கடந்த 10 ஆண்டுகளில், எந்த ஒரு பெரிய இந்திய நகரமும் பாதுகாப்பான காற்று தர நிலையை அடையவில்லை: புதிய ஆய்வு ஒன்று சொல்வது என்ன?

சமீபத்திய ஆய்வின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் டெல்லிதான் 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை மிக மோசமான காற்று மாசு அளவினைக் கொண்டிருந்தது. டெல்லியில் ஆண்டு சராசரி  காற்று தரக் குறியீடானது (Air Quality Index (AQI)) 2016-ஆம் ஆண்டில் மிக அதிகமாக (250-க்கு மேல்) இருந்தது. 2019-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் பாதுகாப்பான அளவைவிட மிகவும் மோசமாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 


ஒரு புதிய பகுப்பாய்வின்படி, 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் எந்தப் பெரிய நகரத்திலும் “பாதுகாப்பான” காற்றுத் தரம் இல்லை என்று தெரிவிக்கிறது. பெரும்பாலான ஆண்டுகளில் டெல்லியே அதிக காற்று தரக் குறியீட்டுடன் மிக மோசமான மாசுபட்ட நகரமாக இருந்தது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட “கிளைமேட் ட்ரெண்ட்ஸ்” (Climate Trends) நிறுவனம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை “முக்கிய இந்திய நகரங்களின் காற்றுத் தர மதிப்பீடு (2015–2025)” (‘Air Quality Assessment of Major Indian Cities (2015–2025))’ என்கிற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வு 11 பெரிய நகரங்களின் ஆண்டு சராசரி காற்றுத் தரத்தை ஆராய்ந்து தரவுகளை வெளியிட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, வாரணாசி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 


காற்று தரக் குறியீட்டின் அளவு 0 முதல் 50 வரை இருக்கும்போது, காற்றின் தரம் பொதுவாக பாதுகாப்பான அளவில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 


தகவல்கள்

சமீபத்திய ஆய்வின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் டெல்லிதான் 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை மிக மோசமான காற்று மாசு அளவினைக் கொண்டிருந்தது. டெல்லியில் ஆண்டு சராசரி காற்று தரக் குறியீடானது (Air Quality Index (AQI)) 2016-ஆம் ஆண்டில் மிக அதிகமாக (250-க்கு மேல்) இருந்தது. 2019-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் பாதுகாப்பான அளவைவிட மிகவும் மோசமாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 2025-ஆம் ஆண்டில் டெல்லியின் சராசரி காற்று தரக் குறியீடு 180-ஆக உள்ளது. இது இன்னும் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவு என்றே குறிப்பிடுகின்றனர்.


டெல்லியைத் தொடர்ந்து லக்னோ, வாரணாசி, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்கள் நீண்டகாலத்திற்கு உயர்த்தப்பட்ட காற்றின் தரக் குறியீட்டு அளவை எட்டியுள்ளன.


"லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய நகரங்கள் மிக உயர்ந்த அளவுகளுடன் (பெரும்பாலும் 200-க்கு மேல்) தொடங்கின. மேலும், 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு நகரங்களும் நிலையான முன்னேற்றத்தைக் காட்டினாலும், அவற்றின் 2025 காற்று தரக் குறியீட்டு மதிப்புகள் ஆரோக்கியமான வரம்புகளைவிட அதிகமாகவே உள்ளன," என்று அந்த பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

AQI2015-ஆம் ஆண்டு முதல் 20 நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு நகரத்திற்கும் தினசரி AQI மதிப்புகளிலிருந்து பெறப்பட்ட சராசரி காற்று தரக் குறியீடு. மூலம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB) & காலநிலை போக்குகள் (climate trends)

மற்ற நகரங்களை விட சென்னை, சண்டிகர், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய நான்கு நகரங்களில் காற்றின் தரம் சற்று சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த நகரங்களிலும் காற்று “ஆரோக்கியமான நிலை”யை எட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர். பகுப்பாய்வில் இந்த நகரங்களின் காற்று தரக் குறியீட்டு அளவு 80

முதல் 140 வரை இருந்தது தெரியவந்தது. அதாவது, மற்ற இடங்களைவிட காற்றின் தரம் நன்றாக இருந்தாலும், இவையும் முழுமையாக சுத்தமான காற்று இல்லை என்று தெரிவிக்கின்றனர்.


ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் பெங்களூருவின் காற்று தரம் ஒப்பீட்டளவில் நன்றாக இருந்தாலும், 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம்  2025-ஆம் ஆண்டு வரை ஒரு நாள்கூட "பாதுகாப்பான" (காற்று தரக் குறியீடு  0-50) அளவை எட்டவில்லை என்கின்றனர். பெரும்பாலான ஆண்டுகளில் பெங்களூருவின் காற்று தரக் குறியீட்டு (AQI) அளவானது 65 முதல் 90 வரைதான் இருந்தது என்று தெரிவிக்கின்றனர்.



காரணங்கள்

டெல்லியில் மாசுபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக வாகனங்கள் வெளியிடும் புகைகள், தொழிற்சாலை நடவடிக்கைகள், பருவகாலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது மற்றும் புவியியல் காரணிகள் ஆகியவைதான் என்று அறிக்கை

தெரிவிக்கின்றன. தேசிய தலைநகரில் இந்த ஆண்டு குளிர்காலத்தில் வேளாண் சாகுபடி முடிந்த நிலங்களில் தீ வைப்பது குறைந்திருந்தபோதிலும், காற்று தரக் குறியீடு (AQI) அளவுகள் உயர்வாகவே இருக்கின்றன. ஏனெனில், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வரை டெல்லியில் மழை எதுவும் பெய்யவில்லை என்பது முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. மழை பெய்யும்பட்சத்தில் மாசு அளவு கட்டுக்குள் இருந்திருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 


"இந்த ஆண்டு மேற்கத்திய காற்றழுத்த தாழ்வு நிலைகள் (Western Disturbances) மிகப் பலவீனமாக இருந்தன. அதனால், வட இந்தியாவில் நல்ல மழை பெய்யவில்லை என்பது காரணமாகக் கூறப்படுகிறது.  மழை இல்லாததால் காற்றில் உள்ள மாசு அகற்றப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே இப்போதே புகைமூட்டம் நிலை ஏற்பட்டு, அது நீண்ட நாட்கள் நீடிக்கிறது" என்று Skymet Weather என்கிற நிறுவனத்தின் துணைத் தலைவர் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், பெங்களூரு போன்ற பெருநகரங்களில், பல ஆண்டுகளாக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகரித்து வருவதால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என்கின்றனர்.

நாடு முழுக்க போக்குவரத்து, தொழிற்சாலைகள், வானிலை மாற்றம், வேகமான நகர வளர்ச்சி ஆகியவற்றால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் நலனையும் நகரங்களின் நீண்டகால எதிர்காலத்தையும் காக்க, கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்கள், அவற்றை சரியாக அமலாக்குவது, தூய்மையான எரிசக்திக்கு மாறுவது, ஒருங்கிணைந்த மாசுக் கட்டுப்பாடு

நடவடிக்கைகள் ஆகியவை மிக அவசியம் என்பதையே கடந்த 10 ஆண்டுகாலப் போக்கு வலியுறுத்துகிறது  என்கின்றனர். 




Share:

கணக்கீடு இல்லாத ஒரு பாடத்திட்டம்: பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கணித சீரமைப்பின் அபாயங்கள். -சௌம்யா மாளவியா

இந்தியமயமாக்கும் செயல்முறையை அவசரப்படுத்துவது கணித கற்பித்தல் மற்றும் துறை இரண்டையும் பலவீனப்படுத்தக்கூடும்.


செப்டம்பர் 20-ஆம் தேதி இந்த நாளிதழில் செய்தி வெளியிட்டதுபோல, நாடு முழுவதும் உள்ள கணிதவியலாளர்கள் அரிதாகவே செய்யும் ஒரு நடவடிக்கையாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) கணிதத்துக்கான வரைவு “கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டக் கட்டமைப்புக்கு” (Learning Outcome-based Curriculum Framework (LOCF)) எதிராகக் கையெழுத்திட்டு மனு அளித்தனர். கணிதம் கற்பிக்கப்படும் முறையை “சீர்திருத்தம்” என்ற பெயரில் மோசமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்துக்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயம் கணிதவியலாளர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


அம்பர் ஹபீப் மற்றும் ஆர். ராமானுஜம் போன்ற கணிதவியலாளர்கள் இந்த வரைவுப் பாடத்திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது காலாவதியான பாடப்புத்தகங்கள், மோசமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. மேலும், நவீன கற்பித்தல் முறைகளை புறக்கணிக்கிறது என்று

அவர்கள் கூறுகின்றனர். நவீன கணிதத்தை இந்திய அறிவு அமைப்புகளுக்குள் (Indian Knowledge Systems (IKS)) திணிப்பது இரண்டு பாடங்களுக்கும் தீங்கு

விளைவிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அணுகுமுறை கணிதத்தை ஒரு கருத்தியல் பரிசோதனையாக மாற்றுவதுடன், "இந்தியன்", "பாரம்பரியம்" மற்றும் "அறிவு" ஆகிய சொற்களுக்குப் பின்னால் உள்ள பல்வேறு வரலாறுகளை அங்கீகரிக்காமல், "இந்திய" அறிவை தானாகவே வேத அல்லது சமஸ்கிருத அடிப்படையிலானதாக முன்வைப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.


கடந்த பல ஆண்டுகளாக கணித நடைமுறையைப் பற்றிப் படிக்கும் மானுடவியலாளராக, இந்த நிகழ்வுகள் ஆராய்ச்சியின் சில கொள்கைகளை உறுதிப்படுத்த உதவியுள்ளன. மேலும், அவற்றை இங்கே பகிர்வது இந்த முக்கியமான விஷயத்தைச் சுற்றியுள்ள உரையாடலைத் தக்கவைக்க உதவக்கூடும்  என்று கருதப்படுகிறது. 


கணிதம் உட்பட எந்தவொரு நடைமுறைக்குப் பின்னாலும் உள்ள ஆழமான காரணங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்று மானுடவியல் அறிஞர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கணித மற்றும் அறிவியல் அறிவு எவ்வாறு மனித காரணிகளால் வடிவமைக்கப்படுகிறது என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. இது மதிப்புமிக்கதுதான், ஆனால் கணிதவியலாளர்கள் மற்றும் அவர்களது நூல்களுடனான பணி, நாம் "மனித" அம்சங்களை "கணித" அம்சங்களிலிருந்து தெளிவாகப் பிரித்து பார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கணிதம் மனித செல்வாக்கிலிருந்து தன்னிச்சையானது என்று தோன்றினாலும், அதை விமர்சனரீதியாக ஆய்வு செய்யமுடியும் என்கின்றனர். ஆனால், அத்தகைய

விமர்சனம் கணிதப் பணியின் அமைப்பு மற்றும் தர்க்கத்தை மதிக்க வேண்டும். மேலும், அந்த நடைமுறையின் உள்ளார்ந்த விமர்சனத் தன்மையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய வரைவுக் கல்வித்திட்டம் கணிதத்தை “நாகரிக” அல்லது “மனித” தன்மை கொண்டதாகக் காட்ட விரும்புகிறது. ஆனால் உண்மையான கேள்விகள் என்பன, கணிதத்தில் என்ன இருக்க வேண்டும், என்ன இருக்கக் கூடாது என்பதை மக்கள் திறந்த மனதுடன் விவாதிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த விவாதத்தின் அடிப்படையிலேயே பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். அதைச் செய்யாமல், கணிதத்தின் உள்ளார்ந்த தர்க்க அமைப்பைத் தொடாமல், அதன் மேலே “இந்தியா” என்று தோன்றும் சில தலைப்புகளை ஒட்டிவிடுவது போன்ற எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. கணிதம்

ஒரு முழுமையான, தன்னிறைவான அமைப்பு. இந்திய அறிவும் ஒரு முழுமையான அமைப்பு என்று சொல்கிறார்கள். இரண்டையும் ஒன்றாக இணைக்க வேண்டுமானால், வெளிப்புறமாக தொடர்பில்லாத விஷயங்களைத் திணிக்கக் கூடாது. அப்படித் திணித்தால் கணிதத்தின் அமைப்பே பலவீனமாகிவிடும் என்றும் வாதிடுகின்றனர்.


தாய்மொழியில் கற்பிப்பது அல்லது அறிவை "இந்தியமயமாக்க" வேண்டும் என்று திணிப்பதும் ஒரு வகை ஆதிக்கமாக மாறலாம் என்கின்றனர். ஏனென்றால், அறிவு என்றால் எப்போதும் தூய்மையான "பாரம்பரியம்" அல்லது "நவீனம்", "உள்ளூர்" அல்லது "உலகத்தரம்" என்று பிரிக்க முடியாது. அது எப்போதும் கலந்தே இருக்கும். மேலும், உண்மையான கல்வி நடைமுறைகள் தன்னாலேயே தனக்கான சூழலை உருவாக்கிக்கொள்ளும், இம்முறை "காலனித்துவமற்றதாக்குதல்" என்ற பெயரில் வெளியிலிருந்து "கலாச்சாரத்தைத் திணித்துச் சேர்ப்பது" புதிய தீங்கை உண்டாக்கும்  என்றும் கூறுகின்றனர். செந்தில் பாபு டி. போன்ற வரலாற்றாளர்கள் காட்டுவது என்னவென்றால் பழங்காலத் தாய்மொழிக் கணித முறைகள் படைப்பாற்றல் மட்டுமல்ல, சாதி மற்றும் சமத்துவமற்ற உழைப்பு அமைப்புகளாலும் வடிவம் பெற்றவை. இந்தக் கசப்பான வரலாற்றை மறைக்காமல், இம்மரபுகளை நேர்மையாக ஆராய வேண்டும். உதாரணமாக, காலனித்துவத்துக்கு முந்தைய இந்தியாவில் கணக்கர்கள் எப்படி சாதாரண மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்த கணிதத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதை அவர் ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, தாய்மொழிக் கல்வி என்பது வெறுமனே "பெருமையான பழங்காலத்தைத் திரும்பக் கொண்டுவருவது" அல்ல. மாறாக, ஒவ்வொரு தொழிலின் சமூக-பொருளாதார வரலாற்றையும் ஆழமாகப் புரிந்துகொண்டு, உழைக்கும் மக்களுக்கு கணிதம் எப்போதும் என்னவாக இருந்தது என்பதை உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.


சில சமூக அடிப்படையிலான கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நடுநிலையான உண்மைகளாகப் பாடப்புத்தகங்களில் வைப்பது வரலாறு மற்றும் கணிதம் ஆகிய இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்கின்றனர். உள்ளூர் கணித மரபுகள் குறித்து சிறந்த விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வரலாற்று ஆராய்ச்சியை கணிதத்துடன் கலப்பது ஒரு அடிப்படைத் தவறு. பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவுப் பாடத்திட்டத்தில், இது கவனக்குறைவான மற்றும் அவசரமான சிந்தனையையும் காட்டுகிறது.


கணிதத்தில் பல விதமான “வடிவங்கள்” (methods/representations) உள்ளன. எடுத்துக்காட்டாக இயற்கணிதமும் வடிவவியலும் முற்றிலும் வேறு வேறு. ஆனால், இவற்றை ஒன்றோடொன்று இணைத்தால் (டெஸ்கார்ட்ஸ் செய்தது போல) புதிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். ஒவ்வொரு தனித் தன்மையும் (தூய இயற்கணிதத்தின் சக்தியோ, தூய வடிவவியலின் சக்தியோ) கொஞ்சம் இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கின்றனர். ஒரு வடிவத்தை வேறு வடிவத்துக்கு மாற்றுவதன் மூலம்தான் (மொழிபெயர்ப்பு மூலம்தான்) கணிதம் வளர்கிறது. அதனால் கணிதம் ஒரே ஒரு அடித்தளம் (கணங்கள் அல்லது தர்க்கம் மட்டும்) மீது நிற்கிறது என்று சொல்ல முடியாது. மாறாக, பல்வேறு “மரபுகளும்” (conventions), தொகுதித் தன்மையும் (modularity) முக்கியம் என்பதை இது காட்டுகிறது. மிகக் குறுகிய வடிவம்: கணிதம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவதால் வளர்கிறது; ஒரு வடிவத்தை இன்னொரு வடிவத்தில் சொன்னால் புதிய பிரச்சினைகள் தீரும், ஆனால் சில சக்திகள் இழக்கப்படும். அதனால் கணிதத்துக்கு ஒரே அடித்தளம் இல்லை — பல மரபுகளும் தொகுதிகளும் தேவை என்றும் வாதிடப்படுகிறது. 


இந்தியத் தத்துவங்களையோ கருத்துக்களையோ பாடத்திட்டத்தில் சேர்க்க விரும்பினால், அவற்றை மறைமுகமாகத் “திணிக்காமல்”, நவீனப் பிரச்சினைகளை (குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் (AI) உள்ள சிக்கல்களை) தீர்க்க அவை எவ்வளவு பயனுள்ளவை என்பதை நேரடியாக ஆய்வு செய்து, சோதித்துப் பார்ப்பது சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. உதாரணமாக: கணக்கீட்டு முறைகளோ பௌத்த/சமண தர்க்கங்களோ இன்றைய மல்டிமாடல் அல்லது ஃபஸி லாஜிக் பிரச்சினைகளுக்கு உதவுமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இவற்றை வெளிப்படையாக மதிப்பீடு செய்தால், துறையின் தரம் காப்பாற்றப்படும்; உண்மையான, பொருள்பொதிந்த விவாதங்கள் நடக்கும். அந்த விவாதங்களில் இருந்து வரும் உண்மையிலேயே பயனுள்ள நுண்ணறிவுகளை மட்டும் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.


இறுதியாக ஒன்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இந்தக் கட்டுரை இப்போதைய கணிதக் கல்வி அமைப்பை ஆதரிக்கவில்லை. மாறாக, “சீர்திருத்தம்”

என்ற பெயரில் நடக்கும் மாற்றங்களையே கேள்வி கேட்கிறது. இந்த மாற்றங்களை யார் செய்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன? கணித ஆசிரியர்களும் மாணவர்களும் இதில் எங்கே இருக்கிறார்கள்? இன்றைய கணிதக் கல்விக்கு என்ன தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்? போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. 


இந்த இயக்கத்தில் கணிதவியலாளர்களே முன்னணியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்தியாவில் கணிதம் பற்றிய திறந்த விவாதத்தைத் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பு. சுதந்திரத்துக்குப் பிறகு இது போன்ற விவாதம் மிகக் குறைவாகவே நடந்திருக்கிறது. பல மொழிகள் பேசப்படும் இந்தியா போன்ற நாட்டில் கணிதத்தை உருவாக்குவதிலும் கற்பிப்பதிலும் இன்னும் பல பெரிய பிரச்சினைகள் உள்ளன. அவை மொழிப் பன்முகத்தன்மை, நல்ல தரமுள்ள இந்திய மொழிப் பாடப்புத்தகங்கள் இல்லாமல் இருப்பது, உலகளாவிய புதிய கணித வளர்ச்சிகளுடன் போதிய தொடர்பு இல்லாமல் இருப்பது, பள்ளி ஆசிரியர்களுக்கு குறுகிய காலப் பயிற்சி மட்டுமே கொடுக்கப்படுவது போன்றன ஆகும். வெறுமனே பாடத்திட்டத்தை “இந்தியமயமாக்குவது” அல்லது “தேசியமயமாக்குவது” என்று பெயர் மாற்றினால் இந்த உண்மையான பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும் கூறப்படுகிறது.  இப்போது நமக்குத் தேவை உண்மையான கணித நடைமுறைகளையும் அதன் பல்வேறு வடிவங்களையும் ஆழமாகப் புரிந்து கொள்வதுதான் என்கின்றனர். கவனமாகவும் சிந்தனையோடும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், புதிதாக மாற்றிய பாடத்திட்டம் “முன்னேற்றம் வந்துவிட்டது” என்ற மாயையை மட்டுமே தந்து, உண்மையில் நம்மை பின்னுக்குத் தள்ளிவிடும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். கணிதத்தில் சொல்வார்கள் அல்லவா — இறுதி விடையைவிட, நாம் எடுத்துவைக்கும் அடுக்கடுக்கான படிகளே அதிக முக்கியம் என்று. அதுபோல்தான் இந்த நடவடிக்கைகளும் என்று மேற்கோள்காட்டப்படுகிறது. 


எழுத்தாளர், ஒரு இந்தி கவிஞர் மற்றும் IIT மண்டியின் (Mandi) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் உதவிப் பேராசிரியர் (சமூகவியல்)  ஆவார்.



Original Article: A curriculum without calculation: The risks of UGC’s math overhaul.

Share:

அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு. -குஷ்பூ குமாரி

ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பைப் பாதிக்காது என்று 23வது சட்ட ஆணையம் கூறியுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், இந்த அடிப்படை அமைப்பு (basic structure) என்றால் என்ன, ஒரே நேரத்தில் தேர்தல்கள் என்றால் என்ன?


தற்போதைய செய்தி?


டிசம்பர் 4-ஆம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்கள் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் 23-வது சட்ட ஆணையத்தின் விளக்கவுரை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கூட்டாட்சி மற்றும் வாக்காளர் உரிமையைப்

பொறுத்தவரை, மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.


பிரிவு 368(2), பிரிவுகள் (a) முதல் (e) வரையிலான மாநில ஒப்புதல் தேவைப்படும் எந்தவொரு பிரிவையும் அவை மாற்றாததால், மசோதாக்களுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று ஆணையம் நம்புகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி பி சவுத்ரி தலைமையிலான குழுவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மாதிரி நடத்தை விதிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று ஆணையம் கண்டறிந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு என்பது நீதிமன்றங்களால் எந்தவொரு சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையையும் சோதிக்கப் பயன்படுத்தப்படும் நீதித்துறை மறுஆய்வின் (judicial review) ஒரு வடிவமாகும். அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை மாற்றுவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இது கட்டுப்படுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின் தோற்றம் போருக்குப் பிந்தைய ஜெர்மன்

அரசியலமைப்புச் சட்டத்தில் (German Constitution law) காணப்படுகிறது. இது நாஜி ஆட்சிக்குப் பிறகு, சில அடிப்படைச் சட்டங்களைப் பாதுகாக்க திருத்தப்பட்டது.


2. 1973-ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் (Kesavananda Bharati v State of Kerala) வழக்கில் உச்சநீதிமன்றத்தால் இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. 7-6 என்ற தீர்ப்பில், 13 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அரசியலமைப்பின் 'அடிப்படைக் கட்டமைப்பு' மீற முடியாதது என்றும், அதைத் திருத்த முடியாது என்றும் தீர்ப்பளித்தது.


3. ஒரு சட்டம் "அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை" "சேதப்படுத்துவதாகவோ அல்லது அழிப்பதாகவோ" கண்டறியப்பட்டால், நீதிமன்றம் அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கிறது. இந்தத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைகளை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு இந்தச் சோதனை பயன்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்பை எவ்வாறு மாற்றலாம் என்பதற்கு தெளிவான வரம்புகளை நிர்ணயிப்பதால், நாடாளுமன்றம் அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக இந்தச் சோதனை பார்க்கப்படுகிறது.


4. 2025-ஆம் ஆண்டு அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அபய் எஸ் ஓகா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான பிரத்யேக உரையாடலில், அடிப்படை கட்டமைப்பு என்பது "உலகெங்கிலும் உள்ள பல ஜனநாயக நாடுகளை விட இந்தியாவில் ஜனநாயகத்தை மேன்மையாக்கும் ஒரு கோட்டபாடாக இருப்பதாக தெரிவித்தார். சட்டமன்றம்கூட அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.


5. நீதிமன்றங்களுக்கும் பிரதமர் இந்திரா காந்தி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல்களுக்குப் பிறகு கேசவானந்தா பாரதி வழக்கின் தீர்ப்பு வந்தது. அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் நாடாளுமன்றம் மாற்ற முடியும் என்றும், நீதிமன்றங்கள் இந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்யமுடியாது என்றும் கூறி அரசாங்கம் முக்கியமான சட்டங்களை இயற்றியது.


6. நாடாளுமன்றத்தின் திருத்த அதிகாரத்தின் நோக்கம் மற்றும் நில சீர்திருத்தங்களின் சட்டபூர்வமான தன்மையை ஆராய, நீதிமன்றம் 13 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்தது. அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், சில "அடிப்படை அம்சங்களை" திருத்த முடியாது என்று அமர்வு தீர்ப்பளித்தது. அரசியலமைப்பின் சில முக்கியப் பகுதிகளை அதன் "அடிப்படை அம்சங்கள்" என்று உச்சநீதிமன்றம் பட்டியலிட்டது. ஆனால், அந்தப் பட்டியல் முழுமையானது அல்ல என்று கூறியது.


7. 'அடிப்படை கட்டமைப்பு' கோட்பாடு, அரசியலமைப்பின் மேலாதிக்கம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கோட்பாடு, கூட்டாட்சி, மதச்சார்பின்மை, இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு, நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான

தேர்தல்களின் கொள்கை, நலன்புரி அரசு போன்றவற்றை உள்ளடக்கியதாக விளக்கப்பட்டுள்ளது.


1. 23-வது சட்ட ஆணையம் என்றால் என்ன?


காலாவதியான மற்றும் ரத்து செய்யக்கூடிய சட்டங்களை அடையாளம் காண, ஒன்றிய அரசு 23வது சட்ட ஆணையத்தை மூன்று ஆண்டுகளுக்கு (செப்டம்பர் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2027 வரை) அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆணையத்தின் தலைவராக உள்ளார்.


இந்த ஆணையத்தில் ஒரு முழுநேரத் தலைவர், நான்கு முழுநேர உறுப்பினர்கள், சட்ட விவகாரங்கள் மற்றும் சட்டமன்றத் துறைகளின் செயலாளர்கள் அலுவல்ரீதியான உறுப்பினர்களாகவும், ஐந்து பேர்வரை பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.


02. அரசியலமைப்பு திருத்தம் (constitutional amendment) என்றால் என்ன?


அரசியலமைப்புத் திருத்தம் என்பது இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள விதிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு முறையான செயல்முறையாகும். அரசியலமைப்பின் XX பகுதி அதன் திருத்தத்தைப் பற்றி விவாதிக்கிறது. பிரிவு 368(2)-ன்கீழ், ஒரு மசோதா இரு அவைகளிலும் பெரும்பான்மையான அனைத்து உறுப்பினர்களாலும், குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாலும் நிறைவேற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தால் அரசியலமைப்பை மாற்ற முடியும். அதன்பிறகு மசோதா குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர் அதற்கு ஒப்புதல் அளிப்பார், அதன் மூலம் அரசியலமைப்பு திருத்தம் சட்டமாகிறது.


03. அரசியலமைப்பு திருத்தத்திற்கு எப்போது மாநில ஒப்புதல் தேவைப்படுகிறது?


அரசியலமைப்பில் 54, 55, 73 ஆகிய பிரிவுகள், 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல்கள் அல்லது நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்யமுயலும் ஒரு திருத்தம், மாநிலங்களில் பாதிக்கு குறையாத சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும் எந்தவொரு திருத்தத்திற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை. மேலும், பிரிவு 368-ல் ஏற்படும் மாற்றங்களுக்கு மாநில ஒப்புதல் (ratification by the states) தேவை.

04. நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Committee of Parliament) என்றால் என்ன?


ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது ஒரு முக்கியமான நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தால் அமைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஒரு மசோதாவை விரிவாக ஆய்வு செய்வது போன்றது. பெயர் குறிப்பிடுவதுபோல, இது இரு அவைகளிலிருந்தும், ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் பதவிக்காலம் முடிந்ததும் அல்லது அதன் பணி முடிந்ததும் கூட்டுக் குழு கலைக்கப்படுகிறது.


ஒரே நாடு, ஒரு தேர்தல்


1. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" (One Nation, One Election) என்பது ஒரே நேரத்தில் மக்களவை, அனைத்து மாநில சட்டமன்றங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள்) ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதாகும்.


2. முன்னாள், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த பரிந்துரைத்தது. அந்தக் குழு, இந்திய அரசியலமைப்பில் 15 திருத்தங்களை பரிந்துரைத்தது - புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றங்கள் என இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.


3. "ஒரே நேரத்தில் தேர்தல்" என்ற கருத்து இந்தியாவிற்கு புதியது அல்ல. ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. நமது ஜனநாயக பயணம் முதல் பொதுத் தேர்தலுடன் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டும் ஒரேநேரத்தில் நடத்தப்பட்டன.


4. 1967-ஆம் ஆண்டு 4-வது பொதுத் தேர்தல்கள் வரை ஒரேநேரத்தில் தேர்தல்கள் பெரும்பாலும் நடைமுறையில் இருந்தன. இருப்பினும், அடுத்தடுத்த வந்த ஒன்றிய அரசாங்கங்கள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே மாநில அரசாங்கங்களை கலைக்க அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தியதாலும், மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் கூட்டணி அரசாங்கங்கள் தொடர்ந்து

தோல்வியடைந்ததாலும், நாடு ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடைபெறத் தொடங்கியது.


5. அரசியலமைப்பு (129வது திருத்த) மசோதா, 2024 மற்றும் ஒரேநாடு ஒரேதேர்தல் மசோதாக்கள் எனப்படும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மீதான குழு டிசம்பர் 4-ஆம் தேதி கூட உள்ளது.



Original Article: Basic Structure Doctrine.

Share:

திட்டம் இயக்கமாக : சமூக ஈடுபாடு NIPUN பாரத் திட்டத்தை எவ்வாறு வலுப்படுத்தும்? -ஜெய்ஸ்ரீ ஓசா, ஷவேதா சர்மா-குக்ரேஜா

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சுனிதா யாதவ், வீட்டுப்பாடம் எழுதுவதற்கான குறிப்பேடுகள் இல்லாமல் வளர்ந்தார். மேலும், தனது படிப்பைப் பற்றி ஒருபோதும் கேட்காத பெற்றோர்கள். இன்று, அவரது மகள் ரிஷிகா மிகச் சிறந்த பள்ளிச் சூழலில் படிக்கிறார். அரசுப் பள்ளி இப்போது கற்றுக்கொள்வதற்கு தேவையான பொருட்களை வழங்குகிறது. ஆசிரியர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பெற்றோருக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும், கிராம பஞ்சாயத்து கல்வியை ஆதரிக்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் சுனிதாவை வீட்டுப்பாடத்தில் எவ்வாறு உதவுவது என்பதைக் காட்டிய பிறகு, அந்தப் பெண் தனது அன்றாட வாழக்கை முறையை மாற்றினாள். "நான் சமைக்கும்போது, ​​ரிஷிகாவை என் அருகில் உட்கார வைத்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.


மத்தியப் பிரதேசத்தில், பால் சௌபால் அமர்வுகள் குடும்பங்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான கற்றலை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் பீகாரில், ஒலிபெருக்கிகள் "அபன் பீகார், நிபுன் பீகார்" போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இது ஆரம்பகால கற்றலை ஒரு சமூக முயற்சியாக மாற்றுகிறது. ஆரம்ப வகுப்புகளில் உள்ள ஐந்து கோடி இளம் குழந்தைகளுக்கு நாம் தேவையான ஆதரவை வழங்கினால், புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முயற்சி (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ((NIPUN BHARAT)) ஒரு நோக்கத்திலிருந்து ஒரு இயக்கமாக மாறும். இதைச் சாத்தியமாக்குவதற்கான சிறந்தவழி சமூகத்தில் இருந்து தொடங்குவதாகும்.


சமூக அணிதிரட்டலின் (Community Mobilisation) ஆற்றல்


நமது அரசால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission), மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது எவ்வாறு பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதைக் காட்டியது. 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த

சுகாதார இயக்கத்தில் இணைந்தனர். மேலும், 650,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கிராமங்களில் வீடுகளுக்குச் சென்று மக்கள் கழிப்பறைகள் இல்லாத இடங்களைக் கண்டறிந்தனர். கழிப்பறைகள் கட்ட உதவினார்கள், அவை பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் சரிபார்த்தனர். இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் 60,000 முதல் 70,000 குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியதாக ஒரு அறிவியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இப்போது, ​​கல்வியை மேம்படுத்த அதே அளவிலான ஒரு சமூக முயற்சி நமக்குத் தேவைப்படுகிறது.


உலகம் முழுவதும், சமூக அணிதிரட்டல் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. 1977ஆம் ஆண்டில், பேராசிரியர் Wangari Maathai, சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடவும், இயற்கை வளங்கள் இழப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் கென்யாவில் பசுமைப் பட்டை இயக்கத்தைத் (Green Belt Movement) தொடங்கினார். பத்தாண்டுகளுக்குள், 30,000 பெண்கள் வனவியல் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் பயிற்சி பெற்றனர். 5.1 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு 4,000-க்கும் மேற்பட்ட சமூகங்களை மாற்றினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ரியோ டி ஜெனிரோவின் ஃபவேலா-பைரோ இயக்கம் (Favela-Bairro Program) உள்ளூர்

சமூகங்களுடன் இணைந்து 105 முறைசாரா குடியிருப்புகளை மேம்படுத்தியது. இது சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக இடங்களை மேம்படுத்தி, 4.5 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது.


உலகளாவிய ஆய்வுகள் சமூகப் பங்கேற்பு (community participation) கற்றல் விளைவுகளையும் மாற்றும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. வியட்நாமில், 2012-ஆம் ஆண்டு மற்றும் 2015-ஆம் ஆண்டிற்கு இடையில் மாணவர்களின் சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்ட (Programme for International Student Assessment (PISA)) மதிப்பெண்களில் ஏறக்குறைய பாதி வித்தியாசத்தை பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் சமூக ஈடுபாடும் விளக்கியதாக உலகவங்கி ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சமூக ஈடுபாட்டை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, துடிப்பான பொதுக் கல்வி முறையில் கணிசமான முதலீட்டை மேற்கொள்வதோடு, உண்மையான தனியார் மற்றும் சமூகப் பங்களிப்பை ஊக்குவித்து எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  2021-ல் தொடங்கப்பட்ட புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முயற்சி (National

Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ((NIPUN BHARAT)), அடிப்படைக் கற்றலை மேம்படுத்துவதற்கான முழு சமூக அணுகுமுறையையும் ஊக்குவிப்பதன் மூலம் அடிப்படைக் கொள்கையை மேம்படுத்த முயற்சிக்கிறது.


புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முன்னெடுப்பு (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN BHARAT)) இயக்கத்தை நோக்கி


ரூ. 2,500 கோடி ஆண்டு பட்ஜெட்டில், புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முன்னெடுப்பு நன்கு தயாரிக்கப்பட்ட கற்பித்தல்-கற்றல் பொருட்கள் (teaching-learning materials (TLMs)), ஆசிரியர் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல், கண்காணிப்பு மற்றும் மாணவர்களுக்கு வழக்கமான தேர்வுகள் போன்றவற்றை ஆதரிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முடிவுகள் நன்றாகத் தெரிகின்றன. 2024ஆம் ஆண்டு PARAKH Rashtriya Sarvekshan, தரம் 3 மாணவர்கள் மொழியில் 64% (தரம் 6-ல் 57% மற்றும் தரம் 9-ல் 54% உடன் ஒப்பிடும்போது) மற்றும் கணிதத்தில் 60% (தரம் 6-ல் 56% மற்றும் தரம் 9-ல் 37% உடன் ஒப்பிடும்போது) மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 2024 வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)), கோவிட் காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்புக்குப் பிறகும்கூட, 2014ஆம் ஆண்டைவிட அதிகமான தரம் 3 குழந்தைகள் 2-ஆம் வகுப்பு பாடத்தைப் படித்து அடிப்படைக் கழித்தல்களைச் (simple subtraction) செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது - வாசிப்பு ஆறு சதவீத புள்ளிகளாலும் கழித்தல் பத்து சதவீத புள்ளிகளாலும் அதிகரித்துள்ளன.

இருப்பினும், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தர-நிலை திறன்களை அடைய உதவ, NIPUN BHARAT இயக்கம் ஒரு பெரிய இயக்கமாக மாற வேண்டும். அரசாங்கம் அடிப்படைக் கற்றலின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலக் கற்றலில் மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சித்திறனை அதிகரிப்பதிலும் அதன் தாக்கம் குறித்த புரிதலை மேம்படுத்த, அரசாங்கம் முதலில் அடிப்படைக் கற்றலிற்கான விழிப்புணர்வு மற்றும் தகவல் பிரச்சாரங்களில் முதலீடு செய்யலாம்.


தூய்மை இந்தியா இயக்கத்தில் (Swachh Bharat Mission) விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக தங்கள் பட்ஜெட்டுகளில் 5-15% ஒதுக்குவதன் மூலம் அதையே செய்தது. NIPUN BHARAT இயக்கமும் இதே போன்ற முதலீடுகளைப் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த இயக்கத்திற்கு பட்ஜெட்டில் 10% (ரூ. 250 கோடி) பரப்புரை, பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்துவது பெற்றோருக்கும் சமூகங்களுக்கும் தேவையான அறிவையும் கருவிகளையும் அளித்து, உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர உதவும்.


பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளூர் தலைவர்கள் NIPUN சபைகள், வாய்மொழியாக சரளமாக வாசிக்கும் போட்டிகள், தெரு நாடகங்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் போன்ற சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். பீகாரின், NIPUN கிராம சபை மாதிரியை வேறு இடங்களில் செய்து பார்க்கலாம். தலைவர்கள் (Mukhiyas) மூலம், பெற்றோர்கள் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களைப் பற்றியும், அவர்களின் ஈடுபாடு ஏன் முக்கியமானது என்பதையும் அறிந்து கொண்டனர். இதன் விளைவாக, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் பெற்றோர் வருகை 20–30%-லிருந்து 60%-ஆகவும், மாணவர் வருகை 58–65%-லிருந்து 70–76%ஆகவும் ஒரு வருடத்தில் அதிகரித்தது.


ஆசிரியர்களின் பங்கு


ஆசிரியர்களின் பார்வையை மாறலாம். மேலும், அவர்களின் விருமபங்களும் அதிகரிக்கலாம். திறமையான ஆசிரியர்கள் மாணவர்களின் சாதனையை 1.5 தரநிலை அளவுகளால் அதிகரிப்பதாகக் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் பலவீனமானவர்கள் அரைவருட வளர்ச்சியை மட்டுமே வழங்குகிறார்கள். இருப்பினும், இந்தியாவிலும் பிற வளரும் நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள்,

பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தால், ஒரு மாணவருக்கு அதிகம் உதவ முடியாது என்று பல ஆசிரியர்கள் நினைப்பதைக் காட்டுகின்றன.


மேலும், ஆசிரியர்கள் பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை மிகைப்படுத்தி மதிப்பிடுகிறார்கள். போராடும் மாணவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள், இது திறன் இடைவெளியை அதிகரிக்கிறது. அனைத்து குழந்தைகளும் வெற்றிபெற உதவ, இந்த மனநிலையை மாற்ற வேண்டும். சிறப்பு பிரச்சாரங்கள் ஆசிரியர்களுக்கு அடிப்படை கற்றல் (FLN) ஏன் முக்கியமானது

என்பதைக் கற்பிக்க முடியும். மேலும், அவர்களுக்கு வழக்கமான மாணவர் செயல்திறன் தரவை வழங்குவது அவர்களின் பங்கு பற்றிய தவறான கருத்துக்களை சரிசெய்யும்.


மாவட்ட அளவில் வெகுமதிகள் மற்றும் அங்கீகாரத் திட்டங்களைச் சேர்ப்பது ஆசிரியர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும். உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் இத்தகைய அமைப்புகளை கொண்டுள்ளன. இதன் விளைவாக ஆசிரியர்களின் ஈடுபாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


பெற்றோரை ஈடுபடுத்துதல்


சிறந்த பலன்களைப் பெற பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்றல் பயணத்தில் பங்கேற்கலாம். உலகளாவிய ஆய்வுகள், 6-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் விளைவுகளில் 61% மாறுபாட்டிற்கு பெற்றோரின் ஈடுபாடுதான் காரணம் என்பதைக் காட்டுகிறது. மேலும், வலுவான பெற்றோரின் ஈடுபாட்டைக் கொண்ட பள்ளிகள் கற்றல் விளைவுகளை மேம்படுத்தவும், குழந்தைகள் ஒரு வருடத்தில் நான்கு கூடுதல் மாத முன்னேற்றத்தை அடையவும் 10 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

வழக்கமான பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் வலுவான தொடர்புகளை உருவாக்கி, சிறந்த கல்வித் தரத்தை வலியுறுத்துகின்றன. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில், மாதாந்திர பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் பெற்றோர் வருகையை 28% அதிகரித்துள்ளது. 2010-ல் 5-ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்ற 35%-ஆக இருந்த படித்த தாய்மார்கள் 2022-ல் 60%-ஆக உயர்ந்துள்ளனர் - வீட்டில், படித்த தாய்மார்களின் அதிகரிப்பு ஆதரவுக்கான புதிய வாய்ப்பை வழங்குகிறது.  இருப்பினும், பலருக்கு அடிப்படை கற்றலுக்கு எவ்வாறு உதவுவது என்று இன்னும் தெரியவில்லை. வீட்டுப் பணிப்புத்தகங்கள் அல்லது வாட்சாப் நினைவூட்டல்கள் போன்ற எளிய கருவிகள் நன்றாக வேலை செய்கின்றன. CSF மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, இது போன்ற பயனுள்ள அதிகரிப்புகளைப் ஈடுபட்ட பெற்றோர்கள், பயனுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தங்கள் குழந்தையின் கற்றலில் முதலீடு செய்ய 1.16 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.


அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு, பொது ஆலோசனையின் சக்தியை தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உருவாக்கம் நிரூபித்தது. இந்த உணர்வுதான் இப்போது NIPUN Bharat இயக்கத்தை வழிநடத்த வேண்டும். அரசாங்கங்கள் விழிப்புணர்வில் முதலீடு செய்யவேண்டும், சமூகங்கள் ஈடுபட வேண்டும், ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும், பெற்றோர்கள் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் "மக்கள் பங்களிப்பு (Janbhagidari) மூலம் மட்டுமே, ஒவ்வொரு குழந்தையும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை அடைவதை உறுதிசெய்ய முடியும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும், இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைக்க முடியும். NIPUN Bharat ஒரு குறிக்கோளைத் தாண்டி நகர வேண்டும்; அது மக்களாலும், வளர்ந்த இந்தியாயவை உருவாக்கும் மக்களாலும் இயக்கப்படும் ஒரு இயக்கமாக மாற வேண்டும்.


(ஷவேதா சர்மா-குக்ரேஜா, சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆவார். ஜெயஸ்ரீ ஓசா, சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷனின் கல்வி நிபுணர் மற்றும் மூத்த ஆலோசகர் ஆவார்.)



Original Article: From mission to movement: How community involvement can power NIPUN Bharat 

Share:

நியமிக்கப்பட்ட ஆளுநரின் 'பாரபட்சமற்ற தன்மை' -எம்.ஏ. பேபி

கடந்தகால விவாதங்கள் காரணமாக ஆளுநர்களின் அதிகாரம் குறித்த விவாதம் இன்று மிகவும் பொருத்தமானது.


ஆளுநர்களின் பங்கு குறித்த இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், அதைத் தொடர்ந்து 16-வது குடியரசுத் தலைவர் பரிந்துரையில் உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு வழங்கிய ஆலோசனையும் அரசியலமைப்பின் எழுத்து மற்றும் ஆன்மா குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளன. அரசியலமைப்பு சபையால் (Constituent Assembly) ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி வரைவில் இடம் பெற்ற வார்த்தைகள், அவையில் நடந்த விவாதங்களின் உணர்வைப் பிரதிபலித்தன. தற்செயலாக, அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டசபையில் ஆளுநர்களின் பங்கு குறித்த விவாதம் தரம் மற்றும் பொருள் சார்ந்ததாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் ஆளுநரின் பதவி, பங்கு மற்றும் அதிகாரங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஒவ்வொரு திருப்பத்திலும் தலையிட்டார். வரைவில் கவனமாக சிந்திக்கப்பட்ட யோசனைகளை அவர் தெளிவுபடுத்தினார்.


பரிந்துரைக்கப்பட்ட ஆளுநரின் பாரபட்சமற்றத் தன்மை குறித்து உறுப்பினர்களால் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஆளுநர் மத்திய அரசின் நியமனமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலும் இருப்பதால், அவர் "தொலை இயக்கியாக" (remote-controlled) செய்யப்படுவார் என்று அவர்கள் வாதிட்டனர். 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்கீழ் பழைய மாகாண ஆளுநர்களிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் அவர்கள் வாதிட்டனர். பதவியில் இருப்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர் "வைஸ்ராயின் வேட்பாளர்களின் பிரதி" (replica of the Viceroy’s nominees) ஆக மாறக்கூடும் என்று அவர்கள் அஞ்சினர்.





'முற்றிலும் அரசியலமைப்பு ரீதியான ஆளுநர்'


1947-ம் ஆண்டிலும், பின்னர் 1949-ம் ஆண்டிலும், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட இந்த அச்சங்களுக்கு பதிலளித்த டாக்டர் அம்பேத்கர், "சில உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆளுநர் மாகாணத்தின் பிரதிநிதியாக இல்லாமல் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருப்பார் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆளுநர் தனது அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒன்றிய அரசின் முகவராக இருக்க வேண்டிய அவசியமில்லை." மேலும், "அரசியலமைப்பின் கீழ் ஆளுநர் முற்றிலும் அரசியலமைப்பு ரீதியான ஆளுநர் என்பதை உறுதியாகக் கூற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகத்திற்கு போட்டியாக அல்ல, நாடாளுமன்ற அமைப்பைச் செயல்பட வைப்பதற்காகவே அவர் இருக்கிறார்" என்று அவர் மேலும் கூறினார்.


அடுத்ததாக நடந்த முக்கிய விவாதம் ஆளுநரின் விருப்புரிமை அதிகாரங்கள் (discretionary powers) பற்றியது. மீண்டும் ஒருமுறை, விவாதத்தில் பங்கேற்ற பல உறுப்பினர்கள் இத்தகைய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அதிகாரங்கள் 1935 சட்டத்தை நினைவூட்டுவதாக அவர்கள் கூறினர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் மீண்டும் ஒருமுறை பதிலளித்ததாவது, "இந்த விதியின் மூலம் நாம் 1935-ன் சர்ச்சைகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறோம் என்று சொல்வது தவறு. அந்த அரசியலமைப்பானது ஆளுநருக்கு ஒரு பொதுவான அதிகாரத்தை வழங்கியது. நமது அரசியலமைப்பு அவ்வாறு செய்யவில்லை" என்று குறிப்பிட்டார். சபை உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கணிப்புகளை தொடர்ந்து தெரிவித்ததால் அவர் இன்னும் திட்டவட்டமாக குறிப்பிட்டதாவது, "உறுப்பினர்கள் அரசியலமைப்பில் உள்ளதை விட அதிகமாகப் படிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆளுநர் தலையிடும் அதிகாரமாக இருக்கக்கூடாது. அவரது விருப்புரிமை மிகவும் வரையறுக்கப்பட்ட விருப்புரிமையாக" இருக்கும். 'வரையறுக்கப்பட்ட விருப்புரிமை' (limited discretion) என்பதன் மூலம், தேர்தல்களுக்குப் பிறகு ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது அல்லது அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிற பிரச்சினைகள் போன்றவற்றை அவர் குறிப்பிட்டார். மிக முக்கியமாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள பல தற்போதைய ஆளுநர்கள் பெரும்பாலும் செய்வது போல, 'தலையிடும் அதிகாரியாக' செயல்படும் ஆளுநர் இருப்பதை அவர் கற்பனை செய்யவில்லை.

இன்று ஒரு பொருத்தமான விவாதம்


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க ஆளுநர்களின் அதிகாரம் குறித்த விவாதம் இன்று இன்னும் பொருத்தமானது. உறுப்பினர்கள் மீண்டும் 1935 சட்டத்தைக் குறிப்பிட்டனர். என்.ஜி. ரங்கா தனது கருத்தை சுருக்கமாக குறிப்பிட்டதாவது, “தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா, பரிந்துரைக்கப்பட்ட ஆளுநரைச் சார்ந்து இருக்கக்கூடாது. இது ஆபத்தானது. இது மற்றொரு போர்வையில் ஆளுநருக்கு விருப்புரிமை அதிகாரத்தை வழங்குவதாகும்.” ரோகிணி குமார் சவுத்ரியும் இந்தப் பிரச்சினை குறித்து பதிலளித்ததாவது, “ஐயா, ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒதுக்கும் ஆளுநரின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு நேரடி அவமதிப்பு. இது வைஸ்ராயின் முகவர்களாக இருந்த பிரிட்டிஷ் ஆளுநர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய அதிகாரங்களின் எச்சத்தைத் தவிர வேறில்லை… ஆளுநர் தலையிடக்கூடாது என்று எங்களுக்கு பலமுறை கூறப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு இந்த அதிகாரம் இருந்தால், அவர் தலையிடும் அதிகாரியாக மாறுகிறார்.”


டாக்டர் அம்பேத்கர் உறுப்பினர்களின் அச்சங்களை நிவர்த்தி செய்தார். அவர் குறிப்பிட்டதாவது, “இந்த அதிகாரத்தின் தன்மை குறித்து சில தவறான புரிதல்கள் இருப்பதாகத் தெரிகிறது. மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்குவது என்பது ஆளுநர் தனது சொந்த உரிமையில் பயன்படுத்த வேண்டிய ஒரு விருப்புரிமை அதிகாரம் அல்ல... அதேபோல், ஆளுநருக்கு ஒரு பொதுவான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கருதுவது தவறாகும். அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை... ஒரு மசோதா மத்திய அரசின் நிலையை அச்சுறுத்தும் அல்லது அடிப்படை அரசியலமைப்பு விதிகளை மீறும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மசோதாக்களை முன்பதிவு செய்வது அவசியம்."


அவர் கூறியபோது இதை தெளிவுப்படுத்தியதாவது, “சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் தீர்மானிக்கக் கூடாது என்பதை நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அவரது செயல்பாடுகள் முறையானவை… அரசியலமைப்புச் சட்டம் அவர் ஆலோசனையின்பேரில் செயல்பட வேண்டும் என்று கூறும் இடங்களில், அவர் அந்த ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். அவர் தனது விருப்புரிமையின் பேரில் செயல்பட வேண்டும் என்று கூறும் இடங்களில் மட்டுமே அவர் அவ்வாறு செய்ய முடியும். அரசியலமைப்பை முழுவதுமாகப் படிக்க வேண்டும். வெளிப்படையாக வழங்கப்படாவிட்டால் எந்த விருப்புரிமை அதிகாரத்தையும் ஊகிக்கக்கூடாது.” அவர் உறுதியாக மீண்டும் வலியுறுத்தியதாவது “ஆளுநர் ஒரு போட்டி அதிகாரியாக மாறுவார் என்ற அச்சத்திற்கு எந்த காரணமும் இல்லை.”


டாக்டர் அம்பேத்கரின் கூற்றுப்படி, ஒரு ஆளுநருக்கு அவசரநிலையின்போதுகூட எந்த சிறப்பு அதிகாரங்களும் இல்லை. ஆளுநர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். உண்மையில், ஆளுநர்களின் வரையறுக்கப்பட்ட பங்கு குறித்து அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அதனால் அவர் குறிப்பிட்டதாவது, "ஆளுநரின் அதிகாரங்கள் மிகவும் குறைவாகவும், பெயரளவிலும், அவரது பதவி மிகவும் அலங்காரமாகவும் இருந்தன... மிகச் சிலரே தேர்தலில் நிற்க விரும்புவார்கள்" என்று நான் நினைக்கிறேன்.


ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மாநில நிர்வாகத்தில் அவரது பங்கு பற்றிய அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் புரிதல் அப்படித்தான் இருந்தது. அவர்கள் இன்னும் நமது நாட்டின் யதார்த்தங்களுக்கு பொருந்தக்கூடிய ஒரு அரசியலமைப்பை வடிவமைத்தனர். ஆனால் ஒரு சில சார்புடைய நபர்கள் இந்த 'உயர்ந்த' பதவியை ஆக்கிரமிக்கும் ஒரு காலத்தை அவர்கள் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. டாக்டர் அம்பேத்கரின் நம்பிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பதைக் காட்ட இந்த நபர்கள் உறுதியாகத் தெரிந்தனர்.


இங்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் எழுப்பிய கேள்வியைக் குறிப்பிடுவது பொருத்தமானது. குடியரசின் 50-வது ஆண்டு விழாவில் கே.ஆர். நாராயணன், “அரசியலமைப்பு நம்மைத் தவறவிட்டதா அல்லது அரசியலமைப்பைத் தவறவிட்டது நாம்தானா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.”





'தீய தன்மையை' சரிசெய்தல்


ஆளுநர்களின் பங்கு குறித்த தற்போதைய விவாதத்தில், அரசியலமைப்பைத் தவறவிடுபவர்கள் நிச்சயமாக சம்பந்தப்பட்ட நபர்கள்தான். ஆளுநர்கள் தங்கள் முடிவை ‘முடிந்தவரை விரைவில்’ அறிவிக்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் சொற்றொடர் இப்போது நேர்மாறான முறையில் விளக்கப்படுகிறது. அதாவது ‘முடிந்தவரை தாமதமாக’. இங்குதான் நீதிமன்றங்கள் தலையிட எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் அரசியலமைப்பின் உணர்வை சரியாக விளக்கி, இன்று இந்தியாவில் அதன் வார்த்தைகளை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றம் டாக்டர் அம்பேத்கரின் கருத்தை முழுமையாகப் பரிசீலிக்கவில்லை: “புதிய அரசியலமைப்பின்கீழ் விஷயங்கள் தவறாக நடந்தால்... மனிதன் மோசமானவன் என்று நாம் சொல்ல வேண்டும்.” நீதிமன்றங்கள் அத்தகைய மோசமான செயல்களைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவை தங்கள் கடமையிலிருந்து தவறிவிடுகின்றன.


எம்.ஏ. பேபி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர்.



Original Article: The ‘impartiality’ of a nominated Governor 

Share:

இந்தியாவின் பேரிடர் மீட்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஒரு சரிவு -அஸ்வதி ரேச்சல் வருகீஸ்

பேரிடர் மீட்பு நிதி அமைப்பின் (disaster response financing system) மிகவும் நிபந்தனைக்குட்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட மாதிரிக்கான சான்றுகள் உள்ளன.


பேரிடர் மீட்புக்கான மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வளங்களை மாற்றுவது வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது. இது மாநிலங்களின்

மதிப்பிடப்பட்ட தேவைகளுக்கும், அவை உண்மையில் பெறுவதற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு மத்திய அரசு கேரளாவிற்கு நிதியை வழங்கியபோது இந்த ஏற்றத்தாழ்வு மீண்டும் தெளிவாகியது. இந்தப் போக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இந்தியாவின் நிதி கூட்டாட்சி அமைப்பு ஒத்துழைப்பிலிருந்து விலகி, மேலும் நிபந்தனைக்குட்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட பேரிடர்-ஆபத்து நிதி மாதிரியாக மாறுகிறதா?


ஜூலை 2024-ல் வயநாட்டில் ஏற்பட்ட சோகம், கிட்டத்தட்ட 300 இறப்புகளை ஏற்படுத்தியது மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்தது. இந்த பிரச்சினையில் கடுமையான கவனத்தை ஈர்த்ததாவது, கேரளாவின் ₹2,200 கோடி இழப்புக்கு எதிராக, ஒன்றிய அரசு ₹260 கோடியை மட்டுமே அங்கீகரித்தது. இது வெறும் 11% (₹1,200 கோடி மதிப்பிடப்பட்ட இழப்பு, ஆனால் ₹2,200 கோடி மீட்புக்கான குறிப்பாணையில் மாநிலத்தால் கோரப்படுகிறது). இந்த பொருத்தமின்மை கேரளாவிற்கு மட்டும் உரியது அல்ல. இது கூட்டுறவுக் கூட்டாட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது. இன்றைய பேரிடர்கள் மாநிலங்களுக்கு நிதி அழுத்த சோதனைகளாக செயல்படுகின்றன. மேலும், காலநிலை மாற்றங்கள் தீவிரமடைவதால், இந்தியாவின் பேரிடர்-நிதி அமைப்பு வெளிப்படையான அழுத்தத்தைக் காட்டுகிறது.


ஒரு சரிவு உள்ளது


பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005-ன் (Disaster Management Act) கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் பேரிடர்-மீட்பு நிதி அமைப்பு (disaster-response financing system), இரண்டு-அடுக்கு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதமும் மற்றும் பெரும்பாலான மாநிலங்களுக்கு பகிர்வு விகிதம் 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கூட்டாக நிதியளிக்கப்படும் மாநில பேரிடர்-மீட்பு நிதியின் (State Disaster Response Fund (SDRF)) மூலம் தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணத்தை வழங்குகிறது. மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் தேசிய பேரிடர்-மீட்பு நிதி (National Disaster Response Fund (NDRF)), ஒரு பேரிடர்காலம் கடுமையானதாக வகைப்படுத்தப்படும்போது அது மாநிலங்களை ஆதரிக்கிறது. கொள்கையளவில், இந்த அமைப்பு சமநிலையில்

தெரிகிறது. ஆனால் நடைமுறையில், அது மத்தியக் கட்டுப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது.


முதலாவதாக, நிவாரண விதிமுறைகள் காலாவதியானவை (பழமையானவை) மற்றும் நெகிழ்வானவை அல்ல. இது இழப்பீட்டுக்கான உச்சவரம்புகள், இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ₹4 லட்சம் மற்றும் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு ₹1.2 லட்சம் ஒரு பத்தாண்டுகளில் அரிதாகவே மாறியுள்ளன. இந்தத் தொகைகள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் மறுகட்டமைப்பிற்கு அல்ல. இந்த இடைவெளி ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் மாநிலங்களை நிதி ரீதியாக பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.


இரண்டாவதாக, பேரிடர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பதில் குழப்பம் உள்ளது. "கடுமையான" பேரிடர் என்றால் என்ன என்பதை சட்டம் தெளிவாக வரையறுக்கவில்லை. இது தேசிய பேரிடர்-மீட்பு நிதி (NDRF) உதவிக்கு யார் தகுதியானவர் என்பதை தீர்மானிக்கும்போது பரந்துபட்ட விருப்பத்திற்கு இடமளிக்கிறது.


மூன்றாவதாக, உதவி வெளியீடுகள் நடைமுறை சார்ந்தவை, தானியங்கியாக (automatic) செயல்படுபவை அல்ல. பொருள்சார் குறிகாட்டிகள் (objective indicators) ஆதரவைத் தூண்டும் அமைப்புகளைப் போலன்றி, இந்தியாவின் செயல்முறை தொடர்ச்சியான அனுமதிகள், மாநில குறிப்பாணை, மத்திய மதிப்பீடு மற்றும் அவசரநிலை மிகவும் முக்கியமானதாக இருக்கும்போது தாமதங்களை ஏற்படுத்தும் உயர்மட்ட ஒப்புதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.


இறுதியாக, நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு அளவுகோல்கள் பலவீனமாக உள்ளன. இது வெளிப்பாட்டை அளவிட மக்கள்தொகை மற்றும் மொத்த புவியியல் பகுதியைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறை உண்மையான ஆபத்தான நிலைகளைப் புறக்கணிக்கிறது. இது பேரிடர் பாதிப்புக்கான ஒரு மறைமுகமாக வறுமையையும் பயன்படுத்துகிறது. இது ஒரு வலுவான பேரிடர்-ஆபத்து குறியீட்டைப் பயன்படுத்துவதில்லை. இது வெள்ளம், நிலச்சரிவுகள் அல்லது சூறாவளிகளுக்கு மக்களின் உண்மையான அபாயங்களுடன் இந்த நிதி ஒதுக்கீடுகள் பொருந்தவில்லை.

வயநாடு நிகழ்வு வலுவான நிறுவன குறைபாடுகளை அம்பலப்படுத்தியது. நிதி உதவியைக் குறைப்பதை நியாயப்படுத்த, கேரளாவின் செலவிடப்படாத மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) இருப்பு ₹780 கோடியையும், மூலதன முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முந்தைய ₹529 கோடி வட்டி இல்லாத கடனையும் மத்திய அரசு மேற்கோள் காட்டியது. இருப்பினும், இந்த நிலுவையில் உள்ள நிதி பெரும்பாலும் செயலற்ற நிதியை அல்ல, உறுதியான பணிகளை பிரதிபலிக்கின்றன. மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) தவணைகள் நிதியாண்டின் பிற்பகுதியில் வருகின்றன. அதே நேரத்தில், பேரிடர்கள் பருவகாலமாக இருப்பதால் தற்காலிக நிலுவைகள் தவிர்க்க முடியாதவை. மேலும், மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) விதிகள் செலவினங்களை மறுகட்டமைப்பு அல்லது வாழ்வாதார மறுசீரமைப்பிற்கு அல்ல, உடனடி நிவாரணத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, மாநிலங்கள் பணப்புழக்கத்திற்காக சில இருப்புக்களை வைத்திருக்க வேண்டும்.


காலநிலை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்தியா நடவடிக்கை எடுப்பதன் மூலம் பில்லியன் கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று உலகளாவிய ஆய்வு கூறுகிறது.


மேலும், வயநாடு நிலச்சரிவுகளை கடுமையான பேரிடராக வகைப்படுத்துவதை ஒன்றிய அரசு தாமதப்படுத்தியது. இதனால், கேரளாவிற்கு அதிக தேசிய பேரிடர் மீட்பு நிதி (NDRF) ஆதரவு கிடைப்பது கட்டுப்படுத்தப்பட்டது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் இதே போன்ற பேரிடர்களுக்கு பெரிய தொகுப்புகளைப் பெற்றன. 2018-ல் கஜா புயலுக்குப் பிறகு தமிழ்நாடு இதே போன்ற பொருத்தமின்மைகளை எதிர்கொண்டது. 2019 வெள்ளத்தின்போது கர்நாடகாவும் இதே பிரச்சனையைக் கண்டது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே மாதிரியைக் காட்டுகின்றன. மெதுவான ஒப்புதல்கள் மற்றும் இழப்புகளுக்கும் உதவிக்கும் இடையிலான இடைவெளிகள் அதிகரிப்பது கூட்டுறவு கூட்டாட்சி, அதிகாரத்துவ பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்த ஒரு அமைப்பை வெளிப்படுத்துகின்றன.


உலகளாவிய நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வது


பல நாடுகள் இப்போது தரவு சார்ந்த மற்றும் வெளிப்படையான பேரிடர் நிதியுதவியைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவின் கூட்டாட்சி அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (Federal Emergency Management Agency (FEMA)) தனிநபர் சேத வரம்புகளைப் பயன்படுத்துகிறது. மெக்சிகோவின் முன்னாள் இயற்கை பேரிடர்களுக்கான நிதி (FONDEN) மழை அல்லது காற்று வரம்புகளை மீறும் போது தானாகவே நிதியை வெளியிட்டது. பிலிப்பைன்ஸ் மழை மற்றும் இறப்புக்கான குறியீடுகள் மூலம் விரைவான பேரிடர் மீட்பு நிதிகளை தீவிரப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் காப்பீட்டு வசதிகள் விரைவான பணம் பரிமற்றங்களுக்கு செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியா கூட்டாட்சி உதவியை வருவாயுடன் ஒப்பிடும்போது ஒரு மாநிலத்தின் நிவாரணச் செலவுடன் இணைக்கிறது. இந்த அமைப்புகள் தெளிவான விதிகளுடன் விருப்புரிமையை மாற்றுகின்றன. நிவாரணம் விரைவாகவும் பொறுப்புணர்வுடனும் இருக்க முடியும் என்பதை அவை காட்டுகின்றன. தாமதம், விருப்புரிமை மற்றும் கூட்டாட்சி பரிமாற்றங்களில் நம்பிக்கையை மீட்டெடுக்க மழையின் தீவிரம், மில்லியனுக்கு இறப்புகள் அல்லது இழப்பு-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் போன்ற ஒத்த புறநிலைத் தூண்டுதல்களை இந்தியா ஏற்றுக்கொள்ளலாம்.


கூட்டாட்சி உணர்வை மீண்டும் கட்டியெழுப்புதல்


16-வது நிதி ஆணையம் இந்த கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளது. தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப நிவாரண விதிகளை இது புதுப்பிக்க முடியும். இது விரிவான பாதிப்பு குறியீட்டைப் பயன்படுத்தி ஒதுக்கீடுக்கான அளவுகோல்களை திருத்தலாம் மற்றும் பேரிடர் உதவி கடன் அடிப்படையிலானதாக இல்லாமல் மானிய அடிப்படையிலானதாக இருப்பதை உறுதி செய்யலாம். மாநிலங்கள் தங்கள் பேரிடர் நிதிகளின்மீது செயல்பாட்டு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசு செலவினங்களுக்குப் பிறகு மட்டுமே கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும், அவற்றை முன்கூட்டியே அங்கீகரிக்கக்கூடாது. இந்த சீர்திருத்தம் மத்திய மேற்பார்வையை பலவீனப்படுத்துவது பற்றியது அல்ல, ஆனால் கூட்டாட்சி செயல்பாட்டை வலுப்படுத்துவது பற்றியது. வேகமான, விதிகள் அடிப்படையிலான பதில்களை செயல்படுத்தும் ஒரு அமைப்பு அரசாங்கத்தின் இரு அடுக்குகளுக்கும், மிக முக்கியமாக, நடைமுறை தாமதங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு அமைப்பைவிட குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும்.


நெருக்கடிகளின்போது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசரத் தேவை


பேரிடர்கள் உடல்ரீதியான பாதிப்புகளை மட்டுமல்ல, நிறுவன ரீதியான பாதிப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. நிவாரண முயற்சிகள் பெரும்பாலும் ஒற்றுமை செயல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகளாக மாறும். இது நிதி கூட்டாட்சி அமைப்பை அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் பேரிடர் நிதி அமைப்பு, நடைமுறை தொண்டு நிறுவனத்திலிருந்து (procedural charity) விதிகள் சார்ந்த கூட்டாண்மையாக உருவாக வேண்டும்.


எதிர்காலத்தில் வரும் வெள்ளம் அல்லது நிலச்சரிவு, அரசியலமைப்பு ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கும் கூட்டுறவு, சமத்துவம் மற்றும் சரியான நேரத்தில் பதிலளிப்பதற்காக மாநிலங்கள் வாதிட வேண்டியதில்லை. கூட்டாட்சி நெருக்கடியில் முக்கியமானதாக இருக்கும்போது, அது தோல்வியடைகிறது. வயநாடு சோகம் ஒரு எச்சரிக்கையாக செயல்படுகிறது. அடுத்த புயல் வருவதற்கு முன்பு இந்தியா பேரிடர் நிவாரணத்தின் நிதி அடித்தளத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.


அஸ்வதி ரேச்சல் வருகீஸ், திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர்.



Original Article: India’s disaster response, a slippery slope for federalism 

Share:

தரவுப் பற்றாக்குறைகள் : இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குறைந்த தரநிலை குறித்து . . .

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) குறைந்த தரநிலைகளானது, தரவு மேம்படுத்தல்களில் ஏற்படும் தாமதங்கள் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு, சர்வதேச நாணய நிதியம் (IMF) 'C' தரநிலைகளை வழங்கியுள்ளது. இது, இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்தியா தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கு மிகவும் வலுவான அமைப்பைக் கொண்டுள்ளது. 'C' தரநிலையானது இரண்டாவது மிகக் குறைந்த தரநிலையாகும். அதாவது, பொருளாதாரத்தின் போதுமான கண்காணிப்பைத் தடுக்கும் தரவுகளில் சில சிக்கல்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது. தேசிய கணக்குகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added(GVA)) போன்ற பரந்த பேரியல் குறிகாட்டிகள் மட்டுமல்லாமல், துறைசார் அளவிலான தரவு மற்றும் முதலீட்டு அளவீடுகள், நுகர்வோர் செலவினம் மற்றும் ஏற்றுமதிகள் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். எனவே, இந்த அளவீடுகளில் உள்ள சிக்கல்கள் பயனுள்ள மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகளை உருவாக்குவதை கடினமாக்குகின்றன. 'C' தரநிலை, அதன் தேசிய கணக்குகளைப் பொறுத்தவரை சீனாவைப் போலவே அதே பிரிவில் இந்தியாவை வைக்கிறது. இது ஒரு நல்ல இடம் அல்ல. இந்தியாவின் தேசிய கணக்குகளில் உள்ள குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி சுட்டிக்காட்டுவது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இதுவே முதல் முறையும் அல்ல. தேசிய கணக்கு தரவுகளில் IMF-ன் முக்கியப் பிரச்சனை என்னவென்றால், அதன் அடிப்படை ஆண்டு 2011-12 மிகவும் பழமையானது என்பதான். இந்த பிரச்சனை இதற்கு முன்பு பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா நீண்ட காலமாக காலாவதியான தரவுகளுடன் போராடி வருகிறது. தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production (IIP)) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) இரண்டும் 2011-12-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டுள்ளன. உண்மையில், இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடு (CPI) 'A' தரநிலையைப் பெறாமல் 'B' தரநிலையைப் பெற்றதற்கான காரணம் காலாவதியான அடிப்படை ஆண்டுதான் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட கூறியது. காலாவதியான அடிப்படை ஆண்டு மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) உணவின் அதிகப்படியான மதிப்பீடு ஆகியவை இந்தியாவால் விலை மாற்றங்களை துல்லியமாக கையாள முடியவில்லை. இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கையும் பலவீனமடையும் நிலை உள்ளது.


தேசிய கணக்குகள், நுகர்வோர் விலை குறியீடு (CPI) மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) ஆகியவற்றிற்கான அடிப்படை ஆண்டுகள் மற்றும் வழிமுறைகளைப் புதுப்பிக்கும் பணியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்கான புதிய தொடர் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை மற்றும் அதிகக் கவனம் தேவைப்படும் பகுதி முறைசாரா துறையை துல்லியமாக கையாள முடியாததுதான். முறைசாரா துறை (informal sector) பதிவு செய்யப்படாத மற்றும் ரொக்க அடிப்படையிலான நிறுவனங்களைக் கொண்டிருப்பதால் அதை அளவிடுவது கடினம். இருப்பினும், முறைசாரா துறையின் மிகவும் துல்லியமான மதிப்பீடு பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மற்றும் அளவைப் பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பாலான மக்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதற்கான முக்கியமான செயல்திறனையும் இது வழங்கும். இந்தியாவின் தேசிய கணக்கு மதிப்பீடு பல ஆண்டுகளாக மேம்பட்டுள்ளது. 2011-12 தொடரில் MCA-21 தரவுத்தளம் (MCA-21 database) மூலம் இந்தியாவின் பெருநிறுவனத் துறையிலிருந்து விரிவான தரகள் சேர்க்கப்பட்டன. இது முந்தைய வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பை மாற்றியது. அடுத்த ஆண்டு தொடரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் சரக்கு மற்றும் சேவை (GST) தரவைச் சேர்ப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். தரவு வெளியீடுகள் மற்றும் மேம்படுத்தல்களில் ஏற்படும் தாமதங்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.



Original Article: Data deficiencies: On India and the IMF’s low grading

Share: