மிகவும் அவசியமாகிறது. கழிவுநீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது? குளோரினேற்றம் (Chlorination) முறையின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன? குளோரினேற்றத்தைவிட ஓசோன் (Ozone) முறை மிகவும் பயனுள்ள ஒரு கிருமிநாசினி முறையா?



நச்சு இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை குடிநீர் ஆதாரங்களை மாசடையச் செய்து, கடுமையான ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் 2005 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 20.98 கோடிக்கும் அதிகமான நீர் மூலம் பரவும் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்ற தேசியத் தரவுகளைச் சுட்டிக்காட்டிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)), மாசடைந்த குடிநீரை வழங்குவது நீர் மாசுபாட்டின் ஒரு வடிவமாகும் என்றும், அது மனிதர்களின் அடிப்படை வாழ்வுரிமையை (Right to life) மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது.


இது இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு எவ்வாறு பாதுகாப்பான குடிநீரை வழங்குவது என்பது பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு காலத்தில் வெறும் கழிவாக மட்டுமே பார்க்கப்பட்ட கழிவுநீரை, முறையான சுத்திகரிப்பு மூலம் ஒரு மதிப்புமிக்க வளமாக மாற்ற முடியுமா?


கழிவுநீர் மறுசுழற்சி ஏன் முக்கியமானது?


நன்னீர் (Freshwater) என்பது பூமியின் மிக மதிப்புமிக்க இயற்கை வளங்களில் ஒன்றாகும். பூமியில் உள்ள தண்ணீரில் சுமார் 96.5% உப்புத் தன்மையுடையது. இது கடல்களிலும் பெருங்கடல்களிலும் காணப்படுகிறது. ஏரிகளில் உள்ள நன்னீர் வெறும் 0.007% மட்டுமே ஆகும். அதேநேரத்தில் ஆறுகள் மற்றும் ஓடைகள் அனைத்தையும் சேர்த்தாலும் வெறும் 0.002% மட்டுமே தண்ணீர் உள்ளது என்று கில்பர்ட் எம். மாஸ்டர்ஸ் மற்றும் வெண்டெல் பி. எலா ஆகியோர் தங்களது 'Introduction to Environmental Engineering and Science' (1991) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


எனவே, கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதுதான் தொழில்துறை, வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் வேளாண்மை ஆகியவற்றுக்குத் தேவையான தண்ணீரை வழங்குவதற்கான நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். இந்தக் கழிவுநீரைச் சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.



நீர் மாசுபடுத்திகள்: உயிரியல் மற்றும் வேதியியல் காரணிகள்


உயிரினக் கழிவு மாசுக்கள் (Biological contaminants) என்பவை வைரஸ்கள் (எ.கா: என்டெரோவைரஸ்), பாக்டீரியாக்கள் (எ.கா: சால்மோனெல்லா, ஷிகெல்லா), புரோட்டோசோவாக்கள் (எ.கா: எண்டமீபா) மற்றும் ஒட்டுண்ணிப் புழுக்கள் (எ.கா: கொக்கிப்புழுக்கள்) போன்ற நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் ஆகும்.


வேதிப்பொருள் மாசுக்களில் ஆக்சிஜனைப் பயன்படுத்தும் கழிவுகள் (சாக்கடை நீர், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீர் போன்றவை) மற்றும் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் (நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் கூட்டுப்பொருட்கள் போன்றவை) அடங்கும். ஆக்சிஜனைப் பயன்படுத்தும் கழிவுகள் தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் தேவையை (Biological Oxygen Demand (BOD)) அதிகரிக்கின்றன. அதேநேரத்தில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் தண்ணீரின் மேல் பாசிகள் பெருகுவதற்குக் காரணமாகின்றன. குடிநீரில் நைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதும் இந்த ஊட்டச்சத்து மாசுபாட்டின் மற்றொரு விளைவுதான்; இது கைக்குழந்தைகளுக்கு 'மெஹ்மோகுளோபினேமியா' (Methemoglobinemia) எனப்படும் 'Blue baby syndrome' ஏற்படக் காரணமாகிறது.


Blue Baby Syndrome: குடிநீரில் நைட்ரேட் அதிகம் இருந்தால், அது குழந்தைகளின் இரத்தத்தில் ஆக்சிஜன் செல்வதைத் தடுத்து, அவர்களின் உடல் அல்லது உதடுகள் நீல நிறமாக மாற வழிவகுக்கும் ஒரு ஆபத்தான நிலை ஆகும்.


மற்ற முக்கிய இரசாயன மாசுகளில் உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile Organic Compounds (VOCs)), நீரில் கரைந்துள்ள திடப்பொருட்கள் மற்றும் புதிதாக உருவாகி வரும் நீர் மாசுகள் ஆகியவை அடங்கும். உலோகங்கள் நமது உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கலாம்; பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழல் நச்சுத்தன்மையையும் மற்றும் உணவுச் சங்கிலி வழியாக உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதையும் ஏற்படுத்துகின்றன. ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOC) முக்கியமாக நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. மேலும், நீரில் அதிகப்படியான உப்பின் அளவு அதிகரிப்பது, நீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவை (Total Dissolved Solids (TDS)) அதிகரிக்கிறது.


மேலும், புதிதாக உருவாகி வரும் நீர் மாசுகள், குறிப்பாக வாய்வழி கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் 'எத்தினிலஸ்ட்ராடியோல்' (Ethinylestradiol) போன்ற நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிக்கும் இரசாயனங்கள் (Endocrine-Disrupting Chemicals (EDCs)), மீன்கள் மற்றும் தவளை போன்ற இருவாழ்விகளைத் (Amphibians) தீவிரமாகப் பாதிக்கலாம்.


நீர் தர மதிப்பீட்டு குறியீடு உயிரினங்கள் 


ஒரு தண்ணீர் மாதிரியில் (Water sample) இருக்கும் ஒவ்வொரு நுண்ணுயிரியையும் தனித்தனியாக எண்ணிக்கையைக் கண்டறிவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. எனவே, தண்ணீரின் தரத்தைப் பரிசோதிக்கவும், நீர்ச் சுத்திகரிப்பு முறைகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை மதிப்பிடவும் 'கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள்' (Coliform bacteria), குறிப்பாக 'எஷெரிச்சியா கோலி' (Escherichia coli (E. Coli)) ஆகியவை பொதுவாகக் 'குறியீட்டு உயிரினங்களாக' (Indicator organisms) பயன்படுத்தப்படுகின்றன. இது பின்வரும் காரணங்களின் அடிப்படையில் அமைகிறது:


1.  மலக் கழிவு கலப்பது என்பது பொதுச் சுகாதாரத்திற்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாகும்; ஏனெனில், மலத்தில் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருக்கக்கூடும்.


2. மனிதனின் குடலில் பெருமளவில் 'கோலிஃபார்ம்' பாக்டீரியாக்கள் (Coliform bacteria) வாழ்கின்றன. எனவே, மலக் கழிவு கலந்ததன் காரணமாக அந்தத் தண்ணீரில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தால், அங்கு பொதுவாக இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்களும் நிச்சயம் இருக்கும்.


3. நோயை உண்டாக்கும் கிருமிகள் (Pathogens), மனித உடலுக்கு வெளியே இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்களைவிட மிகக் குறைந்த காலமே உயிர்வாழும்.


4. பொதுவாக, மக்கள்தொகையில் பாதிக்கப்பட்ட ஒரு சிலரே இந்த நோயை உண்டாக்கும் கிருமிகளை மற்றவர்களுக்குப் பரப்புகிறார்கள்.


வழக்கமான நீரின் தரத்தைக் கண்காணிப்பதற்குப் குறியீட்டு உயிரினங்கள் பயனுள்ளதாக இருந்தாலும், இந்த முறை முற்றிலும் நம்பகமானது அல்ல. இரசாயனங்களைப் பயன்படுத்தி கோலிஃபார்ம் பாக்டீரியாக்களை (Coliform bacteria) அழிப்பதால் மட்டும், கியார்டியா (Giardia), கிரிப்டோஸ்போரிடியம் (Cryptosporidium) மற்றும் குடல் வைரஸ்கள் (Enteric viruses) போன்ற அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட பிற நோய் கிருமிகள் எப்போதும் முழுமையாக அழிந்துவிடுவதில்லை.


எனவே, நவீன குடிநீர் விதிமுறைகள் '4-log, 3-log, and 2-log’ விதிகள்' எனப்படும் மிகவும் கடுமையான சுத்திகரிப்புத் தரங்களை நிர்ணயித்துள்ளன. இந்த விதிகளின்படி, குடல் வைரஸ்கள் 99.99 விழுக்காடும், கியார்டியா கிருமிகள் 99.9 விழுக்காடும் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும். மேலும், கிரிப்டோஸ்போரிடியம் கிருமிகள் 99 விழுக்காடு முழுமையாக அகற்றப்படவோ அல்லது செயலிழக்கச் செய்யப்படவோ வேண்டும்.


மேலும், நீரில் கலந்துள்ள மலம் சார்ந்த மாசுகள் மனிதர்களிடம் இருந்து வந்ததா அல்லது விலங்குகளிடம் இருந்து வந்ததா என்பதை அடையாளம் காண வேண்டியிருக்கும்போது, 'மலம் சார்ந்த கோலிஃபார்ம்கள்' மற்றும் 'மலம் சார்ந்த ஸ்ட்ரெப்டோகாக்கி' ஆகியவற்றின் விகிதம் மற்றொரு குறியீட்டு உயிரினமாகப் பயன்படுத்தப்படுகிறது.


கண்டறிதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு


தண்ணீரில் உள்ள கோலிஃபார்ம் பாக்டீரியாக்களை (Coliform bacteria) பொதுவாக மூன்று படிகள் கொண்ட ஒரு முறையைப் பயன்படுத்தி அடையாளம் காண்கிறார்கள். இந்த முறை அமெரிக்கப் பொதுச் சுகாதார சங்கத்தின் (American Public Health Association (APHA)) 'Standard Methods for the Examination of Water and Wastewater' என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறை மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது:


1. ஊகச் சோதனை (Presumptive test): இது தண்ணீரில் பாக்டீரியாக்கள் இருக்கிறதா என்று ஊகிப்பதற்கான முதல் சோதனை ஆகும். இதில் 'லாக்டோஸ் நொதித்தல்' நிகழும்போது அமிலம் மற்றும் வாயு உருவாகிறதா என்று சரிபார்க்கப்படுகிறது.

2. உறுதிப்படுத்தும் சோதனை (Confirmed test): இது 'brilliant green lactose bile broth' (ஒரு வகையான திரவ ஊடகம்) அல்லது 'eosin methylene blue agar' (ஒரு வகையான திண்ம ஊடகம்) ஆகியவற்றில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் வளர்வதையும், அவை வாயுவை உற்பத்தி செய்வதையும் வைத்து, தண்ணீரில் அந்தப் பாக்டீரியாக்கள் இருப்பதை உறுதி செய்கிறது.


3. முழுமையடைந்த சோதனை (Completed test): இது, பாக்டீரியாக்கள் வாயுவை உற்பத்தி செய்துள்ளதா என்பதைப் பார்ப்பதன் மூலமும் மற்றும் ‘கிராம் சாயமேற்றல் முறை (Gram staining)’ (பாக்டீரியாவை நுண்ணோக்கியில் பார்க்கப் பயன்படும் ஒரு சாய முறை) சோதனை மூலமும் முந்தைய சோதனையின் முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.


நீரில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த நீர் தொற்றுநீக்க முறைகள் மூலம் சுத்திகரிக்கப்பட வேண்டும். கழிவுநீரானது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுகிறது.


முதல்நிலை சுத்திகரிப்பு (Primary treatment) என்பது நீரில் உள்ள பெரிய துகள்களை அகற்றுவதற்காக வடிகட்டுதல் (Screening) முறையுடன் தொடங்குகிறது. அதன் பிறகு, நீர் வேகமாகக் கலக்கப்பட்டு, உறைவிப்பு (Coagulation) மற்றும் மின்னூட்டத் திரட்சி (Flocculation) செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இது நீரில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் ஒன்றோடொன்று ஒட்டி, பெரிய கட்டிகளாக மாற உதவுகிறது.


 மின்னூட்டத் திரட்சி (Flocculation) என்பது ஒரு மென்மையான கலவை செயல்முறையாகும். இது நீரில் மிதக்கும் சிறிய துகள்களை ஒன்றிணைத்து 'Flocs' எனப்படும் பெரிய துகள்களாக மாற்றுகிறது. இந்தத் துகள்கள் அனைத்தும் படிவடிதல் (Sedimentation) முறை மூலம் கீழே சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இவ்வாறு தெளிவாக்கப்பட்ட நீர், இறுதி தொற்றுநீக்க சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு வேக மணல் வடிகட்டிகள் (Rapid sand filters) மூலம் செலுத்தப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.


நகராட்சி கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கு, செயல்படுத்தப்பட்ட சேறு செயல்முறை (Activated sludge process) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், கழிவுநீருக்குள் காற்றைச் செலுத்தும் காற்றோட்ட (Aeration) நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது நீரில் உள்ள நுண்ணுயிரிகள் கரிமக் கழிவுகளை உட்கொண்டு, அவற்றை உயிர்த்திரளாக (Biomass) மாற்ற உதவுகிறது. பின்னர், இந்த உயிர்த்திரள் படிவடித்தல் (Sedimentation) மற்றும் வடிகட்டுதல் (Filtration) ஆகிய முறைகள் மூலம் நீரிலிருந்து பிரித்தெடுத்து அகற்றப்படுகிறது.


தண்ணீர் சுத்திகரிப்பு முறை: வழிமுறைகளும் சவால்களும் 


தண்ணீரைச் சுத்திகரிப்பதில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறை 'குளோரினேற்ற' (Chlorination) ஆகும். இந்த முறையில் குளோரின் வாயு அல்லது சோடியம்/கால்சியம் ஹைப்போகுளோரைட் தண்ணீரில் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருட்கள் தண்ணீரில் வினைபுரிந்து 'ஹைப்போகுளோரஸ் அமிலத்தை' (HOCl) உருவாக்குகின்றன. இதுதான் தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்கும் முக்கியப் பொருளாகும். குளோரின் வாயுவும், ஹைப்போகுளோரைட் அயனிகளும்கூட கிருமிகளை அழிக்க உதவுகின்றன, ஆனால் அவற்றின் பங்கு குறைவுதான்.


ஆரம்பக்கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகும், தண்ணீரில் சிறிய அளவில் குளோரின் மீதமிருக்கும். இந்த மீதமுள்ள குளோரின் தண்ணீரில் மீண்டும் கிருமிகள் வளர்வதைத் தொடர்ந்து தடுக்கிறது. சில நேரங்களில், தண்ணீரில் 'குளோராமைன்களை' (Chloramines) உருவாக்குவதற்காக அம்மோனியா சேர்க்கப்படுகிறது. இவை தண்ணீரில் நீண்டநேரம் நீடித்திருக்கும், ஆனால் கிருமிகளை அழிப்பதில் குளோரினைவிட சற்றே வீரியம் குறைந்தவை ஆகும்.


இந்த குளோரினேற்ற முறையின் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், இது ட்ரைஹாலோமீதேன்கள் (Trihalomethanes), குளோரோஃபார்ம் (Chloroform) மற்றும் ஹாலோஅசிட்டிக் அமிலங்கள் போன்ற சுத்திகரிப்பு பக்கவிளைவுப் பொருட்களை (Disinfection by-products (DBPs)) உருவாக்குகிறது. இவை மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. மேலும், தண்ணீரில் குளோரின் அளவு ஒரு லிட்டருக்கு 0.5 மில்லிகிராமுக்கும் குறைவாக இருந்தால், அது என்டெரோவைரஸ் (Enteroviruses) போன்ற சில வகை வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படாது. இதற்கு மாற்றாக 'குளோரின் டைஆக்சைடைப்' (Chlorine dioxide) பயன்படுத்தலாம்.  இது வைரஸ்களை அழிப்பதில் திறம்பட செயல்படும், ஆனால் செலவு அதிகம். அதோடு, இது 'குளோரைட்டுகளை' உருவாக்குகிறது; குடிநீரில் இதன் பாதுகாப்பான அளவு ஒரு லிட்டருக்கு 1 மில்லிகிராம் மட்டுமே இருக்க வேண்டும்.


குளோரினைவிட ஓசோன் வாயுவானது தண்ணீரில் உள்ள நுண்கிருமிகளையும் வைரஸ்களையும் அழிப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும், இது தண்ணீரில் எந்தவொரு விரும்பத்தகாத வாசனையையோ அல்லது சுவையையோ ஏற்படுத்துவதில்லை. இருப்பினும், ஓசோனைப் பயன்படுத்தும்போது அது புரோமேட் (Bromate) என்ற வேதிப்பொருளை உருவாக்கக்கூடும்; தண்ணீரில் இதன் பாதுகாப்பான அளவு ஒரு லிட்டருக்கு வெறும் 0.01 மில்லிகிராம் (0.01 mg/L) மட்டுமே இருக்க வேண்டும். மற்றொரு குறைபாடு என்னவென்றால், ஓசோன் தண்ணீரில் இருந்து மிக விரைவாக ஆவியாகிவிடும். எனவே, குளோரினைப் போல சுத்திகரிப்புக்குப் பிறகும் தண்ணீரில் நீடித்து நின்று தொடர்ந்து கிருமிகள் வராமல் பாதுகாக்கும் திறன் ஓசோனுக்கு இல்லை.


நுண்ணுயிரிகள் எதிர்த்துப் போராடும்போது


இந்தத் தகவமைப்புத் திறன்களைப் பற்றி விரிவாக ஆராய்வதற்காக, சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று செல் உள் மற்றும் செல் வெளி (Intracellular and extracellular) ஆகிய இருநிலைகளிலும் மெட்டோஜெனோம்ஸ் (Metagenomes) மற்றும் மெட்டோட்ரான்ஸ்கிரிப்டோம்ஸ் (Metatranscriptomes) ஆகியவற்றை ஆய்வு செய்தது. இந்தத் தொழில்நுட்ப நுட்பங்கள் எதைக் குறிக்கின்றன? இந்த ஆய்வின் மூலம் என்னென்ன புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டன, மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் நீண்டகாலத் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா போன்ற கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி உங்களுக்கு வழங்கும்.


Original article : Water scarcity: Is wastewater treatment a sustainable solution? -Arunangshu Das

Share:

இந்தியாவில் நேரடிப் பண உதவித் திட்டங்கள்: பாதுகாப்பு வலை மற்றும் சமரசம்

 இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, மாநிலங்கள் இத்தகைய திட்டங்களுக்கும் இலவச மின்சாரம் போன்ற மக்கள் ஆதரவை ஈர்க்கும் நடவடிக்கைகளுக்கும் அதிக நிதியை ஒதுக்குவதால், பிற துறைகளில் செலவிடும் திறன் பாதிக்கப்படுவதாகக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இத்திட்டங்களால் முதலீடுகளைத் முடக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.


சமீபத்திய ஆண்டுகளில், பல மாநிலங்கள் பெண்களுக்காகப் பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 'லாட்லி பெஹ்னா யோஜனா' (Ladli Behna Yojana), ஜார்க்கண்டில் 'மையா சம்மான் யோஜனா' (Maiya Samman Yojana) மற்றும் தமிழ்நாட்டில் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்களின்கீழ், பெண்களுக்கு வழக்கமாக மாதம் ₹1,000 முதல் ₹2,500 வரை வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டங்களுக்காகச் செலவிடப்படும் தொகை மிக வேகமாக அதிகரித்துள்ளது. ‘PRS Legislative Research’ அறிக்கையின்படி, 12 மாநிலங்கள் இணைந்து 2025-26-ஆம் நிதியாண்டில் நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டங்களுக்காக ₹1.68 லட்சம் கோடி செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, இதே நிதியாண்டில் ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ₹86,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது.


நிபந்தனையற்ற பணப்பரிமாற்றத் திட்டங்கள் (Unconditional cash transfers) பெண்களின் நலம் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளன. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு தேர்தல் உத்தியாகவும் உருவெடுத்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள "இந்தியாவில் பெண்களுக்கான நிபந்தனையற்ற பணப்பரிமாற்றத் திட்டங்கள்" (EAC-PM Working Paper Series) என்ற சமீபத்திய ஆய்வு, இந்தத் திட்டங்களால் கிடைக்கும் நன்மைகளை உறுதிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களை ஆய்வு செய்ததில், இவை பயனாளிகளின் அன்றாடப் பொருட்களின் நுகர்வு மற்றும் சேமிப்பை அதிகரித்துள்ளதோடு, ஒட்டுமொத்த குடும்ப நலனையும் மேம்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இத்திட்டங்களால் குடும்பங்கள் தங்களின் மருத்துவம், கல்வி மற்றும் சிறந்த வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக அதிக அளவில் செலவிடுகின்றனர். இந்தச் சாதகமான முடிவுகள் காரணமாகவே, இத்தகைய திட்டங்கள் தற்போது மாநிலங்களில் மிகவும் பரவலாகி வருகின்றன.


கடந்த சில ஆண்டுகளாக, மாநில அரசுகள் பணப்பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சித் திட்டங்களுக்கு அதிகப்படியான பணத்தைச் செலவிடுவதால், மற்ற முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்படும்  நிதியின் அளவு குறைந்து வருகிறதோ என்ற கவலைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய திட்டங்கள் நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதால், அவை புதிய முதலீடுகளைக் குறைத்துவிடக்கூடும் என்று ரிசர்வ் வங்கியும் எச்சரித்துள்ளது. மாநில அரசுகளின் நிதிநிலை குறித்த கவலைகள் அதிகரித்துவரும் இதே காலகட்டத்தில்தான், பணப்பரிமாற்றத் திட்டங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. ஆக்சிஸ் வங்கியின் (Axis Bank) அறிக்கை ஒன்றின்படி, மாநிலங்கள் பிற துறைகளுக்கான செலவினங்களை இதற்காக மாற்றுவதோடு, தங்களின் நிதிப் பற்றாக்குறையையும் அதிகரித்துக் கொள்கின்றன. மாநிலங்களின் ஒட்டுமொத்தக் கடன் அளவு, 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 31 விழுக்காட்டில் இருந்து 2026-ஆம் ஆண்டில் (நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளின்படி) 29.2 விழுக்காடாகக் குறைந்திருந்தாலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள கடனின் அளவு பெரும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தின் கடன் அதன் ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) 46.4 விழுக்காடாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்கம் 38.9 விழுக்காடாகவும், பீகார் 36.8 விழுக்காடாகவும் உள்ளன. அதிகப்படியான கடன், அரசு உத்தரவாதங்களால் எழும் தற்காலிகப் பொறுப்புகள் மற்றும் விரிவடைந்து வரும் பணப்பரிமாற்றத் திட்டங்கள் ஆகியவை மாநிலங்களின் நிதிநிலைக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எச்சரித்துள்ளது. இந்தக் கவலைகளுக்கு மிக நெருக்கமான கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.


Original article : Cash transfers in India: The safety net and the trade-off.

Share:

தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் (VDPV) ஏன் கவனம் பெற்றுள்ளது - குஷ்பூ குமாரி

 காசியாபாத்தில் உள்ள கழிவுநீர் மாதிரி ஒன்றில் தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் (vaccine-derived polio virus (VDPV)) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் என்றால் என்ன? இது இந்தியாவின் போலியோ- இல்லாத நிலையைப் பாதிக்குமா?



தற்போதைய செய்தி :


காசியாபாத்தில் கழிவுநீர் மாதிரியில் தடுப்பூசி வழி போலியோ வைரஸ் (VDPV) கண்டறியப்பட்டு ஏறக்குறைய ஒரு வாரம் ஆன நிலையில், ஜூன் 11-ஆம் தேதி அதிகாரிகள், 12 பகுதிகளில் உள்ள 30,000 வீடுகளை உள்ளடக்கிய விரிவான வீடு வீடாகச் சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, ஐந்து வயதுக்குட்பட்ட 2,590 குழந்தைகளைக் கொண்ட 5,421 வீடுகளை ஆய்வு செய்தனர்.


முக்கிய அம்சங்கள்:


பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசித் திட்டங்களுக்குப் பிறகு, 2014-ஆம் ஆண்டில் இந்தியா காட்டுப் போலியோ வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் போலியோ வைரஸ் இல்லாத நாடு எனச் சான்றளிக்கப்பட்ட 11 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இருந்த போதிலும், ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பாக, கழிவுநீரில் வைரஸின் தடயங்கள் உள்ளதா எனப் பரிசோதிக்கும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


2. காசியாபாத்தில் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கழிவுநீர் வலையமைப்பை ஆய்வு செய்து, 150,000 மக்கள் வசிக்கும் 12 பகுதிகளை அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் கண்டு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (National Centre for Disease Control (NCDC)) மற்றும் உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) ஆகியவற்றின் மேற்பார்வையின்கீழ் தடுப்பூசிக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தினர்.


3. கண்டறியப்பட்ட இந்தத் தொற்று வகை பெரும்பாலும் வீரியம் அற்றது என்றும், இதுவரை தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வாரணாசி மற்றும் மேகாலயாவில் இதற்கு முன்னர் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரி ஒருவர் கூறினார்.


4. உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) போலியோ அல்லது போலியோமைலிடிஸ் நோயை, "முக்கியமாக சிறு குழந்தைகளைப் பாதிக்கும், மிக எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோய்" என்று குறிபிடுகிறது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இது முக்கியமாக மலம் கலந்த நீர் அல்லது உணவு மூலமாகவும் (faecal-oral route) அல்லது அரிதாக அசுத்தமான நீர் அல்லது உணவு போன்ற பொதுவான இடங்கள் மூலமாகவும் பரவுகிறது. குடலில் அதிகரிக்கும் இந்த வைரஸ், அங்கிருந்து நரம்பு மண்டலத்தைப் பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

5. போலியோவின் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி, கழுத்தில் விறைப்பு மற்றும் கை கால்களில் வலி போன்றவை அடங்கும்.  சில நேர்வுகளில், இந்நோய் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நிரந்தரமானது. போலியோவை குணப்படுத்தும் சிகிச்சை ஏதுமில்லை; தடுப்பூசி மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.


6. இயற்கையான போலியோ வைரஸில் மூன்று வகைகள் உள்ளன. வகை 2 வைரஸ் செப்டம்பர் 2015-ல் ஒழிக்கப்பட்டது. வகை 3 வைரஸ் நவம்பர் 2012-க்குப் பிறகு கண்டறியப்படவில்லை என்பதோடு, அது அக்டோபர் 24, 2019 அன்று ஒழிக்கப்பட்டதாகச் சான்றளிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டின் நிலவரப்படி, வகை 1 இயற்கையான போலியோ வைரஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே தொடர்ந்து  இருந்து வருகிறது.


தடுப்பூசியால் ஏற்படும் போலியோ தொற்று என்றால் என்ன?


தடுப்பூசியால் உருவாகும் போலியோ வைரஸ் (vaccine-derived poliovirus) என்பது வாய்வழி போலியோ தடுப்பூசியில் (OPV) உள்ள வீரியம் குறைக்கப்பட்ட போலியோ வைரஸுடன் தொடர்புடைய ஒரு வகையாகும். 'போலியோ சொட்டு மருந்துகள்' பொதுவாகப் பாதுகாப்பானவை. இவை பெரும்பாலான நாடுகளில் நோய்த்தொற்றை வெற்றிகரமாக ஒழிக்க உதவியுள்ளன. ஆனால், அரிதான சூழல்களில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் இவை நோயை ஏற்படுத்தக்கூடும்.


2. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, போலியோ பரவலைத் தடுக்க 'உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சி' (Global Polio Eradication Initiative) இரண்டு வகையான தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது: செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோ தடுப்பூசி (inactivated polio vaccine (IPV)) மற்றும் வாய்வழி போலியோ தடுப்பு மருந்து (oral polio vaccine (OPV)). 1955-ல் டாக்டர் ஜோனாஸ் சால்க் உருவாக்கிய செயலற்ற போலியோ தடுப்பூசி, வாய்வழி போலியோ தடுப்பூசியைப் போல் இல்லாமல், மூன்று வகையான போலியோ வைரஸ்களின் செயலற்ற வைரஸ் வகைகளைக் கொண்டுள்ளது. இதில் தடுப்பூசியால் உருவாகும் போலியோ வைரஸ் தொடர்பான ஆபத்து ஏதுமில்லை.


3. வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் (Christian Medical College Vellore (CMC)) முன்னாள் நச்சுயிரியல் (virology) துறை பேராசிரியரான டாக்டர் டி. ஜேக்கப் ஜான், வாய்வழி போலியோ தடுப்பு மருந்தால் இரண்டு வழிகளில் தடுப்பூசி தொடர்பான நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்று கூறினார்.


(i) சில சூழல்களில், வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் ஒரு குழந்தையிடமிருந்து மற்றொரு குழந்தைக்குப் பரவிக்கொண்டே இருக்கலாம். அப்போது, அது வேகமாகப் பரவும் திறனை மீண்டும் பெற்று, பரவும் ஒவ்வொரு முறையும் கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.


(ii) தடுப்பூசியில் உள்ள வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் நாள்பட்ட நோய்த்தொற்றையும் ஏற்படுத்தக்கூடும். இது அவர்களின் குடல்பகுதியில் பல ஆண்டுகளாகப் அதிகரித்து, மெதுவாகக் கடுமையான நோயை உண்டாக்கும் திறனைப் பெறக்கூடும்.


4. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ்கள் (vaccine-derived polio virus (VDPV)) மிகவும் அரிதானவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களிடையே காணப்பபடுவதோடு, மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு  சக்தி குறைவாக உள்ள பகுதிகளிலும் தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ்கள் உருவாகலாம்.


இந்தியா போலியோவை எவ்வாறு ஒழித்தது?


5. அக்டோபர் 24-ஆம் தேதி உலக போலியோ தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1950-ஆம் ஆண்டுகளில் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய ஜோனாஸ் சால்க் என்பவரின் பிறந்தநாளை நினைவுப்படுத்தும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பால் இந்த தினம் உருவாக்கப்பட்டது. போலியோவுக்கு முழுமையான சிகிச்சை இல்லை. தடுப்பூசி மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.


6. அனைவருக்குமான போலியோ ஒழிப்பு முயற்சியின்படி, 2009-ஆம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ பாதிப்புகள் பதிவாகியிருந்தன. இதுவே உலகில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். ஜனவரி 2011--ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இந்தியாவின் கடைசி போலியோ பாதிப்பு பதிவானது. இந்த மாற்றம் இந்தியாவின் சுகாதார அமைப்பில் ஒரு வெற்றிக் கதையாக அமைந்தது.


7. போலியோவுக்கு எதிரான தடுப்பூசித் திட்டம் 1972-ஆம் ஆண்டில் தொடங்கி, 1985-ல் நாடு முழுவதும் அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டம் (Universal Immunisation Programme (UIP)) என்று விரிவுபடுத்தப்பட்டது. போலியோவுக்காக, நாடு முழுவதற்கும் ஒரே நோய்த்தடுப்பு நாள் நிர்ணயிக்கப்பட்டு, அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. போலியோ சொட்டு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய்வழியாகக் கொடுக்க முடிந்தது ஒரு நன்மையாக இருந்தது.   இதனால் சிறப்புப் பயிற்சி இல்லாமலேயே உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களால் அவற்றை வழங்க முடிந்தது.


8. 1995-ஆம் ஆண்டு, இந்தியா பல்ஸ் போலியோ (Pulse Polio) தடுப்பூசி திட்டத்தை தொடங்கியது. இதற்கு முன்பு, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதாரச் சபை (World Health Assembly), 2000-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் போலியோவை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மற்றும் துணை-தேசிய தடுப்பூசிச் செலுத்தும் போது (குறிப்பாக அதிக ஆபத்து உள்ள பகுதிகளில்) வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.


9. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அறிக்கையின்படி, தொலைக்காட்சி தொடர்களின் (soap operas) செல்வாக்கைப் பயன்படுத்தி, போலியோ மற்றும் பிற சுகாதார விழிப்புணர்வு செய்திகள் அவற்றின் கதைக்களங்களிலும் அத்தியாயங்களிலும் இயல்பாக இணைக்கப்பட்டன.


10. உலக சுகாதார அமைப்பின் (WHO) இணையதளத்தின்படி, வழக்கமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர, இந்தியா கடுமையான தளர்வாதக் கண்காணிப்பையும், சுற்றுச்சூழல் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது. இந்தச் சுற்றுச்சூழல் கண்காணிப்பில், மலத்தில் உள்ள போலியோ வைரஸைக் கண்டறிவதற்காக, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து கழிவுநீர் மாதிரிகள் தவறாமல் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்படுகின்றன.


கழிவுநீர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (Wastewater and Environment Surveillance (WES) )


1. கழிவுநீர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (WES) என்பது, ஒரு தொகைக்குள் நோய்க்கிருமிகளைக் கண்டறிவதற்காக, ஒழுங்கமைக்கப்பட்ட கழிவுநீர் அமைப்பு அல்லது ஒழுங்கமைக்கப்படாத வடிகால்கள் மற்றும் ஓடைகள் வழியாகச் சேகரிக்கப்படும் சமூகக் கழிவுநீரைப் பகுப்பாய்வு செய்யும் ஒரு முறையாகும். இந்திய சுகாதார நிதியத்தின்படி, இந்தியாவில் கழிவுநீர் மூலம் நோய் கண்காணிப்பு, 2001-ஆம் ஆண்டில் போலியோவுக்காக மும்பையில் தொடங்கப்பட்டது.

2. கோவிட்-19-ஐக் கண்காணிப்பதில் கழிவுநீர் கண்காணிப்பு (Wastewater surveillance) ஒரு பயனுள்ள கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, நோயாளிகளுக்கு மருத்துவரீதியாக நோய் கண்டறியப்படுவதற்கு மூன்று வாரங்கள் முன்னதாகவே, கழிவுநீரில் அந்த நோய்க்கிருமி கண்டறியப்பட்டது.


3. கழிவுநீர் கண்காணிப்பின் முக்கிய நன்மை, அது மருத்துவப் பரிசோதனையைச் சார்ந்திருப்பதில்லை. மருத்துவப் பரிசோதனை பரவலாக மேற்கொள்ளபடாதபோது அல்லது சில நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாலோ அல்லது அறிகுறிகளே இல்லாததாலோ அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. புதிதாக உருவாகும் தொற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிக முக்கியமானது. ஏனெனில், மனிதர்களிடையே நோயின் பரவல் குறைவாக இருக்கும்போதே அதை திறமையாக கட்டுப்படுத்த முடியும்.


Original article : Why is vaccine-derived poliovirus (VDPV) in news? -Khushboo Kumari

Share:

பதவி விலகுவதன் மூலம் நீதிபதிகள் பதவிநீக்க நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா? நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு குறித்த விளக்கம். -வினீத் பல்லா

 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை (Public Accountability) உறுதிசெய்வதில்  முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறிவருகின்றனர்.


அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தாக்கல் செய்ய எடுத்த முடிவு, இந்தியாவின் நீதித்துறை பொறுப்புணர்வு கட்டமைப்பை இதுவரை செல்லாத புதியதொரு காலத்திற்கு கொண்டு செல்லும்.


ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், ஒரு நீதிபதியின் ராஜினாமா தானாகவே ஒரு நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நீண்டகால அனுமானத்திற்கு சவால்விடும் வகையில், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


நீதிபதி வர்மாவுக்கு எதிரான வழக்கு என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க (Impeachment) நடவடிக்கைகள், கடந்த ஆண்டு அவரது புதுடெல்லி இல்லத்தில், தீயில் கருகிய மற்றும் சிறிதளவில் சேதமடைந்த ரொக்கப் பணக் கட்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்திலிருந்து தொடங்கின. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உள் விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையில், நீதிபதி வர்மாமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்புடையவர் என்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனைத் தொடர்ந்து, 146-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதன் விளைவாக, நீதிபதிகள் விசாரணை சட்டம், 1968-ன் (Judges (Inquiry) Act) கீழ் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை மக்களவைத் தலைவர் உருவாக்கினார். குழு தனது விசாரணைகளை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, நீதிபதி வர்மா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை  வழங்கினார்.


ஒரு நீதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் 217-வது பிரிவின் கீழ், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்யலாம். உச்ச நீதிமன்றம் 1978-ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில், ஒரு நீதிபதியின் ராஜினாமா என்பது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று தீர்ப்பளித்தது. நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நாள் முதலே அது நடைமுறைக்கு வந்துவிடும். அதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஒப்புதலும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் விளக்கியது.


முந்தைய பதவிநீக்க விசாரணைகள் ஏன் தோல்வியடைந்தன?


இந்தியாவில் இதுவரை எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை.


2011-ஆம் ஆண்டில், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. டி. தினகரன் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. நீதிபதி தினகரனுக்கு எதிரான விசாரணையை விசாரணைக் குழு நடத்திக்கொண்டிருந்தபோது அவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவைச் செயலகம் விசாரணையின் நோக்கம் நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதே என்பதால், அவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அந்த நடைமுறையைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கருதியது. எனவே, அந்த விசாரணை நடைமுறையும், விசாரணைக் குழுவின் பணியும் பயனற்றதாக (infructuous) மாறிவிட்டது என்று மாநிலங்களவைச் செயலகம் விளக்கியது.


நீதிபதி சென் ராஜினாமா செய்தபோதும் இது போன்ற ஒரு நடைமுறையே பின்பற்றப்பட்டது. அவர் ராஜினாமா செய்வதற்கு முன்பே மாநிலங்களவை அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தபோதிலும், மக்களவை அந்தப் பதவி நீக்க வாக்கெடுப்பைக் கைவிட்டது.


இருப்பினும், ஒருவர் பதவி விலகினால் விசாரணை முடிவுக்கு வர வேண்டும் என்று சட்டம் வெளிப்படையாகக் கூறவில்லை என சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பொதுச் சட்டம் மற்றும் ஆளுகைத் துறைத் தலைவர் பேராசிரியரான சுபங்கர் டாம், முறைகேடு விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ஒரு நீதிபதி பதவி விலகுவதால் ஏற்படும் தாக்கங்களை 1978-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்.


நீதிபதிகள் தினகரன் மற்றும் சென் ஆகியோர் ஏற்படுத்திய முன்னுதாரணத்திற்குப் பிறகு, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகலிருந்து தப்பிக்கவும், ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளை  தொடர்ந்து பெறவும், ராஜினாமா செய்வதே மிகவும் எளிதான வழியாக மாறிவிட்டது என்று டாம் கூறினார். மேலும், விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில், அது ஒரு நீதிபதியின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவாகவும், பொதுமக்கள் பார்வைக்கான பதிவாகவும் அந்த அறிக்கை அமையும். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான மீதான நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே சஞ்சீவ் கன்னா வெளியிட்ட தகவல்களாலும், உச்ச நீதிமன்றத்தின் உள் விசாரணை அறிக்கை ஊடகங்களில் கசிந்ததாலும், இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் உள்ளன. எனவே, அந்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது.






நீதிபதி தினகரன் மீதான நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏதேனும் உள்எதிர்ப்பு இருந்ததா?


 2011ஆம் ஆண்டு, Justice P. D. Dinakaran மீதான பதவிநீக்க  நடவடிக்கையின்போது, அவரை விசாரித்த குழுவின் உறுப்பினராக இருந்த சட்ட அறிஞர் ஜி. மோகன் கோபால், நீதிபதி தினகரன் ராஜினாமா செய்த மூன்று வாரங்களுக்குள், விசாரணையை நிறுத்தாமல் தொடர்ந்து முடிக்க வேண்டும் என்று தன்னுடன் பணியற்றிய  குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


கடிதத்தில், கோபால் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்கீழ் நடைமுறையின் இரண்டு பகுதிகளுக்கு இடையே ஒரு வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார்: முறைகேட்டின் “விசாரணை மற்றும் நிரூபணம்” (investigation and proof) மற்றும் நாடாளுமன்றத்தால் செய்யப்படும் உண்மையான “பதவி நீக்கம்” (removal from office). குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதே இறுதி இலக்கு என்று அவர் வாதிட்டார்.


ஜி.மோகன் கோபால் தனது கடிதத்தில், தவறான நடத்தைக்கான இந்தக் குறைந்தபட்ச பொறுப்புணர்வை (accountability) நடைமுறைக்குக் கொண்டுவரும் சூழலிலும், நீதிபதிகள் ராஜினாமா செய்வதன் மூலம் நடைமுறையில்  தடுக்கக்கூடிய (‘veto’) அதிகாரத்தைப் பெற்றுவிட்டால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கக் கூடும் என்று குறிப்பிட்டார்.


இறுதியில், நீதிபதி தினகரன் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணம், விசாரணைக் குழுவில் ஏற்பட்ட காலி இடத்தால் அது செயலிழந்ததும், மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி, நீதிபதி தினகரன் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், அவரை பதவியிலிருந்து நீக்குவதே விசாரணையின் முக்கிய நோக்கம் என்பதால், அந்த நோக்கம் இனி பயனற்றதாக (moot) மாறிவிட்டது என்று கருதினார்.





தற்போது அறிக்கையைத் தாக்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான அறிக்கையைத் தாக்கல் செய்வது இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும்.


முதலாவதாக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டால், அரசியலமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகள் பொதுமக்களின் பார்வைக்கு வரும். வழக்கறிஞரும் சட்ட அறிஞருமான அலோக் பிரசன்ன குமார், நீதிபதி தினகரன் வழக்கில் உருவான தவறான முன்னுதாரணத்தை மக்களவைத் தலைவர் மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று கூறினார். ஏனெனில், அந்த முன்னுதாரணம் விசாரணை முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்தால், ஒரு நீதிபதி தனது செயல்கள் குறித்த ஆய்வில் இருந்து தப்பிக்கலாம் என்ற தவறான செய்தியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


இது வெறும் பதவி நீக்கும் நடைமுறை மட்டுமல்ல; நீதிபதி தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டரா என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு பொறுப்புக்கூறல் (accountability) நடைமுறையும் ஆகும். இந்த விசாரணை அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது. எனவே, அமைக்கக் குழு என்ன கண்டறிந்தது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.


இரண்டாவதாக, இந்தக் கண்டுபிடிப்புகளுக்குக் முக்கிய சட்ட மற்றும் நிதி விளைவுகள் ஏற்படக்கூடும். ஒரு நீதிபதி ராஜினாமா செய்யும்போது, ​​தனது பணியிலிருந்து சாதாரணமாக ஓய்வு பெறுபவரைப் போன்ற அதே ஓய்வூதியப் பலன்களுக்குத் தகுதியுடையவர் ஆவார்.


டாம் இது தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்: இது சட்டரீதியான அல்லது கல்வி தொடர்பான விவாதம் மட்டுமல்ல. ஒரு நீதிபதி ஓய்வுக்குப் பிறகு பெறும் சலுகைகளுக்கு பொதுமக்களின் வரிப்பணமே செலவிடப்படுகிறது. இரண்டு விசாரணை ஆணையங்களால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட ஒரு நீதிபதி, ராஜினாமா செய்தப் பிறகு ஓய்வுக்காலச் சலுகைகளைப் பெறுவது ஏன்?


குழுவின் அறிக்கை குற்றச்சாட்டுகளை உறுதி செய்தால், கோட்பாட்டளவில் நீதிபதியின் பதவி நீக்கத்தை, அந்தப்பதவி நீக்க நடைமுறை தொடங்கிய தேதியிலிருந்தே அமல்படுத்த முடியும் என்று குமார் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் மேற்கொள்ளும் முறையான பதவி நீக்க நடவடிக்கை, அந்த நீதிபதியின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வுக்காலச் சலுகைகளை நிறுத்துவதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான சூழலையும் உருவாக்கக்கூடும்.


Original article : Can judges avoid impeachment by resigning? The Justice Yashwant Varma case explained. -Vineet Bhalla

Share: