நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 21 பொருளாதாரக் குற்றவாளிகள்: தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (Fugitive Economic Offender) என்றால் என்ன? -மனஸ் ஸ்ரீவஸ்தவா

 தற்போதைய செய்தி


அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) தனது ஆண்டு அறிக்கையின் படி, கடந்த 7 ஆண்டுகளில் தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுத ஆலோசகர் சஞ்சய் பண்டாரி, மற்றும் தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான மறைந்த இக்பால் மிர்ச்சியின் மனைவி ஹஜ்ரா இக்பால் மேமன் உட்பட 21 பேரைத் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளாக (fugitive economic offenders (FEOs)) அறிவித்துள்ளது.


இருப்பினும், வைர வியாபாரி மெஹுல் சோக்சி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் மகாதேவ் செயலியின் விளம்பரதாரர்களான சௌரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோரைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் (Fugitive Economic Offenders Act (FEOA)) கீழ் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்கும் முடிவுகள் நீதிமன்றங்களில் இன்னும் பரிசீலனையில் உள்ளன என்று அந்த அறிக்கை  கூறியது.


வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒன்றிய முகமையின் வருடாந்திர அறிக்கையானது, இதுவரை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், 54 நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 21 பேர் 'வெளிநாட்டுத் தப்பியோடிய குற்றவாளிகள்' (FEOs) என அறிவிக்கப்பட்டு, ரூ. 2,178.34 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.


இந்த 21 பேரில், ஒன்பது நபர்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளாக (FEOs) அறிவிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.


அறிக்கையின்படி, 2024-25 மற்றும் 2025-26 இரண்டு நிதியாண்டுகளில், பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்கீழ் அமலாக்க இயக்குநரகத்தின் செயல்திறன் கணிசமான சொத்து மீட்பையும், தப்பிச் சென்ற குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுகிறது. வழக்குகளைத் தவிர்க்க இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும் நபர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்க இயக்குநரகம் உறுதியாக செயல்படுகிறது என்பதைக் இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


பண்டாரியை வழக்கை உதாரணமாகக் காட்டி, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்கீழ், 2019 டிசம்பர் 13 அன்று அளித்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் ஒரு சிறப்பு நீதிமன்றம் (PMLA) அவரை வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவித்ததாகக் குறிப்பிட்டது.


இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆயுத வியாபாரியான பண்டாரி, 2016-ஆம் ஆண்டு வருமான வரி சோதனைகளுக்குப் பிறகு லண்டனுக்குத் தப்பிச் சென்றார். அவர் 2016-ல் நேபாளம் வழியாக இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். மேலும், 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

விசாரணையில், கணக்கில் காட்டப்படாத ரூ.655 கோடி வெளிநாட்டு வருமானமும், ரூ.100 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சொத்துக்களும் தெரியவந்துள்ளன. 2009 முதல் 2016 வரை, அவர் வெளிநாட்டு போலி நிறுவனக் கணக்குகளில் பெரும் தொகையை வைப்புச் செய்துள்ளார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை 2020-ல் அவருக்கு எதிராக ஒரு குற்றவியல் புகாரையும், 2023-ல் ஒரு துணை குற்றவியல் புகாரையும் தாக்கல் செய்தது. தற்போது அமலாக்கத்துறை, ரவுஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரியுள்ளது  என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


இந்தச் சூழலில், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தை (FEOA) மீண்டும் ஆராய்வோம்.


முக்கிய அம்சங்கள்:


தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி  (fugitive economic offenders (FEOs)) என்பவர் யார்?


தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (FEO) என்பவர், இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தால், அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றம் அல்லது குற்றங்கள் தொடர்பாக, ரூ. 100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த மதிப்புடைய வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறியவரோ அல்லது வெளிநாட்டில் இருந்துகொண்டே குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்தியாவுக்குத் திரும்ப மறுப்பவரோ தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளி ஆவார்.


அந்த அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள சில முக்கியக் குற்றங்கள் பின்வருமாறு: அவை (i) அரசு முத்திரைகள் அல்லது நாணயங்களை போலியாக அச்சிடுதல், (ii) காசோலைகள் வங்கியில் நிராகரிக்கப்படுதல் (Cheque dishonour), (iii) பணமோசடி (Money laundering) மற்றும் (iv) கடனாளிகளை ஏமாற்றும் வகையிலான பரிவர்த்தனைகள் ஆகும்.


விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன?


2002-ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட இயக்குநர் அல்லது துணை இயக்குநர், அந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ஒருவரை தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்க  கோரிக்கை வைக்கலாம்.


விண்ணப்பத்தில் என்ன இருக்கும்?


(அ) ​​ஒரு தனிநபர் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளி என்று நம்புவதற்கான காரணங்கள், அவை,


(ஆ) அவர் இருக்கும் இடம் குறித்த ஏதேனும் தகவல்,


(இ) பறிமுதல் செய்யப்படும் குற்றச்செயல் மூலம் கிடைத்த வருமானம் என நம்பப்படும் சொத்துக்களின் பட்டியல்,


(ஈ) பறிமுதல் செய்யக் கோரப்படும் பினாமி சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு சொத்துக்களின் பட்டியல்,


(இ) இந்தச் சொத்துக்களில் ஆர்வம் கொண்ட நபர்களின் பட்டியல் ஆகும்.



மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?


ஒரு விண்ணப்பத்தைப் பெற்றவுடன், சிறப்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆஜராகுமாறு ஓர் அறிவிப்பை அனுப்புகிறது.


ஒருவர் ஆஜராகத் தவறினால், அவர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்.


இயக்குநர் அல்லது துணை இயக்குநர், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு சொத்தையும் ஜப்தி செய்யலாம்.


சிறப்பு நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் விண்ணப்பம் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எந்தவொரு சொத்தையும் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யலாம். சிறப்பு நீதிமன்றத்தால் நீட்டிக்கப்படாவிட்டால், இந்தப் பறிமுதல் 180 நாட்களுக்குத் தொடரும்.


விண்ணப்பத்தை விசாரித்த பிறகு, சிறப்பு நீதிமன்றம் ஒரு தனிநபரைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கலாம்.


எது போன்ற சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம்?


(அ) குற்றச்செயல் மூலம் கிடைத்த சொத்துக்கள்,


(ஆ) இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள பினாமி சொத்துக்கள், மற்றும்


(இ) இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள வேறு ஏதேனும் ஒரு  சொத்தாகும்.




வேறு என்ன?


— தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒரு நபர், எந்தவொரு உரிமையியல் வழக்கையும் தாக்கல் செய்வதிலிருந்தோ அல்லது அதில் வாதாடுவதிலிருந்தோ எந்தவொரு உரிமையியல் நீதிமன்றமோ அல்லது நீதிமன்றம் தீர்ப்பாயமோ தடை செய்வதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.


—  அந்த நபர் பெரும்பான்மைப் பங்குதாரராகவோ, நிறுவனராகவோ, அல்லது ஒரு முக்கிய நிர்வாகப் பொறுப்பாளராகவோ (நிர்வாக இயக்குநர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி போன்ற) இருக்கும் எந்தவொரு நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மையும் உரிமையியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதிலிருந்தோ அல்லது அதில் வாதாடுவதிலிருந்தோ தடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


— ஒரு தனிநபர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்ற நம்பிக்கையின் பேரில் ஒரு இடத்திற்குள் நுழைவது, ஒரு கட்டிடத்தைச் சோதனையிட உத்தரவிடுவது அல்லது ஆவணங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடுவது உள்ளிட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள் இயக்குநர் அல்லது துணை இயக்குநருக்கு உண்டு.


— சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.


அமலாக்க இயக்குநரகம் (Directorate of Enforcement (ED))


அமலாக்க இயக்குநரகம் 1956-ல் நிறுவப்பட்டு, அந்நியச் செலாவணி மேலாண்மை மற்றும் பணமோசடி தடுப்பு (foreign exchange management and anti–money laundering) தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது


பல ஆண்டுகளாக, அமலாக்க இயக்குநரகம் இந்தியாவின் பொருளாதார, சட்ட மற்றும் ஒழுங்குமுறைச் சூழலுக்கு ஏற்ப சீராகப் பரிணமித்து, அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FERA)). நிர்வாகத்திலிருந்து அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்திற்கு (Foreign Exchange Management Act (FEMA)) மாறியுள்ளது.


இன்று இது பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA) ஆகியவற்றை அமல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.


1999-ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)), அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனைகள், எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஒழுங்குபடுத்தும்  ஒரு முக்கிய இந்தியச் சட்டமாகும். வெளிநாட்டு வர்த்தகத்தை எளிதாக்கவும், அந்நியச் செலாவணிச் சந்தையை நிர்வகிக்கவும் இயற்றப்பட்ட இந்தச்சட்டம், கட்டுப்பாடான அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்திற்குப் (FERA) பதிலாக, மீறல்களைக் குற்றமாக்குவதிலிருந்து பண அபராதங்களை விதிக்கும் ஒரு தாராளமயமான கட்டமைப்பைக் கொண்டுவந்தது.


2002-ஆம் ஆண்டின் பணமோசடித் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)), பணமோசடியைத் தடுக்கவும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடவும், குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் இயற்றப்பட்ட ஒரு இந்தியச் சட்டமாகும். ஜூலை 1, 2005 முதல் அமலில் உள்ள இந்தச்சட்டம், அமலாக்க இயக்குநரகத்திற்கு விசாரணை நடத்தவும், சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யவும் அதிகாரம் அளிக்கிறது. 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத் தண்டனைகளை விதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. சில குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீட்டிக்கப்படலாம்.


Original article : Nirav Modi, Vijay Mallya among 21 FEOs: What is a Fugitive Economic Offender?

Share:

அரசாங்கம் மற்றும் இணையத் தணிக்கை குறித்து…

 இணையதளத் தணிக்கை என்பது சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் அடிப்படை உரிமைக்கு ஒரு அச்சுறுத்தலாகும்.

சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இணையதளப் பேச்சுகளைத் தணிக்கை செய்ய, ஒன்றிய அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. ஏற்கெனவே அரசியலமைப்புரீதியாக வலுவற்ற நிலையில் உள்ள 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் (IT Rules, 2021) திருத்தங்களை மேற்கொண்டு, மெட்டா (Meta) மற்றும் X போன்ற நிறுவனங்களுக்கு அரசு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன்படி, வெறும் மூன்று மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் பதிவுகளை நீக்கவேண்டும்; இல்லையெனில், அந்த நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதோடு, அவர்களின் ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்குப் பிடிக்காத கருத்துகளை அரசு ஒடுக்கி வருகிறது. இது சாமானிய மக்களின் குரலாக விளங்கும் இணையதளத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது. ஒரு சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தில், தனித்துவமான மற்றும் வலிமையான கருத்து வெளிப்பாடுகள் மிகவும் அவசியமானவை. ஆனால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act, 2000) 69A மற்றும் 79(3)(b) ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி, கணக்குகளையும் பதிவுகளையும் ஒட்டுமொத்தமாக முடக்குவது ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடிகிறது. இது படைப்பாளர்களின் வாழ்வாதாரத்தையும், மக்களின் தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கிறது. பெரும்பாலும் எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முழுமையாக நீக்கப்படுகின்றன. எவ்வித தார்மீக முறையும் இன்றி கட்டமைக்கப்பட்டுள்ள இந்தத் தணிக்கை முறையினால், ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் குரல்கள் ஒடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. தணிக்கை செய்யப்பட்ட சில பதிவுகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டாலும், அதற்கு அந்தப் படைப்பாளர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசு தனது தணிக்கை நடவடிக்கைகள் குறித்த எந்தத் தரவுகளையும் வெளியிடாமல், மிகுந்த ரகசியத்தோடு இணையதள உரையாடல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.


நாடு முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு 'சஹ்யோக்' (Sahyog) இணையதளத்தை அணுக அனுமதி அளித்திருப்பதன் மூலம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-ன்கீழ் விடுக்கப்படும் கோரிக்கைகள் சட்ட வரம்புகளை மீறி பயன்படுத்தப்படுகின்றன. இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் அனுமதிக்கப்படாத ஒரு தணிக்கை கருவியாக மாறியுள்ளது. இணையத்தில் உள்ள சட்டவிரோதத் தகவல்கள் குறித்த "உண்மையான அறிவு" (Actual knowledge) எது என்பது பற்றி 'ஸ்ரேயா சிங்கால் vs இந்திய யூனியன்' (Shreya Singhal vs Union of India) வழக்கில் வழங்கப்பட்ட தெளிவான தீர்ப்பு இங்கே புறக்கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த முக்கியமான முன்மாதிரித் தீர்ப்பைக் கவனிக்கத் தவறியுள்ளது. அதேசமயம், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் அரசு இத்தகைய அதிகாரங்களை முறைப்படி தனக்குத்தானே வழங்கிக் கொள்ளவும் இல்லை. சமூக ஊடகத் தளங்கள் இணையதளப் பேச்சுரிமையின் மீதான இந்த ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன. அதற்குப் பதிலாக, பதிவுகளை நீக்கும் கோரிக்கைகளுக்குத் தானாகவே இணங்கிச் செல்வதையே அவை எளிதாகக் கருதுகின்றன. 'X' தளம் மட்டும் 'சஹ்யோக்' (Sahyog) இணையதளத்தை இன்னும் எதிர்த்து வருகிறது. ஆனால், கர்நாடக மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளால் அந்த நிறுவனத்திற்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஏற்கனவே இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வருவதால், எதிர்கால அரசாங்கங்களும் இந்த தணிக்கை முறையை மேற்கொள்ளும் என்பதை அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Original article : ​Tackling takedowns: On the government and online censorship

Share:

மருத்துவர்களின் முடிவு : சட்டப்பூர்வ கருக்கலைப்பு குறித்து . . .

 கருக்கலைப்பு செய்வதற்கான முடிவுகள், சரியான மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.


சுதந்திரத்துடன் சேர்த்து பெரும் பொறுப்பும் வருகிறது. எந்தவொரு சுதந்திரத்தின் விளைவாக எடுக்கப்படும் முடிவுகளும், அதன் பின்விளைவுகள் குறித்த நியாயமான விழிப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு இனப்பெருக்க சுயாட்சியை வழங்குவது போல் தோன்றினாலும், உச்சநீதிமன்றம் இதுபோன்ற சூழ்நிலைகளில் முறையான மருத்துவப் பரிசோதனையின் முக்கியத்துவத்தைக் குறைத்திருக்கலாம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளின் விஷயத்தில், விரும்பத்தகாத கர்ப்பங்களை மருத்துவரீதியாகக் கலைப்பதற்கான கால வரம்பை நீக்குவதற்காக, கருக்கலைப்புச் சட்டத்தைத் திருத்துமாறு நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலியல் வன்கொடுமையிலிருந்து மீண்ட 15 வயது சிறுமி, 30-வது வாரத்தில் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்த முந்தைய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுத்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தது. சீராய்வு மேல்முறையீட்டில் (curative appeal) இருந்த இந்த வழக்கின் உண்மையான தீர்ப்பில், ஒரு பெண்ணின் இனப்பெருக்க சுயாட்சி உரிமையைப் (woman’s right to reproductive autonomy) பாதுகாப்பதற்காக, சட்டவிரோதமான கர்ப்பத்தைத் தொடர சிறுமிக்கு உள்ள உரிமை கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தச் சிறுமி கர்ப்பத்தைத் தொடரத் தெளிவான மற்றும் தொடர்ச்சியான விருப்பமின்மையை வெளிப்படுத்தியிருந்ததைக் குறிப்பிட்டிருந்தது. ஒரு பெண், அதிலும் குறிப்பாக ஒரு சிறுமி, கர்ப்பத்தைத் தொடர விரும்பவில்லை என்றால், அவரை அவ்வாறு செய்ய நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்று அவர்கள் கூறினர். சட்டப்பூர்வமான வழிகள் மறுக்கப்பட்டால், பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போலி மருத்துவர்களிடம் செல்லும் அபாயகரமான பாதையைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (All India Institute of Medical Sciences) வழக்கறிஞர், அதே பாதுகாப்பு அம்சத்தைக் காரணம் காட்டி, கருக்கலைப்பு மற்றும் சீராய்வு மனுவை வன்மையாக எதிர்த்தார். வழக்கறிஞரின் கூற்றுப்படி, 30 வாரங்கள் போன்ற முற்றிய நிலையில் கர்ப்பத்தைக் கலைப்பது, இளம் வயது தாயின் உடல்நலத்தைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும். தற்போது, இந்தியச் சட்டம் 24 வாரக் கர்ப்பம் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கிறது.


முழு வாதமும் கர்ப்பகால வயதைச் சார்ந்துள்ளது. கர்ப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை கர்ப்பகால வயது காட்டுகிறது. ஒரு கருக்கலைப்பைப் பாதுகாப்பாகச் செய்ய முடியுமா என்பதைத் தீர்மானிப்பதில் இது மிகவும் முக்கியமானது. கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கிய பெரும்பாலான நாடுகள், பாதுகாப்பான கருக்கலைப்புக்கான காலத்தை 24 வாரக் கர்ப்பத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. இதற்குக் காரணம், அதற்குப் பிறகு தாயின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகளே ஆகும். ஆனால், சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு அடிப்படையானது, அபாயங்களை மருத்துவரீதியாக மதிப்பீடு செய்வதாகும். ஒரு குழந்தையோ அல்லது அவரது பெற்றோரோ, தங்களின் சாதாரண அறிவைக் கொண்டு, அத்தகைய அபாயத்தைப் பற்றி ஆராய்ந்து மதிப்பீடு செய்ய முடியுமா? ஒரு சிறுமி, கட்டாயக் கர்ப்பத்திலிருந்து விடுபடத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும்போது, ​​அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அவருக்குப் பாதுகாப்பான வழிகளை வழங்குவது அவரது பெற்றோரின் மற்றும் அமைப்பின் கடமையாகும். இந்தக் கட்டத்தில், போதிய தகவலின்றி எடுக்கப்படும் ஒரு முடிவு, அவரது உடல் தனிபட்ட உரிமையை அனுமதிக்கும் அதேவேளையில், அவரது ஆரோக்கியத்தையோ அல்லது உயிரையோ பாதித்தால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


Original article : ​Doctors decide: On legal abortion

Share:

இந்தியாவின் கார்பன் நிதியை நாட்டிற்குள்ளேயே தக்கவைத்தல். - ஆர்ச்சி பார்னெல்

 ஐரோப்பா கார்பன் விதிமுறைகளை வகுக்கும்போது, ​​இந்தியா விலை ஏற்றுக்கொள்ளும் நாடாக மட்டும் இருந்து விடக் கூடாது


2026-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அறிமுகப்படுத்திய கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அமலுக்கு வந்தது. தற்போது  செயல்முறை முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இதை ஐரோப்பா “நியாயமான நடத்துதல்” (fairness) என்று அழைக்கிறது: ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் கார்பன் விலை ஒன்றைச் செலுத்துகின்றனர். எனவே, இறக்குமதிப் பொருட்களும் அந்தவிலையைச் செலுத்த வேண்டும். காகிதத்தில் இது சமமாகத் தோன்றினாலும், நடைமுறையில் இந்தியாவுக்கு நியாயமான போட்டிக்கான வாய்ப்பு பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது.


ஐரோப்பிய எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அதிக கரியமில வாயு நீக்க மானியங்களையும், மானியத்துடன் கூடிய பொது நிதியையும் பெற்று மகிழ்கின்றனர். மேலும், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு வர்த்தக அமைப்பின்கீழ் இலவசங்களையும் தொடர்ந்து பெற்று வருகின்றனர். இந்த அமைப்பு 2026 முதல் 2034 வரை படிப்படியாக நீக்கப்படவுள்ளது. இதனால், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் நிலையிலும்கூட, அவர்களின் உண்மையான கரியமில வாயு செலவுகள் குறைகின்றன. இதற்கு மாறாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அதற்கு இணையான அரசு ஆதரவு ஏதுமின்றி, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) கட்டணங்களின் முழு சுமையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்த போக்கு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை நியாயமான போட்டியிலிருந்து பாதுகாக்க உள்நாட்டுக் கட்டணங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சுங்கவரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Tariffs and Trade (GATT)) மூன்றாம் பிரிவின் நோக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது.

ஆழமான பிரச்சினை என்னவென்றால்


ஜனவரி 27, 2026 அன்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த புதிய இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)), கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) என்பதிலிருந்து இந்தியாவிற்கு எந்த விலக்கையும் வழங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது: எந்த நாட்டிற்கும் நாடு சார்ந்த நெகிழ்வுத்தன்மை இல்லை. இருப்பினும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கார்பன் எல்லை நடவடிக்கைகள் மீதான இணைப்பு 14-A, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை குறித்து ஒரு முறையான தொழில்நுட்ப உரையாடலை உருவாக்குகிறது. இதில், இந்தியாவில் செலுத்தப்படும் பயனுள்ள கார்பன் விலையை ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், “மிகவும் விருப்பமான நாடு” (Most-Favoured-Nation) என்ற உறுதிமொழியும் இந்த செயல்முறையில் உள்ளது. பிற நாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து தளர்வும் இந்தியாவுக்கும் தானாகவே வழங்கப்படும். இது போன்ற குறுகிய கால  நடவடிக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.


காலநிலை நீதி மற்றும் இறையாண்மை என்பதே ஆழமான பிரச்சினையாகும். கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)), ஐரோப்பாவின் கரியமில நீக்கச் (decarbonisation) சுமையின் ஒரு பகுதியை வளரும் நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் மீது சுமத்துகிறது. அதே, சமயம் அதன் விளைவாகக் கிடைக்கும் வருவாயை ஐரோப்பியர்களிடமே வழங்குகிறது. தனது ஏற்றுமதிகளின் மீதான கரியமில விலையை நிர்ணயிக்கவோ அல்லது அதனுடன் தொடர்புடைய வருவாயை வழிநடத்தவோ முடியாத ஒரு நாடு, பசுமை மாற்றத்தில் விதிகளை உருவாக்குபவராக இல்லாமல், விதிகளைப் பின்பற்றுபவராக மாறும் அபாயத்தை எதிர்கொள்கிறது.


இந்தியா பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கவில்லை. 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)), வர்த்தகம் செய்யக்கூடிய சான்றிதழ்கள் மூலம் ஒரு உள்நாட்டு கார்பன் விலையை உருவாக்குகிறது. காலப்போக்கில், எஃகு உட்பட முக்கிய தொழில்துறை துறைகளையும் அது உள்ளடகியுள்ளது. CBAM ஒழுங்குமுறையின் பிரிவு 9-ன் கீழ், ஐரோப்பிய இறக்குமதியாளர்கள், ஒரு தயாரிப்பு அதன் சொந்த நாட்டில் ஏற்கனவே கார்பன் விலை செலுத்தியிருந்தால், ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் தங்கள் கட்டணங்களைக் குறைத்துக்கொள்ளலாம். இதுவே, இந்தியாவின் கார்பன் விலையை CBAM கட்டணத்திற்கு எதிராக இருக்கும் சட்டமாகும். இந்தக் கொள்கையும், அதை செயல்படுத்தும் சட்ட முறையும் சரியாக உள்ளன.


பிரிவு 9-இன் கீழ் கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தை (Carbon Credit Trading Scheme (CCTS)), கணக்கில் எடுத்துக்கொள்வது சட்டரீதியாகவும் சுற்றுச்சூழலிற்கு ஏற்றதாகவும் இருக்கும். கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (CCTS) என்பது ஒழுங்குமுறை தரச் சந்தையாகும். தொழிற்சாலைகள் தங்களின் அளவிடப்பட்ட உமிழ்வுகளுக்கு ஏற்ப கார்பன் தொடர்பான கடன்களை வைத்திருக்க வேண்டும்.  மேலும், இது ஒரு டன்னுக்கு ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படுகிறது. இந்த பயனுள்ள கார்பன் விலையை கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறைகளுக்கு (CBAM)   எதிராக கணக்கில் எடுத்துக்கொள்வது வலுவான கண்காணிப்பு, வெளிப்படையான மாற்று விகிதக் கணக்கீடு மற்றும் ஏற்றுமதி சலுகைகள் மூலம் சுமை நீக்கப்படாததற்கான உறுதிப்பாடுகள் ஆகியவற்றுடன் இரு முறை செலுத்தபடும் கட்டணத்தைத் தவிர்க்க உதவும். அதேநேரத்தில், CBAM-ன் முக்கிய நோக்கமான சமமான போட்டி சூழலை உருவாக்குவதையும் இது  பாதுகாக்கும்.


ஒரு எதிர் சரிசெய்தலாக


இந்தியாவின் அடுத்த நகர்வு ஒரு எதிர் நடவடிக்கையாக இருக்க வேண்டும்: இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை (India Border Adjustment Mechanism (IBAM)) கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தை ஒரு தவிர்க்க முடியாத வெளிப்புற நடவடிக்கையாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, CBAM-ன் கீழ் வரும் ஏற்றுமதிகள் மீது இந்தியா தனது சொந்த கார்பன் அடிப்படையிலான கட்டணத்தை விதிக்கும் செயல்முறையாகும். ஏற்றுமதி செய்யப்படும் இடத்திலேயே கட்டணம்  வசூலிக்கப்படும். ஆனால், இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை  ஒருதலைபட்சமாக அறிவிக்கப்படவோ கூடாது. இது இணைப்பு 14-A மூலமாக மட்டுமே உருவாக்கப்பட வேண்டும். அப்படி செய்தால், அதன் வடிவமைப்பு முன்கூட்டியே “மூல நாட்டில் செலுத்தப்பட்ட கார்பன் விலை” என CBAM இணைப்பு 9-ன் நோக்கத்திற்கு ஏற்ப அங்கீகரிக்கப்படும். கார்பன் கடன் வர்த்தகத் திட்ட(Carbon Credit Trading Scheme (CCTS)), கொடுப்பனவுகள் மற்றும் இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறை கட்டணங்கள் எவ்வாறு வரவு வைக்கப்படும் என்பதை இணைப்பு 14-A-ஐப் பயன்படுத்தி இந்தியா கவனமாக வரிசைப்படுத்தினால், இந்திய ஏற்றுமதியாளர்கள் CBAM மட்டும் விதிக்கும் ஒட்டுமொத்த கார்பன் செலவைவிட அதிகமான செலவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது. அவர்கள் ஐரோப்பாவில் மறைமுகமாக செலுத்தும் வரியை, உள்நாட்டு வரிகள் மூலம் வெளிப்படையாகச் செலுத்துவார்கள். இது ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் முழுமையாக ஈடுசெய்யப்படும்.  இதனால், ஏற்றுமதியாளர்களின் மொத்த கார்பன் சுமை CBAM செயல்முறை  என்ற அளவிற்குள்  கட்டுப்படுத்தப்படும்.


இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறையை (India Border Adjustment Mechanism (IBAM)) ஒரு ஆக்கப்பூர்வமான சலுகையாக மாற்றுங்கள்.


முக்கியமான வேறுபாடு பணம் எங்கு செல்கிறது என்பதில் உள்ளது. இந்திய எல்லை சரிசெய்தல் செயல்முறையை மூலம் வரும் வருமானங்கள் இந்தியாவிலேயே இந்தியாவிற்குள் இருக்கும். சேகரிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், சரிபார்க்கக்கூடிய பசுமைத் திட்டங்களுக்காக மட்டுமே வெளிப்படையாக நிர்வகிக்கப்படும் ஒரு பிரத்யேக நிதியில் ஒதுக்கப்பட வேண்டும். ஊது உலைகளை நவீனமயமாக்குதல் (modernising blast furnaces), குறைந்த கார்பன் மின்சாரத்தை விரிவுபடுத்துதல், ஹைட்ரஜன் மற்றும் உலோகக் கழிவு அடிப்படையிலான எஃகு உற்பத்தியைப் அதிகரித்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற அனைத்துத் திட்டங்களும் கடுமையான, அளவிடக்கூடிய, அறிக்கையிடக்கூடிய மற்றும் சரிபார்க்கக்கூடிய தரநிலைகளுக்கு ஏற்ப, தன்னிச்சையாகத் தணிக்கை செய்யப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.


இவ்வாறு பார்க்கும்போது, கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை ஒரு தடையாக அல்ல, மாறாக அது ஒரு பயனுள்ள முன்மொழிவாகும். கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) என்பது வருவாயைப் பாதுகாப்பதைவிட, கார்பன் கசிவைத் தடுப்பதைப் பற்றியது என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உண்மையாக இருந்தால், அது பிரிவு 9-ன் கீழ் நம்பகமான இந்திய கார்பன் விலை நிர்ணயத்தை அங்கீகரித்து, அந்த கட்டணங்களை உண்மையான சரிசெய்தல்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால், ஐரோப்பிய நுகர்வோர் இன்னும் கார்பன் விலை கொண்ட பொருட்களைப் பெறுவார்கள். இந்திய உற்பத்தியாளர்கள் கூடுதல்  கார்பன் செலவைச் சந்திக்க வேண்டியதில்லை.


முக்கியமாக, இந்தியா தனது கார்பன் வருவாயைத் தக்கவைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் பகுதியளவிலாது தனது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு 'பசுமை மாற்றத்திற்கு' நிதியளிக்க வரும் வருவாயைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


இந்தியா, “IBAM மூலம் CBAM-ஐ எதிர்கொள்ள வேண்டும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் இணைப்பு 14-A மற்றும் CBAM-ன் பிரிவு 9 ஆகியவற்றை  குறிப்புகளாக மட்டும் கருதாமல், கார்பன் விலை நிர்ணயம் நடைமுறை உலகத்துடன் தீவிரமாக பயன்படுத்தபடும் அதே வேளையில், கார்பன் சார்ந்த நிதியை நாட்டிற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்வதற்கான அளவுகோலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


ஆர்ச்சி பார்னெல், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியின் சட்டப் பேராசிரியராக உள்ளார்.


Original article : Keeping India’s carbon money at home.

Share:

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (Organisation of the Petroleum Exporting Countries (OPEC)) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


ஐக்கிய அரபு அமீரகத்தின் முடிவும், அதன் விளைவாக பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிற்குள் (OPEC) ஏற்படும் கட்டமைப்புரீதியான பலவீனமும், நீண்டகால அடிப்படையில் எண்ணெய் விலைகள் குறைவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குறுகிய காலத்தில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் வரை, எண்ணெய் விலையில் எவ்விதத் தாக்கமும் இருக்காது என்று நிபுணர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.


எண்ணெய் விலைகள் குறைவாக இருக்கும் சூழலிலும்கூட, முடிந்தவரை அதிக அளவு எண்ணெயை உற்பத்தி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் விரும்புவது தெளிவாகிறது. எண்ணெய் விலைகளைத் தீர்மானிப்பதற்காக, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின்  (OPEC) நடைமுறைத் தலைவரான சவுதி அரேபியாவால் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வந்த 'உற்பத்தி ஒதுக்கீட்டு முறை'யிலிருந்து இது ஒரு விலகலாக அமையும்.


உங்களுக்குத் தெரியுமா?


செப்டம்பர் 1960-ல் ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் நிறுவப்பட்ட பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC), தொடக்கத்தில் ஈரான், குவைத், ஈராக், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய ஐந்து உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்டது. OPEC உருவாவதற்கு முன்பு, மேற்கத்திய பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களே (பெரும்பாலும் 'ஏழு சகோதரிகள்' என அழைக்கப்பட்டவை) எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு வழங்கப்படும் விலையை பெரும்பாலும் தீர்மானித்து வந்தன. இந்த ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையிலும், உறுப்பு நாடுகளுக்கு நிலையான வருவாய் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அவற்றின் பெட்ரோலியக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) உருவாக்கப்பட்டது.


அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த காரணத்தினால், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் மீது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு  (OPEC) எண்ணெய் தடை விதிப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1967-ல், ஐக்கிய அரபு அமீரகம் இக்கூட்டமைப்பில் முறையாக இணைந்தது. அக்காலகட்டத்தில் எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்ந்ததன் விளைவாக, அல்ஜீரியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்த்து தனது உறுப்பு நாடுகளையும் அது விரிவுபடுத்தியது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு  (OPEC) படிப்படியாகப் புவிசார் அரசியல்ரீதியான செல்வாக்கையும் பெற்றது. இது 2025-ம் ஆண்டில், OPEC-இன் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்ந்தது. இக்கூட்டமைப்பின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 11 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை அது கொண்டிருந்தது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிற்குள்  (OPEC) சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இருந்தது.


பரந்த அளவிலான 'OPEC+' கூட்டமைப்பு 2016-ல் உருவாக்கப்பட்டது. இதில் ரஷ்யாவின் தலைமையில் OPEC அல்லாத 10 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் அடங்கும். அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் (shale oil) உற்பத்தி பெருமளவில் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட OPEC+, உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை உற்பத்தி செய்தது.


OPEC மற்றும் அதன் நீட்சியாக OPEC+ கூட்டமைப்பும், எண்ணெய் விநியோக மேலாண்மையில் தங்களுக்குள்ள செல்வாக்கின் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பெறுகின்றன. உற்பத்தி வரம்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் கடுமையான உற்பத்தி ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பதன் மூலமும் எண்ணெய் விலைகளை நிர்வகிக்க OPEC முயற்சிக்கிறது. உலகளாவிய தேவை குறையும் காலங்களில் சந்தையை அதிகப்படியான விநியோகத்திலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த உற்பத்தி ஒதுக்கீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தலைமையிலான குழு கூறுகிறது.        

                         


Original article : What is the Organisation of the Petroleum Exporting Countries (OPEC)?

Share:

வெப்ப அலை நெருக்கடிக்கு வெறும் கொள்கைகள் மட்டும் போதாது, ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. -ரோஹித் பகா

 தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, வெப்பத் தணிப்பு மற்றும் மீள்திறனுக்கான முதலீடுகளை ஆதரிக்கும் விரிவான கட்டமைப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் இருக்க வேண்டும்.


குறிப்பாக, 2026-ம் ஆண்டின் கோடைக்காலம் தீவிரமாக இருக்கக்கூடும் என்றும், நாட்டின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகளைக் கொண்ட நாட்கள் நிகழ வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) எச்சரித்துள்ளது. இதில் வெப்ப அலைகளானவை, புயல்கள் அல்லது திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களிலிருந்து வேறுபட்டு, மெதுவாக உருவாகி, அவை பெரும்பாலும் நாட்கள் அல்லது வாரங்களில் படிப்படியாக தீவிரமடைகின்றன. இதன் காரணமாக, அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மட்டுமல்லாமல், தொடர்ச்சியான திட்டமிடல் தேவைப்படுகிறது.


இதை உணர்ந்து, பல இந்திய நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் வெப்பச் செயல் திட்டங்களை (Heat Action Plans (HAP)) உருவாக்கியுள்ளன. இந்தத் திட்டங்கள், முன்னறிவிப்பு அமைப்புகள், பொதுமக்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் மூலம் அரசுத் துறைகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல நகரங்களில், வெப்பம் சார்ந்த உயிரிழப்புகளையும் நோய்களையும் குறைப்பதற்கு இத்திட்டங்கள் பெரிதும் உதவியுள்ளன.


இருப்பினும், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா இப்போது குறுகிய கால நடவடிக்கைகளைக் கடந்து, நகரங்களை நிலையான முறையில் குளிர்விப்பதற்கான நீண்டகால உத்திகளில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இந்தச் சூழலில், தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட பேரிடர்களின் பட்டியலில் வெப்ப அலைகளையும் சேர்க்க வேண்டும் என்ற 16-வது நிதி ஆணையத்தின் சமீபத்திய பரிந்துரை ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். இப்பரிந்துரையை அளிப்பதன் மூலம், காலநிலை மாற்றம் இந்தியாவின் பேரிடர்ச் சூழலை அடிப்படையிலேயே மாற்றியமைத்துவிட்டது என்பதை ஆணையம் அங்கீகரிக்கிறது.


இந்த மறுவகைப்பாடு, மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதி மற்றும் நிறுவனரீதியான ஆதரவை மாற்றியமைக்கிறது. இதுவரை, மாநிலங்கள் வெப்ப அலைகள் உட்பட உள்ளூர் பேரிடர்களை, மாநிலம் சார்ந்த பேரிடர்களாக அறிவித்திருந்தால், அவற்றுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தங்கள் மாநிலப் பேரிடர் மீட்பு நிதியில் (State Disaster Response Fund (SDRF)) 10 சதவீதம் வரை பயன்படுத்த முடிந்தது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெப்ப அலைகளைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், மாநிலங்கள் இப்போது தங்கள் மாநிலப் பேரிடர் இடர் மேலாண்மை நிதிகள் (State Disaster Risk Management Funds (SDRMF)) மட்டுமின்றி, பரந்த அளவிலான தேசியப் பேரிடர் இடர் மேலாண்மை நிதியிலிருந்தும் ஆதரவைப் பெற முடியும். இது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாமல், நீண்ட கால மீள்திறன் மற்றும் பேரிடர் தணிப்பு முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கும் நிதிச் சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்துகிறது.


புதிய வகைப்பாடு நிதி ஆதாரங்களைத் திறந்தாலும், தற்போதைய கொள்கைக் கட்டமைப்பு வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. இங்குதான் உண்மையான சவால் உள்ளது. பெரும்பாலான வெப்பச் செயல் திட்டங்கள், எச்சரிக்கைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் போன்ற குறுகிய கால நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து முதன்மையாகக் கவனம் செலுத்துகின்றன. மோசமான நகர்ப்புற வடிவமைப்பு, வெப்பத்தை உறிஞ்சும் கட்டுமானப் பொருட்கள், குறைந்து வரும் பசுமைப் பரப்பு, திறனற்ற குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் வெப்ப வசதிக்கான சமமற்ற அணுகல் போன்ற வெப்ப பாதிப்புக்கான கட்டமைப்பு சார்ந்த காரணிகளைக் கையாள்வதில் அவை சிறிதளவே பங்களிக்கின்றன.


கிடைக்கக்கூடிய நிதிகளைத் திறம்படப் பயன்படுத்த, இந்தியா தனது கொள்கைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் மற்றும் நீண்டகால வெப்ப மீள்திறன் உத்திகள் குறித்து நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிவாரணப் பணிகளுக்கு அப்பாற்பட்டு, காலநிலைக்கேற்ற திட்டமிடல், நகர்ப்புற பசுமை மற்றும் நீல உள்கட்டமைப்புகளின் விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட கட்டிட வடிவமைப்பு, உள்கட்டமைப்பு மீள்திறன் மற்றும் நீடித்த குளிரூட்டும் தீர்வுகள் போன்ற வெப்பத் தணிப்பு மற்றும் மீள்திறன் முதலீடுகளை ஆதரிக்கும் விரிவான கட்டமைப்புகளின் உருவாக்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.


உள்ளாட்சி அமைப்புகள், காலப்போக்கில் வெப்பம் சார்ந்த இடர்களைக் குறைக்கும் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த உதவும் நிறுவனத் திறனை வளர்த்தெடுப்பதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிதி ஆதாரங்கள் திறம்படப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு இடையிலான வலுவான ஒருங்கிணைப்பும், நகரங்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவும் மிக முக்கியமானவையாக அமையும்.


நிதி ஆதாரங்கள் தற்போது இருப்பு உள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாகத் தேவைப்படுவது, வெப்பம் தணிந்த, பாதுகாப்பான மற்றும் அதிக மீள்திறன் கொண்ட நகரங்களை உருவாக்கும் ஒரு கொள்கை சார்ந்த தொலைநோக்குப் பார்வையே ஆகும்.


கட்டுரையாளர், iFOREST-இன் திட்ட உதவியாளர் ஆவர்.     

Original article : Heatwave crisis needs a vision, not just policy.

Share:

பாரத் கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பு மற்றும் கடல்வழி நெருக்கடிப் பாதைகள் : இவை இந்தியாவிற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை? -ரோஷ்னி யாதவ்

உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், இந்தியா பாரத் கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பைத் (Bharat Maritime Insurance Pool) தொடங்கியுள்ளது. அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன? முக்கிய கடல்வழிப் போக்குவரத்து நெரிசல் புள்ளிகள் யாவை? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் கீழே குறிப்பிட்டுள்ளது.


தற்போதைய நிகழ்வு :


மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலின் உள்கட்டமைப்பு, இயந்திரங்கள், சரக்கு, பாதுகாப்பு மற்றும் இழப்பீடு (protection and indemnity (P&I)) மற்றும் போர் உள்ளிட்ட அனைத்து கடல்சார் அபாயங்களுக்கும் தொடர்ச்சியான காப்பீட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரூ. 12,980 கோடி இறையாண்மையான உத்தரவாதத்துடன் பாரத் கடல்சார் காப்பீட்டுக் குழுமம் (BMI pool) என்ற உள்நாட்டுக் காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்குவதாக மத்திய அரசு ஏப்ரல் 18 அன்று அறிவித்தது. இந்தச் சூழலில், பாரத் கடல்சார் காப்பீட்டுக் குழுமம் (BMI pool) பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.





முக்கிய அம்சங்கள் :


1. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மேற்கு ஆசியப் போரின்போது, உலகம் புரிந்துகொண்ட காப்பீட்டின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மேற்கு ஆசியாவிற்குப் பயணிக்கும் கப்பல்களுக்குக் காப்பீடு வழங்க, காப்பீட்டாளர்களும் மறு-காப்பீட்டாளர்களும் தயாராக இல்லை என்பதுதான். இதைக் கருத்தில் கொண்டு, கடல்சார் காப்பீட்டை எளிதாக்கும் வகையில் ரூ.12,980 கோடி மதிப்பிலான இறையாண்மை உத்தரவாத நிதியை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் கப்பல் பாகங்கள், இயந்திரங்கள், சரக்கு, பாதுகாப்பு மற்றும் இழப்பீடு (P&I) மற்றும் போர் உள்ளிட்ட அனைத்து கடல்சார் அபாயங்களையும் உள்ளடக்கும். இந்தியக் கொடியை ஏந்திய கப்பல்கள் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும்” என்றார்.


2. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “நிலையற்ற மற்றும் ஆபத்தான கடல்வழிப் பாதைகள் வழியாகக் கப்பல்கள் கடந்து செல்லும்போதும், எந்தவொரு சர்வதேச இடத்திலிருந்தும் இந்தியத் துறைமுகங்களுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கும், இந்தியத் துறைமுகங்களிலிருந்து சர்வதேச இடங்களுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கும், இந்திய வர்த்தகம் தொடர்ந்து மலிவு விலையிலான காப்பீடு கிடைப்பதை இந்தக் காப்பீட்டுத் தொகுப்பு உறுதி செய்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.


3. “இந்தியக் கொடியிடப்பட்ட அல்லது இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல்கள் அல்லது இந்தியாவிற்கு வரும் அல்லது இந்தியாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்காக, இறையாண்மை உத்தரவாதத்தின் ஆதரவுடன் ‘பாரத் கடல்சார் காப்பீட்டுக் குழுமம்’ (Bharat Maritime Insurance Pool) ஒன்றை அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழுமம், கப்பலின் பாகங்கள் மற்றும் இயந்திரங்கள், சரக்கு, பாதுகாப்பு மற்றும் இழப்பீடு (P&I) மற்றும் போர் அபாயம் போன்ற அனைத்து கடல்சார் அபாயங்களையும் உள்ளடக்கும்,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


4. “இந்தக் காப்பீட்டுக் கொள்கைகள், கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள காப்பீட்டு நிறுவனங்களால், கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திறனைப் பயன்படுத்தி வழங்கப்படும். இந்தத் திறன் சுமார் ரூ. 950 கோடியாக இருக்கும். இந்திய கப்பல் போக்குவரத்து நிலைமைகள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப, பொறுப்புக் காப்பீட்டை உள்நாட்டில் நிர்வகிக்கவும், இந்தியாவிற்குள் சிறப்பு கடல்சார் காப்பீடு, உரிமைகோரல் மேலாண்மை மற்றும் சட்ட நிபுணத்துவத்தை உருவாக்கவும் இந்த கூட்டமைப்பு உதவும்,” என்று அது கூறியது.


5. இந்த நிதிக் குழுமத்திற்காக அமைக்கப்படும் நிர்வாகக் குழு, அதன் உருவாக்கத்தையும் செயல்பாடுகளையும் மேற்பார்வையிடும்.


6. "முன்மொழியப்பட்ட உள்நாட்டுக் காப்பீட்டு நிறுவனத்திற்கு இறையாண்மை உத்தரவாதம் வழங்குவதற்கான அடிப்படைக் காரணம், தற்சார்பை (self-reliance) வலுப்படுத்துதல், தடைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துதல் மற்றும் அதிக இறையாண்மைக் கட்டுப்பாட்டை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் தொடர்புடையது," என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


மேற்கு ஆசிய மோதல் தொடர்வதால், பதற்றம் அதிகமாகவே உள்ளது. ஹோர்முஸ் நீரிணையுடன் (Strait of Hormuz) தொடர்புடைய மேலும் விநியோகத் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்தச் சூழலில், முக்கிய கடல்வழி நெருக்கடிப் பகுதிகளைப் புரிந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.


கடல்வழி நெருக்கடி முக்கியப் பகுதிகள்


கடல்வழி வர்த்தகப் பாதையில் கப்பல் போக்குவரத்திற்கு இன்றியமையாத ஒரு நெருக்கடிப் பாதையானது (chokepoint) குறுகிய வழித்தடம் ஆகும். இந்த நெரிசல் பகுதிகள், நீரிணைகள் அல்லது கால்வாய்கள் போன்ற இயற்கையான புவியியல் அம்சங்களாகவோ, அல்லது சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வழிகளாகவோ இருக்கலாம். நீரிணை என்பது இரண்டு பெரிய நீர்நிலைகளை இணைக்கும் ஒரு குறுகிய நீர்ப்பரப்பாகும். இந்த நெருக்கடி பாதைகள், முக்கிய துறைமுகங்கள், பிராந்தியங்கள் அல்லது நாடுகளுக்கு இடையே மிகக் குறுகிய அல்லது மிகவும் திறமையான வர்த்தகப் பாதைகளை வழங்குகின்றன.

1. ஹோர்முஸ் நீரிணை : ஹோர்முஸ் நீரிணை ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவை ஓமான் வளைகுடா மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கிறது. இது 48 முதல் 80 கி.மீ அகலம் கொண்டது (அதன் குறுகிய இடத்தில் 35–40 கிலோமீட்டர்). இந்த மொத்த அகலப்பரப்பில், கப்பல்கள் பயணிப்பதற்கான வழித்தடங்களுக்குச் சில கிலோமீட்டர்கள் மட்டுமே உண்மையில் பயன்பாட்டிற்கு உள்ளன.


2. மலாக்கா நீரிணை : மலாக்கா நீரிணையானது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையே அமைந்துள்ளது. இது இந்தியப் பெருங்கடலை தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கிறது. இது மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும். உலகின் வர்த்தகப் பொருட்களில் கிட்டத்தட்ட 30 சதவீதமும், வளைகுடாவிலிருந்து சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற முக்கிய ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் சுமார் 80 சதவீதமும் இப்பாதை வழியாகவே பயணிக்கிறது.


மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் நிலப்பரப்பு (Maritime Real Estate) இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடம் மட்டுமே நடைமுறைரீதியாக அமைந்துள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் (பிலிப் கால்வாய் பகுதியில் இந்நீரிணை 1.5 கடல் மைல்கள் என்ற மிகக் குறைந்த அகலத்தையே கொண்டுள்ளது). இந்நீரிணையின் முகப்பானது, இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தென் முனைக்கு மிக அருகில், ஆபத்தான நிலையில் அமைந்துள்ளது.


3. பாப் அல்-மண்டேப் நீரிணை : ஆப்பிரிக்காவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே உள்ள பாப் அல்-மண்டேப் நீரிணை, ஏடன் வளைகுடா (Gulf of Aden) வழியாக இந்தியப் பெருங்கடலை செங்கடலுடன் இணைக்கிறது. கடல்சார் போக்குவரத்துக்கான இந்த முக்கியமான மற்றும் குறுகிய பாதையானது (chokepoint), அதன் மிகக் குறுகிய இடத்தில் வெறும் 32 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்டது. தினமும் சுமார் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 12 சதவீதமும் இப்பாதை வழியாகக் கடந்து செல்கின்றன.


4. பனாமா கால்வாய் : இது கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் மேற்கில் பசிபிக் பெருங்கடலையும் இணைத்து, நியூயார்க்கிற்கும் சான் பிரான்சிஸ்கோவிற்கும் இடையிலான கடல்வழித் தூரத்தை 13,000 கி.மீ. குறைக்கிறது. வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களை இணைத்து, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களைப் பிரிக்கும் ஒரு குறுகிய நிலப்பரப்பான பனாமா நிலச்சந்திக்குக் குறுக்கே இந்தக் கால்வாய் அமெரிக்காவால் கட்டப்பட்டுள்ளது. இது 72 கி.மீ. நீளமுடையது மற்றும் கடந்து செல்ல ஒரு பூட்டு அமைப்பைக் (lock system for ships to cross) கொண்டுள்ளது.


5. சூயஸ் கால்வாய் : இது 1869-ல் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைப்பதற்காகக் கட்டப்பட்டது. 193 கி.மீ நீளமுள்ள இந்த செயற்கையான கடல் மட்ட நீர்வழித்தடம், அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களைச் சுற்றியுள்ள நிலங்களுக்கும் இடையிலான மிகக் குறுகிய பாதையாகும். சூயஸ் கால்வாய், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பயணங்களுக்கு ஒரு முக்கியமான குறுக்குவழியாகும். இது ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்ல வேண்டிய தேவையை நீக்குவதால், பயண தூரத்தை 7,000 கி.மீ வரை குறைக்கிறது.


ஐ.நா. கடல் சட்டங்கள் மாநாடு (UN Convention on the Law of the Seas (UNCLOS))


1. ஐ.நா. கடல் சட்டங்கள் மாநாடு (UNCLOS) என்பது, உலகம் முழுவதும் உள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான நியாயமான நடத்தைகளுக்கான பரந்த கட்டமைப்புகளை இது வகுத்துரைக்கிறது. இது பெருங்கடல்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் தொடர்பான நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுப்பதோடு, இறையாண்மை, வழித்தட உரிமைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதாரப் பயன்பாட்டு உரிமைகள் போன்ற விவகாரங்களையும் இது கையாளுகிறது. பிராந்திய நீர்ப்பரப்புகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களின் (Exclusive Economic Zones (EEZ)) எல்லை வரையறைகள் ஐ.நா. கடல் சட்டங்கள் மாநாட்டின் (UNCLOS) விளைவாக உருவானவையாகும்.


2. ஐ.நா. கடல் சட்ட மாநாட்டின் (UNCLOS) படி, பிராந்தியக் கடல் (territorial sea (TS)) என்பது ஒரு நாட்டின் கடற்கரையின் அடிவாரத்திலிருந்து 12 கடல் மைல்கள் வரை பரவியுள்ள ஒரு பகுதியாகும். ஒரு நாடு தனது பிராந்தியக் கடலுக்குள் உள்ள நீர்ப்பரப்பின்மீது முழுமையான இறையாண்மையைக் கொண்டுள்ளது.


3. ஐ.நா. கடல் சட்ட மாநாட்டின் (UNCLOS) படி, ஒரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலம் (EEZ) அதன் கடற்கரையின் அடிமட்டத்திலிருந்து கடலுக்குள் 200 கடல் மைல்கள் (சுமார் 370 கி.மீ.) வரை நீண்டுள்ளது. ஒரு நாடு தனது பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்குள் உள்ள நீரிலும் கடலடியிலும் இருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களின் மீது பிரத்தியேக உரிமைகளைக் கொண்டுள்ளது.


4. கடல் வளங்களைச் சமமான முறையில் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் ஆன பொதுவான கொள்கைகளை ஐ.நா. கடல் சட்டம் (UNCLOS) வகுக்கிறது. ஆனால், இந்த நோக்கங்களை எவ்வாறு அடைய வேண்டும் என்பதை அது குறிப்பிடவில்லை. இந்த இடத்தில்தான் ஆழ்கடல் ஒப்பந்தம் (High Seas Treaty) முக்கியத்துவம் பெறுகிறது.


5. குறிப்பிடத்தக்க வகையில், ஐ.நா. கடல் சட்டம் மாநாடு (UNCLOS) ஆயுத மோதலின் போது போரிடும் தரப்பினரின் நடத்தையை ஒழுங்குபடுத்தும் தெளிவான விதிகளைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், அதன் முதன்மை நோக்கம் அமைதிக்கால நிர்வாகமே ஆகும். அமெரிக்கா ஐ.நா. கடல் சட்டத்தில் கையெழுத்திடவில்லை. இந்தியா 1982 டிசம்பர் 10 அன்று இந்த மாநாட்டில் கையெழுத்திட்டு, 1995 ஜூன் 29 அன்று அதை முறையாக அங்கீகரித்தது.

 

Original article : Bharat Maritime Insurance Pool and maritime chokepoints: Why do they matter for India?

Share:

சபரிமலை வழக்கும், மதம் மற்றும் சமத்துவம் குறித்த கேள்விகளும். - திலீப் பி சந்திரன்

 சபரிமலை வழக்கில், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அரசியலமைப்பு செயல்முறை தொடர்பான 7 கேள்விகள் உள்ளன. சமத்துவம், சமயச் சுதந்திரம், தேவையான சமய நடைமுறைகள், சமயப் பிரிவின் வரையறை மற்றும் அறநெறி குறித்த கோட்பாடுகள் ஆகியவற்றுடன் இந்தக்கேள்விகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன?


சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வாதங்களைக் கேட்டு வரும் நிலையில், 7 முக்கிய கேள்விகளைச் சுற்றி பல்வேறு அரசியலமைப்பு கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.


இந்த கேள்விகள் சமத்துவம், மத சுதந்திரம், அத்தியாவசிய மத நடைமுறைகள், மதப் பிரிவின் வரையறை, மற்றும் நெறிமுறை (morality) என்ற கருத்து போன்ற முக்கியக் கோட்பாடுகளை எவ்வாறு பிரதிபலிக்கின்றன? இதைப் பற்றி தெரிந்து கொள்வோம். அதற்கு முன், 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


சபரிமலை தீர்ப்பு மறுபார்வை


2018-ஆம் ஆண்டில், இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் vs  கேரள அரசு (Indian Young Lawyers’ Association vs. State of Kerala) வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அந்தத்தீர்ப்பு, மாதவிடாய் வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.


4:1 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில், 1965-ஆம் ஆண்டு கேரள இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் (Kerala Hindu Places of Public Worship Rules) விதிகளின் விதி 3(b)-ன் கீழ் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை, அரசியலமைப்பின் 15(1) பிரிவின் கீழ் உள்ள சமத்துவத்திற்கான அடிப்படை (right to equality) உரிமையையும், அரசியலமைப்பின் 25(1) பிரிவின்கீழ் உள்ள மத உரிமையையும் (right of religion) மீறுவதால் அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பெண்களை விலக்கி வைப்பது ஒரு தேவையான மத நடைமுறை (essential religious practice (ERP)) அல்ல என்றும், ஐயப்பன் பக்தர்கள் ஒரு தனி மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஆனால், அந்த அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, சட்டப்பிரிவு 25-ன் கீழ் வரும் மத நடைமுறை பகுத்தறிவு சார்ந்ததா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், சட்டப்பிரிவு 14-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சமத்துவம், சட்டப்பிரிவு 25-ன் கீழ் உள்ள மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறாது என்று தீர்ப்பளித்தார்.


தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் பல மனுக்களின் அடிப்படையில், 2019-ல் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு, சபரிமலை மறு ஆய்வு வழக்கை மற்ற மதங்கள் தொடர்பான இதே போன்ற வழக்குகளுடன் இணைத்தது. தற்போது, ​​தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட புதிய அரசியலமைப்பு அமர்வு, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் அரசியலமைப்பு தொடர்பான  7 கேள்விகளை விசாரித்து வருகிறது.


7 கேள்விகளும் அரசியலமைப்பு உரிமைகளும்.

 

நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரிய 7 முக்கிய கேள்விகள் பின்வருமாறு:


1. இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் உள்ள மத சுதந்திர உரிமையின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன?


2. அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் உள்ள தனி நபர்கள் தொடர்பான உரிமைகளுக்கும், 26-வது பிரிவின் கீழ் உள்ள மதப் பிரிவுகளின் உரிமைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?


3. அரசியலமைப்பின் 26-வது பிரிவின்கீழ் ஒரு மதப் பிரிவினருக்கு உள்ள உரிமைகள், பொது ஒழுங்கு, ஒழுக்கநெறி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைத் தவிர, அரசியலமைப்பின் 3-வது பகுதியின் பிற விதிகளுக்கு உட்பட்டவையா?


4. அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் 26 ஆம் பிரிவுகளின் கீழ் ‘நெறிமுறை’ என்ற சொல்லின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன, மேலும் அது அரசியலமைப்பு நெறிமுறையை (constitutional morality) உள்ளடக்கியதா?


5. அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் ஒரு மதம் தொடர்பான  நடைமுறையின் மீதான நீதித்துறை மறுஆய்வின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன?


6. அரசியலமைப்பின் 25(2)(b) பிரிவில் வரும் “இந்துக்களின் பிரிவுகள்” (Sections of Hindus) என்ற  சொல்லின் பொருள் என்ன?


7. ஒரு மதப் பிரிவையோ அல்லது மதக் குழுவையோ சாராத ஒரு நபர், பொதுநல வழக்கை (PIL) தாக்கல் செய்வதன் மூலம் அந்த மதப் பிரிவு அல்லது மதக் குழுவின் நடைமுறையைக் கேள்விப்படுத்த முடியுமா?


இந்தக் கேள்விகள், கீழே விவரிக்கப்பட்டுள்ள முக்கியமான அரசியலமைப்பு கோட்பாடுகளுடன் தொடர்புடையவை.


மத சுதந்திரம் மற்றும் சமத்துவ உரிமை (Freedom of religion and right to equality )


அரசியலமைப்பின் 25-வது பிரிவு, ஒவ்வொரு நபருக்கும் மத சுதந்திரத்தையும், அந்த சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையையும் உறுதி செய்கிறது. இருப்பினும், அரசியலமைப்பின் 3-வது பகுதியில் உள்ள மற்ற உரிமைகளைப் போலவே, இந்த சுதந்திரமும் முழுமையானது அல்ல.


பிரிவு 25(1)-ன் கீழ் உள்ள மத சுதந்திரம், பகுதி III-ன் பொது ஒழுங்கு, நெறிமுறை, சுகாதாரம் மற்றும் பிற விதிகளுக்கு உட்பட்டது. மேலும், பிரிவு 25(2), மத சுதந்திரத்திற்கான இந்த பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சீர்திருத்தத்திற்கான சட்டங்களை இயற்றுவதிலிருந்து அரசைத் தடுக்காது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று உயிரியல் காரணத்தை (biological factor) அடிப்படையாகக் கொண்டு பெண்களை விலக்கும் ஒரு மத நடைமுறை, பாகுபாடாக (discrimination)  கருதப்படுமா என்பதும், அதன்மூலம் இந்திய அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 17 ஆகிய பிரிவுகளின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவக் கோட்பாட்டை (violating the principle of equality) அது மீறுமா என்பதும் ஆகும்.


ஒரு சமய நடைமுறையானது, ஒரு தனித்துவமான சமயப் பிரிவுடன் தொடர்புடையது (distinct religious denomination) என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, அது இந்திய அரசியலமைப்பின் 26-வது பிரிவின் கீழ் பாதுகாப்பைக் கோரமுடியும் என்றும் பல நேரங்களில் வாதிடப்படுகிறது. அது போன்ற சமயப் பிரிவின் அங்கீகாரம் இல்லாத நிலையில், அந்த நடைமுறைகள் பிற அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டவையாக மாறிவிடுகின்றன. இருப்பினும், சமத்துவத்திற்கான விதிகள், சமயச் சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை மீறி நிலைத்து நிற்குமா என்பதே இங்கு ஒரு  முக்கிய கேள்வியாக உள்ளது.



மதப் பிரிவு (Religious denomination )


அரசியலமைப்பின் 26-வது பிரிவு, ஒவ்வொரு மதப் பிரிவுக்கும் அல்லது அதில் உள்ள எந்த ஒரு பகுதிக்கும், மதம் சார்ந்த விவகாரங்களில் தத்தமது விவகாரங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளவும், தமது சொத்துக்களை வைத்துக்கொள்வதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்கும் தேவையான உரிமையை உறுதி செய்கிறது. மேலும், அதன் எந்த ஒரு பகுதியும்” (any section thereof) என்ற பயன்பாடு, மதங்களின் உட்பிரிவுகளுக்கும் இந்த உரிமை விரிவடைகிறது என்பதை குறிப்பிடுகிறது.


இருப்பினும், மேற்கூறிய விதிமுறை 'மதம்' (denomination) என்ற சொல்லுக்கு வரையறை அளிக்கவில்லை. இது நீதித்துறை விளக்கங்களுக்கும் தலையீடுகளுக்கும் வழிவகுத்து வருகிறது.


மத சுதந்திரம் தொடர்பான அடிப்படை வழக்கு, 1954-ஆம் ஆண்டு மெட்ராஸ் இந்து சமய அறநிலைய ஆணையர் vs ஷிரூர் மடத்தின் ஸ்ரீ லக்ஷ்மிந்திர தீர்த்த சுவாமியார் (The Commissioner, Hindu Religious Endowments, Madras versus Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt) வழக்காகும். இந்த வழக்கில், மத நம்பிக்கையின் ஒருங்கிணைந்த முக்கிய நடைமுறைகளையும் மதம் உள்ளடக்கியது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், மத நடைமுறைகளுக்கும் மதத்துடன் தொடர்புடைய மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் வரையறுத்தது. நிர்வாகம், சொத்து மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில், சில காலங்களுக்கு பின்னர்  அரசு  நெறிமுறைப்படுத்தலாம்.


1982-ஆம் ஆண்டு எஸ். பி. மிட்டல் vs இந்திய யூனியன் (S P Mittal versus Union of India case) வழக்கில் , ஒரு மதப்பிரிவை அடையாளம் காண்பதற்கான 3 நிபந்தனைகளை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது: அவை,


(1) ஒரு பொதுவான நம்பிக்கை


(2) பொதுவான அமைப்பு


(3) ஒரு தனித்துவமான பெயர் ஆகும்.


சட்டப்பிரிவு 25 தனிநபர்களின் மத சுதந்திரத்தைப் (சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு) பாதுகாக்கும் அதேவேளையில், சட்டப்பிரிவு 26 மதப் பிரிவுகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனால், ஒரு குழு மதப் பிரிவு என்ற வரையறைக்கு உட்படுகிறதா என்பது விவாதத்திற்குரியது. அது ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.


மிக முக்கியமாக, ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கப்படுவது, ஒரு குழு தனது அடிப்படை மத நடைமுறைகளை வெளிப் நபர்களின் தலையீடுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. இருப்பினும்,  இது போன்ற கோரிக்கையே நீதித்துறை ஆய்வுக்கு (judicial scrutiny) உட்பட்டதாகும். அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (Essential Religious Practices doctrine (ERP)) இந்தவளர்ச்சிக்குத் துணையாக அமைகிறது.


Original article : The Sabarimala case and questions of religion and equality.

Share:

பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு எதை வெளிப்படுத்துகிறது? -குஷ்பூ குமாரி

 சமீபத்தில் வெளியிடப்பட்ட 'பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு' (Panchayat Advancement Index (PAI)) 2.0-ல், திரிபுரா, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்துகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இந்தக்குறியீட்டின் சிறப்பம்சங்கள் யாவை? பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை (PRIs) அவ்வப்போது ஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிற அளவுகோல்கள் எவை?


தற்போதைய செய்தி :


நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals (SDGs)) இணைந்த 9 கருப்பொருள்களின் அடிப்படையில், 2,59,867 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிட்ட 'பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு (Panchayat Advancement Index (PAI)) 2.0'-ஐ, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டது. மேற்கு வங்கத்தைத் தவிர, நாட்டின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளையும் இந்தக்குறியீடு உள்ளடக்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்:


1. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இதன் முதல் பதிப்பு, 2.16 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை அவற்றின் செயல்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தியது.


2. பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு (Panchayat Advancement Index (PAI)) என்பது 9 கருப்பொருள்களில், நிலையான வளர்ச்சி இலக்குகளின் (Localization of Sustainable Development Goals (LSDGs)) செயல்படுத்தப்படுவது எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். இது ஒன்பது விரிவான கருப்பொருட்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது.


3. இந்த ஆண்டில், 2023-24-ஆம் ஆண்டு நிதியாண்டின் போது— வறுமையற்ற மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரங்கள் முதல் பெண்களுக்கு உகந்த பஞ்சாயத்துகள் வரை— ஒன்பது நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளடக்கிய 150 குறியீடுகளின் அடிப்படையில் பஞ்சாயத்துகளின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது.


4. பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியிட்டின் (Panchayat Advancement Index (PAI))  கீழ், 

சாதனையாளர்’ (Achiever) – 90 முதல் 100


‘முன்னணி’ (Front Runner) – 75 முதல் 90


‘செயற்பாட்டாளர்’ (Performer) – 60 முதல் 75


‘ஆர்வமுள்ளவர்’ (Aspirant) – 40 முதல் 60


‘தொடக்க நிலை’ (Beginner) – 40க்கு போன்றவை, மதிப்பெண் அடிப்படையில் கிராம பஞ்சாயத்துகளின் செயல்திறன் வகைப்படுத்தப்படுகிறது.


5. 2,59,867 கிராமப் பஞ்சாயத்துகளில், 3,635 'முன்னணி' பஞ்சாயத்துகளாகவும், 1,18,824 'செயல்திறன் மிக்கவை' பஞ்சாயத்துகளாகவும், 1,23,719 'முன்னேற விரும்புபவை' பஞ்சாயத்துகளாகவும், 13,689 'தொடக்கநிலை' பஞ்சாயத்துகளாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு பஞ்சாயத்தும் 'சாதனையாளர்' பிரிவில் இடம்பெறவில்லை.


6. ‘முன்னணி’ பஞ்சாயத்துகளில், திரிபுராவில் 943 பஞ்சாயத்துகள் இருந்தன. இது அந்தமாநிலத்தின் மொத்தமுள்ள 1,176 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 80 சதவீதமாகும். இதனைத் தொடர்ந்து கேரளாவில், அதன் 941 கிராமப் பஞ்சாயத்துகளில் 10 சதவீதம் ‘முன்னணி பஞ்சாயத்துகள்’ என மதிப்பிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 6,794 கிராமப் பஞ்சாயத்துகளில் 8 சதவீதம் ‘முன்னணி பஞ்சாயத்துகள்’’ என மதிப்பிடப்பட்டு, ஒடிசா அடுத்த இடத்தில் உள்ளது.


7. பல பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகள்  சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 57,678 கிராமப் பஞ்சாயத்துகளில் 51 பஞ்சாயத்துகள் மட்டுமே ‘முன்னணி பஞ்சாயத்துகளாக மதிப்பிடப்பட்டன. ராஜஸ்தானில், 11,037-ல் 8; பீகாரில், 8,053-ல் இரண்டு; மற்றும் பஞ்சாபில், 13,233-ல் ஒன்று என்ற அளவில் இந்த பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை இருந்தது.


பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்:


1. 2015-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) வகுத்தது. இந்த இலக்குகளை உறுப்பு நாடுகள் 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும்.


2. இந்த இலக்குகள் 269 குறிக்கோள்களை கொண்டுள்ளன. அவற்றின் முன்னேற்றம் 231 குறிகாட்டிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை, நிலையான வளர்ச்சி இலக்குகளின், முன்னேற்றத்தை கண்காணித்து வரும் அதே வேளையில், இந்தியாவின் முக்கிய அரசு சிந்தனைக் குழுவான 'நிதி ஆயோக்' (NITI Aayog), 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தனது 'நிலையான வளர்ச்சி இலக்கு இந்தியா குறியீடு' (SDG India Index) மூலம் மாநில வாரியான முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. கடந்த சில  ஆண்டுகளில், நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.


3. உள்ளாட்சி நிர்வாகத்தில் பஞ்சாயத்துகளின் முக்கியப் பங்கை உணர்ந்து, அரசு அவற்றை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதன் விளைவாக, அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சிக்கான உள்ளூர் உத்திகள் மற்றும் இலக்குகளை வகுப்பதற்கு உதவும் வகையில், அடிமட்ட அளவில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய அளவீடாக பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு உருவாக்கப்பட்டது.


4. இந்தக் குறியீடு, அனைவருக்குமான 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுக்குப் ஏற்ப 9 கருப்பொருள் பகுதிகளாக ஒருங்கிணைக்கும் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் (LSDGs) கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.


5. பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், “வளர்ந்த கிராம பஞ்சாயத்துகள்” என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.


இந்தியாவில் மூன்று அடுக்கு அரசாங்கத்தின் நிலை: இந்தியாவில் கிராம பஞ்சாயத்து (கிராம அளவில்), பஞ்சாயத்து சமிதி (வட்டார அளவில்) மற்றும் மாவட்ட பரிஷத் (Zila Parishad) ஆகிய மூன்று அடுக்குகளிலும் சேர்த்து 2.63 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் 32.29 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களில் 15.03 லட்சம் (46.6 சதவீதம்) பேர் பெண்கள் ஆவர்.

இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்பு


1. “பஞ்சாயத்து” என்பது “உள்ளாட்சி அமைப்பு” என்பதால், அது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு அமைப்பாகும். மேலும், இது அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் ஒரு பகுதியாகும். பஞ்சாயத்துகள் சமந்தப்பட்ட மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின்கீழ் செயல்படுகின்றன.


2. அரசியலமைப்பின் 243G பிரிவு, ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு, உரிய அளவில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் ஒப்படைப்பது குறித்து, சட்டத்தின் மூலமாக விதிகளை இயற்றுவதற்கு ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பகிர்ந்தளிப்பதற்காக, 11-வது அட்டவணையில் 29 பாடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


3. பஞ்சாயத்துகளை அவ்வப்போது கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல், பஞ்சாயத்து அளவில் அலுவலர்களை நியமித்தல், தன்னாட்சி மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.


3. இருப்பினும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஆய்வுகள், ஆய்வுக் கூட்டங்கள், களப் பயணங்கள், காணொளி மூலமாக கலந்துரையாடல், தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் போன்றவற்றின் மூலம் பஞ்சாயத்துகளின் செயல்திறனை அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறது.


காலமுறை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு.


'பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீட்டின்' (Panchayat Advancement Index (PAI)) காலமுறை ஆய்வு

1. பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வுக் குறியீடு (Panchayat Devolution Index): இது இந்தியப் பொது நிர்வாக நிறுவனம் (Indian Institute of Public Administration (IIPA)) நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இந்தக் குறியீடு கடைசியாக 2014-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில், இதன் தேசிய சராசரி மதிப்பெண் 39.92-லிருந்து 43.89-ஆக உயர்ந்துள்ளது.


கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, அலுவலர்கள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஆறு அளவுகோல்களின் அடிப்படையில் பஞ்சாயத்து அமைப்பின் செயல்திறனை அளவிடுவதற்காக, இந்தியப் பொது நிர்வாக நிறுவனம் அமைப்பு இந்தியா முழுவதும் 68 மாவட்டங்களில் உள்ள 172 பஞ்சாயத்துகளை ஆய்வு செய்தது. இது மாநில அளவிலான மதிப்பீட்டை 0 முதல் 100 வரை வழங்குகிறது.


கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடம் பிடித்தன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்தன. பெண் பிரதிநிதிகளின் தேசிய சராசரி விகிதம் 46.44%-ஆக உள்ளது. இது 2013-14-ஆம் ஆண்டில் இருந்த 45.9% என்ற அளவை விட சிறிதளவு அதிகரித்துள்ளது.


2. இ-கிராம்ஸ்வராஜ் (eGramSwaraj): இது ஒரு பயனர்-நட்பு இணைய அடிப்படையிலான வலைத்தளம் ஆகும். பரவலாக்கப்பட்ட திட்டமிடல், முன்னேற்ற அறிக்கையிடல், நிதி மேலாண்மை, பணி சார்ந்த கணக்கியல் மற்றும் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் ஆகியவற்றில் சிறந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு (PRIs) ஒன்றிய நிதி ஆணையத்தின் நிதிகளை இணையவழியில் மாற்றுவதற்கும், பஞ்சாயத்துகள் விற்பனையாளர்கள்/சேவை வழங்குநர்களுக்கு நிகழ்நேரத்தில் பணம் செலுத்துவதற்கும் பொது நிதி மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


3. ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (Rashtriya Gram Swaraj Abhiyan (RGSA)): இது ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்குத் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து, அதன்மூலம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் கிராமப் பஞ்சாயத்துகள் திறம்படச் செயல்பட வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும்.

Original article : What does the Panchayat Advancement Index reveal?

Share: